காயத்ரி மந்திரம் குரு மந்திரம், மகாமந்திரம் என்று போற்றப்படுவது. ராஜரிஷி விசுவாமித்திரரால் வழங்கப்பட்ட இது, மந்திரங்களின் தாய் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. கீதையில் கிருஷ்ண பரமாத்மா 'மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரம்' என்றே குறிப்பிட்டுள்ளார். மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமான இந்த மந்திரம் சக்தியைக் குறித்து வியந்து பாடப்பட்டது. ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தின் பாடலாக உள்ள இந்த மந்திரம் சாவித்ரி மந்திரம் என்றும் கூறப்படுகிறது. இந்த மந்திரத்தின் பெருமையால் பிறகு ஒவ்வொரு கடவுளருக்கும் தனித்தனியே காயத்ரி மந்திரம் உருவாகத் தொடங்கியது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Saturday, August 13, 2022
காயத்ரி மந்திரம்! பெருமையும் அர்த்தமும்.
காயத்திரி மந்திரம் :
"ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்."
காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.
காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:
யோ -எவர்
ந -நம்முடைய
தியோ -புத்தியை
தத் -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ
தேவஸ்ய -ஒளிமிக்கவராக
ஸவிது -உலகைப் படைத்த
வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான
பர்கோ -சக்தியை
தீமஹி -தியானிக்கிறோம்
நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.
காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் (பாடல் எண்; 153)பின்வருமாறு பாடியுள்ளார்.
"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்
அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக"
பிரம்மாவின் தோற்றம்.
திருப்பாற்கடலில் மகாவிஷ்ணு சயணித்துக் கொண்டிருக்கிறார் .அவருடைய நாபிக் கமலத்தில் இருந்து தாமரை புஷ்பம் தோன்ற அதில் பிரம்மா தோன்றினார் .உடனே பிரம்மா மகாவிஷ்ணுவை பார்த்து பிரபுவே என்னை தோற்றுவித்ததற்கான காரணம் என்ன .நான் என்ன செய்யவேண்டும் என்று வினவினார். உடனே மகாவிஷ்ணு தன் நாபிக் கமலத்தில் தோன்றிய தாமரை கொடியை உடைத்து பிரம்மாவின் கையில் கொடுத்து நீ பிரம்மலோகம் சென்று இந்த தாமரை புஷ்பத்தை பிரம்ம லோகத்தில் இருந்து கீழே விடு. அது எங்கு சென்று விழுகிறதோ அந்த இடத்தில் நீ தவம் செய்யத் தொடங்குவாயாக என்று பணித்தார் .உடனே பிரம்மா பிரம்மலோகம் சென்று தன் கையில் உள்ள தாமரை புஷ்பத்தை கீழே விட அது அகில உலகத்தையும் சுற்றி நேராக புஷ்கரம் என்ற இடத்தில் விழுந்தது.அந்த தாமரை புஷ்பம் உடைந்து நீர் பெருக்கெடுத்து தடாகமாக மாறியது .அதுவே புஷ்கரணி .
2. பிரம்மா தோன்றிய விதம் புஷ்கரம் தோன்றிய விதம் பார்த்தோம். அடுத்தபடியாக காயத்ரி தேவி தோன்றிய விதத்தைப் பார்ப்போம்.
பிரம்மா அந்த இடத்தில் யாகம் வளர்த்து தவம் செய்ய விரும்பினார் .உடனே தனது மானசீக புத்திரனான நாரதரை அழைத்து நீ சென்று சாவித்திரி தேவியை அழைத்து வா என்று கூறினார். சாவித்திரி தேவி தான் பிரம்மாவின் முதல் பத்தினி.ஆனால் நாரதரோ உலகத்திற்கே கலகம் உண்டாக்கும் நான் என் தாய் தந்தையருக்கு கலகம் உண்டாக்காமல் விடுவேனா என்று எண்ணி சரி தந்தையே என்று சொல்லி சாவத்திரி மாதாவிடம் சென்று தந்தை யாகம் செய்ய தங்களை அழைக்கிறார். தாங்கள் நன்கு அலங்கரித்து சீவி முடித்து சிங்காரித்து செல்ல வேண்டாமா. கூப்பிட்ட உடனே செல்லலாமா. நன்கு தங்களை தயார் செய்து கொண்டு வரவும் என்று கூறி நேரடியாக தந்தையிடம் வந்து தந்தையே தாயார் தன்னை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வருவதற்கு இன்னும் நேரமாகும் என்று கூறிவிட்டார். அன்று சிவராத்திரி .சிவ பூஜையை தகுந்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று ஆவல் உந்த பிரம்மா என்ன செய்வது என்று தெரியாமல் பிரம்மாவின் படைத்தளபதிகளான குபேரனும் இந்திரனும் இருந்தார்கள். அவர்களில இந்திரனை அழைத்து நீ சென்று கிராமத்தில் ஏதாவது ஒரு பெண் இருந்தால் அவளை அழைத்துக் கொண்டு வா. நான் யாகம் செய்கின்றேன் என்று கூறினார் .காரணம் யாகம் ஹோமம் செய்யும் பொழுது பத்தினி அவசியம்.
இந்திரனும் அங்கிருந்து மூன்று மைல் தூரத்தில் ஒரு மாடு மேய்க்கும் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான் அந்த பெண்ணை இருத்தி யாகம் செய்யும் பொழுது அங்குள்ள பிராமணர்கள் அனைவரும் பிரம்மாவிடம் தாங்கள் பிரம்மா லோகத்திற்கே அதிபதி தாங்களே ஒரு பிராமணர் இல்லாத மற்றொரு பெண்ணை வைத்து யாகம் செய்யலாமா .இது தவறல்லவா என்று கூறி அந்தப் பெண்ணை வேத மந்திரங்கள் ஓதி புல்லாக (வைக்கோல்) ஆக மாற்றி தெய்வீகப் பசு தேவலோகப் பசுவான காமதேனுவை அழைத்து அந்த புல்லை காமதேனுவுக்கு மூன்று தடவை கொடுத்து அதன் வயிற்றிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார்கள் (தமிழ்நாட்டில் விசுவாமித்திரர் உடலை (காயம் kha காயத்தை உடலை திரியாக்கி தவம் செய்ததால் காயத்திரி தோன்றியதாக வரலாறு .ஆனால் உண்மையில் காய் gha ghai என்றால் பசு)பசுவில் இருந்து தோன்றி மூன்று முறை அதற்கு ஆகாரம் கொடுத்து அந்தப் பெண் உருவானதால் அதற்கு காயத்திரி என்று பெயர் ஏற்படலாயிற்று. இதுவே வேத மாதா காயத்ரி தோன்றிய வரலாறு.
இவ்வாறு தோன்றிய காயத்ரி மாதாவுடன் பிரம்மா யாகம் செய்து ஓம் பூர் புவ என்ற மந்திரம் ஒலிக்க அந்த மந்திரத்தின் ஒலி எங்கும் பரவ யாரை வைத்து என் கணவர் யாகம் செய்கிறார் என்று அறிய சாவித்திரி மாதா வேகமாக புறப்பட்டு வரும் பொழுது காயத்ரி தேவியை வைத்து யாகம் செய்வதை பார்த்து வெகுண்டு நான் இருக்க வேறொருத்தியை வைத்து யாகம் செய்ய முனைந்த பிரம்மாவிடம் அனைவருக்கும் பூலோகத்தில் கோயில் உண்டாகும் .உனக்கு இனி கோயில் என்பதே பூலோகத்தில் உண்டாகாது.உருவ வழிபாடு உனக்கு உண்டாகாது .கோயிலும் உங்களுக்கு பூலோகத்தில் இல்லை என்று கூறி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தின் காரணமாகவே இன்று வரை பூலோகத்தில் பிரம்மாவிற்கு கோயில் என்பது கிடையாது. இதுவே பிரம்மாவிற்கு பூலோகத்தில் கோயில் இல்லை என்பதற்கான வரலாறு.
அடுத்தபடியாக சாவித்திரி தேவிக்கும் பிரம்மாவிற்கும் தோன்றியவர்தான் சரஸ்வதி தேவி. சாவித்திரி தேவி சாபம் கொடுத்து சென்றுவிட்டார் .காயத்திரி தேவியை வைத்து இனி யாகம் செய்ய முடியாது. ஆதலால் தன் முன் அமர்ந்திருப்பவள் மகள் என்று மறந்து அவளை வைத்து யாகம் செய்ய வேண்டும் என்று நினைத்து மனைவியாகப் பாவித்து சரஸ்வதி தேவியை வைத்து யாகம் செய்யத் தொடங்கினார் .இதைக் கண்ட சிவபெருமான் வெகுண்டெழுந்து மகளை வைத்து யாகம் செய்கிறாயா என்று கூறி பிரம்மாவிற்கு இயற்கையிலேயே ஐந்து தலைகள் உள்ளது. அந்த ஐந்தாவது தலையை சரஸ்வதிதேவியை வைத்து யாகம் செய்ததன் காரணமாக சிவபெருமான் கிள்ளி எடுத்து விட்டார். இதுவே பிரம்மா ஐந்தாவது தலையை இழந்ததற்கான வரலாறு.
இந்த புஷ்கரணியில் நாரதரால் சாபம் பெற்ற கந்தர்வனும் அகத்தியரால் சாபம் பெற்றவனும் யானையாகவும் முதலை யாகவும் பிறந்து ஒரு நாள் யானை நீரருந்த வரும் பொழுது முதலையால் பிடிக்கப்பட்டு ஆதிமூலமே என்று கதற மகாவிஷ்ணு வந்து முதலையை கொன்று யானையை ரட்சித்து இருவருக்கும் மோட்சம் அளித்தார் .இதுவே கஜேந்திரமோட்சம் இந்த புஷ்கரணியில் தோன்றியதற்கான வரலாறு.
அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில், சிதம்பரம்.
வேதமாதா என்று அழைக்கப்படும் காயத்ரி அம்மனுக்கு இந்தியாவில் ஒரு சில இடத்தில் தான் தனி கோயில் உண்டு. அதில் முக்கியமானதாக விளங்குவது சிதம்பரம் காயத்ரி அம்மன் கோயில்!!!
ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்
இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.
தத் - என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.
ச - என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.
வி - என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.
துர் - என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.
வ - என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.
ரே - என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.
ணி - எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்
யம் - ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.
பர் - கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.
கோ - கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.
தே - தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்
வ - வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.
ஸ்ய - சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.
தீ - தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.
ம - மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.
ஹி - ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.
தி - மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்
யோ - யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.
யோன - யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.
நஹ் - தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.
ப்ர் - ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.
சோ - ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.
த் - த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.
யாத் - நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment