Thursday, August 18, 2022

இரட்டை இலையை முடக்கக்கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி.

 அதிமுக.,வில் இரண்டு குழுவினருக்கு இடையில் பிரச்னை எழுந்ததால், பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க உத்தரவிட வேண்டும் என அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ., கட்சியின் நிறுவனரும், தலைவருமான ஜோசப் என்பவர் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தது.


இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜோசப் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் கூடுதலாக ரூ.25 ஆயிரம் சேர்த்து அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இரட்டை இலையை முடக்கக்கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...