Saturday, October 8, 2022

நீ . . .நீயாக இரு..!!

 தங்கம் விலை அதிகம் தான்.

தகரம் மலிவு தான். ஆனால்,

தகரத்தைக் கொண்டு செய்ய வேண்டியதைத் தங்கம் கொண்டு

செய்ய முடியாது.


அதனால் தகரம் மட்டமில்லை,

தங்கமும் உயர்ந்ததில்லை

எனவே, நீ . . .நீயாக இரு !


கங்கை நீர் புனிதம் தான் சிலருக்கு, அதனால் கிணற்று நீர் வீண் என்று அர்த்தமில்லை.


தாகத்தில் தவிப்பவருக்கு

கங்கையாயிருந்தால் என்ன,

கிணறாகயிருந்தால் என்ன

நீ . . .நீயாக இரு 


காகம் மயில் போல் அழகில்லை தான், ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத் தான்

நீ . . .நீயாக இரு !


நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான், ஆனாலும் நன்றி என்னவோ

நாய்க்குத் தான்

நீ . . .நீயாக இரு !


பட்டு போல் பருத்தி இல்லை தான், ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்தி தான்

நீ . . .நீயாக இரு !


ஆகாயம் போல் பூமி இல்லை தான்,ஆனாலும் தாங்குவதற்கு

இருப்பது பூமி தான்

நீ . . .நீயாக இரு !


நேற்று போல் இன்றில்லை

இன்று போல் நாளையில்லை,

அதனால் ஒவ்வொன்றும்

அற்புதம் தான், எனவே,

நீ . . .நீயாக இரு !


அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை,

அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை,

அதில் நொந்துபோக ஒன்றுமில்லை,

அதில் பாவம் ஏதுமில்லை,

அதில் அசிங்கம் ஒன்றுமில்லை;


உன்னை உரசிப் பார்

உன்னை சரி செய்து கொண்டே வா

நீ . . .நீயாக இரு !


உலகம் ஒரு நாள் உன்னைப் போல் வாழ ஆசைப்படும்

நீ . . .நீயாக இரு !


உலகம் ஒரு நாள் உன்னை உதாரணமாகக் கொள்ளும்

நீ . . .நீயாக இரு !


உலகம் ஒரு நாள் உன்னைப் பாடமாக ஏற்கும்

நீ . . .நீயாக இரு !


உலகம் ஒரு நாள் உன் வழி நடக்கும்

நீ . . .நீயாக இரு !


அடுத்தவனுக்காக மாறி

உனக்காக உள்ளோரை

இழக்காதே..!


நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாகவே இரு !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...