சென்னை பூந்தமல்லி-திருவொற்றியூர் மாநகரப் பேருந்தை (தடம் எண் -101), ஏழுமலை என்ற ஓட்டுநர், ஓட்டிச் சென்றுள்ளார்.
பேருந்து, நியூ ஆவடி சாலை சந்திப்பை தொட்டபோது, எதிர்பாரா விதமாக, ஏழுமலை மயக்க நிலைக்குப் போனார். அந்த நிலையிலும் விபத்து நிகழ்ந்து விடாமல், பேருந்தை பாதுகாப்பாக ஓரம் கட்டி நிறுத்தியுள்ளார் ஏழுமலை... சபாஷ் !
போலீஸ் பெட்ரோல் ஜீப்பில், ஓட்டுநர் ஏழுமலையை ஏற்றிக் கொண்டு சைரனை ஒலிக்க விட்டு, அரசு கே.எம்.சி., மருத்துவமனைக்கு நிமிடத்தில் விரைந்துள்ளார்.
”இனி ஆபத்து ஏதும் இல்லை,
குறித்த நேரத்தில் கொண்டுவந்து
சேர்த்து விட்டீர்கள், அருமை !” என்று மருத்துவர்கள், மகிழ்ச்சி தெரிவிக்க பெருமூச்சு விட்டிருக்கிறார் யாஹியா.
கோல்டன் ஹவர்ஸ் என்கிற உயிர்காக்கும் நேரத்தை, எஸ்.ஐ- யாஹியா சரியாய்ப் பயன்படுத்தியதால் அரசு பேருந்து ஓட்டுனர் ஏழுமலை, மறுவாழ்வு பெற்றிருக்கிறார்.
வாழ்த்துக்கள்
சார்.இதுதான் சிறந்த மனித நேயம் மிக்க மிகப்பெரிய செயல்.இறைவன் மனித உருவில் வருவது இப்படித்தான்.காவல்துறை அதிகாரி அவர்களுக்கு பாராட்டுக்கள் நன்றி.
No comments:
Post a Comment