இந்தியாவிலேயே பணக்கார பெண்ணாக உயர்ந்திருக்கிறீர்கள் ஆனாலும் நீங்கள் உங்களுடைய பெயரில் இருக்கும் ஜாதியை ஏன் விடவில்லை? :
யோகன், பத்திரிகையாளர்.
ரோஹினி நாடார்:
இதை ஒரு ஜாதியாக நான் கருதவில்லை இதை என்னுடைய அடையாளமாக கருதுகிறேன். என்னுடைய அப்பாவின் உடைய பெயராக கருதுகிறேன், ஆம் என்னுடைய முன்னோர்களின் பெயராக கருதுகிறேன்.
இந்த அடையாளத்தை வைத்து என்னை எளிதாக கண்டுகொள்ள முடியும், நான் எந்த பகுதியை சார்ந்தவள், என்னுடைய உணவு பழக்கம் என்ன, என்னுடைய வழிபாட்டு முறை என்ன, என்னுடைய முன்னோர்களுடைய வாழ்வியல் முறை என்ன, எங்கள் குழுக்கள் உடைய தொழில் என்ன என்று அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
ஆக ஜாதி என்பது ஒருவருடைய அடையாளம். ஆம் எம் முன்னோர்கள் எங்களுக்கு விட்டு சென்ற அடையாளத்தை நான் அழிக்க விரும்பவில்லை..
ஜாதி என்பது ஒரு இனக்குழு, ஒரே மாதிரியான தொழிலை செய்த ஒரு மக்கள் கூட்டம் ஒரு பொதுவான பெயரில் ஒரே கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள் என்னும் நிலையில் அந்த குழுவினுடைய பெயரை வைத்துக் கொள்வதில் தவறில்லை.
ஆனால் ஒரு ஜாதியை சொல்லி இந்த ஜாதி குறைந்த ஜாதி இந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்று சொல்லும் ஜாதிய வேறுபாடு நிச்சயமாக கூடாது. எந்த ஜாதியும் தாழ்ந்த ஜாதி அல்ல எந்த ஜாதியும் உயர்ந்த ஜாதி அல்ல எல்லாமே உயர்ந்த ஜாதி தான்...
ஜாதியை வேறுபாடுதான் கூடாது தவிர ஜாதியை அடையாளங்கள் இருப்பதில் தவறில்லை அது நமக்கான அடையாளம் நமது கலாச்சாரத்திற்கான அடையாளம் , நமது பண்பாட்டுக்கான அடையாளம் நமது பாரம்பரியத்திற்கான அடையாளம் அதை மறக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..
பின் குறிப்பு:
இந்த திராவிட தலைவர்கள் ஏன் பெயருக்கு பின்னால் ஜாதி போடும் முறையை ஒழித்தார்கள் என்றால், ஜாதி போடும் முறை இருந்திருந்தால் இவர்கள் தமிழர்கள் இல்லை தெலுங்கர்கள் அல்லது மலையாளிகள் அல்லது கன்னடர்கள் என்னும் உண்மை தெரிந்து விடும் என்னும் நிலையில் இவ்வாறு செய்தார்கள்.
உதாரணமாக கருணாநிதி சின்ன மேளம் என்று அவருடைய பெயர் இருந்திருக்கும் சின்ன மேளம் என்னும் அடையாளத்தை வைத்து அவர் ஆந்திராவில் ஓங்கோல் பகுதியைச் சார்ந்தவர் என்று கண்டுபிடித்து விடுவார்கள், அதுபோல ஈவே ராமசாமி நாயக்கர் என்று பெயர் வைத்திருக்கும் அதை வைத்து கண்டு கொள்வார்கள் இவர் கன்னட நாயக்கர் என்று, எம் ஜி ராமச்சந்திரன் மேனன் என்று இறந்துத்திருக்கும் இதை வைத்து கண்டு கொள்வார்கள் இவர் கேரளாவை சார்ந்தவர் என்று, அண்ணாதுரை முதலியார் என்று இருந்திருக்கும் அதை வைத்து கண்டு கொள்வார்கள் இவர் தெலுங்கு முதலியார் என்று....
ஆக இந்த திராவிட தலைவர்கள் தாங்கள் தமிழர்கள் இல்லை என்னும் விஷயத்தை தமிழ்நாட்டில் மறைப்பதற்காக பயன்படுத்தியது தான் இந்த ஜாதி பெயர் நீக்கம், மற்றும் திராவிடம் என்னும் போர்வை..
No comments:
Post a Comment