Wednesday, August 31, 2011

செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் – ஏமாந்த சோனகிரி

உலக மகா உத்தம கட்சித்தலைவரிடம் விண்ணப்பம் என்ற கோதாவில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிய ஸ்மக்ளர்,  படமெடுக்க ஆர்வமாய் இருப்பதாகவும், அதற்கொரு திரைக்கதை வேண்டுமென்றும் கேட்க, ஆகா ஏமாந்தாண்டா ஒரு லூசுப்பயல் என்று நினைத்து குஷியோடு கதை ஒன்றினைக் கொடுத்தார் அந்தத் தலைவர்.
இதில் ஏமாந்தது தலைவர்தான். ஸ்மக்ளர் அல்ல. எப்படி என்றுச் சொல்கிறேன் கேளுங்கள். ஸ்மக்ளரின் சித்து விளையாட்டுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்று சினிமா உலகில் பேசிக் கொள்வார்கள். அதெல்லாம் உண்மையா இல்லையா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.
அந்தக் காலத்தில் லாட்டரியில் கொடிகட்டிப் பறந்த ஒரு பிரபலம் ஒருவர் தலைவரிடம் நெருங்க முயன்று கொண்டிருந்தார். அதைக் கேள்விப்பட்ட ஸ்மகளர் அவரைத் தன்னிடம் வரவழைத்தார். தலைவரின் அபிமானம் பெற வேண்டுமானால் அவரின் திரைக்கதையைப் படமாக்கினால் போதும். விரைவில் தன்னுடன் இணைத்துக் கொள்வார் என்று ஐடியா கொடுக்க, லாட்டரி அதிபரும் பல்லை இளித்துக் கொண்டு 50 கோடி ரூபாயைதூக்கிக் கொடுத்தார்.
திரைப்படமும் உருவாகியது பிரமாண்ட சைசில். தயாரிப்பாளர் யாரென்று பார்த்த லாட்டரி அதிபருக்கு சகலமும் அப்போதுதான் புரிந்தது. ஆப்பை அடித்த ஸ்மக்ளர் கடைசி வரையில் லாட்டரி அதிபரை தலைவரின் அருகிலேயே விடவில்லை. தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு “அய்யோ அம்மா, ஆத்தா” என்று அரற்றிக் கொண்டிருக்கிறார் லாட்டரி அதிபர்.
விதி வலியது லாட்டரி அதிபரே. செய்யும் தொழில் பிறரைக் கெடுக்காத வண்ணம் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் பலரின் உழைப்பை உறிஞ்சியவரல்லவா? இன்று அனுபவிக்கின்றீர்கள். எத்தனை கோயில் ஏறி இறங்கினாலும் பாபக் கணக்கிற்கு விடை இருக்கிறது அதிபரே.
இந்த ஸ்மக்ளர் தற்போது அப்பணத்தினை வைத்து பலப்பல வேலைகளைச் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டேன்.
விரைவில் குஜய் பற்றிய அதிமுக்கிய சீக்ரெட்ஸ் ஒன்றினை எழுதப் போகிறேன். இந்தச் சம்பவம் அதிர்ச்சியாய் இருக்காது. மக்கள் எப்படி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாய் சொல்லும். அதுவரை இந்த நாவலுக்கு சற்று இடைவேளை.

குறிப்பு : இது ஒரு நாவல் யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.

Tuesday, August 30, 2011

மதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் !

மதுரை அண்ணனிடம் மாட்டிய
ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் !

ஏனோ தெரியவில்லை - இன்னும் கூட
தமிழ் பத்திரிகைகள் சில செய்திகளை
வெளியிட தயங்குகின்றன.
தமிழ் நாட்டிற்கு தெரிய வேண்டிய ஒரு
விஷயம் - தமிழ் பத்திரிகைகள் எதிலும்
வரவில்லை.

இது டெல்லியிலிருந்து வந்திருக்கும் செய்தி -
ராஜ் டிவி, மதுரை ராயல் கேபிள் விஷன்
நிறுவனத்திடமிருந்து (முதலாளி யார்
தெரியும் இல்லையா ?) மார்ச் 2008
முதல் வரவேண்டிய தொகைக்காக
(மொத்தம் ரூபாய் 6,68,80,881)
The Telecom  Disputes  Settlement
and Appellate Tribunal )
TDSAT-ல் ஒரு வழக்கு போட்டிருக்கிறது.

ராஜ் டிவியின் வேண்டுகோளை ஏற்று,
வழக்கு முடிவடையும் வரை ராயல் கேபிள்
விஷன் நிறுவனம் தனது அசையும் மற்றும்
அசையா சொத்துக்கள் எதையும்
விற்கக் கூடாது என்று ட்ரைபியூனல்
தடை உத்திரவு  பிறப்பித்திருக்கிறது.

அலைவரிசையை மார்ச் 2008 முதலே
பெற்று வந்தாலும், அண்ணன் நிறுவனம்
ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து
போடாமல் தவிர்த்து வந்ததாகவும்,
மீண்டும் மீண்டும் நினைவுறுத்தியும்
பணமும் கொடுக்கவில்லை என்றும்
மனுவில் ராஜ் டிவி தெரிவித்திருக்கிறது.

இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பது
பலருக்கும் மறந்திருக்கலாம்.
மதுரை தினகரன் அலுவலகம்
எரிக்கப்பட்டதும், மாறன் சகோதரர்களுடன்
மனஸ்தாபம் ஏற்பட்டதுமான நிகழ்வுகள்
ஏற்பட்டபோது,  ராஜ் டிவி தன்னிச்சையாக
முன்வந்து அதன் உரிமையாளர்கள் திமுகவில்
சேர்ந்து, ராஜ் டிவியை திமுக செய்திகளை
ஒளிபரப்ப உதவினார்கள்.

பின்னர் கண்கள் பனித்து,
இதயம் மலர்ந்ததும் – ராஜ் டிவி அம்போ
வென்று கைவிடப்பட்டது.

அப்போது ஏற்பட்ட உறவில் துவங்கி
இருக்கிறது இந்த பணச்சிக்கல்  !

ஜெயலலிதா



 

ஜெயலலிதாவின் அணுகுமுறையில் மிகச் சிறந்த முன்னேற்றம் .
அவர் பெரும்பாலும் அடக்குமுறை நடவடிக்கைகளாலேயே அறியப்பட்டு வந்துள்ளார் .
இந்த முறை அவர் ஆட்சியேறிய முதல் ,மக்கள் விருப்பம் சார்ந்தே அவரது
நடவடிக்கைகள் இருந்து வருகிறது சமச்சீர் கல்வி தவிர .
இலங்கை பொருளாதாரத் தடை மற்றும் சமீபத்திய தூக்குத்தண்டனை எதிர்ப்பு தீர்மானங்கள் அவற்றில் சில .
இவரின் தற்போதைய அணுகுமுறை பெருவாரியான மக்களால் ஆதரவும் பாராட்டும் பெற்று வருவது
குறிப்பிடத் தக்கது .திமுகவினர் மீதான நடவடிக்கைகள் ஒருவகையில் சரியென்றே படுகிறது.
இப்போதே அதிக நம்பிக்கை வைப்பது அதிகமென்றாலும்,இது தொடர வேண்டும் என்ற ஆசை மேலிடுவது
உண்மையே.இவ்வாறே தொடருமெனில்,தமிழ் நாட்டின் முன்னேற்றப் பாதை தீர்க்கமானதாகவே தெரிகிறது.
என்னைப் பொறுத்த வரையில் அவர் எப்போதும் விருப்பமான தலைவராக இருந்ததில்லை.ஆச்சர்யமூட்டும்
வகையில் அவரது அணுகுமுறையின் மாற்றம்,அவரை பாராட்டும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கருணாநிதி நடத்தும் போலி நாடங்கள் எப்போதும் இவரிடம் இருந்ததில்லை.
கடந்தவை கசப்பானதாகவே இருந்த போதிலும் ,நடப்பவை மிக நல்லதாக இருக்கும் பட்சத்தில்,பாராட்டுவதில்
தவறேனும் இல்லை.
திமுக எதிர்ப்பு நடவடிக்கைகளை தவிர்த்து,தமிழ்நாட்டின் முன்னேற்ற விசயங்களில் அதிக கவனம் செலுத்தினால்
மிகச் சிறந்த தலைவராக அறியப் படுவார்.
தற்போதைய ஆட்சிக் காலம்,அவரது எதிர்கால அரசியலுக்கு மிகச் சிறந்த ஆணிவேராக அமையக்கூடும்
.

கை கொடுத்த ஜெயாவும், கலைஞரின் சிறுபிள்ளைத்தனமும்


கலைஞரின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு.........

நேற்று கலைஞர் ஒரு அறிக்கை விட்டிருந்தார்.
அதில் ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால் பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவரையும் மன்னித்து அவர்களை தூக்கிலிருந்து காப்பாற்றியிருப்பார் என்று சொல்லியிருந்தார். அதை படித்ததும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ராஜீவை கொன்றதால் தானே இந்த வழக்கு நடைபெறுகிறது. ராஜீவ் கொலை சதியில் மூவருக்கும் பங்கிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுத்தானே தூக்குத்தண்டனையை எதிர் நோக்கியுள்ளார்கள். அப்புறம் எப்படி இப்படி பேசுகிறார் கலைஞர்?. அடப்போங்க தலைவரே....ராஜீவ் உயிரோடு இருந்தால் இந்த வழக்கிற்க்கே வேலையில்லை.தூக்குக்கும் வேலையில்லை....



பாவம் செங்கொடி....

மூன்று உயிர்களை காப்பாற்ற தன் உயிரை இழந்துள்ளார் செங்கொடி.இப்படி தற்கொலை செய்துகொள்வதால் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை,உயிர் போவதை தவிர.... எதற்கெடுத்தாலும் இப்படி உணர்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. தற்கொலை செய்து கொண்டால் அந்த ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேதனை, வலி எல்லாம். உயிர் பிரிந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும். ஆனால், தற்கொலை செய்து கொண்டவர்களின் பெற்றோருக்கோ, குடும்பத்திற்கோ அது ஆயுள் முழுவதும் வலியும், வேதனையும். 
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் எல்லாம் பெரும்பாலும் திட்டம் போட்டு வருவதில்லை. அந்த கன நிமிட யோசனைதான். இன்னும் கொஞ்ச நேரம் யோசித்தால் அது எத்தனைபெரிய முட்டாள்தனம் என்பது புரியும். துணிச்சலில் மிகப்பெரிய துணிச்சல் சாவை நேருக்கு நேர் சந்திப்பதுதான். அப்படி சாவை சந்திக்கும் துணிச்சலில் பாதியளவை  போராடவோ, வாழ்வதற்க்கோ பயன்படுத்தினாலே போதும் வெற்றியடைந்து விடலாம்.
செங்கொடியின் தியாகத்தை நான் கொச்சைப்படுத்தவில்லை.அதே நேரம், இந்த உயிர்தியாகத்தை தற்கொலையை தலையில் தூக்கிவைத்து கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படி கொண்டாடினால், அது தற்கொலை செய்து கொள்ளும் உத்வேகத்தை மற்றவர்களுக்கும் கொடுத்து விடும் அபாயம் இருக்கிறது ஜாக்கிரதை. அந்த மூன்று உயிர்களுக்காக போன முதல் உயிரும், கடைசி உயிரும் செங்கொடியின் உயிராக மட்டும் இருக்கட்டும்.


  நேற்று கைவிட்டு இன்று கை கொடுத்த ஜெயா...

மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் எனக்கில்லை என்று  நேற்று கைவிரித்து விட்டிருந்தார் ஜெ....ஆனாலும், இன்னும் அவருக்கு அந்த அதிகாரம் இருப்பதாகவே சொல்கிறார்கள் தமிழுணர்வாளர்கள். அரசியல் சட்டவிதி 161, மற்றும் 72 , உட்பிரிவு-3 ஆகியவை ஜனாதிபதி நிராகரித்த கருணை மனுக்களை அமைச்சரவையின் முடிவின்படி மாநில கவர்னர் ஏற்று தூக்குத்தண்டனையை நீக்குமதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதை உறுதி செய்கிறதாம்.

விதி-72, ஜனாதிபதிக்கு தூக்குத்தண்டனையை நீக்கும் அதிகாரத்தை வழங்கினாலும், அதன் உட்பிரிவு 3, ஜனாதிபதி ஒரு கருனைமனு மீது என்ன முடிவு எடுத்திருந்தாலும், மாநில ஆளுனர் அதை பொருட்படுத்தாமல் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தனித்த முடிவு எடுக்கலாமென்று உரிமை அளித்துள்ளதாம். 


தற்போதைய செய்தி

  தன் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டசபையில் தூக்கை நிறுத்த
இன்று தீர்மானம் போட்டுள்ளார் ஜெ., இப்போது தூக்குத்தண்டனைக்கு 8 வாரகாலம்  தடை விதித்துள்ளது நீதிமன்றம்.
 
 இதையும் படிச்சிடுங்களே....

மூன்று பேருக்கும் தூக்கு -இப்ப சந்தோஷமா சோனியாஜி? ....

உணர்வுகளை மதிக்கும் உன்னதத் தீர்மானம்


இராஜீவ் காந்தி கொலை வழக்கில தூக்கை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை இந்தியக் குடியரசுத் தலைவர் கருணையுடன் மறு பரிசீலனை செய்து ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது மனிதாபிமானம் கொண்டோர் வரவேற்கும் நடவடிக்கையாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161இன் கீ்ழ் மாநில அரசுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளில் இருந்து அரசியல் கட்சிகள் வரை வேண்டுகோள் விடுத்தபோது, அது அரசியல் சட்ட் ரீதியாக சாத்தியமில்லை என்று சட்டப் பேரவையிலேயே விளக்கமளித்தார் முதல்வர் ஜெயலலிதா. அவை விதியெண் 110இன் கீழ் அவர் விடுத்த அறிக்கையில், இந்திய அரசமைப்புப் பிரிவு 257 (1)இன் படி, ஒரு பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துவிட்ட நடவடிக்கைக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதை எடுத்துக் கூறினார்.

இதனைக் கூட ‘தப்பித்தல் வாதம’ என்றசிலர் விமர்ச்சித்தனர். ஆயினும் தமிழ்நாட்டு மக்களிடையே, மாணவர்களிடையே, தமிழர் உரிமைக்காக போராடிவரும் கட்சிகள் ஒன்று திரண்டு மரண தண்டனைக்கு எதிராக உருவாக்கிய எதிர்ப்பை, அதன் நியாயத்தை நன்கு புரிந்துகொண்ட நிலையிலேயே தமிழக முதல்வர் இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றி வைத்துள்ளார். முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததால், இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்ட்ட இத்தீர்மானத்தின் வலிமையையும், தன்மையையும் குடியரசுத் தலைவர் முழுமையாகப் புரிந்துகொண்டு, இம்மூவரின் கருணை மனுவை நிராகரித்த முடிவை மறு பரிசீலனை செய்வார் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

தமிழக சட்டப் பேரவையின் இந்த நடவடிக்கை இந்தியாவிற்கே முன்னுதாரணம் ஆகும். பொதுவாக, மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் கருணை மனு இறுதியாக குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றால், அதன் பிறகு அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள உச்ச நீதிமன்றத்தை மட்டுமே நாட முடியும். அதற்கான நிதி வசதி உள்ளவர்கள் மட்டுமே தேர்ந்த வழக்குரைஞர்களை நியமித்து வாதிட முடியும். ஆனால், இந்தியா போன்றொரு நாட்டில், இப்படிப்பட்ட கடும் தண்டனை விதிக்கப்படுவோர் பலருக்கும் அந்த வாய்ப்பு இல்லாததால் தூக்குக் கயிற்றில் உயிரை விட்டுள்ளனர்.
இராஜீவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் மூவரும், கொலைச் சதியிலோ அல்லது குற்றச் செயலலிலோ நேரடியாக ஈடுபட்டவர்கள் அல்ல என்பதாலும், அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றம் மரண தண்டனை வழங்கப்படும் அளவுடையதாகாது என்பதாலுமே, அவர்களின் தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெருமளவில் எழுந்தது.

அந்த நியாயத்தை உணர்ந்த தமிழக முதல்வர், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தையே கருணை மனுவாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும்.

மரண தண்டனையை ஒழிக்க வேண்டும
உலகெங்கிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் பலப்பட்டு வருகிறது. மரண தண்டனை விதிப்பதால் கடு(கொடு)மையான குற்றச்செயல்கள் குறைந்துவிடும் என்பது உண்மைக்குப் புறம்பானது என்பதை அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் பல நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளன. அதனால்தான் ஐ.நா.வின் மரண தண்டனை ஒழிப்பு உடன்படிக்கையில் இதுவரை 139 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. அப்படிப்பட்ட நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் இந்த மூன்று பேரின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளத் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்பது மட்டுமின்றி, ஒரு முன்னோடித் தீர்மானமும் ஆகும்.

மூன்று பேருக்கு மட்டுமே மனிதாபிமானத்தையும், இரக்கத்தையும் காட்டியுள்ள தமிழக சட்டப் பேரவை, மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றி, சரியான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திட வேண்டும் என்பதே மனித உரிமையாளர்களின் வேண்டுதல் ஆகும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை 11 ஆண்டுகள், 4 மாதங்களுக்குப் பிறகு நிராகரித்துவிட்டு, அவர்களை தூக்கில் ஏற்றுவது அநீதியானது என்று பிரபல சட்ட நிபுணர் ராம் ஜேத்மலானி வாதிட்டார்.

தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தனை ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தை எதிர்த்து, இம்மூவரில் சார்பில் மூத்த வழக்குரைஞர் சந்திரசேகர் தொடர்ந்த வழக்கு இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாரணயனா ஆகியோர் கொண்டு நீதிமன்ற அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது பேரறிவாளன் சார்பில் நீதிமன்றத்தில் நேர் நின்ற மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, “இவர்களுக்கு 1999ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவர்களின் கருணை மனு 2000வது ஆண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதன் மீது உடனடியாக முடிவு எடுத்துத் தெரிவிக்காமல், 11 ஆண்டுகள், 4 மாதங்கள் தாமதித்து, கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்கள். இத்தனை வருடங்களும் இந்த மூன்று பேரும் எத்தனை முறை செத்துச் செத்துப் பிழைத்திருப்பார்கள். அவர்களின் கருணை மனு 2000வது ஆண்டிலேயே நிராகரிக்கப்பட்டிருந்தால், அவர்கள் தூக்கு மரத்தில் ஏற்றப்பட்டிருந்தால், அவர்களின் உயிர் 5 விநாடிகளில் பிரிந்திருக்கும். மின்சார நாற்காலியில் அமர்த்தி தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அது ஒரு மணி நேரத்தில் உயிரைப் பறித்திருக்கும். அந்த மரண வேதனை இவர்கள் மூவரும் 11 ஆண்டுக்காலத்திற்கும் மேலாக அனுபவித்துள்ளனர். அவர்கள் அனுபவித்த மன வலி (mental agony) மரண தண்டனையை விட அதிகமானது.

அது மட்டுமல்ல, கொலை நடந்து, விசாரணைக்காக இவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் இவர்கள் மூவரும் இதுவரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறையில் இருந்துள்ளார்கள். இரு ஆயுள் தண்டனைக் காலத்தை விட அதிகமானதாகும். இந்த நிலையில், இவர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட காரணத்திற்காக தூக்கிலிட்டால், அது ஒரு குற்றத்திற்காக இரண்டு தண்டனை (Double Jeopardy) ஆகாதா?” என்று ராம் ஜேத்மலானி வாதிட்டார்.

சாந்தன், முருகன் ஆகியோருக்காக வாதிட்ட மூத்த வழக்குரைஞர் காலின் கன்சால்வஸ், பஞ்சாப் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் கெய்ரோன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கபட்ட தயா சிங் என்பவரின் கருணை மனுவை 4 ஆண்டுகள் தாமதித்து நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், தாமத்தத்திற்கு நியாயமேதுமில்லை என்று கூறி, அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தை சுட்டிக்காட்டி, இந்த மூன்று பேரின் கருணை மனுக்கள் 11 ஆண்டுக்காலம் கழித்து நிராகரிப்பட்டதை எடுத்துக் கூறினார். இவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதே நியாயம் என்று வாதிட்டார்.

தனது வாதத்திற்கு சான்றாக மது மேத்தா வழக்கையும் கன்சால்வஸ் எடுத்துரைத்து வாதிட்டார்.
இவர்களின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் வைகை, 20 ஆண்டுக்காலம் சிறையில் இருக்கும் இம்மூவரை, இதற்கு மேல் தூக்கில் போடுவது நியாயமற்றது என்று வாதிட்டார்.

மூத்த வழக்குரைஞர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மரண தண்டனை கைதிகளின் மனுக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு 8 வார காலத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டனர்.  

தூக்கு குறித்த தமிழக சட்டசபை தீர்மானம் கட்டுப்படுத்தாது: மத்திய அரசு

ராஜீவ கொலவழ‌க்‌கி‌லகு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள 3 பேரினமரதண்டனையஆயுளதண்டனையாகககுறைக்கும்படி தமிழசட்டப்பேரவையிலதீர்மானமநிறைவேற்றப்பட்டது.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் முதலமை‌ச்சரஜெயலலிதஇன்றபேரறிவாளன், சாந்தன், முருகனஆகியோரினதூக்கதண்டனையஆயுளதண்டனையாகுறைக்வேண்டுமஎன்று குடியரசு‌த் தலைவ‌ரை வலியுறுத்தி தீர்மானத்தகொண்டவந்தார்.


அப்போதஅவரூறுகை‌யி‌ல், இந்திஅரசியலஅமைப்பசட்டப்பிரிவு 72ன்படி ராஜீவ்காந்தி கொலவழக்கிலகுற்றமா‌ற்றப்பட்பேரறிவாளன், சாந்தன், முருகனஆகியோரினகருணமனுக்களமறுபரிசீலனசெய்தகுடியரசதலைவரநிராகரித்சூழ்நிலகுறித்துமஇந்விஷயத்திலதமிழமுதலமைச்சராஎனக்கஉள்அதிகாரமசட்ட‌ப்பேரவை‌யி‌ல் 110வதவிதியினகீழவிளக்கமாஅறிவித்தேன்.

3 பேரினகருணமனுவரத்தசெய்யுமஅதிகாரமதனக்கஇல்லஎன்றுமகுடியரசதலைவராலநிராகரிக்கப்பட்பிறகஇதிலநடவடிக்கஎடு‌கமுடியாதஎன்றுமகூறி இருந்தேன். இந்விஷயத்திலமீண்டுமகுடியரசதலைவர்தானமறுபரிசீலனசெய்முடியுமஎன்றசுட்டிககாட்டினேன்.

3 பேருக்குமவிதிக்கப்பட்டுள்தூக்கதண்டனையாலதமிழமக்களஇடையஏற்பட்டுள்நிலகுறித்துமபல்வேறதரப்பினருமவருத்தமஅடைந்ததபற்றியுமஎனதகவனத்துக்கவந்தது. பல்வேறஅரசியலகட்சியினருமதூக்குததண்டனரத்தசெய்வேண்டுமஎன்றவேண்டுகோளவிடுத்துள்ளனர். எனக்குமகோரிக்கவைத்துள்ளனர். எனவதமிழமக்களினஉணர்வுகளுக்கமதிப்பளிக்குமவகையிலபின்வருமதீர்மானத்தகொண்டவருகிறேன்.

தமிழமக்களினஉணர்வுகளுக்கும், தமிழஅரசியலகட்சிகளுக்குமமதிப்பஅளிக்குமவகையிலும், பேரறிவாளன், சாந்தன், முருகனஆகியோரினகருணமனுவமறுபரிசீலனசெய்தஅவர்களினமரதண்டனையஆயுளதண்டனையாகுறைக்நடவடிக்கஎடுக்வேண்டுமஇந்திகுடியரசதலைவரதமிழ்நாடசட்டப்பேரவவலியுறுத்தி கேட்டுககொள்கிறது.

தமிழமக்களினஉணர்வுகளுக்கமதிப்பளித்தஎன்னாலமுன்மொழியப்பட்இந்தீர்மானத்தஒருமனதாநிறைவேற்றி வேண்டுமஎன்றகேட்டுககொள்கிறேன் எ‌ன்று ஜெயலலிதகூறினார்.

இதைத்தொடர்ந்ததீர்மானமகுரலஓட்டமூலமஒருமனதாநிறைவேறியது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டைனை விதிக்கப்பட்ட பேரறிவாளன, சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூவருக்குமான தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் இவர்கள் 3 பேருக்குமான தூக்குத் தண்டனையை நிறைவேற்ற, 8 வார காலம் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்றார்.

உயர் நீதிமன்றத்தின் முடிவில் நான் குறுக்கிட முடியாது.குடியரசுத் தலைவரால் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே நான் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.
உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் அவைகளின் கருத்தைத் தெரிவிக்கலாம்.அந்த கருத்து இறுதியாக உறுதிப்படுத்தப்படும் வரை அந்த நீதிமன்றங்களின் கருத்து குறித்து நான் எதுவும் தெரிவிக்க முடியாது.உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்புதான் வழங்கியுள்ளது. அதற்கு அரசு பதிலளிக்கும் என குர்ஷித் மேலும் தெரிவித்தார்.

 

தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?


"முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

இது குறித்து குர்ஷித் கூறுகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது. இதை எவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படும். அவ்வளவு தான்." என்று செய்திகள் கூறுகின்றன.
இந்திய அரசியல் அமைப்பின் 72 ஆம் பிரிவின் கீழ் நடுவண் அமைச்சரவை முடிவைத்தான் குடியரசு தலைவர் பின்பற்ற முடியும். மாநில சட்டமன்ற தீர்மானம் குடியரசு தலைவரைக் கட்டுப்படுத்தாது. மூன்று பேரின் தூக்கு தண்டனையில் நடுவண் அமைச்சரவை முடிவு என்ன என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
அதேநேரத்தில், இந்திய அரசியல் அமைப்பின் 161 ஆம் பிரிவின் கீழ் தூக்கு தணடனையை மாநில ஆளுநரும் குறைக்கலாம் என்பதும், மாநில ஆளுநர் மாநில அமைச்சரவை முடிவையே பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் - தமிழ்நாடு அரசுக்கு எளிய வாய்ப்பை அளித்துள்ளது.

“The power under Articles 72 and 161 of the Constitution can be exercised by the Central and State Governments, not by the President or Governor on their own. The advice of the appropriate Government binds the Head of the State.”

Maru Ram Etc. Etc vs Union Of Lndia & Anr on 11 November, 1980

மூன்று பேரும் மீண்டும் மாநில ஆளுநருக்கு கருணை மனு அளிக்கச் செய்து, அந்த மனு மீது மாநில அமைச்சரவை தூக்குதண்டனையைக் குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்தால் - மூன்று பேரின் உயிரும் காப்பாற்றப்பட்டுவிடும். 

இது அரசியல் அமைப்பு மாநில அரசுக்கு அளித்துள்ள அதிகாரம் என்பதால், நடுவண் அரசு இதில் தலையிட முடியாது.
காண்க:

Monday, August 29, 2011

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ...அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது

பேரறிவாளன், சாந்தன், முருகன்


பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனை அறிவிப்பு ஏனோ
இலங்கை பொருளாரத்தடை தீர்மானங்களை திசைதிருப்பவவோ என்று தோன்றுகிறது.
சுமார் 11 ஆண்டுகள் தள்ளிப்போடப்பட்டு வந்த கருணை மனு மீதான முடிவு ,அரசியல்
காரணங்களுக்க்காகவே இப்போது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் நடந்து வரும் போராட்டங்களும் ,ஆர்ப்பாட்டங்களும்
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழுணர்வு தமிழனிடத்தில் மேலோங்கி வருவதாக மகிழ்ச்சியளிக்கிறது.

காந்தியின் அடையாளமாகக் கருதப்பட்டு வந்த காங்கிரசின் காழ்ப்புணர்ச்சி நாடகங்கள் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன.

லட்சம் பேரை கொன்று குவித்த ராஜபக்சே என்ற ராட்சசனை ஒன்றும் செய்ய இயலாது என சொல்கிறார் எஸ்.எம்.கிருஷ்ணா .
மறுபுறம்,குற்றம் முழுதாக நிருபிக்கப் படாமலே மூவர் தூககிலிடப்படப் போகிறார்கள் .

இலங்கை போர் ,மீனவர் படுகொலை,இன்னும் பிற விசயங்களில் தமிழனின் உயிர் துச்சமாகவே துண்டாடப் பட்டு வருகிறது.
தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் அரசியல் லாப செயல்களுக்கும் இதில் பெரும் பங்குண்டு.
மரண தண்டனை அவசியமற்றது எக்காலத்திலும் ! எதற்காகவும் !
கடவுளே இல்லை என்பவனும் ,கடவுளையே வேண்டும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான் இப்போது இந்த மூவருக்காக..
வேறொன்றும் வழி இருப்பதாய் தோன்றவில்லை ,தமிழனாய் பிறந்ததுக்கு அழுவதை தவிற..

 
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன.கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனை யை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்றது.
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ...அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது.நாம் ஒருகணமும் தாமதிக்காமல் உடனடியாக செயற்படவேண்டும். இந்த தூக்கு தண்டனையை நிறுத்தும் சட்ட அதிகாரம் உள்ளவர்களிடமும், தூக்குதண்டனைக்கு எதிரான சர்வதேச நிறுவனங்களிடமும் இப்போதே நீதிகேட்டு மின்னஞ்சல்களையும், தகவல்களையும் அனுப்புவோம்.சாத்தியமான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இந்த மூவரின் தூக்குதண்டனையை நிறுத்த இப்போதே முயல ஆரம்பிப்போம்.....
Send E-mail to Indian Government:
------------------------------
-------------

Her Excellency Smt. Pratibha Devisingh Patil
President of India
presidentofindia@rb.nic.in

Sri M.Hamid Ansari
Vice-President of India
vpindia@nic.in

His Excellency Mr. Manmohan Singh
Prime Minister of India
manmohansingh@sansad.nic.in

Mr. P.CHIDAMBARAM
Home Minister of India
hm@nic.in

Hon'ble Mr. Justice S.H. Kapadia
Supreme Court of India
supremecourt@nic.in

Smt.Sonia Gandhi
soniagandhi@sansad.nic.in
President, Indian National Congress

Shri L.K. Advani
Leader of Opposition in the Lok Sabha
advanilk@sansad.nic.in

Smt.Meira Kumar
speakerloksabha@sansad.nic.in
Hon’ble Lok Sabha Speaker

His Excellency Thiru Surjit Singh Barnala
Governor of Tamil Nadu
govsec@tn.nic.in

Dr. J. Jayalalitha
Chief Minister of the state of Tamil Nadu
cmcell@tn.gov.in

Hon. Justice Shri K.G. Balakrishnan
National Human Rights Commission of India
chairnhrc@nic.in

Send E-mail to Intl. Organisations against Death
-----------------------------------------------------------
Penalty:
---------
இந்தியஅரசே
மரண தண்டனை சட்டப்பிரிவை உடனே இரத்து செய்.
இப்பது உள்ள மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்று.

3 பேர் தூக்கு தண்டனையை நிறுத்த முதல்- அமைச்சருக்கு அதிகாரம் இல்லை- சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
3 பேர் தூக்கு தண்டனையை நிறுத்த முதல்- அமைச்சருக்கு அதிகாரம் இல்லை- சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
1991 ஆம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் நாள், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது படுகொலை செய்யப்பட்டார் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள். இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி தடா நீதி மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று மேல்முறையீடு செய்ததில், உச்ச நீதிமன்றம் நளினி, ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு, ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. எஞ்சிய 19 பேரை விடுதலை செய்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களும் மறு ஆய்வு மனுதாக்கல் செய்தனர். இதனை 8.10.1999 அன்று உச்சநீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. 17.10.1999 அன்று மேற்கண்ட தூக்கு தண்டனை கைதிகள் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை சமர்ப்பித்தார்கள். 27.10.1999 அன்று தமிழக ஆளுநர் இவர்களின் கருணை மனுக்களை நிராகரித்து ஆணையிட்டார்.

தூக்கு தண்டனை கைதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 25.11.1999 அன்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரர்கள் தொடுத்த வழக்குகளை ஏற்று கருணை மனுக்களை நிராகரித்த ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியது.

இந்தப் பொருள் குறித்து 19.4.2000 அன்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:-

தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று முதல்- அமைச்சர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று நபர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இதன் மீது மத்திய அரசின் உள்துறை, தனது 12.8.2011 நாளிட்ட கடிதத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்து, இதனை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தெரிவித்து உள்ளது. இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற மேற்படி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எனக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

மேலும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது மகனை விடுவிக்குமாறு வேண்டி உள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய என்னிடம் கோருவதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றி உள்ளதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் சிலர் இது பற்றி கடிதங்கள் எழுதி உள்ளனர். இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரை மரண தண்டனையிலிருந்து தமிழக முதல்- அமைச்சராகிய நான் காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆனால் 2000-ம் ஆண்டில் முதல்- அமைச்சராக இருந்த இதே கருணாநிதிதான் தனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்களையும் நிராகரிக்கலாம் என்றும், மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.

அன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதியின் இந்தப் பரிந்துரையை அன்றைய ஆளுநரும் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து விட்டு, செய்வதையெல்லாம் செய்துவிட்டு, இன்று ஒன்றும் தெரியாதது போல், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார் என்றால், இது இரட்டை வேடம் அல்லாமல், பித்தலாட்டம் அல்லாமல், கபட நாடகம் அல்லாமல், வேறு என்ன என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதல்- அமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.

எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரி விப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன். உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டவர்களுக்கு ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மன்னிப்பு அளிக்க முடியும்.

இவர்களுக்கு ஆளுநர் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கருதப்பட்டிருந்தால் 2000-ஆம் ஆண்டு அன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்தான் அதற்கான முடிவு எடுத்திருக்க முடியும்; எடுத்திருக்க வேண்டும். அமைச்சரவையின் அறிவுரைப்படி ஆளுநரால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவராலும் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ள இந்த நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ எந்தவித அதிகாரமும் தமிழக முதல்- அமைச்சராகிய எனக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டும் என மாநில அரசு கோர முடியாது என 1991 ஆம் ஆண்டே மத்திய அரசு தெளிவுரை வழங்கி உள்ளது. 5.3.1991 நாளிட்ட கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சரகம் பின் வருமாறு தெரிவித்துள்ளது:-

இப்பொருள் தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின் பொருத்தமான தன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலித்த மத்திய அரசு, மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது. இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம்.

குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்குதான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்து நடவடிக்கையை குடியரசுத் தலைவர்தான் எடுப்பார். எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதல்-அமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்து

 vijayasekaran said:
இதைப்படித்தபிறகாவது ''மரம்வெட்டி '' ராமதாஸ் , '' புலிகள் agent '' வைகோ. ''காலநிமக்களை தவறான பாதைக்கு திருப்பும் ""திருமா , ''இலங்கைதமிலர்களின் திடீர் பாசக்காரன் ''சீமான் , முட்டாள் பாரதிராஜா , இவர்களெல்லாம் புரிந்துகொள்ளுங்கள் .....எய்தவன் இருக்க ( கருணாநிதி ) அம்பை ( ஜெயலலிதா ) நோவானேன் .....
 இந்தியன் said:
முதல்வர் தனது அதிகார வரம்பை தெளிவு படுத்திவிட்டார். இனி சட்டப்போராட்டம் ஒன்றே வழி

Sunday, August 28, 2011

தூக்கிலிடுவதுதான் பெருமை மிகுந்த இந்திய ஜனநாயகமா?

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரிப் போராடி வரும் சீமான் மூவரைத் தூக்கிலிடுவதுதான் பெருமை மிகுந்த இந்திய ஜனநாயகமா என்றார்
திருச்சியில் சனிக்கிழமை இரவு நாம் தமிழர் கட்சி சார்பில் தூக்குத் தண்டனைக்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

ராஜீவ் காந்தி மரணத்தைக் காட்டி, தமிழ் இனத்தை கொன்றுவிட்டது காங்கிரஸ் கட்சி. மூவரின் உயிரை முன் நிறுத்தி, தமிழினத்தை வஞ்சிக்கத் துடிக்கிறது காங்கிரஸ். இலங்கையில் படுகொலை நடந்தபோது, அங்குள்ள தமிழர்கள், 5 கோடி ரத்த உறவு தமிழர்கள் காப்பாற்றுவார்கள் என நினைத்தனர். ஆனால், நாம் அவர்களைக் கைவிட்டோம்.

இப்போது, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் 8 கோடி தமிழர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்பியுள்ளனர். அவர்களைக் கைவிட்டு விடாதீர்கள்.

ராஜீவ் காந்தியை இழந்துவிட்டோம் என்கிறார்கள். ராஜீவ் காந்தியால் தமிழ் இனத்தையே இழந்து விட்டோம். ஒரு மரணத்துக்காக, இலங்கையில் 1.75 லட்சம் மக்களைக் கொன்றார்கள். இப்போது, மூவரைக் கொல்லத் துடிக்கிறார்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர், தீரன் சின்னமலை ஆகியோர் தூக்கிலிடப்பட்டபோது, அதைத் தடுக்க முடியவில்லை. அவர்கள் அடிமைத் தேசத்தில் தூக்கிலிடப்பட்டார்கள்.

இது சுதந்திர இந்தியா, இந்த மூவரின் தூக்குத் தண்டனையைத் தடுக்கும் வலிமையைத் தாருங்கள்.

21 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டார்கள். ஒரு குற்றத்துக்கு இரு தண்டனை ஏற்புடையதா? 29-ம் தேதி நீதிமன்றத்தில் வழக்குக் தாக்கல் செய்கிறோம். தூக்கு+த் தண்டனை குறைக்கப்படாவிட்டால், எங்களுக்குத் தண்டனை தரும் சூழ்நிலை ஏற்படும்.

கடைசி வரை கெஞ்சுகிறோம்; கருணைக் காட்டுங்கள். தமிழர் இனம் தூக்குத் தண்டனைக்கு எதிராக திரண்டுள்ளதை புரிந்து கொள்ளுங்கள்.

இன்று கருணாநிதி கருணை மனு குறித்து கடிதம் எழுதுகிறார். 6 மாதங்களுக்கு முன்னர் எழுதியிருக்க வேண்டியதுதானே? தமிழக ஆளுநர் பர்னாலாவுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிக்க முடிந்த கருணாநிதியால், இவர்களின் தூக்குத் தண்டனையைத் தடுக்கு முடியவில்லையா?

ராஜீவ் காந்தியைக் கொன்றவருக்கு தூக்கு. ஆனால், இலங்கையில் தமிழ் இனத்தையே கொன்ற ராஜபட்சவை அழைத்து விருந்து தருகிறார்கள். குற்றத்துக்கு தண்டனை வேண்டாம் என்று சொல்லவில்லை. எந்தக் குற்றத்துக்கும் மரணம் தண்டனை அல்ல என்கிறோம்.
மூவரை தூக்கிலிடுவதுதான் பெருமை மிகுந்த இந்திய ஜனநாயகமா? என்றார் சீமான்.

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா அமைச்சர் அழகிரி

தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், பொய் வழக்கு போடும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்'' என, மத்திய அமைச்சர் அழகிரி பேசியுள்ளார்..

அழகிரி அவர்களே, உங்க குடும்பத்துக்கே பைத்தியம் பிடித்துவிட்டதா? திமுக மீண்டும் ஆட்சிக்கா ? நீங்க நல்லா ஜோக் அடிக்கிறீங்க.. முதலில் திமுக ஆட்சிக்கு வரட்டும், பிறகு பார்க்கலாம், தேர்தலுக்கு பிறகு அதிமுக அழிந்துவிடும் என்று சொன்னீர்களே, இப்போ யார் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று இப்போதாவது புரிகிறதா?

சென்ற தேர்தலில் எதிர் கட்சிக்கு கூட தகுதி இல்லாமல் பொது மக்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.உமக்கும் உன் கூட்டத்தாருக்கும் புரியவில்லையா. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பது வெறும் பகல் கனவு.
ஒரு வேளை நீங்கள் சொல்லுவதை போல நடக்கவே இன்னும் நான்கரை ஆண்டுகள் ஆகும், அதற்குள் என்னென்னமோ நடக்கலாம்,

அதாவது கருணாநிதிக்கு 60 வயதாக இருந்திருந்தால்
உங்க  இரண்டு பேருக்கும் சண்டை வந்து கட்சி உடையாமல் இருந்தால்,
கட்சியில் உள்ள அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்தால்
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து நீங்கள் விலகினால் நடக்கும் வாய்ப்பு உள்ளது,

கேள்வி பதில் அறிக்கை விடுவதும், இரட்டை அர்த்தத்தில் கரித்து கொட்டுவதும், மக்களை மடையர்களாக நினைப்பதும், வெங்காய விலையை பெரியாரிடம் போய் கேள் என்று நக்கலாக சொல்லுவதும்,
தமிழர்களை ஏமாற்ற இரண்டு மணி நேரம் காமெடி நாடகஉண்ணாவிரதம் இருந்தால் நீங்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

அடுத்த தேர்தலுக்குள் திமுக அழியாமல் இருந்தால் நடக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் இதெல்லாம் நடக்க கூடிய சாத்தியமா?  

அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா ஆகமுடியும்.... என்ன நான் சொல்லுவது?இன்னும் 5 வருடம் இருக்கு அது வரைக்கும் உங்கள் கட்சி இதை போல் ஒன்னா சேர்ந்து இருக்குமா? முதலில் அதை யோசி அப்புறம் அதிகாரிகளை தண்டிக்கலாம். அத்தைக்கு மீசை முளைத்தபின் சித்தப்பா என கூப்பிடுவதைப்பற்றி யோசிக்கலாம்.

உரத்த சிந்தனை- நீடிக்குமா நிழல் ஆட்சி?

"இனிமேலுமா, மன்மோகன் சிங் பிரதமராக நீடிப்பது?' சரியான கேள்வி... இதில் கோபம் இருக்கிறது; நியாயமும் இருக்கிறது. ஆனால், நேரம் தான் சரியில்லை. இதற்கு முன்பே, இக்கேள்வி கேட்கப்பட்டது; அப்போதும் நேரம் சரியில்லை. "இவரை விட்டால், வேறு கதியில்லை' என, சகித்துக் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர்களும், இப்போது பொறுமை இழந்துவிட்டனர். ஆனால், மன்மோகன் சிங்கிற்கு நேரம் சரியாக இருக்கிறது; மக்களுக்குத்தான் நேரம் சரியில்லை. மெத்தப் படித்தவர்; பொருளாதார நிபுணர்; முன்னாள் நிதி அமைச்சர் என்ற எல்லாவற்றையும் தொலைத்து, சோனியாவின் சன்னிதானத்தில், இவர் வெறும் எடுபிடியாக நிற்கிறார். இது, இவருக்கும் தெரிகிறது; பிறருக்கும் தெரிகிறது. ஆனால், இவரை வீட்டுக்கு அனுப்ப முடியவில்லையே! இவரை அனுப்பினால், வேறு யார் வந்து நாட்டை மேலும் சீரழிப்பரோ என்ற கவலை, மக்களுக்கு இருக்கிறது. இதுபற்றி எந்தவிதக் கவலைகளும் இல்லாமல் இருப்பவர்கள், இருவர் மட்டுமே. சோனியாவும், ராகுலும்! சோனியா ரிமோட்; ராகுல் அந்த ரிமோட்டின் பேட்டரி.
"மன்மோகன் சிங்கை மட்டும் அனுப்பினால் போதாது. சோனியாவையும், ராகுலையும் கட்சியைவிட்டே அனுப்ப வேண்டும்' என, காங்கிரசாரே நினைக்காதபோது, மற்றவர்கள் இதில் என்ன செய்துவிட முடியும். அவர்கள் ஆதியிலிருந்தே, நேரு குடும்பத்தின் கொத்தடிமைகள். கொஞ்சம் மானம், ரோஷம் வந்து, வெளியே போனவர்கள் கூட, வந்து ஒட்டிக் கொண்டனர் அல்லது கூட்டணி கண்டனர். இந்த லட்சணத்தில், மக்கள் என்ன செய்ய முடியும்? சரி... பத்திரிகையாளர்கள் ஏதாவது செய்ய முடியுமா? எல்லாரையும் கிழியோ, கிழியென்று கிழிக்கும் பத்திரிகையாளர்கள், இறக்குமதித் தலைவியைக் கேள்விகள் கேட்டு, சங்கடப்படுத்துவதில்லை. மகாராணியும், யுவராஜாவும் பத்திரிகை உலகின் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். எதிர்க்கட்சிகளும் இவர்களை முழுமையாக விமர்சிப்பதில்லை.
கூட்டணிக் கட்சிகள், தாங்கள் இப்போது பெறும் ஆதாயத்தை, விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ஆட்சி மாறினாலும், இவர்கள் கூட்டணியில் தொடர்வர்; நஷ்டப்பட மாட்டார்கள். எனவே, இவர்களும் மன்மோகன் சிங்கை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஆக, மத்தியில் ஆட்சி என்பது மக்களின் ஆட்சி அல்ல; மன்மோகன் சிங்கின் ஆட்சியுமல்ல. சோனியா - ராகுலின் ஆட்சி. இதை வெளிப்படையாகப் பேசுவதற்கு, பலர் தயங்கும் அளவுக்கு, நாட்டில் ஒரு அச்சமும், விரக்தி மனப்பான்மையும் இருக்கிறது. மத்தியில் உள்ள ஆட்சி கலைக்கப்பட்டு, தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் போது, நேரு குடும்பம் அல்லாத, நேரு குடும்பத்தின் செல்வாக்குக்கு ஆட்படாத, கட்சித் தலைமை இருக்க வேண்டும். அதுதான் சுத்திகரிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியாக இருக்க முடியும். அப்படியில்லாவிட்டால், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை, வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து, புதிய ஆட்சி அமைத்து, ஊழல் செய்த அனைவர் மீதும், தயவு தாட்சண்யமின்றி, நடவடிக்கை எடுக்க வேண்டும். சோனியாவின் எல்லாத் தொடர்புகளும், விசாரிக்க வேண்டும். நேரு குடும்பத்தை விட்டு வெளியே வந்தால், அது காங்கிரஸ் கட்சி. இல்லாவிட்டால், அது இறக்குமதித் தலைவியின் அடிமைப் பட்டாளம் என்பதை, இனிவரும் தேர்தல் உணர்த்த வேண்டும். தேர்தலையும், விரைவில் நடத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்குவது, பார்லிமென்ட் எதிர்க்கட்சிகளின் கடமை மட்டுமல்ல. காங்கிரஸ் கட்சி ஆளாத மாநிலங்களின் முதல்வர்கள் ஒன்று கூடி, மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகள் என்று, தனியாக எவையும் இல்லை.
எல்லாமே, "தேசிய வளர்ச்சிக்குழு' என்ற அரசியல் சாசன ஒப்புதல் இல்லாத அமைப்பை உருவாக்கி, அதற்குத் தலைமை தாங்கி, எல்லா அமைச்சர்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து, ஒரு மகாராணி போல் நாட்டை ஆளும் சோனியாவின் விருப்பத்திற்கு இணங்கிய செயல்பாடுகளே என்பதை, இந்த முதல்வர்களின் சங்கம், மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி, உடனடியாக பார்லிமென்ட்டிற்கு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தை உருவாக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான இயக்கம், இப்போது சூடுபிடித்து வருகிறது. ஊழலும், காங்கிரசும் வேறு, வேறு அல்ல; காங்கிரசும்,சோனியாவும் வேறு,வேறு அல்ல என்ற எண்ணம், இப்போது தான் மக்களிடையே பரவத் தொடங்கியிருக்கிறது. அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு, உடனடியான, நேரடியான அரசியல் கட்சிகளின் ஆதரவு வராவிட்டால் பரவாயில்லை. அது, தனி சமூக இயக்கமாகவே தொடரட்டும். ஆனால், உடனடித் தேவை, அரசியல் தீர்வு, அதுவும் தேர்தல் மூலமாக. அதன் பிறகு, அதாவது புதிய அரசு அமைந்த பிறகு, புதிய, "லோக்பால்' சட்டம் பற்றிப் பேசலாம். பத்திரிகை உலகின் ஆதரவு, அன்னா ஹசாரேவுக்கு இருப்பது போல், இனி புதிதாகத் தொடங்கப்படக் கூடிய, காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களின் சங்கத்திற்கும் இருக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இந்த முதல்வர், இன்று இவ்வளவு ஊழல், அந்த முதல்வர், அன்று இவ்வளவு ஊழல் என்ற விமர்சனங்களை, மக்களும், பத்திரிகைகளும் கொஞ்ச காலத்திற்கு ஒத்தி வைக்கட்டும். புதிய அரசு, புதிய லோக்பால் என்று வரும்போது, இவர்களும் மாறி விடுவர். அதுவரை, மாநில முதல்வர்களின் சங்கம், மத்திய அரசை எதிர்த்துப் போராட, பல சமூக இயக்கங்களும், ஊடக உலகமும் ஒத்துழைக்க வேண்டும். நடுக்கூடத்தில் நுழைந்த நல்ல பாம்பு, அங்கேயே சட்டையை உரித்துப் போட்டு, தோட்டத்தில் பதுங்கியிருக்கிறது. அதை அடித்து விரட்ட வேண்டும். கையில் கிடைக்கும் விறகுக் கட்டையையோ, துருப்பிடித்த இரும்புக் குழாயையோ எடுத்துக் கொள்ள வேண்டியது தான். பூண்போட்ட, மஞ்சள், குங்குமம் தடவிய, வழுவழுப்பான உலக்கையைத் தேடிக் கொண்டிருக்க முடியாது. பாம்பை அடித்தவுடன், தடியை வீசி எறிந்து விடப் போகிறோம். தடியின் தகுதிகள் பற்றி, இப்போது ஆராய்ந்து பார்க்க வேண்டாம். பாம்பை அடிக்க யார் வந்தாலும், வரவேற்போம். தமக்குள் உள்ள பிணக்குகளை மறந்து, காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் இதைச் செய்ய முன் வந்தால், இதுதான் தேசபக்தி. வேறு எதுவும் அல்ல.

ஹசாரே இப்போது காங்கிரசின் கையாள்.


தி ஹிந்து இணையத்திலேயே இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் படித்திருந்தேன். அதன் தமிழ் மொழிபெயர்ப்பை கீற்று இணையதளத்தில் படித்தேன். இந்த அன்னா ஹசாரே போராட்டம் எதையும் சாதிக்கப் போவதில்லை என்பதற்கான ஆதாரத்தை ஆணித் தனமாக அடித்து சொல்லியிருக்கிறார் அருந்ததி ராய்.

"""இந்த உண்ணாவிரதம் இரோம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தம் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் AFSPA (Armed Forces [Special Power] ACT) சட்டத்திற்கு எதிராக பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப்பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே இரோம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரக்கணக்கான கிராமத்துவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.
அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்? இரோம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா? ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா? போபால் வாயுக் கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா? அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இல்லையா? தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்பு தெரிவித்த நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா? அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.
பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்? தான் கோரும் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படாவிட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டும் அன்னா என்ற 74 வயது மனிதரை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. "ஒரு பில்லியன் குரல்கள் ஒலித்து விட்டன” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்.”
மக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்? உடனடி அவசரத் தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ இவர் ஒரு வார்த்தை கூட உதிர்த்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைக‌ள் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர் அன்னா. 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி"யை மனமாரப் புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)""".

அடப் போங்கடா..நீங்களும் உங்க புத்தாண்டும்...


தமிழன் ..தமிழன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வோம்..ஆனால் நம்மில் ஓற்றுமை என்பதே கிடையாது.
பதவிக்கும்..ஆசைக்கும் எல்லையில்லாமல்..நம்மையே நாம் காட்டிக் கொடுப்போம்..
உதாரணத்திற்கு ஒரு சிறு கதை..
இரண்டு தமிழர்கள் இரவில் நடந்துவந்த போது ஒரு பாழும் கிணற்றில் விழுந்துவிட்டனர்.நல்லவேளை தமிழகத்தில் உள்ள பாசனக்கிணறு அது. நில அபகரிப்பில் எல்லா விவசாய நிலங்களும் கட்டிட நிலங்களாய் ஆகிவிட்டதால்.. அதில் தண்ணிர் இல்லை.
விழுந்ததில் ஒருவனுக்கு நல்ல மரம் ஏறும் பயிற்சி உண்டு.,அவன் கிணற்றில் வளர்ந்திருந்த செடிகளைப் பற்றி மெதுவாக மேலே வர முயற்சித்தான்.கொஞ்சம் முன்னேறினான்..ஆனால் கீழே இருந்து அவன் கால்கள் இழுக்கப் பட்டன.'என்ன' என்று பார்த்த போது கீழே இருந்த தமிழன் அவன் காலைப் பற்றி, அவனை முன்னேற விடாமல் தடுத்தான்.'என்னால் வெளியே வர முடியாது? நீ மட்டும் எப்படிப் போகலாம்?' என்றான்.
அதற்கு மற்றவனோ..'நான் மேலே போய் .,உன்னை மீட்க உதவிக்கு ஆட்களை கூட்டிவருகிறேன்' என்றான்.
'உன்னை எப்படி நம்புவது?' என்றான் கீழே நின்றுக் கொண்டிருந்தவன்.
இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும்..'காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்' என குரல் கொடுத்தனர்.
அப்போது அவ்வழியே வந்த வேற்று மொழிக்காரன் ஒருவன்..'அடப் போங்கடா..உங்களைக் காப்பாற்றினாலும்..இருவரும் மேலே வந்து..சண்டையிடப்போகிறீர்கள்.அதை கிணற்றிலேயே செய்துக் கொண்டிருங்கள்' எனச் சென்றுவிட்டான்..
இது கதையென்றாலும்..நடைமுறை உண்மை..
நமது கட்சிகளுக்குள் ஒற்றுமை இருந்திருக்குமேயாயின்...எவ்வளவோ காரியங்களை சாதித்துக் கொண்டிருக்க முடியும்.
தமிழா..இதுதான் உன் தலையெழுத்து..
அதை மாற்ற நமக்குள் ஒன்றுபட்டால்தான் உண்டு..
இல்லையேல் கால காலத்திற்கும் இ.வா. க்களாகவே மற்றவர்க்கு இருப்போம்..
இதைப்பற்றியெல்லாம் இப்போ என்ன கவலை..என்கிறீர்களா?
ஆமாம்..ஆமாம்..
தை முதல் நாள்..தமிழர் புத்தாண்டா..
சித்திரை முதல்நாள் தமிழர் புத்தாண்டா
இந்தக் கவலையே முக்கியம்... நமக்கு.

கலைஞரை எதிர்க்கிறாரா தங்கபாலு..


"நான் தூக்கு தண்டனை என்பதே கூடாது என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளேன்.அது இந்த மூன்று பேருக்கும் பொருந்தும்.குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டனர்.அவர்கள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு, அவர்களை தூக்குதண்டனையிலிருந்து காப்பாற்ற நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும்.தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் 3 பேரின் உயிரைக் காக்க உருக்கத்துடன் செயல் பட வேண்டும்.காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் சோனியா காந்தியும் இந்தப் பிரச்னையில் அக்கறையுடன் 3 உயிர்களை காக்க முன்வர வேண்டும்.இந்த மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்'
மேற் சொன்னது கலைஞரின் அறிக்கை.
ஆனால்.. தமிழக காங்கிரஸ் தலைவர்(??!!) அறிக்கையைப் பார்ப்போம்..
மரணதண்டனை விவகாரத்தில் சில அரசியல் தலைவர்கள் சுயநலத்திற்காக போராட்டம் நடத்துகிறார்கள்.இதனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.தமிழ் உணர்வு எங்களுக்குத்தான் இருக்கிறது..நாங்கள் தான் தமிழர்கள், நாங்கள்தான் தமிழிற்கும், தமிழ் மொழிக்கும் சொந்தக்காரர்கள் என உரிமை கொண்டாடுகிறார்கள்..(கலைஞரைச் சொல்கிறாரா??!!)தமிழ் அவர்களுக்கு மட்டும் சொந்தமில்லை..எங்களுக்கும் அந்த உரிமை உண்டு.நாங்களும் தமிழர்கள்தான் (வெட்கம்..வெட்கம்)
அவர்களது குடும்பத்தினர் யாராவது ராஜிவ் காந்தியைப் போல படுகொலை செய்யப்பட்டிருந்தால்,அந்த கொலையாளியை விடுவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்வார்களா? (என்ன ஒரு கொடூர எண்ணம்..)
சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்..
என்றுள்ளார்..
இவர் அறிக்கையில்..ஆர்ப்பாட்டம், போராட்டம்..என்ற வார்த்தைகளை புத்திசாலித்தனமாக சேர்த்துள்ளார்.
இவர் கலைஞரை பற்றியும் சொல்கிறார்..ஆனால் வினா எழும்பினால்..'நான் கலைஞரைச் சொல்லவில்லை...ஆர்ப்பாட்டம் செய்பவர்களைத்தான் என்று சொல்லிக் கொள்ளலாம்....
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஜனநாயகத்தை அனுமதிக்காதவர் இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து வருவது பற்றி அச்சப்படுகிறாராம்.
நடப்பது நடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையிலே வையுங்கள் என்ற கதைதான்.

புத்தாண்டு சித்திரைக்கு மாற்றம்: தமிழ் பண்பாட்டை காத்த வீரமங்கை ஜெயலலிதா; மதுரை ஆதீனம் பாராட்டு

தமிழ் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றி பண்பாட்டை காத்தவர் ஜெயலலிதா என்று மதுரை ஆதீனம் பாராட்டியுள்ளார். இது குறித்து மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்து தமிழ் பாரம் பரியத்தையும், மரபுகளையும் கட்டிக்காத்த வீரமங்கை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். நமது பாரம்பரியத்தையும், மரபுகளையும் அழிந்து போகாமல் காப்பாற்றி மனமகிழ்ச்சியையும், மன நிறைவையும் சட்டப்பூர்வ மாக தனி மசோதா மூலம் நிறைவேற்றி இருப்பதை பாராட்டுகின்றோம்- வாழ்த்துகின்றோம்.
 புத்தாண்டு சித்திரைக்கு மாற்றம்:
 
 தமிழ் பண்பாட்டை காத்த 
 
 வீரமங்கை ஜெயலலிதா;
 
 மதுரை ஆதீனம் பாராட்டு
நமது தமிழ் பண்பாடு என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலப்பயிராகும். இதை அழித்து ஒழித்து விட நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என்று சூளுரைத்து சட்டமாக்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள தமிழக முதல்வரின் நூறு நாள் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு ஆற்றிய சாதனைகள் தமிழ்நாட்டின் ஆட்சி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பெற்று நல்ல உள்ளங்களின் சிம்மாசனத்தில் அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறார்.
உங்கள் ஆட்சியில் சாதனைகள் மென்மேலும் சிறந்து ஓங்கட்டும்.
 
இவ்வாறு மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

Saturday, August 27, 2011

சன் குழுமம், சன் படங்கள், கலைஞர் தொலைக்காட்சி, முரசொலி , ரெட் ஜயண்ட் மூவீஸ், கிளவுட் நைன் மூவிஸ் , ராயல் கேபிள் விசன் இடம் பெறாததற்கு

  • தமிழகப் பெற்றோர்களும், மாணாக்கர்களும் நன்றி சொல்லலாம், கலைஞருக்கு!
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணாக்கர்களுக்கும் வருகின்ற16தேதிக்குள் புத்தகங்கள் கிடைக்கச் செய்யவேண்டும். கருப்பு மை இட்டும், ஸ்டிக்கர் ஒட்டியும், கிழித்தும் நீக்கப்படவேண்டியவையாக அரசு சுட்டிக்காட்டியுள்ளன பின்வருமாறு.

அனைத்து வகுப்புக்களுக்குமான தமிழ்ப் புத்தகஙளில் இடம்பெற்றுள்ள செம்மொழிப்பாடல்மீது ஸ்டிக்கர் ஒட்டவேண்டும்.

செம்மொழி மாநாட்டுக் காட்சிகள், கலை நிகழ்வுகள், ஊர்வலக் காட்சிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனப் படங்கள்- இரண்டு, மூன்றாம் வகுப்பு தமிழ்ப் புத்தகங்களில் உள்ளன. ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் இவை மறைக்கப் படவேண்டும்.

நான்காம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செம்மொழி மாநாடு செய்திகளின்மீது கருப்புமைபூசிட வேண்டும்.

7ஆம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருணாநிதி குறித்த குறிப்பின் மீது கருப்புமை பூசிட வேண்டும்.

எட்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்புகள் மூன்று தாள்களில் இடம் பெற்றுள்ளன. அவை கிழிக்கப் படவேண்டும். மேலும், தன்மான இயக்கம்........ புத்துயுரூட்டி வருகின்றன என்ற இரண்டு பத்திகள்மீது கருப்புமை பூசப்படவேண்டும்.

9ஆம் வகுப்புப் புத்தகத்தில், செம்மொழி தமிழ் வாழ்த்து மூன்று மற்றும் நான்காம் பக்கங்கள் கிழிக்கப்படவேண்டும். ஐந்தாம் பக்கம் கருப்புமை பூச வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான பகுதியிலும் கருப்புமை பூசவேண்டும்.

10ஆம் வகுப்புப் புத்தகத்தில் முதல்வர் கருணாநிதி முயற்சியால்... என்ற வரி, .......... முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி என்ற பகுதி.........கலஞரின் இனிய நடையைப் படித்து அறிக என்ற பகுதி,.....செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடர்பான குறிப்புகள் இவ்ற்றின் மீதெல்லாம் கருப்புமை பூச வேண்டும். ஆங்கிலப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செம்மொழி மாநாடு தொடர்பான பகுதிகள் மீதும் கருப்பு மை பூச வேண்டும்.

நான்காம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஆங்கிலம், தமிழ்ப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள சென்னை சங்கமம் குறித்த பகுதிகளின் மீது ஸ்டிக்கர் ஒட்டப்படவேண்டும்.

ஐந்தாம் வகுப்பு நூலில் முதல்வர் கருணாநிதி, புதிய தலைமைச் செயலகக் கட்டிடம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான பகுதிகள் மீது ஸ்டிக்கர் ஒட்டிடல் வேண்டும்.

10ஆம் வகுபு ஆங்கிலம், தமிழ் வழி பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள திமுக பற்றிய குறிப்புகள் மீதும் கருப்பு மை பூசிட வேண்டும்.

தார் பூசுவதும், கிழிப்பதும், எரிப்பதும் திராவிடக் கட்சிகளின் பண்பாடுதானே? கல்வித் துறைக்கும் அந்தக் கலாச்சாரத்தைப் பரப்பியுள்ளனர். இரண்டு லட்சம் ஆசிரியர்கள் இப்பணீயில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். எக்காரணத்தைக் கொண்டும் மாணாக்கர்களைப் பயன்படித்திடக் கூடாது என்றும் கட்டளை. கலைஞர் சுய புராணம் பாடியது தவறு. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப்பின் செய்யும் வேலையை முதலிலேயே செய்து மாணாக்கருக்கும் பெற்றோருக்கும் உதவி இருக்கலாம், இன்றைய முதல்வர்.

எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டம் என்றுதான் வந்திருக்கின்றது. இதே பாடத் திட்டத்தில் தனியாரால் எழுதப்பட்ட வேறு புத்தகங்களைத்தான் மெட்ரிகுலேஷன் நிர்வாகங்கள் பயன்படுத்தும். அப்பொழுதுதானே அவர்களது தனித்துவத்தைக் காட்ட இயலும். பொருளாதார ரீதியிலும் லாபகரமானதாகவும் இருக்கும். தமிழ்ப் பாடப் புத்தகம் மட்டும் அரசுடையாதாக இருக்கும். அதனையும் இலவசமாகக் கேட்கின்றனர்.

மெட்ரிகுலேஷசன் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்- மாணாக்கர் விகிததைப் போன்று அரசுப் பள்ளிகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஒரு ஆசிரியருக்கு மிக அதிகமாகப் போனால்30 மாணவர்கள் இருக்கக் கூடும். இது கூட நான் அதிகமாகக் குறிப்பிட்டுள்ளேன். அரசுப் பள்ளிகளில் எழுபது - எண்பது என எகிறும். அதுவும் ஆங்கிலவழி வகுப்புகளில் நூறு நூற்றிஐம்பது என்று கூட இருக்கக் கூடும்.

மெட்ரிகுலேஷன் நிர்வாகம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாறிவிடுவதும் சாத்தியமானதுதான். பல பள்ளிகள் மாற்றத்திற்கு விண்ணப்பித்து, தமிழக அரசின் பரிந்துரைக்காகக் காத்திருப்பதாகவும் கேள்வி.


நடந்துமுடிந்த போராட்டம் ஒரே பாடத்திட்டத்திற்கான ஆரவாரப் போராட்டம்தான். சமச்சீர்க் கல்விக்கான போராட்டம் அல்ல. சமமான வாய்ப்பு வசதிகளுடைய பள்ளிகளும், தகுதியும் திறமையும் உடைய ஆசிரியப் பெருமக்களும் தமிழக மாணாக்கருக்கு எப்பொழுது கிடைக்கின்றதோ அன்றுதான் “சமச்சீர்க் கல்வி” என்று சொல்ல முடியும்.

ட்யூசன் என்ற பெயரில் கற்றதை திரும்பத் திரும்ப ஆண்டுதோறும் பேக்கேஜ் கட்டணத்தில் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கும் ஆசிரியர்களும், அவர்களைத் தேடித் திரியும் பெற்றோர்களும் உடையதுதானே இன்றையத் தமிழகம். புதிய கல்வித் திட்டம் சுய ஆளுமைத் திறனை வளர்க்கும். மனப்பாடம் செய்யத் தேவை இல்லை என்றெல்லாம் கூறுகின்றனர், ஒரே பாடத் திட்டக் கல்வி ஆதரவாளர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் வாரிசுகளைச் சேர்த்துள்ள பெற்றோர்கள், சிபிஎஸ்இ எப்பொழுது வரும் என்றே ஏங்குகின்றனர்.

அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகிச் சீரழியும் கல்விமுறை சமூக முன்னேற்றத்திற்கு முற்றிலுமாகப் பயன்படும் வண்ணம் மாறுவது எப்பொழுது என்பதே சமூக ஆர்வலர்களின் ஒரே கேள்வி!

சென்னை நகரில் தெளிவான தெருப்பெயர்கள் எழுதப்பட அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகி இருக்கின்றன். கல்வி என்பதெல்லாம் பெரிய விஷயம். இன்னும் ஓரிரு தலைமுறை கூட ஆகக் கூடும் . மூன்று வேளை வேண்டாம் ஒரு வேளையாவது உணவு தவறாமல் கிடைத்தாற் போதும் என்கின்றார்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...