Sunday, August 14, 2022

பாகிஸ்தானின் கடைசி சுதந்திர கொண்டாட்டம்!?!

 இந்தியா

🇮🇳 சுதந்திரம் அடைய ஒரு நாள் முன்பே பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது. ஆனால் பாகிஸ்தான் என்ற நாடே இந்தியா அல்லது இந்துக்களின் எதிர்ப்பை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்ட ஒரு நாடு. தனக்கென்ற ஒரு கொள்கையோ அல்லது முன்னெடுப்போ இல்லாமல், அது இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிராகவே அதன் Vision, Mission எல்லாம் இருந்தது.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழிருந்த 53 நாடுகளில் இந்தியவைத்தவிர 52 நாடுகளுக்கும் 1946-56 க்குள் எந்த போராட்டுமும் இல்லாமல் சுதந்திரம் கிடைத்தது. அதில் இந்தியா மட்டுமே பல நாடுகளாக உடைக்கப்பட்டு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. இன்னும் எளிதாக சொல்லப்போனால் இந்தியாவை மீண்டும் ஒரு உலக சக்தியாக உறுவெடுத்து விடாமல் இருப்பதற்கு, பாகிஸ்தான் என்ற வியாதியை பிரிட்டிஷ் அரசாங்கம் விதையாக விதைத்தது. இதன் பின்னால் இருந்தது ஜின்னா மட்டுமா என்றால் அது தவறு! அதற்கு இணையான நாட்டை உடைத்ததில் பெரும்பங்காற்றியவர்கள் நம் நாட்டின் காந்தியும், மாமா நேருவும் என்பகை நம் வரலாறு லாபகமாக மூடி மறைத்தது!
பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு என பிரிக்கப்பட்டபோது அந்த நாட்டில் கிட்டத்தட்ட 36% இந்துக்கள் குடியிருந்தார்கள். அந்த பிரிவினையின்போது இந்துக்களில் 13% கொல்லப்பட்டனர் அல்லது விரட்டப்பட்டு இந்தியாவில் குடியேறினர். மீதி 23% இந்துக்கள் அங்கேயே தங்கிவிட்டனர். 23% ஆக இருந்த இந்துக்கள் பல தொடர் கொடுமைகளால் மதம் மாற்றப்பட்டு, அல்லது கொல்லப்பட்டு இன்று வெறும் 1% மட்டுமே மீதி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு என்ற பாகிஸ்தான் சட்டத்தில் எந்த அடிப்படை உரிமையும் இல்லை. உதாரணமாக ஒரு இந்து முறைப்படி கல்யாணம் செய்தால் அது செல்லாது, இஸ்லாமிய முறைப்படி அங்கு கல்யாணம் செய்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.
இப்படி பாகிஸ்தான் தனக்கு என ஒரு முஸ்லிம் விதிமுறையை உண்டுபண்ணி அருகில் இருந்த சிறு ராஜ்யங்களை தன்னோடு சேர்த்தது. அதில் கஷ்மீரும் அப்படிப்பட்ட ஒரு முயற்சியே! இதில் மேற்கு பஞ்சாப் என்ற பகுதி சிந்து நதிகளால் வளம்பெற்ற பகுதி முக்கியமானது. அங்கு வாழ்ந்தவர்கள் செல்வந்தர்கள் எனலாம். அதை அடுத்து சிந்து நதியின் அரபிக்ககடல் முகப்பில் உள்ள கராச்சியை சுற்றிய பகுதி. அப்படியிருக்க பஞ்சாபியர்கள் தன்னிச்சையாக அரசிலும், அதன் ராணுவத்திலும் என்றுமே கோலோச்சுகிறார்கள். அவர்கள் தனக்கென சட்டங்களை இயற்றியபோது மற்ற பகுதிகளுக்கு அடிப்படை உரிமையை கூட கொடுக்கவில்லை.
அதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதில் மேற்கில் ஈரானை ஒட்டியுள்ள பலுசிஸ்தான் என்ற ஒரு பெரிய பகுதி. அவர்களுக்கு எந்த நதியும் இல்லாததால் வறுமை என்பது அவர்களுக்கு என்றும் உடன்பிறந்த வியாதி. ஆனால் கடுமையான உழைப்பாளிகள், இந்த பலுசிஸ்தானின் ஒரு பகுதியை ஈரான் தன்னுடையது என்று இன்றும் சொந்தம் கொண்டாடுவதால், பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் பெரும் பகை. அந்த பலூசிஸ்தானுக்கு இந்திய அரசு உதவுகிறது. சமீபத்தில் ஒரு கமாண்டோ உற்பட ஹெலிக்கப்டரில் சென்ற 6 பேரை ராக்கெட் லாஞ்சர் மூலம் சுட்டு வீழ்த்தினர். ஆம் பலுசிஸ்தான் சுதந்திரம் கேட்டு மட்டுமல்ல, சுதந்திரம் கொடுத்த போது இந்தியாவோடு சேர்ந்துகொள்ள விரும்பிய பல நாடுகளில் இதுவும் இன்று. அது அன்று முதல் இன்றுவரை பாகிஸ்தானுக்கு எதிராக போராடி, இந்தியாவின் ஆதரவையும் கோரிவருகிறது. இந்தியாவின் RAW, ஈரான் இவர்களுக்கு உதவுவதாக பாக் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டுகிறது. இந்த பகுதியில் அதிகப்படியான மினரல்கள் இருப்பதால், சீனா அதை திருட முயற்சிக்கிறது. அதை அவர்கள் தடுப்பதால், பிரச்சினை பெரிதாகிறது.
அடுத்து பெஷாவர் எனும் ஆப்கனியர்கள் பகுதி என்று சொல்லப்படும் பகுதி மக்கள் தனி நாடு கோரி போராடுகிறார்கள். உடன்பிறவா சகோதரர்கள் என்று சொன்ன தலிபான்கள் இன்று பாகிஸ்தானின் கடுமையான எதிரிகள். இவர்களுக்கும் இப்போது இந்தியா உதவுகிறது, தலிபான்களோடு முன்னெப்போதும் இல்லாத உறவை இந்தியா த்ற்சமயம் ஏற்படுத்தியுள்ளது.
இத்த்னை பிரச்சினைகளும் போதாது என்று ஷியா, ஷன்னி முஸ்லிம்களுக்கும் ஏழாம் பொருத்தம். அவன் மசூதியில் இவன் குண்டுவைக்க, இவனை அவன் கல்தாணம், கருமாதி என்று வித்தியாசம் தெரியாமல் திருப்பி தாக்மும் மிக மோசமான சூழல் அப்படிப்பட்ட பாக்கின் விசுவாச அடிமைகள்தான், இந்து மதத்தில் ஜாதி பிரிவினை இருப்பதாக சொல்வதுதான் ஹைலைட்.
அடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் கில்கித், ஸ்கர்ட் என்ற இரு பகுதிகள் இன்னும் தனி நாடாகவே உள்ளது. இதற்கு என தனியாக பிரதமரே உள்ளார். இந்த பகுதியை இந்தியா விரைவில் தன்னுடன் சேர்த்துவிடும், எனவே தற்போதைய பிரதமர், நான்தான் PoK கின் கடைசி பிரதமர் என வெளிப்படையாகவே பேசி வருகிறார். இதென்னங்க பெரிய விஷயம், இன்று பாகிஸ்தான் கொண்டாடும் 75 சுதந்திர தினமே கடைசி கொண்டாட்டாம் என்கிறார்கள்.
எப்படி பாகிஸ்தான் வீழ்ந்தது?
அதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுவது இந்திய ராணுவத்தின் வலிமை என்பது பாதி உண்மை . ஏற்கனவே போரில் மீண்டும், மீண்டும் தோற்ற பாகிஸ்தான், இனிமேல் இந்தியாவை ஒருபோதும் நேரடியாக போரில் வெல்ல முடியாது என்று மறைமுக தாக்குதலை. தீவிர வாதத்தின் மூலம் முன்வைத்தது. அவ்வப்போது அணுகுண்டை வைத்து மிரட்டுவது என்பது அதன் யானைக்கால் வியாதி. கார்கில் போரின்போது, அதன் சார்பாக பாகிஸ்தான் அணுகுண்டு வீச தயாரகிறது, எனவே போரை நிறுத்துகள் என்று அமெரிக்கா ஜனாதிபதி வாஜ்பாயிடம் மிரட்டினார். அப்படியா, பராவாயில்லை, இந்தியா ஒரு பகுதியை மட்டுமே இழக்கும், ஆனால் அதற்கு பின்பு பாகிஸ்தான் என்ற நாட்டின் சுவடுகளே இருக்காது என்று சொல்ல, பாகிஸ்தான் பின் வாங்கியது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலாக இந்திய விமானப்படைகள் பாகிஸ்தானின் பகுதியிலேயே புகுந்து தாக்கியபோதும், அதனால் அணுகுண்டை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. அதுமட்டுமல்ல அதன் ரேடார்கள் மற்றும் பாதுகாப்பு அறன்களாக சொல்லப்படும் சீனாவின் அசைக்க முடியாத வான்பாதுகாப்பு என்று சொல்லப்பட்ட HQ-9 என்பது அசுங்கப்பட்டது. அது மீண்டும் சமீபத்தில் நமது பிரம்மோஸ் ஏவுகணை வீச்சின் மூலம் சீனாவின் HQ System என்பதி ஒரு டப்பா என்று நிரூபிக்கப்பட்டது. அதன் ரேடார் சிஸ்டத்திற்கு பயணிகள் விமானத்தையும், போர் விமானத்தையும் கூட பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு அதன் தரம் மோசமாக உள்ளது. இன்றைய நிலையில் பாகிஸ்தானிடம் இருக்கும் வேலை செய்வதாக நம்ப்பப்படும் ஆயுதங்களுக்கு அம்யூனிஷன் வெறும் 6 நாட்களுக்கு கூட போதுமானதாக இல்லை என்பதுதான், அதை வாங்க காசும் இல்லை, திவால் ஆகும் நிலையில் உள்ளது என்பதால் கடனும் கிடைக்காது. இப்போது போர் என்று வந்தால், இரண்டாவது வாரத்தில் அதன் ஆட்டம் காலியாகிவிடும்.
ஆனால் அது இந்த மோசமான வீழ்ச்சிக்கு மறுபாதி உண்மை என்பது இந்தியாவால் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் பொருளாதாரமே. உலகின் தொன்மையான சிந்து வெளி நாகரிகம் என்று சொல்லப்பட்ட அதன் வரலாறு சிந்து நதியை மையப்படுத்தியே வளர்ந்தது. ஆனால் அந்த கலாச்சாரம் இஸ்லாமிய மயமாக்கல் என்பது முதல் வீழ்ச்சியை தந்தது. அதன் பின்னர் பாகிஸ்தான் மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்தியா எதிர்ப்பு என்ற வெறும் காழ்ப்புணர்ச்சியால் தான் தப்பியது. தனக்கென ஸ்திரமான கொள்கையோ, அரசோ இல்லாமல், ராணுவத்தின் மூலமே பெரும்பாலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்தப்பட்டது.
பாகிஸ்தானின் மனித வளம் என்பது கடினமான உழைப்பாளிகளை கொண்ட மிக்ச்சிறப்பான ஒன்று. ஆனால் அது சரியான திட்டமிடாததால், வேலை வாய்ப்பை தோற்றுவிக்க முடியவில்லை. அதனால் வேலையற்றவர்களுக்கு முதலில் அமெரிக்காவால் ரஷ்யாவிற்கு எதிரான ஆஃப்கான் போர்களில் பயன்படுத்தப்பட்டது. அது முடிந்ததும் அது இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதமாக மாறி, கடைசியில் பாம்புக்கு பால் வார்த்த அமெரிக்காவையே தாக்கியது.
அதுவரை அதன் பொருளாதாரம் பெரிதும் அமெரிக்க அரசின் நிதி உதவியை சார்த்திருந்த நிலையில், ட்வின் டவர் அட்டாக்கிற்கு பிறகு அது கிடைக்காமல் போக இஸ்லாமிய தீவரவாதத்தையும், போதைப்பொருள் கடத்தல், Counterfeit Currency யையும் சார்ந்திருக்க வேண்டிய ரோக் நேஷன் என்றளவில் மிக மோசமான சூழலுக்கு அது தள்ளப்பட்டது. இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு சவூதி அரேபியா முதல், துருக்கி வரை பல நாடுகள் உதவி வந்ததால் அது உலகின் தீவிரவாத பாசறையாக மாறியது. அதற்கு கிடைத்த பொருளாதாரத்தின் பெரும்பகுதியை இந்தியாவிற்கு எதிராக தன் ராணுவத்தை, தீவிரவாதத்தை வளர்க்கவே அது பயன்படுத்தியது. அதற்கு முக்கிய காரணம் தன்னம்பிக்கை இல்லாதததும், இஸ்லாமிய தீவிரவாத நம்பிக்கையும். இந்தியா எதிர்ப்பு என்ற ஒரே தாரக மந்திரத்தையே தனது கொள்கை ஆக்கியதுமே!
அமெரிக்கா பாகிஸ்தானை விட்டு விலகிச்செல்ல, எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் என்று பாக்கிற்கு சீனா இரும்பு சகோதரன் என்று அந்த வெற்றிடத்தை நிரப்பியது. சீனாவிடம் இருந்த அளவற்ற பணத்தை கடனாக ஒரு பக்கம் கொடுத்துவிட்டு, அந்த பணத்தையும் அதன் ராணுவ தளவாடங்கள், புராஜெக்டுகள் மூலம் திரும்ப சீனாவே பெற்றுக்கொண்டு, பாகிஸ்தானை மோசமான கடன்காரனாக்கியது.
இப்படி மிக மோசமான ஒரு பொருளாதார அழிவை நோக்கி சென்ற பாகிஸ்தானுக்கு, ஏற்கனவே வாஜ்பாய் பாக்கிற்கு நேசக்கரம் நீட்டியபோது, கார்கில் போர் மூலம் முதுகில் குத்தினாலும், மோடி மீண்டும் முயற்சித்தார். வழக்கம்போல அதன் விஷக்கரங்கள் நீள, அதன் முடிவுரையை எழுத இந்தியவில் மோடி அரசு முடிவுக்கு வந்தது. அரசுக்கு கட்டுப்படாத அதன் ராணுவம் புல்வாமா போன்ற தாக்குதல்கள் மூலம் இந்தியாவை மேலும் மோசமான எதிரியாக்கியது. அதுவரை அணுகுண்டு.என்று மிரட்டி வந்த பாகிஸ்தான் உள்ளே புகுந்து விளையாண்ட இந்தியாவை, பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை.
அந்த சூழலில் இந்தியா இரண்டு விதமான யுக்தியை கையாண்டது. ஒன்று, இந்தியாவின் ராணுவத்தை வேகமாக பெருக்கி, சுய சார்பை நோக்கி வளர்த்தது. அதற்கு போட்டியாக பாகிஸ்தான் தன்னிடம் இருந்த நொடிந்துபோன பொருளாதரத்தையும் தாண்டி கடன் வாங்கி தானும் ஆயுதம் வாங்கியது. அப்போது இந்தியாவின் ராஜ தந்திரத்தால், அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுதம் கூட வழங்க மறுக்க, அது தரமற்ற சீனாவின் ஆயுதங்களை கடனாக வாங்கி அதன் பொருளாதாரத்தை மேலும் சீரழித்தது.
இந்தியா தன் பாதுகாப்பை ஒருபுறம் பலப்படுத்திக்கொண்டு, பாகிஸ்தானின் பொருளாதாரத்தை வீழ்த்த முடிவெடுத்து காய்களை நகர்த்தியது. அதில் சில முக்கியமான நகர்வுகள்
1) Counterfeit currency ஐ அச்சடித்து சம்பாதித்த பாகிஸ்தான், இந்தியாவின் Demonetization க்கு பின் அந்த வாய்ப்பு பரிபோனதிலும் அதற்கு மிகப்பெரிய இழப்பு.
2) சவூதி அரேபிய போன்ற நாடுகளிடம், பாகிஸ்தானுக்கு உதவினால், இந்தியா உன்னிடம் கச்சா எண்ணெயை வாங்காது என்று நிர்பந்திக்க, அது வேறு வழியில்லாமல் பாகிஸ்தானிற்கான உதவியை நிறுத்தியது. அதற்கு முன்புவரை, இந்திய பாகிஸ்தான் போர் வந்தால். பாக்கிற்காக சவூதி இந்தியாவை தாக்கும் என்றளவில் அதன் உறவு பலமாக இருந்தது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
3) பாக்கின் முக்கிய வருமானம் என்பது விவசாயத்தில் இருந்து 26% வருமானம் வருகிறது. அதற்கு இந்தியாவின் இமயமலையில் தோன்றும் 5 இல் 4 ஜீவ நதிகளில் இருந்து வரும் நீரே அதற்கு அடிப்படை ஆதாரம். மற்றொன்று PoK காஷ்மீரில் இருந்து வருவது. அதில் பாகிஸ்தானுக்கு 60% என்பதும் இந்தியாவிற்கு 40% என்பதும் ஒத்துக்கொண்ட தண்ணீர் பாகப்பிரிவினை. இந்தியா தன் 40% பகுதியை இதுவரை பயன்படுத்தாததால் முழு நீரையும் பாகிஸ்தானே பயன்படுத்தியது. தற்போதைய பயன்பாட்டிலேயே ஆதிக்கம் நிறைந்த பஞ்சாபை தாண்டி அதற்கு சிந்து என்று சொல்லும் கராச்சிக்கே நீர் போதுமானதாக கிடைப்பதில்லை. இப்போது இந்திய அரசு தனது 40% சிந்து நீரை பயன்படுத்த போகிறோம் என்று அணைகளை கட்டிவருகிறது. அப்போது பாகிஸ்தானின் விவசாயமும் வரும் காலத்தில் பெருத்த நஷ்டத்தில் முடியும்.
4) அது மட்டுமல்ல அதனிடம் இருக்கும் மிகப்பெரிய ஆதரமான நீர்ப்பாசான அணை இருப்பது, ஆக்கிரமிக்கப்படட காஷ்மீரில். இந்திய அதை இந்தியா எப்போது வேண்டுமானலும் எடுத்துக் கொள்ளும் என்ற சூழலில், அது நடந்தால், பாகிஸ்தான் தன் நாட்டு மக்களின் உணவிற்காகவே மற்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய மோசமான சுழல் உருவாகும். அது மட்டுமல்ல சீனவிற்கான நேரடி தொடர்புகள் துண்டிக்கப்படும். அது பாகிஸ்தானை பாதிப்பதை விட சீனாவின் சில்க் ரோடுக்கு சங்கூதிவிடும்.
5) இந்தியாவின் நேரடி பொருளாதாரத் தடையால், அது மிகபெரிய சந்தையை இழந்தது. அது.மட்டுமில்லாமல் அதற்கு உதவும் நாடுகளிடம் வர்த்தகத்தை நிறுத்தசொல்லி இந்தியா வெளியுறவு கொள்கைகள் மூலம் அழுத்தம் கொடுத்து, பாகிஸ்தானை ஆதரிப்பதை நிறுத்தாத நாடுகளுடன் இந்தியா தன் வர்த்தகத்தை குறைத்துவிட்டது. உதாரணம் மலேசிய பாகிஸ்தான் நாட்டிற்கு காஷ்மீர் விஷயத்தில் ஆதரவு கொடுத்ததால் பாமாயில் இருக்குமதியை குறைத்து அதன் பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் அடி. அதனால் ஆட்சி மாற்றமே வந்தது. இன்று அதே மலேசியா தேஜஸ் போர் விமானங்களை இந்தியாவிடம் இருந்து வாங்குகிறது.
6) இது வரை இந்தியர்களுக்கு எதிரான ஒரு வெறியை காட்டியும், காஷ்மீரை முன்னிறுத்தியும் அவர்களை இந்தியாவிற்கு எதிரான மன நிலையில் அல்ல வெறித்தனத்தை ஊட்டினார்கள். ஆனால் ஆர்டிகள் 370 நீக்கப்பட்டதால், காஷ்மீர் இந்தியாவுடன் முழுதாக இணைக்கப்பட்டவுடன்
அந்த உணர்ச்சி பூர்வமான ஆயுதமும் போய்விட்டது. காஷ்மீரில்.கைவத்தால் அணு ஆயுதத்தில் தாக்குவோம் என்ற வெற்று சவாடல் என்று தெரிந்துவிட்டது. ஆனால் பலூசிஸ்தானும், வடமேற்கு பாகிஸ்தான் பாக்கின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு கட்டமைப்பில்தான் இன்றும் உள்ளது. இந்தியா உதவினா. அது எப்போதும் நமக்கு எதிராக கிளம்பும் என்பதை நன்கறிவர்.
இது எல்லாம் பாகிஸ்தான் அரசுக்கு அதன் கைலாகாத்தனத்தால் எதிராக திரும்பும் நிலையில், கொரானா, உக்ரைன் போர், சீன கடனுக்கே வட்டிகட்ட முடியாத சூழல், என்று அதன் பொருளாதாரம் இந்த 75 சுதந்திர கொண்டாட்ட ஆண்டில் Bankrupt ஆகிறது என்பதை விட இந்தியாவால் ஆக்கப்பட்டது. அப்போது உள்நாட்டு போராட்டம் மூலம், இந்தியா காஷ்மீர் ஆக்கிரமிப்பின் மூலம் தொடங்கி நாடு காணாமல் போகும்.
இங்கே இன்னொரு முக்கிய காரணம், அதன் மூத்த சகோதரர் சீனாவின் வீழ்ச்சி. அது தைவானைத்தொட்டால் பாக் கெடும்! கூட்டி கழிச்சிபாருங்க கணக்கு சரியா வரும்! ஏனென்றால், கணக்கை போட்டவர்கள் மோடி, தோவல், செயல்படுத்தியவர் சங்கர், அமித்ஷா, இந்திய ராணுவம்.
இதற்கு எல்லாம் மூலகாரணம் அதன் இந்தியாவிற்கு எதிரான தீய எண்ணங்கள் மட்டுமல்ல, இன்று உலகில் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு எதிராக அணி திரளும் நாடுகளும் அதன் எதிரியாக மாறியதும் முக்கியமான காரணம்.
அதற்கு மாற்றாக, பாகிஸ்தானியர்கள் தங்களுக்கு மோடியை போல ஒரு திறமையான பிரதமர் வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள். இம்ரான்கான் தன்னால் மோடி போல பாகிஸ்தானை மையப்படுத்தி ஒரு கொள்கையை உறுவாக்க முட்யவில்லை என்றார். பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் கூட தங்களை பாகிஸ்தானியர்கள் என்று சொல்ல கூச்சப்பட்டு, இந்தியர்கள் (இந்துஷ்தானி) என்றே அறிமுக படுத்திகொள்வார்கள். உண்மையில்
அவர்கள் இந்தியர்களுடன் நட்பாகவே பழகக்கூடியவர்கள். அவர்களின் வாதம் மோடியைப்போல இன்னொருவரை எதற்கு, அது மோடியாகவே இருகட்டுமே என்றளவில் பேச்சுன் சாரம் அடிப்படை மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இங்கே பாகிஸ்தானின் Think Tanks பாகிஸ்தான அரசுக்கு ஆலோசனை சொல்லும் சில விஷயங்கள் ஆச்சரியமாக இருக்கிறது.
1) தன் தேவைக்கு பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா கைகழுவி விட்டது, இனிமேல் இந்தியாவை மீறி அமெரிக்காவல் நமக்கு பெரிதாக ஒன்றும் செய்து விட முடியாது.
2) மதத்திற்காக உயிரையும் கொடுப்போம் என்று சொன்ன சவூதி அரேபியா முதல் மலேசிய வரை உள்ள இஸ்லாமிய நாடுகளும் கைவிரித்து விட்டார்கள். ஏனெனில் அவர்கள் வர்த்தகத்தில் ஆதிக்க சக்தியாக உயர்ந்துள்ள இந்தியாவை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம்.
3) இரும்பு சகோதரன் என்ற சீனா அவனின் போனியாகாத தளவாடங்களை, அவன் கொடுத்த கடனுக்கு நம் தலையில் கட்டிவிட்டு, அதற்கு வட்டி கட்ட முடியாத சூழலில் கூடுதலாக கடனைத் தராதது மட்டுமல்ல, வட்டியை கூட கேட்டு வதைக்கிறான். அவனே இன்று உலக நாடுகளால் ஒதுக்கப்படும் வேளையில், இலங்கையிடம் இருந்த பாடம் கற்காவிடில் நாமும் விரைவில் வீழ்வோம். இனிமேல் அவனை நம்பி பயன் இல்லை.
இப்படி பல விஷயங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும் சூழல். அதற்கு பதிலாக காஷ்மீரை இந்தியாவிற்கு கொடுத்துவிட்டு, ஒரு கூட்டமைப்பாக மாறி அதனுடன் சகோதரனாக பொருளாதார உயர்வை மோடி மூலமே பெறலாம். தேவையற்ற ராணுவ செலவுகளை குறைத்து, மக்களுக்கு தேவையான வேலை வாய்ப்பை பெருக்கி, தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி, உலக நாடுகளிடம் மரியாதையாய் வாழலாம். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரனான நம் மூத்த சகோதரன்ன் காலில் விழலாம் என்ற ஆலோசனையை, அதன் உளாவு அமைப்புகளும், ராணுவமும் கூட வாதமாக விவாதிக்க தொடங்கியுள்ளதாக சொல்கிறார்கள். இதை நாம் சமாதான வழியில் செய்யவில்லை என்றால், அவர்கள் எந்த வழியிலும் செய்து முடித்துவிடுவார்கள் என்பதை முன்வைக்கிறார்கள்.
இங்கே பாகிஸ்தான் மட்டுமல்ல, இலங்கை, பங்க்ளாதேஷ், நேபாள் என்று எல்லாம் தடுமாறும் சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் போல ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள். இதை ரஷ்யாவும் இம்ரான் விஜய்த்தின் போது முன்வைத்ததாக சொல்கிறார்கள்.
இது நடந்தாலும், நடக்காவிட்டாலும் பாகிஸ்தானின் அந்திம காலம் கண்ணுக்கு தெரிகிறது!
வினை விதைத்தவன் வினை அறுப்பான்! பாகிஸ்தான் தான் 75 ஆண்டுகளாக விதைத்த வினையினை அறுவடை செய்யும் நேரமிது!
எனவே அதன் கடைசி சுதந்திர தினத்திற்கு மனமாற வாழ்த்துவோம்! ஆம் நேற்றுவரை இந்தியாவின் எதிரிகளை சார்ந்திருந்த பாகிஸ்தான், அடுத்த ஆண்டு இந்தியாவை சார்ந்திருக்கலாம்!
Happy (In)dependence Day!
🙏🙏🐶 🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...