Wednesday, October 5, 2022

இப்படியே பிரித்தாளும் சூழ்ச்சியில் பலியாகி போகிறோம்.

 ஏதோ இரண்டு படத்தை இயக்கிவிட்டால் அதையும் இல்லாத பொய்களை எல்லாம் சொல்லி எடுத்துவிட்டால் தான் ஏதோ உலக சட்டமேதை போல வெற்றிமாறன் பேசுவதெல்லாம் அபத்தம், அவரின் படம் போலவே அவர் சொல்வதெல்லாம் உளறல் என்பதையே இது காட்டுகின்றது

ராஜராஜசோழன் இந்து அல்ல என்பது இயேசுவுக்கும் சிலுவைக்கும் தொடர்பே கிடையாது என்பதை போன்றது
இதற்கு அன்னார் சிவ வழிபாடு வேறு இந்துவழி வேறு என விளக்கம் மண்ணாங்கட்டி வேறு கொடுக்கின்றார்
வடக்கே உபியில் இருக்கும் தாழ்த்தபட்ட பிரிவும் இங்கே இருக்கும் தாழ்த்தபட்ட பிரிவும் ஒன்றாம் ஒரே வரிசையாம் ஆனால் காஷ்மீரில் இருக்கும் லிங்கம், காசி லிங்கம், தஞ்சை கோவில் லிங்கமெல்லாம் வேறு வெறி வழிபாடாம்
நாடெல்லாம் ஒரே லிங்கம் ஒரே சிவன் என கொண்டிருக்கும் பூமி இது, காலமெல்லாம் தென்னக இந்துக்கள் காசிக்கும் இயமயத்துக்கும் சென்று சிவ வழிபாடு செய்வதும், அவர்கள் ராமேஸ்வரம் வந்து லிங்க வழிபாடு காலமாக நடப்பது
அதாவது இது ஒரே நாடு ஒரே மதம் ஒரே சிவலிங்கம், அந்த மதம் சொந்த மக்களால் சனாதான தர்மம் என்றும் அந்நியர்களால் இந்து என்றும் பெயரிடபட்டது
இதனில் எங்கிருந்து சோழன் இந்து இல்லை இவர் சொல்வாரோ தெரியாது
காசி, இமயம் என எங்கெங்கும் காணும் லிங்கத்தை தன் பெரியகோவிலில் கட்டிவைத்தன் இந்து அல்லமால் வேறு யார்?
இவர்களுக்கெல்லாம் என்ன சிக்கலோ தெரியவில்லை , உடனே விடுதலை என கிளம்பிவிடுவார்கள் ஆனால் எம்ம்மாதிரி விடுதலை வேண்டும் என கேட்டால் சொல்லமாட்டார்கள்
நாங்கள் தாழ்ந்தசாதி என்பார்கள், அதெல்லாம் இல்லை உன் சான்றிதழை கிழித்துபோட்டு வா நீயும் நானும் ஒன்றாக படிக்கலாம் என்றால் இல்லை இல்லை இட ஒதுக்கீடு வேண்டும் அதனால் சாதி வேண்டும் என்பார்கள்
பின்எம்மாதிரி விடுதலை வேண்டும் தனிநாடா என்றால் சொல்ல தெரியாது
சட்டமும் காவலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்பொழுது என்ன இனியும் வேண்டும் என்றால் அதையும் சொல்ல தெரியாது
உங்களை இப்பொழுது யார் என்ன சொன்னார்கள் , உங்களை சாதிரீதியாக ஒருவார்த்தை பேசிவிடமுடியாது, இட ஒதுக்கீடும் எல்லா சலுகையும் இருக்கின்றது, எல்லா இடத்திலும் எல்லா வாய்ப்புகளும் உண்டு, சினிமா வரை எல்லா இடமும் வாய்ப்பு கிடைக்கின்றது
தாழ்த்தபட்டவராக இங்கு எல்லா சலுகைகளும் வாய்ப்பும் பெறுகின்றீர்களே இதற்கு மேல் தனிநாடுதானே கோரமுடியும் கேட்டு பாருங்கள் என சொன்னால் சத்தமே வராது
உண்மையில் அவர்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்பதுதான் பரிதாபம்
ஒரு காலத்தில் நடந்த சில சிக்கல்களுக்கு இந்துமதம் காரணமல்ல அந்நிய ஆட்சிகளே காரணம், இப்பொழுது சுதந்திர இந்தியாவில் உங்களுக்கு எல்லாமும் கிடைக்கின்றது என்பதை இவர்களுக்கு புரியவைக்க வேண்டும்
ஆனால் புரிந்து கொள்வார்களா? புரிந்துகொண்டாலும் வெளியில் சொல்வார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி
Nanri : பிரம்ம ரிஷியார்
May be an image of 1 person and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...