Monday, August 15, 2022

இன்று போராடி சுதந்திரம் பெற்று 75 வது சுதந்திர தினம்.. !

 நேற்று திருச்சி தஞ்சை கிராமங்களில் பயணிக்கும் போது பல சிறிய கிராமங்களிலும் மாடியில்,வீட்டு வாசல்களில் என நம் தேசியக்கொடியை மக்கள் கட்டி அழகு பார்ப்பதை காண முடிந்தது..

விமர்சனங்களை ஒதுக்கி(அட..நம்மூர்ல எதில் தான் அரசியல் இல்லை.. எதுக்குத்தான் விமர்சனம் இல்லை? )
இந்த கொண்டாட்டம் அனைவருக்கும் பரவச்செய்ததில் பிரதமரின் முன்னெடுப்பு பெருமைக்கொள்ள செய்தது.
Dec 2 UAE நாங்கள் வாழும் அமீரகத்தின் தேசிய நாள், நாடே கோலாகலமாக கொண்டாடும்..பள்ளிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள்,tasks ஆரம்பித்து, வீடுகள் கடைகள், வாகனங்கள் என அனைத்திலும் தேசியக்கொடியை இணைத்துக்கொண்டு மக்கள் கொண்டாடுவார்கள்.
அன்றைய தினம் துபாய், அபுதாபி, ஷார்ஜா போன்ற முக்கிய நகரங்களில் அணிவகுப்புகள் நிகழும். ஒரு முறை இந்த அணிவகுப்பை tankers உடன் முக்கிய சாலைகளில் நிகழ்ந்ததை.. பார்த்துவிட்டு வீடு திரும்ப இயலாமல் போக்குவரத்தில் சிக்கிக்கொண்டோம்.
உள்ளூர் அரபி மக்கள் கொடிகளை ஏந்திக்கொண்டு திறந்த காரில் உற்சாகமாக கத்திக்கொண்டே செல்வதை பார்க்கும் போது பிரமிப்பாக தான் இருக்கும்.
அதே நம்மூரில் மிக சாத்வீகமாக விடுமுறை நாள் திரைப்படம் பார்த்து கழிப்பதும், மிட்டாய்க்காக பள்ளி செல்வதுமாக கடந்து செல்ல பார்க்கிறோம்... இதிலிருந்து இந்த வருடம் தனி மகிழ்ச்சியை தருகிறது.
இந்த மகிழ்ச்சி மேலும் பெருகி, உலக அரங்கில் இந்தியா என்றும் தனித்துவத்துடன் விளங்க வேண்டும்..!
எல்லைகளில் குடும்பங்களை பிரிந்து நமக்காக காவல் பணியில் இருக்கும் சகோதர்களுக்கும், இடைவிடா தேசப்பணியில் இருக்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துகளுடன்...
அனைவருக்கும்...இனிய சுதந்திர நாள் நல்
வாழ்த்துகள்
..! ஜெய் ஹிந்த் !!
 
May be an image of ‎2 people, people standing, outdoors and ‎text that says '‎منب ผอ‎'‎‎

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...