"அ"னாதை இல்லங்கள்
அழிக்கப்படும் போது....
"ஆ"தரவற்றோர்கள்
அரவணைக்கப்படும் போது.....
"இ"ல்லாதவனுக்கு
இருப்பிடம் கிடைக்கும் போது....
"ஈ"கைப்பண்பு
பணம் படைத்தவன் நெஞ்சில்
துளிர்விடும் போது......
"உ"ணவில்லா ஏழையின்
பசி ஆறும் போது.....
"ஊ"ருக்குப் பாடுபட
உள்ளம் முன் வரும் போது.....
"எ"ழில் பொங்கும் இயற்கை
அழிக்கப்படாத போது......
"ஏ"ழைகளுக்கும் படிப்பு
ஏமாற்றமில்லாமல்
கிடைக்கும் போது.......
"ஐ"ந்தாண்டு ஆட்சியும்
மக்களுக்காக மட்டுமே
நடத்தப்படும் போது......
"ஒ"துக்கப்பட்ட மக்கள்
முழுமையாக
முன்னேற்றப்படும் போது.......
"ஓ"லைக்குடிசையின் கூரை
ஓட்டைகளில் ஒன்றாவது
அடைக்கப்படும் போது........
"ஔ"வை பாட்டிக்கு
தரப்படும் அதே மரியாதை
நம் பாட்டிக்கும் தரப்படும் போது......
"ஃ"அஃறிணையையும்
உயர்திணையாய்
மதித்துப் பார்க்கும் போது......
அது தான் முழுச்சுதந்திரம்
தீர்க்கமான சுதந்திரம்.....
No comments:
Post a Comment