ஒருவருக்கு வரக்கூடிய சம்பள பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து பூஜை அறையில் வைத்தால் தேவையில்லாத செலவு கட்டுப்படும். நாம் என்னதான் ஓடி உழைத்து சம்பாதித்தாலும், சம்பாதித்த பணம் முழுமையாக நம்முடைய கைகளில் தங்குவது இல்லை. மாத சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும், தினக்கூலி அல்லது சுயதொழில் லாபங்கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் உழைத்த பணத்திலிருந்து ஒரு சிறு தொகையை பூஜை அறையில் இப்படி செய்து வைத்தால் வரவுக்கு மீறிய செலவு நிச்சயமாக ஏற்படாது. எவ்வளவு செலவுகள் வந்தாலும், அதற்குரிய பண வரவு உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும் என்கிற ஐதீகம் உண்டு. அத்தகைய எளிய பயனுள்ள ஆன்மீக தகவலை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். பணத்தை ஈர்க்கும் ஆற்றல் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு உண்டு. இப்பொருட்களை இம்முறையில் வைக்கும் பொழுது உங்களுக்கு பணவரவானது அதிகரிக்க துவங்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் நீங்கள் சம்பள பணத்தை வாங்கி வந்த உடன் அதிலிருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டும் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு வையுங்கள். அதனுடன் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றையும் போடுங்கள். நாணயங்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. அது போல ரூபாய் நோட்டில் குபேரன் வாசம் செய்கிறார். இந்த நோட்டு மற்றும் சில்லறை நாணயங்களை வைத்ததும் அதனுடன் ரெண்டு ஏலக்காய், ஒரு சிறு துண்டு பட்டை, அண்ணாச்சி மொக்கு ரெண்டு, கிராம்பு 3, மஞ்சள் கொம்பு ஒன்று போட வேண்டும். மஞ்சள் மங்களகரமான பொருளாகும். இது குண்டு மஞ்சளாக இருக்க வேண்டும், விரலி மஞ்சள் அல்லது நீட்டு மஞ்சளை பயன்படுத்த வேண்டாம். இந்த மசாலா பொருட்கள் பணத்தை ஈர்க்கும் அதீத சக்தி வாய்ந்த மூலிகை பொருட்களாக இருக்கிறது. இதன் வாசம் பணத்தின் மீது படும்பொழுது, நமக்கு குபேர சம்பத்து கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த கிண்ணத்தை பூஜை அறையில் வடகிழக்கு மூலையில் கொண்டு போய் வையுங்கள். வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் வைக்கலாம். வடக்கில் குபேரன் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகிறது எனவே வடக்கில் இந்த கிண்ணத்தை வைத்துவிட்டு, நீங்கள் எப்பொழுது எல்லாம் பூஜை செய்கிறீர்களோ, அப்பொழுது எல்லாம் அந்த கிண்ணத்திற்கு தூபத்தை மட்டும் காண்பியுங்கள். இதன் வாசம் ஒரு மாதம் முழுவதும் அப்படியே தான் இருக்கும் குறையாது. மாதக் கடைசியில் இந்த பொருட்களை எல்லாம் எடுத்துவிட்டு அடுத்த மாதம் சம்பள பணத்திலிருந்து மீண்டும் ஒரு 500 ரூபாய், 5 ரூபாய், ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து இதே போல அண்ணாச்சி மொக்கு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, மஞ்சள் ஆகியவற்றை அதனுடன் வைத்து அப்படியே திறந்த நிலையில் வைத்து விட வேண்டும். இந்தப் பொருட்களை நீங்கள் மறு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம், பிரச்சனை இல்லை. இது போல ஒவ்வொரு மாதமும் நீங்கள் செய்து வரும் பொழுது உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படாது. அனாவசிய செலவுகள், வீண் விரயங்கள் எனப்படும் இந்த தொந்தரவிலிருந்து விடுபடுவதற்கு ரொம்பவே எளிமையான ஆன்மீக பரிகாரமாக இருக்கிறது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment