Thursday, August 11, 2022

எவ்வளவு பெரிய விசயத்தை எப்படி மறைத்து உரையாற்றுகிறார் என்பதை அறிந்து வருந்தினேன்.

 போதப்பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட ஆட்சிதலைவர்கள், காவல்துறை அதிகாரிகளிடையே பேசிய முதல்வர் போதைப்பொருள்களை தடுக்காவிட்டால் சர்வாதிகாரி போல் நடவடிக்கை பாயும் என்று பேசியது வியப்பானது.நகைப்பானது.

முதல்வரே போதை என்பது அடிப்படையே மது(சாராயம்)தான்.மதுவை குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் குடும்பதலைவனை பார்த்து தான் இளைய சமுதாயம் போதைக்கு அடிமையாகிறது.
உங்கள் தந்தை முதலமைச்சாராக பதவியேற்கு முன் ஊரில் 10பேர் குடித்தான் இல்லையேன்று சொல்லவில்லை.
அப்படி குடித்துவிட்டு வருபவனிடம் போலீஸ் ஊருக்குள் உள்ளது என்று சொன்னாலே போதும் போதை தெளியும் வரை வீட்டுபக்கமே வரமாட்டான்.
உங்கள் தந்தையால் தொடங்கப்பட்ட கள், சாராயக்கடை இன்று மூலை முடுக்கெல்லாம் ஆறாகஓடுகிறது.
இந்த அதிகாரிகளை வைத்துதானே பள்ளி,கல்லூரி,வழிபாட்டு தலங்கள்,கடைவீதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் #சர்வாதிகாரி#போல் மதுக்கடைகளை(திமுக.அதிமுக)அரசுகள் திறந்துள்ளீர்கள்.
போதை பழக்கத்திற்கு அடிப்படை காரணமே பாழாய்போன மதுக்கடைகள் தான்.முதல்வர் அவர்களே #சர்வாதிகாரி#போல் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுங்கள்.
அதிகாரிகளின் நடவடிக்கையில் அரசு எந்திரம் தலையீடு இல்லாமல் இருந்தால் கட்டுப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...