Saturday, October 8, 2022

தி.மு.க.,வினருக்கு கொஞ்சமும் தகுதியில்லை!

 சமூக வலைதளம் வாயிலாக, சமீபத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'திராவிடம் தான் தமிழருக்கு தன்னம்பிக்கை ஊட்டியது; பெண்களுக்கு சம உரிமை பெற்றுத் தந்தது.

'நாட்டிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை தலைநிமிர வைத்தது. ௫௦ ஆண்டுகளுக்கு முன், தமிழகம் எப்படி இருந்தது; இப்போது எப்படி உள்ளது' என, திராவிடத்தை பற்றி, நீண்ட ஒரு சாதனை பட்டியலை வாசித்துள்ளார்.
இதன்படி பார்த்தால், ௧௯௫௫ முதல் ஒன்பது ஆண்டுகள் தமிழக முதல்வராக பதவி வகித்த, அனைத்து தரப்பினரும் இன்று வரையிலும் போற்றி வரும், மிகச் சிறப்பான நிர்வாகத்தை தமிழகத்திற்கு வழங்கிய காமராஜரின் ஆட்சி சரியல்லை என்று சொல்வது போல உள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினரும் போற்றத்தக்க வகையிலான ஆட்சி நிர்வாகத்தை வழங்கிய, தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள காமராஜரை குறை கூறுவதை, கட்டாயமாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அப்பழுக்கற்ற தலைவரான முன்னாள் முதல்வர் காமராஜரை குறை சொல்ல, திராவிட செம்மல்களுக்கு கொஞ்சம் கூட தகுதியில்லை.அப்படி குறை சொல்பவர்கள், முதலில் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...