நம் வீட்டில் மகாலட்சுமியின் அருள் கிடைக்க தான், விளக்கு ஏற்றுவது, பூஜை செய்வது,சுத்தமாக வைத்திருப்பது, என ஒரு வீடு எப்படி இருந்தால் மகாலட்சுமி தாயாருக்கு பிடிக்குமோ அதை எல்லாம் பார்த்து, பார்த்து செய்கிறோம். இப்படி செய்தாலும் கூட பூஜை அறைக்கு அடுத்ததாக ஒரு வீட்டில் முக்கியமான இடம் என்றால் அது சமையலறை தான். ஏனென்றால் அது தான் அனைவரும் பசியாற உணவு படைக்கும் இடம். எனவே அந்த இடத்தில் சில பொருட்கள் மட்டும் எப்போதும் நிறைவாக வைத்து இருந்தால் மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நிரந்தரமாகவே தங்கி விடுவார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். அப்படி என்ன பொருளை நம் வீட்டில் நிறைவாக வேண்டும் என்பதை இந்த பதிவில் சற்று விளக்கமாக பார்க்கலாம். முதலில் நிறைவாக இருக்க வேண்டிய பொருள் தண்ணீர் குடம். வீட்டில் எப்பொழுதும் ஒரு பானையில் தண்ணீர் நிறைவாக இருக்க வேண்டும். தண்ணீர் சுத்திகரிப்புக்காக சில பொருட்களை பயன்படுத்தினாலும் கூட ஒரு சின்ன குடம் அல்லது சொம்பிலாவது சமையலறையில் தண்ணீர் எப்போதும் நிறைந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக மஞ்சள், அது கிழங்காக இருந்தாலும் சரி, தூளாக இருந்தாலும் சரி, மஞ்சள் வைத்திருக்கும் டப்பாவில் ( பாக்ஸ் அல்லது அஞ்சறை பெட்டி) நிறைவாக இருக்க வேண்டும். கடைசியாக தீரும் வரை வைத்திருந்து, அதிலிருந்து சுரண்டி எடுத்து சமையலுக்கு உபயோகிக்க கூடாது. மஞ்சளையும் எப்பொழுதும் வீட்டில் நிறைவாக வைத்து இருங்கள். அடுத்தது அனைவருக்கும் தெரிந்த உப்பு தான். இந்த உப்பும் ஜாடியில் எப்போதும் நிறைவாக இருக்க வேண்டும் கடைசியாக காலி செய்த பிறகு கழுவி, இதையெல்லாம் செய்யாமல் உப்பு எப்பொழுது எடுத்தாலும் நிறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நமக்கு நல்ல சுபிட்சத்தை தரும். ஏனென்றால் உப்பு மகாலட்சுமி அம்சமாகவே கருதப்படுவதால் உப்பை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு அடுத்து வீட்டில் நிறைவாக இருக்க வேண்டிய பொருள் ஊறுகாய். இந்த ஊறுகாயும் அதே போல் உங்கள் சமையலறையில் கட்டாயமாக வைத்திருங்கள். ஊறுகாய் சாப்பிடும் பழக்கம் இல்லை என்றாலும், ஊறுகாய் சாப்பிடவே கூடாது என்கிற பிரச்சனை இருந்தாலும், ஏதாவது ஊறுகாய்யாவது சாஸ்திரத்துக்கு சமையலறையில் வாங்கி வைத்து விடுங்கள். ஊறுகாய் குபேரருக்கு மிகவும் இஷ்டமான ஒரு பொருள். எனவே இதுவும் கட்டாயமாக உங்கள் சமையலறை இருக்க வேண்டும். இந்த பொருட்கள் எல்லாம் நிறைவாக வைத்த பிறகு இந்த பொருட்களுக்கு எல்லாம் முக்கியமான தாயாக விளங்குபவர் அன்னபூரணி தாயார். அன்னபூரணியின் தாயாரின் படத்தை உங்கள் சமையலறையில் எங்காவது ஓரிடத்தில் கட்டாயமாக மாட்டி வைத்து விடுங்கள். பூஜை அறையில் ஏற்கனவே நீங்கள் அன்னபூரணி சிலை வைத்து வணங்குவதாக இருந்தாலும், சமையலறையில் அன்னபூரணி தாயாரின் படத்தை மாட்டி வைத்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் சமையலறை எப்போதும் நிறைவாகவே இருக்கும். அசைவம் சமைக்கும் நாட்களில் அந்த படத்தை பூஜை அறையில் கொண்டு வைத்து விடலாம். அல்லது சமையல் கட்டில் ஒரு ஸ்கிரீன் போட்டு மூடி விட்டு செய்யலாம். ஆனால் அன்னபூரணி தாயாரின் படம் சமையலறையில் இருக்க வேண்டியது கட்டாயம். இதையும் படிக்கலாமே: குலதெய்வ சாபத்தால் துன்பத்திற்கு ஆளானவர்கள் மூன்று பௌர்ணமி இதை செய்தால், குலதெய்வம் மனம் குளிர்ந்து கேட்ட வரத்தை அள்ளி கொடுக்கும். நம் சாஸ்திரங்கள் நமக்கு நிறைய விஷயங்களை கற்று தந்து இருக்கிறது. நாம் தான் அதையெல்லாம் சரியாக கடை பிடிக்க தவறி விடுகிறோம். இனி இது போன்ற விஷயங்களை நம் கடை பிடித்து அன்னபூரணி, மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்று குறைவற்ற வாழ்வு வாழ்வோம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
No comments:
Post a Comment