Tuesday, May 30, 2023

அப்படி ஒரு ஆனந்தம் .

 மனசுகுள்ள அவ்வளவு குமுறல் , அழுகை , ஆற்றாமை, வெறுப்பு , விரக்தினு அத்தனையும் அந்த மவுனம் வெளிப்படுத்தி அதை கட்டுப்படுத்த முடியாத தவிப்பில் தல படாதப்பாடுபட்டு கடைசி பந்து வீசும் போது கண்ணமூடி தல குனிந்தது குனிந்தது தான் 4 அடிச்சும் தல நிமிரவேயில்லை பொருமையா சத்தம் கேட்டு தான் மனுசனுக்கு போன உசுரு வந்தது அப்படி ஒரு ஆனந்தம் அதே ஆற்றாமை முகத்தில் அதை பாக்கதான 3 வரை முழிச்சிட்டு இருந்தோம்

💛💛💛
இது ஒரு பக்கம் க்யூட் மொமென்ட் நம்ம ஹர்த்திக் எப்பவுமே வெறிதனம் முகதுல இருக்கும் , பட் நேத்து ஆரம்பம் முதல் கடைசி வரை ரொம்ப கூலா , அழகா ஹேண்டில் பன்னுச்சு ( சார் ரம்பா சார் மொமென்ட் ல நானு ஹபிட்ட ஏங்க ஹர்த்திக் க்யூட்ல ஏங்க ஹர்த்திக் செமல மறுபடியும் இந்தியன் டீம் விளையாடும் போது நான் நான் ஹர்த்திக் பாசாறைனு இப்பவே சொல்லி வச்சுட்டேன் கருப்பு தான் கவர் பன்னுது திராவிடமோ ) கடைசி ஓவர்ல ஒரு ஒரு பந்துக்கும் நம்ம ஹர்த்திக் 😉 ஆலோசனை குடுத்து குடுத்து பவுலர உற்சாகப்படுத்திட்டு கடைசியா 4 போட்டான்னு தெரிஞ்சதும் ஒடி போய் பவுலர ஹங் பண்ணி சரி விடு கவலைப்படாதனு என்ன அழகா , க்யூட்டா, ஆறுதல் சொல்லுது 😍

அவங்க குடும்பம் மட்டும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று பேரன் கொள்ளு எள்ளு வரைக்கும் சுபிட்சமாக இருக்ணும்!

 இந்த காட்சியினை பாருங்கள், சாய்பாபா காலில் விழுந்து ஆசிவாங்குகின்றார் அய்யா கருணாநிதியின் துணைவியார் தயாளு அவர்கள்

உடனே அய்யா கருணாநிதி பொங்கவில்லை , தன்மான இழுக்கு என தள்ளாத வயதில் விவாகரத்தெல்லாம் செய்யவில்லை, அதனை பார்த்தபடி அனுமதித்தார்
இது தெலுங்கு கங்கை திட்டத்துக்காக கிடைத்த 250 கோடி ரூபாய்க்காக அல்ல மாறாக பெரியவர்கள் துறவிகள் காலில் விழுந்து வணங்குவது நம் மரபு என அவரே சொன்னார்
அப்படி அய்யா கலைஞரே துறவியர் காலில் விழுவதை தடுக்கவில்லை எனும்போது சில உபிக்களும் அல்லக்கைகளும் ஆதீனங்களிடம் ஆசிபெற்ற மோடியினை மானமுண்டா, ரோஷம் உண்டா என கேட்டுகொண்டிருக்கின்றன‌
அப்படியெல்லாம் கேட்பவர்கள் ஏன் தயாளு அம்மாவினை கேட்கவில்லை என்பதை விட முக்கியம் அப்படி மானமும் ரோஷமும் இருந்தால் ஏன் திமுகவின் கொத்தடிமைகளாக இவர்கள் இருக்கின்றார்கள் என்பது.
May be an image of 6 people
All reaction

உண்மையான ஏழைப் பங்காளன்!

 ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர்.

அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார்.
அங்கே அவர் கண்ட காட்சி விசித்திரமாக இருந்தது.
குளித்தும் குளிக்காமலும் இருந்த பொதுமக்கள் - அருவிக்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு - பாதையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஒதுங்கி நின்றவர்களைப் பார்த்ததும் விஷயம் விளங்கிற்று அவருக்கு.
அங்கிருந்த காவலரை பார்த்து -
இதுக்குத்தான் நீ எனக்கு முன்ன ஓடி வந்தியா!. இவங்களோட நா சேந்து குளிச்சா ஒனக்கு என்னான்னே?.. - என்று சத்தம் போட்டுவிட்டு,
ஒதுங்கி நின்ற மக்களை பார்த்து,
இப்படி ஒதுங்கி நின்னா எப்படின்னேன்?.. வாங்க எல்லாரும் சேந்து குளிப்போம்!.. - என அன்புடன் அழைத்தார்.
உண்மையான ஏழைப் பங்காளனை நேரில் பார்த்த களிப்பில், மக்கள் ஆரவாரத்துடன் அருவியில் குளித்தனர்...
அன்று குற்றால அருவியே, ஓ!.. என்று மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்ததாம்!..
அதற்கு முன்னும் பின்னும் எந்த முதல்வரும் மக்களுடன் சேர்ந்து குளித்ததாக வரலாறு இல்லை!..
May be an image of 4 people

இதுதான் அறிவின் முதிர்ச்சி...

 விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு

மேடையில் இருந்து இறங்கி வந்தார்...
அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்...
நீங்கள் என்னை மணந்து
கொள்கிறீர்களா?என்று கேட்டாள்...
என்னைப் பாத்ததும் திடீரென்று
ஏன் இந்த எண்ணம்வந்தது? என்று
கேட்டார் ஸ்வாமிஜி...
அதற்கு அந்த பெண்...
உங்களைப் போலவே ஞானமும்,
ஆற்றலும் நிரம்பிய மகனைப்
பெறவேண்டும் என விரும்புகிறேன்...
எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்...
அதற்கு ஸ்வாமிஜி
உடனே சொன்னார்...
என்னை மணந்து என்னைப்
போலவேமகனை பெற்றுக்
கொள்வதை விட...
என்னையே மகனாக
ஏற்றுக்கொண்டு விடேன்...
இன்று முதல் நான் உன்னை
தாயே! என்று அழைக்கிறேன்...
இதுதான் அறிவின் முதிர்ச்சி...
ஒருவரது கருத்தை
மறுதலிக்கும் பொழுதுகூட...
அவரது மனத்தைக் காயப்படுத்தாமல்
அவரை மகிழ்விக்கும் மாண்பு...

இவரல்லவோ மக்கள் தலைவர்!!

 கர்நாடகாவில் ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்ஜிஆரை காண வந்திருந்தனர்.

அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்து விட் டது.
இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க என்னை குடும்பத்தில் ஒருத்தனா நினைக்கறதால அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரணமாகக் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக
முதல் நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல் நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் ஆசை நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார்.
‘‘என்னது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு,
‘‘நம்பள மாதிரி ஆளுங்கள நீங்க பாக்க மாட்டீங்கன்னு சிலர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.
அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லி
அவர்களுடன் சாப்பிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.
இன்றைக்கு இருக்கும் மக்களால் பிரபலமானவர்களில் யாருக்கு இந்த குணமுண்டு?
தொண்டர்களையும் ரசிகர்களையும் தொடக் கூட அனுமதிக்காத, முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுபவர்களே அதிகம்.
May be an image of 2 people
All reactions:

_*மகிழ்ச்சி...!*_

 தகப்பனே கொலை செய்ய

முயற்சித்த போதும்
பிரகலாதன்
மகிழ்ச்சியாக இருந்தான் . . .
சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
அரிச்சந்திரன்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும்
கைகேயி
மகிழ்ச்சியாக இருந்தாள் . . .
உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதிலும்
விதுரர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
அம்புப்படுக்கையில் வீழ்த்தப்பட்ட போதிலும்
பீஷ்மர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
இளம் விதவையான சமயத்திலும்
குந்திதேவி
மகிழ்ச்சியாக இருந்தாள் . . .
தரித்ரனாக வாழ்ந்த போதிலும்
குசேலர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும்
கூர்மதாஸர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
பிறவிக் குருடனாக இருந்த போதிலும்
சூர்தாஸர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
மனைவி அவமானப்படுத்திய போதிலும்
சந்த் துக்காராம்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
கணவன் கஷ்டப்படுத்திய போதிலும்
குணவதிபாய்
மகிழ்ச்சியாக இருந்தாள் . . .
இருகைகளும் வெட்டப்பட்ட போதிலும்
சாருகாதாஸர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
கைகால்களை வெட்டிப் பாழுங்
கிணற்றில் தள்ளிய போதிலும்
ஜயதேவர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
மஹாபாபியினிடத்தில்
வேலை செய்த போதிலும்
சஞ்சயன்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதிலும்
பூந்தானம்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்திய போதிலும்
தியாகராஜர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதிலும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாள்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
சோழ ராஜனின் சபையில்
கண்ணை இழந்த போதிலும்
கூரத்தாழ்வார்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .
இவர்களால் எப்படி
மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது ?
அதுதான் பிரம்ம ரகசியம் என்பது.....!
தன்னோடு இறைவன் எப்பொழுதும்
இருக்கின்றான்
என்று உணர்ந்ததால் !!!
இறைவன் எப்பொழுதும் தன்னோடு
இருக்கின்றான்
என்று உணர என்ன வழி?
தன்னை அறிந்தால்
தன் தலைவனை அறியலாம் . . .
தன்னை அறிய
தன்னை உணர்ந்த
உண்மை குருவை
நாடுவதே சிறந்த வழி...
அதனால் இனி வாழ்வில் நிகழும்
சின்ன சின்ன விஷயங்களுக்காக
கலங்காதே!
எது எப்படி இருந்தாலும், எது எப்படி நடந்தாலும்,
யார் எப்படி நடத்தினாலும்,
யார் எப்படி மாறினாலும்,
எதை இழந்தாலும், யாரை இழந்தாலும்,
உன் இறைவன் உன்னுடன்
எப்போதும் இருக்கின்றான்
என்பதை முழுமையாக நம்பு...
நீயும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு,
பிறரையும் மகிழ்ச்சியாக இருக்க விடு.
உன் எல்லா துன்பங்களில் இருந்தும்
அப்போதே விடுதலை கிடைக்கும்...!✍🏼🌹

பக்காத் திருடனும், படுபக்காத் திருடனும்.

 ஊரிலிருக்கிற பக்காத் திருடனுக்கு வயதாகிவிட்டது. அப்பன் செத்துப் போனால் இனி யார் இந்தத் தொழிலைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று அவனுடைய மகனுக்கு ஒரே கவலை. எனவே எப்படியாவது தன்னுடைய அப்பனுடைய திருட்டுத் தொழில் ரகசியங்களைப் படித்துத் தானும் ஒரு பக்காத் திருடனாக மாற முடிவெடுத்தான் மகன். மகனுடைய நச்சரிப்பைத் தாங்க முடியாத பக்காத் திருடன், ஊரில் மின்சாரமில்லாத ஒரு நாள் இரவில் மகனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு அந்த ஊரிலிருக்கிற பெரிய வீட்டுக்குத் திருடப் போகிறான்.

இரண்டு பேரும் வீட்டுச் சுவரில் கன்னம் வைத்து, ஓட்டை போட்டு வீட்டினுள் நுழைகிறார்கள். அங்கிருந்த ஒரு பெரிய பெட்டியை உடைத்த பக்காத் திருடன், தன்னுடைய மகனை பெட்டிக்குள் இறங்கி அதிலிருக்கும் துணிகளை பொறுகியெடுத்துப் போடும்படி சொல்கிறான். அதன்படி பெட்டியினுள் மகன் இறங்கிய மறுகணம் பக்காத் திருடன் அந்தப் பெட்டியை அடித்து மூடி, அவன் தப்பி வெளியே வராமலிருக்க வெளியில் பூட்டையும் பூட்டி வைத்துவிட்டு, " திருடன், திருடன்...." என்று கத்திக் கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டான்.
இந்த சத்தத்தால் கண் விழித்த வீட்டுக்காரர்கள் மெழுகுவத்தியைக் கொளுத்தி வைத்துக் கொண்டு வீடெல்லாம் தேடிக் கடைசியில் திருடன் சுவற்று ஓட்டையில் புகுந்து தப்பி ஓடிவிட்டதைக் கண்டுபிடிக்கிறார்கள். பெட்டிக்குள் அடைபட்டுக் கிடந்த திருடனுடைய மகனுக்கு பயங்கரக் கோபம். அப்பன் இப்படித் தன்னை மாட்டி வைத்துவிட்டுப் போய்விட்டானே என்று குமைகிறான். முதலில் இங்கிருந்து எப்படி வெளியேறுவது என்று யோசித்த அவன், பெட்டிக்குள் எலி கொறிப்பது போலச் சத்தம் கொடுக்கிறான்.
வீட்டுக்காரர்கள் வேலைக்காரியிடம் ஒரு மெழுகுவர்த்தியைக் கொடுத்து பெட்டியைச் சோதிக்கும்படி சொல்ல, வேலைக்காரி பெட்டியைத் திறக்கிறாள். உள்ளே அடைபட்டுக் கிடந்த திருடனின் மகன் மெழுகுவர்த்தியை வாயால் ஊதி அணைத்து விட்டு, வேலைக்காரியையும் கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடுகிறான்.
மொத்த ஊரும் அவனை விரட்டிக் கொண்டு ஓடுகிறது. போகிற வழியில் வழியில் ஒரு கிணற்றைப் பார்க்கும் திருடனின் மகன் அருகிலிருந்த ஒரு பெரிய கல்லைத் தூக்கிக் கிணற்றுக்குள் எறிய, திருடன் கிணற்றில் குதித்துவிட்டதாக நினைத்து ஊர்க்காரர்கள் அனைவரும் கிணற்றைச் சுற்றி நின்று உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட திருடனின் மகன் அங்கிருந்து தப்பி வீடு போய்ச் சேருகிறான். அங்கிருந்த அப்பனான பக்காத் திருடனை வாயில் வந்தபடி ஏச, பக்காத் திருடன் மகனை நோக்கி "அதெல்லாம் இருக்கட்டும். நீ எப்படி அங்கிருந்து தப்பினாய் என்று சொல்லு" என மகனிடம் கேட்க, அவனும் நடந்ததைச் சொல்கிறான்.
பக்காத் திருடனான அப்பனுக்கு பயங்கர சந்தோஷம். "படுபக்காத் திருடனடா நீ! இவ்வளவு சீக்கிரம் தொழிலைக் கற்றுக் கொண்டு பக்காத் திருடனான என்னையே மிஞ்சி விட்டாயே" என்கிறான்.
இனி அடுத்த தலைமுறைக்கும் ஒரு பக்காத் திருடன் உருவாகிட்ட சந்தோஷத்தில் குடும்பமே குலைவையிட்டு மகிழ்கிறது.
All reacti

சிதம்பரம் கோயில்ல, நடராஜ பெருமானை தரிசனம் பண்ணினப்ப, பெரியவா சங்கல்பம் ஒண்ணு செஞ்சுண்டார்.

 சிதம்பரத்துல பஞ்சாட்சர யந்திரம், அன்ன ஆகர்ஷண யந்திரம்னு ரெண்டு யந்திரங்கள் உண்டு. இந்த ரெண்டையும் பிரதிஷ்டை செஞ்சு வழிபட்டவர் ஆதிசங்கரர்.

சிதம்பரம் க்ஷேத்திரத்தை, பூலோக கைலாசம்னு சொல்வாங்க.
சுமார் 250 வருஷத்துக்கு முன்னால, காஞ்சி சங்கர மடத்தோட ஆச்சார்யாளுக்கும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கும் சின்னதா சர்ச்சை உண்டாச்சு.
விபூதியை நாங்க கொடுத்து, அதை ஆச்சார்யாள் வாங்கிக்கணும்னு சொன்னாங்க,
சிதம்பரத்து தீட்சிதர்கள் ,
தீட்சிதர்களான நாங்கள், கைலாச பரம்பரையைச் சேர்ந்தவங்க. அதனால, நாங்க கொடுக்கிற விபூதியைத்தான் எல்லாரும் வாங்கிக்கணும்!” – இது அவங்களோட வாதம்.
ஆனால் "சங்கர மடத்தோட ஆச்சார்யாள், ஜகத்குரு , எதையும் கை நீட்டி வாங்கிக்கற சம்பிரதாயம் கிடையாது!" – இது சங்கர மடத்தோட கருத்து.
சிதம்பரம் தீட்சிதர்கள் இதுல பிடிவாதமா இருக்கவே, காஞ்சி மடத்தோட ஆச்சார்யாள் யாரும் சிதம்பரம் கோயிலுக்குப் போறதில்லை. வெளியே இருந்தபடியே தரிசனம் பண்ணிட்டு, அப்படியே அடுத்தடுத்த ஊர்களுக்குப் போயிடுவாங்க. இப்படித்தான் பல வருஷமா நடந்துகொண்டிருந்தது
அப்புறம்… 1933-ஆம் வருஷம், தீட்சிதர்களுக்கு என்ன தோணித்தோ… ‘சுவாமிகள் எங்க கோயிலுக்கு வரணும்’னு ஆசைப்பட்டாங்க. ஊர் ஜனங்களும், ‘பெரியவாளை எப்படியாவது கோயிலுக்கு வரவழைச்சுடணும்’னு ஏங்கினாங்க.
தீட்சிதர்களோட வேண்டுகோள், பெரியவாகிட்ட வந்துது. பெரியவாளுக்கும், பழைய கசப்பான சம்பவத்தையெல்லாம் எல்லாரும் மறந்து, சுமுகமான உறவோட இருக்கணும்னு விருப்பம்.
அதனால, சிதம்பரம் கோயிலுக்கு வர்றதுக்கு சம்மதம் தெரிவிச்சார். கோபதாபங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் காஞ்சி மகான்; கருணைத் தெய்வம்!
அதன்படி, சிதம்பரத்துக்கு வந்துசேர்ந்தார் பெரியவா. விடியற்காலைல… யார்கிட்டயும் எதுவும் சொல்லாம, நேரா விறுவிறுன்னு கோயிலுக்குப் போயிட்டார்.
அங்கே… சிவகங்கை தீர்த்தக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, நித்திய அனுஷ்டானத்தையும் முடிச்சிண்டு, நேரா நடராஜர் சந்நிதிக்குப் போய் நின்னுட்டார்.
அப்பத்தான் உஷத் கால பூஜைக்குத் தயாராகிட்டிருந்தாங்க தீட்சிதர்கள். சுவாமிகளைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டுது அவர்களுக்கு! சாட்சாத் பரமேஸ்வரனே தரிசனம் தர்றதுபோல எண்ணிப் பரவசமானாங்க. பெரியவாளை இத்தனை நெருக்கத்துல பார்த்த சந்தோஷத்துல, தங்களையே மறந்துபோய் சிலையா நின்னுட்டாங்க.
அப்புறம், ஒருவழியா நிதானத்துக்கு வந்தவங்க, பூர்ண கும்ப மரியாதையெல்லாம் செஞ்சு, எந்தக் குறையும் இல்லாம பெரியவாளை நமஸ்காரம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டாங்க.
அதேநேரம்… சிதம்பரம் கோயிலுக்குள் காஞ்சிப் பெரியவா வந்திருக்கிற தகவலைக் கேள்விப்பட்டு, ஊர் ஜனங்க மொத்தமும் திபுதிபுன்னு கோயி லுக்குள்ளே வந்துட்டாங்க. எல்லாரும் பெரியவாளை தரிசனம் பண்ணி, சிலிர்ப்பும் தவிப்புமா நிக்கறாங்க. ‘இந்தச் சம்பவம் நடக்காதா? காஞ்சி மகானை கண்ணாரப் பார்க்கற பாக்கியம் பெற்றார்கள்.
சரி… சிதம்பரத்துக்கு வந்தாச்சு; எல்லாரையும் பார்த்தாச்சுங்கறதோட பெரியவா கிளம்பிடலை. அடுத்த நாள் துவங்கி, பதினைஞ்சு நாளைக்கு, ஆயிரங்கால் மண்டபத்துல தங்கி, உபந்யாசம் பண்ணினார் பெரியவா. சிதம்பரத்து தீட்சிதர்களுக்கும் ஊர் மக்களுக்கும் பரம சந்தோஷம்!
காஞ்சி மகான், வேற யாரும் செய்யாத, சுவாமிகள் மட்டுமே செஞ்ச காரியம் இது. ‘இருநூத்தம்பது வருஷத்துல… பீடத்துல இருந்தவா யாருமே சிதம்பரம் கோயிலுக்குப் போனதில்லை. நாம மட்டும் போய், எதுனா பிரச்னையை உண்டாக்கணுமா?’ன்னெல்லாம் அவர் யோசிக்கலை. ‘செயற்கரிய செய்வோர் பெரியோர்’னு சொல்வாங்களே… அப்படித்தான் அமைஞ்சுது இந்தச் சம்பவம்!
சிதம்பரம் கோயில்ல, நடராஜ பெருமானை தரிசனம் பண்ணினப்ப, பெரியவா சங்கல்பம் ஒண்ணு செஞ்சுண்டார். அதாவது,
நடராஜர் பாதத்திற்கு ,
"தூக்கிய திருவடி’ என்பார்கள்
அந்தக் குஞ்சிதபாதத்துக்கு நவரத்தினக் கவசம் ஒண்ணு சார்த்தணும்னு பிரார்த்தனை பண்ணிண்டார்.
அதுக்கப்புறம், சுமார் 20 வருஷம் கழிச்சு, நவரத்தினத்தாலான கவசத்தை, குஞ்சிதபாதத்துக்குச் சார்த்தி, தன் ஆசையை, பிரார்த்தனையை பூர்த்தி செஞ்சுண்டார் பெரியவா.
அன்று திருவாதிரை!
தீட்சிதர்களுக்கெல்லாம் மனம் கொள்ளாத பூரிப்பு; முகம் முழுக்க அப்படியரு சந்தோஷம். ஆடல்வல்லான் நடராஜபெருமானை, நவரத்தின கவசம் சாத்தின அலங்காரத்துல பார்த்துட்டு, சிதம்பரத்து மொத்த மக்களும், மெய்ம்மறந்து நின்றார்கள்
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...