நாடே போற்றும் அப்துல்கலாமை
அவமதித்தவர்கள் உண்டெனில் அது சோனியாகாந்தியும்
கருணாநிதியும் தான் இருக்க
முடியும்.2007 ல் நடைபெற்ற
ஜனாதிபதி தேர்தலில் அப்பொழுது
ஜனாதிபதியாக இருந்த
அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட
விரும்பியபொழுது அன்றைய
ஆளும்கட்சியான காங்கிரசின்
தலைமைபீடமான
சோனியாகாந்தியினால்
தடுக்கப்பட்டு இந்திராகாந்தி
குடும்பத்திற்கும் காங்கிரஸ்
கட்சிக்கும் மட்டுமே வேலை பார்த்த
பிரதீபாபட்டேல் என்ற மகாராஸ்டிரா
பெண்மணிக்கு கொடுக்கபட்டது.
திமுக நினைத்திருந்தால் அன்று
காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு
இருந்த செல்வாக்கை பயன்படுத்தி
அப்துல்கலாமை முன்னிறுத்தி
இருக்க முடியும்.ஆனால் குடும்ப
நலன்களுக்கு முன் நாடாவது
கொள்கையாவது..
நாட்டைபற்றி வாய் கிழிய மேடை
போட்டு பேசும் மற்றகட்சிகள்
அப்துல்கலாமை விட எந்த விதத்தில் பிரதீபா பட்டீல் உயர்ந்தவர் என்று
போராடாமல் சொந்த அரசியல்
லாபங்களுக்காக அப்துல் கலாம் மீது சோனியாவிற்கு இருந்த வன்மம் நிறைவேற பிரதீபா பட்டேலை தேர்ந்தெடுத்தார்கள்.
தமிழகத்தில் கோவையில் 2010ல்
நடைபெற்ற உலக செம்மொழி
தமிழ்மாநாட்டிற்கு சிறந்த
மொழிஅறிஞரும் பார் போற்றும்
தமிழரான அப்துல்கலாமை
அழைத்து கவுரவிக்காமல்
வேண்டுமென்றே அவமதித்தார்
அன்றைய முதல்வர் கருணாநிதி.
அது மட்டுமின்றி 2012 ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற சமயத்தில் மீண்டும் அப்துல்கலாம் பெயர் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி மற்றும் சிலரால் பேசப்பட்டபட்டபொ
ழுது.. "கலாம் என்றாலே கலகம்" என்று பொருள் உள்ளது அதனால் தான்ஜனாதிபதி தேர்தலில் கலகம் உண்டாகியுள்ளது என்று அந்த உயர்ந்த மனிதரை காயப்படுத்தி மீண்டும் ஒரு சிறந்த ஜனாதிபதி கிடைப்பதை தடுத்தவர் கருணாநிதி.
இன்று இந்த நடிகர் கூட்டம்
அப்துல்கலாம் அவர்களுக்கு பக்கம் பக்கமாக அஞ்சலி
பாடிக்கொண்டிருக்கிறார்கள் நாகரீகம், கண்ணியம் என்ற பெயரில் சில உண்மைகளை நாம் மறைக்காமல் நம் சந்ததியினருக்கு சொல்லித்தான் ஆகவேண்டும். இந்தியாவின் ஜனாதிபதிகளாக இருந்த ஆர் வெங்கட் ராமன் மற்றும் அப்துல் கலாம் இருவரும் ஓய்வுக்கு பிறகு தமிழகத்திலேயே தங்க விரும்பியபோது, வெங்கட் ராமன் அவர்களை பாதுகாப்பு, காரணங்களை காட்டி ( புலிகள் அச்சுறுத்தல் என்ற பெயரில் ) கிரீன்வேஸ் சாலையில் - இங்கே தங்க விடாமல் திருப்பி அனுப்பியது யார் என்பதை ஒவ்வொரு தமிழனும் யோசிக்க வேண்டும். அதே போல திரு அப்துல் கலாம் அவர்கள் ஓய்வுக்கு பிறகு இங்கே யுனிவர்சிட்டி விருந்தினர் மாளிகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை முதல் முறையாக தங்க வந்த போது மின்சார ஷார்ட் சர்கியூட் என்ற ஒரு நாடகம் ஆடி திரு கலாம் அவர்களை தமிழகத்தில் தங்க விடாமல் திருப்பி அனுப்பியது யார் என்பதையும் மக்கள் தயவு செய்து சிந்திக்கவேண்டும். எந்த கலாம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்து கையொப்பம் இட்டாரோ அவரே அந்த மாநாட்டுக்கு அழைக்கபடாத காரணம் என்ன? தனக்குத்தானே பட்டமும் பாராட்டும் நடத்திகொள்ளும் கேடுகெட்ட தமிழக அரசியல் கலாச்சார நிகழ்வை திரு கலாம் புறக்கணித்தார். அதன் காரணமாக அருகதை இல்லாதவர்கள் எல்லாம் அவரை அசிங்கபடுத்தும் அவலம் இந்த தேசத்தில் மட்டுமே நடந்தது. திரு கலாம் அவர்கள் இந்த தேசத்தின் ஞானக் குழந்தை. அவருடைய நல்லடக்கம் இஸ்லாமிய மரபு குல வழக்கப்படி எங்கே வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால், கலாம் அவர்களின் நினைவிடம் பிரம்மாண்டமாக மத்திய அரசால் பராமரிக்கப்படும் தேசத்தின் அஞ்சலி மையமாக இருக்கவேண்டும். இதுவே ஒவ்வொரு இந்தியனின் உளகுமுறல்.
No comments:
Post a Comment