பேசாமல் இருந்து விட்டால் அழிந்து போவது *மொழிகள் மட்டுமல்ல, சில உறவுகளும் கூடத்தான்..*
உனக்கு என்ன கொடுக்க வேண்டும் உன்னிடம் எதை பறிக்கவேண்டும் என்பதை, *இறைவனே முடிவு செய்கிறார்....*
வலிகளுக்கும் வலிகள் இருந்திருந்தால்.. கண்ணீர் வரும் வரை கத்தி அழுதிருக்கும்.. தாங்க முடியாமல்..
செய்த உதவியை சொல்லிக் காட்டாதே,..
*எவரும் செய்ய தயங்கும் உதவியை செய்து காட்டு....!!*
*சுமந்து செல்லும் அந்த நான்கு பேர் யாரென்று தெரிந்து விட்டால் கைமாறு ஏதாவது செய்து விடலாம்.!!*
வாகனம் ஓட்டும் போது, மொபைலில் பேசுவதற்கு இணையான அபாயம் மிக்கது, *வாகனம் ஓட்டும் கணவரிடம், மனைவி பேசிக் கொண்டே இருப்பது.*
படுத்துட்டு இருக்கும் போதே_
மரணம் வந்தால் பரவாயில்லை,...
*மரணம் வரும் வரை படுத்துட்டு இருக்கிறது கொடுமையிலும் கொடுமை.*
லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை, *சேமிப்பதால் மட்டுமே ஆக முடியும்.....*
உழைக்கும்போது எதிர்காலத்தை நோக்கி சென்ற நினைவுகள்.
*ஓய்ந்தபிறகு கடந்தகாலத்தை நோக்கி செல்லும்.....*
விதையை முழுங்கினால் வயிற்றில் மரம் வளருமென குழந்தைகளிடம் சொன்ன நாம்,
*அதே விதையை நிலத்தில் புதைக்க சொல்லிக் கொடுக்க மறந்து விட்டோம்!!!*
*நல்ல பெற்றோர், நல்ல துணை , நல்ல நட்பு* என்று வாழ்ந்து கொண்டு இருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட *பணம் தான் வாழ்க்கை என்று ஒரு தடவையாவது நினைக்க வைத்து விடுகிறது இந்த வாழ்க்கை.*
பறவைகளை கூண்டு வாங்கி அடைக்காதீங்க, அதுங்க நல்லாவே கூடு கட்டும். *அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும்..!!*
நம் கனவுகளைப்பற்றி சிந்திப்பதை நிறுத்தி, *நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க துவங்கும் பொழுது முற்றுப் பெறுகிறது நம் இளமை...!!!*
இதுவும் கடந்து போகும் என்பதை விட,
*இதுவும் பழகி விடும்* என்பதே பொருத்தமாகி விடுகின்றது வாழ்க்கைக்கு...
*பொறந்தா...* எத்தனை மணிக்கு பொறந்தான்னு கேப்பானுங்க..!_
*செத்தா... எத்தனை மணிக்கு பாடிய எடுக்க போறாங்கனு கேப்பானுங்க.!*
"எல்லாமே டைமிங் தான்"
சொந்த *"கால்ல"* நிக்கும் போதுதான்..
புது *"செருப்பு"* வாங்க கூட யோசிப்போம்....
ஒரே வயிறுனு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்காதீங்க ...
அப்புறம் *தொப்பைனு பேர் வாங்கிட்டு வந்து நிக்கும் ...*
எந்த உறவிலும் பிரிவின் வலி தீருவதற்குள் பேசி விடுங்கள்,!!
*வலி பழகிடுச்சுன்னா உறவு முறிஞ்சுடும்...!!!*
சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்,
*அன்புக்காக ஏங்குபவர்கள்.*
*இரக்கமும், உறக்கமும்* ஒன்று தான்,
இரண்டையுமே அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்.
அதிகம் *உறங்குபவன்* சோம்பேறி ஆகிறான்.
அதிகம் *இரக்கம்* காட்டுகிறவன் ஏமாளி ஆகிறான்.
*சிந்தித்து செயலாற்றுவோம்.*
*வாழ்க வளமுடன்*
No comments:
Post a Comment