Saturday, April 30, 2022

படைத்தவன் நினைத்தால்  கூட ஆயுளை மாற்றமுடியாது,

 இந்திரன் மனைவி இந்திராணி ஆசையாக ஒரு கிளி வளர்த்தார். ஒருநாள் அந்த கிளிக்கு நோய்வாய்பட்டது. உடனே இதை இந்திரனிடம் சென்று கிளி இறக்கும் நிலையில் உள்ளது அதைஎப்படியாவது காப்பாற்றுங்கள் கிளி இறந்தால் நானும் சேர்ந்து இறந்துவிடுவேன் என்றாள்,

உடனே இந்திரன், உயிர்களைபடைக்கும் பிரம்மனிடம்  சென்று இதைப்பற்றி கூறினார், அதற்கு பிரம்மன் உயிர்களை படைப்பது நான்தான் ஆனால் அதைக் காப்பது விஷ்னுவின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம் வா நானும் உன்னுடன் வருகிறேன் என்று சென்றனர்,
பின்னர் விஷ்னுவிடம் நடந்ததை கூறினர், அதற்கு விஷ்னு, உயிர்களை எடுப்பது சிவனின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம், வாருங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் என்று மூவரும் சென்றனர்,
பின்னர், சிவனிடம் நடந்ததை கூறினர், அதற்கு சிவன்,  உயிர்களை எடுக்கும் தொழிலை எமதர்மனிடம் கொடுத்து விட்டேன், வாருங்கள் நானும்வந்து எமனிடம் முறையிடுகிறேன் என்றார்,
நடந்ததை எமனிடம் கூறினர், எல்லா உயிர்களின் ஆயுளையும் ஒரு ஓலையில் எழுதி அதை ஒரு அறையில் கட்டிவிடுவேன் அது என்றைக்கு அறுந்து விழுகிறதோ அன்று இறந்துவிடும், எனவே கிளியின் ஓலையை எடுத்து மாற்றி எழுதலாம் வாருங்கள் என்று அந்த அறைக்கு அழைத்து சென்றார்,
உள்ளே நுழைந்ததும் ஒரு ஓலை அருந்து வழுந்தது அது அந்த கிளியின் ஓலைதான் அதை எடுத்து படித்தனர்
அதில், இந்திரன், சிவன், பிரம்மன், விஷ்னு, எமன் இவர்கள் ஐவரும் ஒன்றாக இந்த அறைக்குள் வரும்போது கிளி இறந்துவிடும் என்று எழுதியிருந்தது,
எனவே படைத்தவன் நினைத்தால்  கூட ஆயுளை மாற்றமுடியாது, வாழும் காலம்வரை சந்தோஷமாக வாழ்வோம்.

"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.

 "குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

"வருத்தப்படாதே,
என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.
"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.
அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.
பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.
இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.
இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.
இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.
ஆனால் ஆச்சர்யம்!
பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.
இதே போல் இன்னொரு சம்பவம்.
அதிலும் டாக்ஸி ஓட்டுனர்,
பொறுமை இழக்கவில்லை.
ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.
இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.
இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.
"எப்படி இவ்வளவு பொறுமையாய்,
யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"
அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர்,
"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.
வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்
குப்பைகளையெல்லாம் என் மனதில்
சேர்த்துக்கொள்ளவில்லை.
அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு
பதில் சொல்லிக்கொண்டிருந்தால்
நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."
இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய
வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.
ஆமாம்,நண்பர்களே,நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும்,கொஞ்ச நஞ்ச இடைஞ்சல்கள் அல்ல... 🎯🎯🎯
🪶🪶🪶

அனைவரும் வரவேற்க்கக்கூடியது !

 தமிழகத்தில் வரும் மே. 1 முதல் ஆலயங்களுக்கு செல்லும்போது இப்படித்தான் ட்ரெஸ் போடனும் - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி அறிவிப்பு-

அனைவரும் வரவேற்க்கக்கூடியது !
தமிழகத்தில் இந்து ஆலயங்களில் நுழையும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிரடி உடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது .
தமிழகத்தில் இந்து கோயில்களில் மே 1-ந் தேதி முதல் ஆண்கள் மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, வழக்கமான பேன்ட் மற்றும் சட்டை அணிய வேண்டும்.
பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஏதாவது ஒரு ஆடை அணிந்து வரவேண்டும்.
இந்த ஆடை கட்டுப்பாட்டினை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை கடிதம் அனுப்ப வேண்டும்.
அறநிலையத் துறைக்கு கட்டுப்படாத கோயில்களில் பாரம்பரிய ஆடை கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும். வேறு ஆடைகள் அணிந்து வரும் பக்தர்களை கோயில்களுக்குள் போலீஸார் அனுமதிக்கக் கூடாது.
May be an image of 2 people and people standing

அந்த எண்ணத்தை பாருங்கள்.

 ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.

ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.
குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.
நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.
மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.
இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன்.
எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.
“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.
இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.
அவன் சென்ற பிறகு,
ராணி“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்
“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”
அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.
“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன்.
பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான்.
எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.
அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும். அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று.
நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!
மனித உணர்வுகளை
நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் .
நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும்.
இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும்.
அதுவே உண்மையான நன்றி.
அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள்.
அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள்.
யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம்.

இழப்பு மறக்க முடியாதது.

 1980 களின் இறுதியில் நாவல்கள்

கொடி கட்டி பறந்த நேரம்.. க்ரைம் நாவல் பாக்கெட் நாவல் ஏநாவல் டைம் என பல நாவல்கள் விற்பனையில் சக்கைப்போடு போட்டது ..
அப்போது சூப்பர் நாவல் என்ற நாவல் வித்யாசமான அட்டைப்படத்தோடு சுபாவின் எழுத்துக்களோடு ராமு என்பவர் ஆரம்பித்தார்.
அதன் அட்டைப்படம் KVஆனந்த் ..
ராமு-சுபா - ஆனந்த் கூட்டணியில் சூப்பர் நாவல் கொடி கட்டி பறந்தது. தூண்டில் கயிறு நரேன் வைஜெயந்தி ஜான் சுந்தர் அனிதா ராமதாஸ் என ஈகிள்ஸ் ஐ துப்பறியும் நிறுவனம் என ஏகப்பட்ட நாவல்கள் ஆனந்த்தின் அட்டைப்படத்தோடு ...
நல்ல நட்புக்கு ஆனந்த் - சுபா . உதாரணம்..
கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டில் போட்டோகிராபரில் இருந்து பிசி ஸ்ரீராம்மிடம் ஒளிப்பதிவாளராக பயிற்சி பெற்றார் -
தேன்மாவின் கொம்பத்து முதல் மலையாள படம் விருதும் கிடைத்தது.
தமிழில் காதல் தேசம் ஷங்கர் படம் என பல படங்கள் ..
தனது நண்பர்கள் சுபாவின் கதையோடு கனாக் கண்டேன் முதல் படம் இயக்கம் இன்றும் பிர்த்திவ் ராஜின் வில்லத்தனம் பேசப்படும்.
அயன் படம் வெற்றி நடை போட்டது
கோ இன்னொரு அரசியலை சொன்னது.
மாற்றான் ரசிக்க வைத்தது
கடைசியாக காப்பான் தனது நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகருடன் செய்தார்
பல நல்ல படங்கள் நல்ல ஒளிப்பதிவு என
வித்யாசமாக படம் செய்தவரின் இழப்பு
மறக்க முடியாதது.
ஐ மிஸ் யூ ஆனந்த்Sir
One years ago
May be an image of 1 person

மூத்தோருக்கும் ஆசாபாசங்கள் உண்டு; அவற்றை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்!

  அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?

‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’
ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும் என பேத்தி அடம் பிடித்தாள்.
பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும் என மருமகள் சொன்னார்.
பாட்டியும், ஆமாம் என்று ஆமோதித்தார்.‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!
பத்து வயதுப் பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள்.
ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார். பேத்தி துள்ளிக் குதித்தாள்.
அப்பா அனைவரையும் புறப்படச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராய் இருந்தார். அப்பாவும் அம்மாவும் புறப்பட ரெடியாகும்போது பேத்தி பாட்டியை அழைத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள்.
சாக்பீஸால் ஒன்றரை ஜான் அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டாள்.
பாட்டி... இங்க பாருங்க. இது ஒரு விளையாட்டு. இப்ப நீங்க ஒரு கொக்கு. சரியா? இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து, இடது காலை லேசா மூணு இஞ்ச் தூக்கினா போதும். செய்ங்க!’’
இது எதுக்கும்மா?
இதுதான் கொக்கு விளையாட்டு பாட்டி. நானும் செய்யறேன் என்று செய்து காட்டினாள்.
பாட்டியும் பேத்தி கண்டுபிடித்த கொக்கு விளையாட்டை விளையாடிப் பார்த்தார். பையனும் மருமகளும் வர, ஷாப்பிங் மாலுக்கு ஆட்டோ பிடித்துப் போனார்கள்.
அங்கே நகரும் படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன. ‘இதில் எப்படி பாட்டி ஏறுவார்’ என்று மகனும் மருமகளும் யோசிக்கும்போது பேத்தி மட்டும் பாட்டியை நகரும் படிக்கட்டு முன்னால் செல்லமாக இழுத்து வந்தாள்.
பாட்டி! இதுல பயப்பட எதுவுமில்லை. இப்ப நீங்க கொக்கு விளையாட்டு விளையாடுங்க என்றாள்.
பாட்டி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மூன்று நான்கு இஞ்ச் மேலே தூக்கினார். மேலே நகர்ந்தார். பின் இடது காலையும் வைத்து இரண்டு காலால் நின்றார்.
எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல நகர்வதை மகனும் மருமகளும் பார்த்து வியந்தனர்.
பாட்டி உற்சாகமாகிவிட்டார். அடுத்த அடுத்த எஸ்கலேட்டர்களில் மகிழ்ச்சியாகக் குதித்துக் கொண்டே ஏறினார். அதைப் பழகிக்கொள்ளவே பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி மறுபடி ஏறினார்கள். சினிமா பார்க்கப் போனார்கள். குளிராக இருந்தது. பேத்தி தன் பையில் வைத்திருந்த சால்வையை பாட்டிக்குக் கொடுத்தாள்.
இதை எப்போ கொண்டு வந்தே?என்று பாட்டி கேட்டதற்கு, ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ பாட்டி என்றாள் குறும்பாக.
படம் பார்த்த பிறகு உணவகம் சென்றார்கள். அம்மா, உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?என்றான் மகன். உடனே பேத்தி மெனு கார்டைப் பிடுங்கி, ‘‘ஏன்? பாட்டிக்கு படிக்கத் தெரியாதா? அவுங்க கிட்ட மெனு கார்டைக் கொடுங்க. பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க’’ என்றாள்.
பாட்டி மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்தார். பேத்தியும் பாட்டியும் ஆர்வமாக சாப்பிட்டார்கள். பின் மாலில் வீடியோ கேம் விளையாட்டுகளையும் பாட்டியும் பேத்தியும் விளையாடினார்கள். வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் பாட்டி டாய்லெட் சென்றார்.
அப்போது மகளைப் பார்த்து, ‘‘என் அம்மாவைப் பத்தி என்னைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கே செல்லம்’’ என்று சொல்லி அப்பா சிரித்தார்.
அப்பா! அதோ பாருங்க... குட்டிப் பாப்பாவை அந்த ஆன்ட்டி கூட்டிட்டு வரும்போது எவ்வளவு ஏற்பாடுகள் செய்துட்டு வர்றாங்க. பால் பாட்டில், துடைக்க துண்டு, டயபர்ஸ் இப்படி எவ்ளோ ஏற்பாடுகள்.
நீங்க குழந்தையா இருந்தப்போ, பாட்டியும் இப்படித்தான் செய்திருப்பாங்க. அது மாதிரி பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க. அதை ஏன் செய்றதில்லை?
எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பாக்க ஆசையாதான் இருக்கும். நீங்களாவே ‘வயசானவங்க கோயிலுக்குதான் போவாங்க. ஜாலியா இருக்க மாட்டாங்க’ன்னு நினைச்சிக்காதீங்க. அவுங்க வரலண்ணாலும் மனசுக்குள்ளே ஆசை இருக்கும். நீங்கதான் வற்புறுத்தணும் அப்பா’’ என்றாள்.
தன் பத்து வயது மகளிடம் புதிதாகக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அப்பா நெகிழ்ந்திருந்தார்.

வாழ்க்கை_ஆலமரம் .

 

🍄 விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.
🍄 இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, " இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு #சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்"
என ஏளனம் செய்தது.
🍄 ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே,
🍄 மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அந்த #காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது.
🍄 அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , " இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க,
🍄 இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.
🍄 தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக #வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.
🍄 நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்..
🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳🌿🌳🌿 🌳
May be an image of 1 person, tree and nature

பள்ளிக்_காலங்களில் .

 ஒரு பெண் டீச்சரைப் பார்த்து

பால்பண்ணை என்று சகமாணவர்கள் கூப்பிடுவார்கள்.
அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ’நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களை கொண்டுள்ளதால் அவரைப் ’பால்பண்ணை’ என்று அழைப்பார்கள்.
அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும் போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன்.
அதற்கும் முன் சிறுவயதில் ’சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்கு பால்கட்டி கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்.
ஒரு விநாடி இப்படின்னா என்ன? என்று தோன்றி பின் மறந்த காட்சி அது.
பொதுவாக பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு உச்சமான இன்பத்தைக் கொடுக்கும் விசயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் தன் விழிகளை பதிக்காமல் பாதையை கடப்பது கடினம்,
ஆனால் அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மாதவிலக்கு, மென்ஸஸ் போன்ற விஷயங்கள் பற்றி கூட கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தாற்போல இருக்கிறது. ஆனால் இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்பே இருக்கிறது.
சமீபத்தில் அமரந்தா எழுதிய ’பால்கட்டு’ என்றொரு கதையைப் படித்த பிறகுதான் எனக்கு இதன் வலி புரிந்தது. கதை👇
நடுத்தர குடும்ப பெண்ணுக்கு, வேலைக்கு போயே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பெண்ணுக்கு ‘பால்கட்டுதல்’ என்றப் பிரச்சனை இருக்கிறது.
மார்பகங்களில் பால் அதிகமாகக் கட்டிக்கொண்டு வலியைக் கொடுப்பதுதான் இதன் அம்சம்.
மிக அதிகமாக கட்டிக்கொள்ள டாக்டரிடம் போகிறாள், நர்ஸ் பம்ப் வைத்து பாலை எடுக்க முயற்சி செய்கிறார், வலியால் துடிக்கிறாள்,
இவள் வலியால் துடிப்பதைப் பார்த்த நர்ஸ் ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா” என்று தன் வாயால் மார்பில் வாயைவைத்து பாலை உறிஞ்சி துப்புகிறார்.
பின் பெண்ணின் மார்பை ஆராய்ந்து, அதில் புண் இருப்பதாகவும், அதனால் பால் சரிவர வெளிவராமல் கட்டிக் கொள்வதாகவும் சொல்லி, அதற்கு ஒரு க்ரீம் கொடுக்கிறார்.
அந்த க்ரீமைத் தடவ வேண்டும். பின் குழந்தைக்குப் பால் கொடுக்கும் முன் அதை சுத்தம் செய்ய வேண்டும். பின் மறுபடியும் தடவ வேண்டும் என்று நரக வாழ்க்கையை வாழ வேண்டியதாயிருக்கிறது.
காலை அலுவலகத்துக்கு வந்துவிட்டு மதியம் குழந்தைக்கு பால் கொடுக்கச் செல்வதற்குள் அது மார்பில் கட்டிக் கொண்டு கெட்டுப் போய் விடுகின்றது.
இவளுக்கு குழந்தை பால் குடித்தால் பாரம் குறையும் என்றிருக்கும் போது, குழந்தையோ கெட்டுப் போன பாலைக் குடிக்காமல் அழுகிறது.
மறுநாளில் இருந்து அலுவலகத்தின் பாத்ரூம் சென்று அவ்வப்போது மார்பை பிதுக்கி அவ்வப்போது பாலை எடுக்கிறாள்.
இப்படியாக பால்கட்டுதலால் அவள் படும் கஷ்டத்தை ஆசிரியர் கதை நெடுகச் சொல்கிறார்.
ஒருநாள் மாலை வீடு செல்லும் போது கதவு திறந்திருக்கிறது. வழக்கமாக இரவு லேட்டாக வரும் கணவன் அன்று சிக்கிரமே வந்திருக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி.அவனிடம் காப்பிக் குடிக்க வேண்டும் என்று கேட்க நினைக்கிறாள்.
ஆனால் மார்பு பாரம் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்து வராண்டாவிலேயே பால் கொடுக்கிறாள். குழந்தைக் குடிக்க ஆசுவாசப்படுகிறாள்.
ஆனால் கணவனோ உள்ளே போ உள்ளேப் போ போ என்று விரட்டுகிறான். இவள் வேறு வழியில்லாமல் உள்ளே வருகிறாள்.
“வாசல்ல இருந்துதான் இதெல்லாம் செய்வியோ’ என்று கணவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டி கடுத்து வருகிறான்.
அவள் தலை கிறுகிறுத்துப் போகிறது.
இப்படியாகக் கதை முடிகிறது.
இதைப் படித்த பிறகுதான் பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா என்று எனக்குத் தெரிந்தது.
அம்மாவுக்கு போன் போட்டுக் கேட்டேன்.
அம்மா இந்தக் கதையை ஆமோதித்து, பால் கட்டுதல் என்பது சில பெண்களுக்கு கொடுமையான விசயம் என்று விளக்கினார்.
நான் அம்மாவிடம் கேட்டேன் “ஏம்மா இத்தன வருஷம் உங்க கிட்ட ஃப்ரெண்டா பேசியிருக்கேன். இந்த விஷயத்த எனக்கு சொல்லவே இல்லை” என்றேன்.
யாருமே எங்கேயுமே இதுமாதிரியெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று சொல்லாமல் இருந்தால் ஆணுக்கு எப்படித் தெரியும்.
அப்படி ஆணுக்குப் பெண்ணின் வலிதெரிவது இப்போதைய வன்புணர்வு கலாச்சாரத்தில் முக்கிய தேவையாகும்.
என்னைக் கேட்டால் பிளஸ் டூ தமிழ் சிறுகதைகளில் ஒன்றாக அமரந்தாவில் “பால் கட்டு” சிறுகதையை வைக்க வேண்டும் என்பேன்.
ஒருவேளை இக்கதையைப் படித்தால்
“பால் பண்ணை, இளநீ, காய், முலை, முயல் குட்டி” என்றெல்லாம் மார்பகங்களை பேசுவதை கொஞ்சம் ஆண்களாவது தவிர்ப்பார்கள்.
அந்த கொஞ்ச ஆண்கள் பிற்காலத்தில் நிறைய ஆண்களாக ஆகலாம்.
பண்பட்ட சமூகத்தை அடைவதுதான் நம் நோக்கம் என்றால் இது போன்ற சிறுகதைகள் நிறைய வரவேண்டும். விவாதிக்கப்பட வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
May be a black-and-white image of one or more people and indoor

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...