பா.ஜ.க அல்லாத முதல்வர்களில் என்னை பொறுத்தவரையில் சிறந்தவராக கருதுவது ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக். அடுத்தபடி ஓரளவு சிறந்தவராக- பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவராக- இதுவரை நினைத்தது பீஹாரின் நிதீஷ் குமார்.ஆனால் அவரும் இன்று நம்ம தமிழ் நாட்டு தலைவர்கள் வை.கோ, ராமதாஸ்,திருமா இவர்கள் ரேஞ்சுக்கு இறங்கிவிட்டார். ஆனால் வித்தியாஸம்,பாவம் நம்ம ஊர்க்காரர்களுக்கு மிஞ்சிப்போனால் அசெம்பிளியில் ஒன்றிரண்டு இடங்கள் சிலசமயம் பாராளு மன்றம், அல்லது ராஜ்ய சபாவில் ஒரு சீட் கிடைக்கலாம், முதல்வர் பதவியெல்லாம் கனவில்தான்.
குறுகிய மனப்பான்மை பயங்கர மான் சுய நலவாதி பதவி ஆசை பிடித்தவர் அரசியலில் நேர்மை இல்லாமல் ஒரு கட்சி யோடு தேர்தலை எதிர்கொண்டு தன்னை எதிர்த்தவர்களோடு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சேர்ந்து மக்களை ஏமாற்றி யவர்.!!

No comments:
Post a Comment