Thursday, August 27, 2015

வேலைக்கான நேர்காணல் (இன்டர்வியூ)-ல் கேட்கப்படும் கேள்விகளும், பதில்சொல்லும் முறைகளும்

வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்க மா நம்மளோட Resume கொண்டு போவோ ம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பா ங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம் குறத பொறுத்து, நம்ம ளோட திறமை, மன உறுதி“னு பல விசயங்கள தீர்மானி ப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க் கமாவும் நம்மளோட பதில் இருக்கணு ம்னு அவங்க எதிர் பார்ப்பாங்க.
அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப் படும்னு அலசலாம் வாங்க..
1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்?
இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப் பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல் வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்லணும். (அதுக்காக உங்க வரலாறு முழுக்க சொல் லி போர் அடிச்சி டாதீங்க..)
2. உங்களைப் பற்றி சிறு விளக்கம் கூறுங்கள்?
இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியா தோ ணலாம். ஆனா இது உங்க சுய விபரம் பற்றி அல்ல, உங் கள் குணநலன் பற்றியது. அதாவது நீங்க எப்படிப்பட்டவர்னு சுருக்கமா சொல்ல ணும். (எதுக்கும், போற துக்கு முன்னாடி உங்க நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சு வச்சுக்கங்க..)
3. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றி கூறுங்கள்?
அனுபவம்ங்குறது பெரும்பாலான நிறுவனங் கள்ல அவசியமானதா மாறிடுச்சு. இதைப்பொறுத்து வேலை வாய்ப்புகள் அமையும் சூழலும் உருவாகிடுச்சு.(இஷ்டத்துக்கு அள்ளி விடக்கூடாது.. அதுக்கான சான்றிதழும் இருக் கணும்..)
4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?
தூங்குவேன், டிவி பாப்பேன்“னு கேனத்த னமா பதில் சொல்லாம, அவங்களை கவர்ற மாதிரியான, உறுப்படியான பொழுதுபோக் கு அம்சங்கள சொல்லனும். அதுக்காக நம க்குத் தெரியாத விசயங்களப் பத்தி பந்தாவா சொல்லிட்டு முழிக்க் கூ டாது. ஏன்னா கேள் விகள் அதப்பத்தியும் வரக்கூடும்.
5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்திலிருந்து விலகக் காரணம்?
“அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்க“னு ரொம்ப நேர்மையா பதில் சொல்லக்கூடாது. உங் கள ரொம்ப நல்லவர்னு நெனைக்கிற மாதிரியான காரணத்தை சொல் லணும்.
6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?
இது உங்களோட உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இது க்குக் கொடுக்கும் பதில் அவங்களுக்கு உங்க மேல நல் ல அபிப்ராயத்தை ஏற்படுத்தணும். (அதுக்காக ஓவர் ஆக் டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..)
7. என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்?
இது ரொம்பவே முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம வாய திறக்காம இருக்குறதே நல்லது. ஏன்னா நாம குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவங்க நிர்ணயிச்சு வச்சிருக்குறத விட குறைவானதா இருக்கலாம்.(பெர்ஃ பார் மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்க“னு சொல் லிட்டு பம்மிடலாம்..)
8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்?
இது உங்கள நீங்க எந்த அளவுக்குப் புரிஞ்சு வச் சிருக்கீங்கங்குறத காட்ட உதவும். அதுமட்டுமி ல்லாம, உங்களோட நடத்தையை எடை போட உதவும்.. ஜாக்கிரதை. (அதுக்காக தம் அடிக்கிற பழக்கம் பத்தி யெல்லாம் ஓப்பனா சொல்லப் படாது.)
9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?
இது ரொம்பவே முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக் கும்போது, அந்த நிறுவனம் பத்தியும், அந்த வேலை பத்தியும் தெளிவா தெரிஞ் சுவச் சுக்குறது அவசியமானது. (ஜஸ்ட்.. விளம்பரம் பாத்தேன், அப்ளை பண்ணேன், தட்ஸ் ஆல்“னு தெனாவெட்டா ப தில் சொல்லி ஆப்பு வாங் காதீங்க..)
10. பணிநிமித்தம் பயணம் செய்ய சம்மதிப்பீர்களா?
வேலை காரணமா, சில நாள் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலா ம். அதுக்கு நீங்க தயாரா இருக்கிங்களா னு முன்னாடியே தீர்மானிச்சு வச்சுக்கு றது அவசியம். (கூட வேலைபாக்குற பொண்ணை துணைக்கு அனுப் புவீங்க ளானு கேட் றாதீங்க…)
11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையை கையா ண்ட அனுபவம் உண்டா?
வேற நிறுவனத்துல வேலைபார்த்த அனுபவம் இருந்துச்சுனா, இந்தக் கேள் விக்கான பதில், நம்மளோட திறமையை யூகிக்கச் செய்யும்.(ஆபீசுக்கு லீவு போட் டுட்டு, பாட்டி செத்துப்போய்ட்டாங்கனு சமாளிச்ச அனுபவத்த சொல்லி வச்சு டாதீங்க..)
12. தனித்து செயல்பட விருப்பமா? அல்லது குழுவாக செயல்பட விருப் பமா?
இது அவங்கவங்க, தன்மேல வச்சிருக்குற நம்பிக் கையப் பொறுத்து பதிலளிக்கணும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சு டாதீங்க..)
13. இங்கு வேலை கிடைக்காதபட்சத்தில் உங்களுடைய பிரதிபலிப்பு என் னவாக இருக்கும்?
மனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டுவேன் “னு சொல்லத் தோணும். ஆனா சொல்லிடா தீங்க.. இது உங்க விடா முயற்சி, நம்பிக்கை பத்தின கேள்வியா இருக்கும். இந்த பதிலை வச்சுக்கூட வே லை கிடைக்கலாம்.
14. எவ்வளவு காலம் இங்கே பணி செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?
“ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளை பண்ணிருக்கே ன். கிடைச்சதும் ஓடிடு வேன்“னு அதிமேதாவித் தனமா பதில் சொல்லக்கூடாது. இதுக்கு குறி ப்பிட்ட கால வரையறை எதுவும் சொல்லா ம, கடைசிவரைக்கும் இருப்பேன்னு சொல்ல ணும். தொடர்ந்து வேலை செய்ய முன் வரும் பட்சத் துல வாய்ப்புகள் தரப்பட லாம்.
15. உங்களுக்கு, எங்களிடத்தில் கேட்கவேண்டிய கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா?
இது, நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதா வது சந்தேகங்கள் இருக்காங்குற நோக்கத்துல கேட்கப் படுது. திறம்பட கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள லாம். இந்தக் கேள்வியில இருந்தும் நம்ம ளோட, தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆராயப்படும்.(இங்க எத்தன பொண்ணுங்க வேலை பாக்குறா ங்க“னு கேட்டுறா தீங்க…)
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-**-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-**
நிறுவனங்களப் பொறுத்து, இன்னும் பல கேள்விகள் கேட்கப்படலாம். கேள் விகள் எதுவாகயிருந்தாலும் தைரியமா, தடுமாற்றமில்லாமல நாம கூறும் பதில்கள் ரொம்பவே அவசியம். நம்மகிட்டயிருந்து வெளிப்படும் பதில்கள், சம்பந்தப்பட்டவர்க்கு திரு ப்தியளிக்கும் பட்சத்துல, அதற்கான பலன் நிச்சயம் பாசிடிவ்வாக அமையும்.
வாழ்த்துக்கள்

பாலோடு தேன் கலந்து குடித்தால் . . .

பாலோடு தேன் கலந்து குடித்தால்…

பாலோடு தேன் கலந்து குடித்தால்…
பாலுடன் தேன் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனைகள் குணமா வதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு
பல்வேறு விதமான ஆரோக்கிய ங்களை வழங்குகிறது.
இதில் உள்ள புரோபயோடிக் நல்ல பாக்டீரியா க்களின் வளர்ச்சியை அதிகரித்து செரிமானத் தை மேம்படுத்த உதவுகிறது.
கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தால் உடலின் ஆற்றல் கு றையும், இதனால் பாலுடன் தேன் கலந்துகுடித்தால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணி காக்க உதவும், பாலுடன் தேன் கலந்து குடித்ததால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
இரவு தூங்கும் போது குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர் கள், வெதுவெதுப்பான பாலில் தேனை கலந்து, அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் மலச்சிக்கல் குணமடையும்.
சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இதனை குடித்தால், அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல், உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்துசளித்தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக் கும்.
மேலும் இவற்றில் உள்ள கனிமச்சத்துக்கள் மற் றும் அமினோ அமிலங்கள் இனப்பெருக்க மண்ட லத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
உடல் உள்ள கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்க உதவுகிறது. நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் உணவு உட் கொண்ட பின்னர், பாலுடன் தேன் கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...