Saturday, October 8, 2022

குட்டிக்கரணம் போட்டாலும் வெற்றி கிட்டாது!

 பரமக்குடி ஸ்ரீமான் சீனிவாச அய்யங்காரின் குமாரன் கமல் ஹாசனுக்கு, அடியேன்  தெண்டம் சமர்ப்பித்த விஞ்ஞாபனம்...சமீபத்தில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டீர்கள்; ஆச்சரியமாக இருந்தது. நன்றி, சந்தோஷம். அதற்குள், 'பிராமணன் கமல் ஹாசன் புத்தியை காட்டி விட்டான். அவன், ஆர்.எஸ்.எஸ்., கைக்கூலி' என்று உங்களுக்கு எதிராக மற்றொரு தரப்பினர் பேச ஆரம்பித்து விட்டனர்.

கமல் அவர்களே... நீவீர் என்ன தான் முட்டிக் கொண்டு தலையால் தண்ணீர் குடித்தாலும், உம்மை பிராமணன் என்றே, திராவிட செம்மல்கள் சொல்வர். நீவீர், 'நான் பூணுால் போட மாட்டேன்; மட்டன் சாப்பிடுவேன். 'சாமி கும்பிட மாட்டேன்' என, அக்மார்க் ஐ.எஸ்.ஐ., முத்திரை குத்தப்பட்ட நாத்திகனாக மாறி இருந்தாலும், உம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திராவிட செம்மல்களை புகழ்ந்தால் நீர் ஒரு புரட்சியாளர்; குறை சொன்னால் நீர் ஒரு பிராமணன். பாரதி, ராஜாஜி, உ.வே.சா.,வையே ஏற்றுக் கொள்ளாதவர்கள், உம்மை மட்டுமா ஏற்றுக் கொள்வர்.
கருணாநிதியும் அப்படித்தான்... அவரை, 'ஹிந்து' பத்திரிகை புகழ்ந்தால், 'ஒரு ஆங்கில ஏடு பாராட்டுகிறது' என்பார். குறை சொன்னால், 'மவுண்ட் ரோடு மகா விஷ்ணு கத்துகிறது' என்பார்.ஈ.வெ.ரா., விருது, அண்ணாதுரை விருது வாங்கியவர்களை இந்திரன், சந்திரன் என்பர். ஆனால், நீவீர் நோபல் பரிசு வாங்கினால் கூட கண்டுகொள்ள
மாட்டார்கள். உமக்கு இந்த அரசியல் வேண்டாம். நீவீர் எங்கள் சிவாஜிக்கு பின் சிறந்த நடிகர். சினிமாவில் பல சாதனைகள் செய்யும் நீவீர், சினிமாவில் புலி; அரசியலில் எலி.சினிமாவில், பல புதிய முயற்சிகளை செய்யும். அரசியலில் நீவீர் என்ன தான் குட்டிக் கரணம் போட்டாலும், உம்மால் கணிசமான வெற்றியை பெற முடியாது. ஏன் என்றால், நீவீர் கடைசி வரை ஸ்ரீமான் பரமக்குடி சீனிவாச அய்யங்காரின்
புத்திரன் கமல் ஹாசன் அய்யங்கார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...