'பாளையங்கோட்டை சிறையில், கருணாநிதி அடைக்கப்பட்டிருந்த அறை, தி.மு.க.,வினருக்கு கோவில் போன்றது; அந்த அறையில் அடையாள சின்னம் அமைக்கப்படும்' என்று, திருவாய் மலர்ந்திருக்கிறார் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி. ஆத்திக அன்பர்களுக்கு, இறைவன் உறையும் இடம் தான் கோவில். ஆனால், பகுத்தறிவு செம்மல்களுக்கு, சிறைச்சாலையில் அவர்களின் தலைவர் சுகவாசியாக இருந்த இடம் தான், புனிதமான கோவிலாகத் தெரிகிறது. கப்பலோட்டிய தமிழன் என போற்றப்பட்ட, வ.உ.சிதம்பரம் பிள்ளை, கோவை சிறையில் செக்கிழுத்து, ஆங்கிலேயர்களின் சித்ரவதைகளை அனுபவித்தார். அவர் இழுத்த செக்கு, இன்றும் நினைவுச் சின்னமாக போற்றப்படுகிறதே அன்றி, அவர் அடைக்கப்பட்டிருந்த அறை ஒன்றும் கோவிலாக மாற்றப்படவில்லை.
அதேபோல, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, சிறைவாசம் அனுபவித்தவர்களான காமராஜர், முத்துராமலிங்க தேவர் போன்றோர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைகளும், அடையாளச் சின்னம் பொறிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்படவில்லை. 'ஆங்கிலேயர்கள் தான் இந்த நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்' என்று போராட்டம் நடத்திய, ஈ.வெ.ரா.,வின் பாசறையில் வளர்ந்தவர் கருணாநிதி. இவர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் அல்ல; அது மட்டுமின்றி, 'சிறைச்சாலைகள் எங்களுக்கு மாங்குயில் கூவிடும் பூஞ்சோலைகள்' என்று எகத்தாளம் பேசியவர். 'கோவிலே கூடாது' என்று சொன்ன அவர் இருந்த சிறைக்கூடம், இப்போது தி.மு.க., உடன்பிறப்புகளுக்கு மட்டும் கோவிலாக தெரிகிறது. சமஸ்கிருத மொழியை எதிர்ப்பவர்கள், ஆலயம் என்ற சமஸ்கிருத வார்த்தையை பயன்படுத்தி, அண்ணா அறிவாலயம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அதுபோல, கருணாநிதி அடைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை சிறைச்சாலை அறை கோவிலாக மாறுவதால், திராவிட செம்மல்கள் அங்கு அவரின் சிலையையும் நிறுவி, இனி சூடம், சாம்பிராணி காட்டி வழிபாடு செய்வர் என்பதில் சந்தேகமில்லை.I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment