Sunday, July 31, 2011

ஈழத் தமிழரை வைத்து மீண்டும் கருணாநிதி அரசியல் பிழைப்பு


இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த விவரம் தெரியாமல் தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சட்டப் பேரவையில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றிய காரணத்தால் தான் இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துவிட்டதாகச் சிலர் பாராட்டுகின்றனர். தொல்.திருமாவளவன் கூட ஓர் அறிக்கையில் அது உண்மையாக இருக்குமோ என்று எண்ணி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சிலரிடம் விசாரித்தபோது அப்படி எதுவும் அமெரிக்கா இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறினர்.

அமெரிக்க வெளியுறவுத் துறைக்கான குழு, போர்க் குற்றங்களை அடுத்து இலங்கை அரசுக்கு உதவிகளை ஒரு வரையறைக்குள் நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளது.

இந்த நடவடிக்கை கூட உடனடியாக அமலுக்கு வராது.

2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கும் நிதியாண்டில் இலங்கைக்கான உதவி நிறுத்தம் பற்றிய இந்தக் குழுவின் பரிந்துரை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட், காங்கிரஸ் என்ற இரண்டு அவைகளிலும் வைக்கப்பட்டு, அவற்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.

இந்த ஆலோசனை கடந்த பல வாரங்களாக இக்குழுவின் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்தியச் சுற்றுப் பயணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மற்ற நாடுகள் குறித்த விவகாரங்களை இந்திய அரசிடம் மட்டும்தான் விவாதிப்பாரே தவிர, இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசிடமும் விவாதிக்க மாட்டார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்று தெரியாமல் அதிமுகவின் தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி வருகின்றனர்.

இப்படித்தான் கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஐ.நா.சபை அவருக்கு கௌரவ விருது வழங்கப் போகிறது என்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் ஐ.நா.சபையின் அங்கீகாரம் பெற்ற அரசு சாரா அமைப்புகள் 2 ஆயிரத்து 531 ஆகும். இந்த அமைப்புகள் எதுவும் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கவில்லை என்று பின்னர் தெரிய வந்தது.

அதற்குள் ஐ.நா.சபையின் ‘தங்கத் தாரகை விருது’ என்றெல்லாம் விளம்பரப் படுத்தினார்கள். அதைப்போலவே இப்போதும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துவிட்டது என்று செய்தி பரப்புகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பிஷப் சின்னப்பா மற்றும் ஜேப்பியார், எம்.ஜி.எம்., கம்பெனி நிர்வாகத்தினர் மீது போலீசார் நிலமோசடி வழக்கு பதிவு

சென்னையில் கத்தோலிக்க உயர் மறை மாவட்ட பிஷப் சின்னப்பா மற்றும் ஜேப்பியார், எம்.ஜி.எம்., கம்பெனி நிர்வாகத்தினர் மீது போலீசார் நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் போக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு வந்த நேரத்தில் பிஷப் மீது பதிவான இந்த வழக்கு காரணமாக மறை மாவட்ட சமூக மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சென்னையில் கடந்த 1919 ம் ஆண்டில் வாழ்ந்தவர் டி. மாண்டி. இவர் போர்ச்சூக்கிய நாட்டை சேர்ந்தவர். இவர் தனக்கு சொந்தமான ( ராஜா அண்ணாமலை புரம் ) இடங்களை கத்தோலிக்க சபைக்கு உயில் எழுதி , இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை ஏழை மக்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் இந்த ஆவணத்தில் கூறியுள்ளார். இந்த நிலங்கள் சபையின் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மோசடி ஆகும். அதாவது எம்.ஜி.ஆர்., காலத்தில் பலம் மிக்கவராக இருந்து வந்த ஜேப்பியார், மற்றும் எம்.ஜி.எம்,. நிறுவனத்திற்கு இந்த இடங்களை 95 ஆண்டு காலம் வரை நீண்ட கால ஒத்திகைக்கு மறைமாவட்ட சபை வழங்கியுள்ளது.


இதற்கு காரணமான பிஷப் , ஜேப்பியார், குமார், லாரன்ஸ், கபீர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட 14 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை திருவான்மியூரை சேர்ந்த தேவசகாயம் போலீசாரிடம் வழங்கினார். இதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதனால் போலீசார் எப்.ஐ.ஆர்., பதிந்துள்ளனர். நிலமோசடிக்கென உருவாக்கப்பட்டிருக்கும் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கத்தோலிக்க சபையை பொறுத்த மட்டில் மறைமாவட்டம் என்றும் , அந்தஸ்து கொண்ட உயர்மறைமாவட்டம் என்றும் இரு பிரிவுகள் உள்ளது. இதில் மதுரையும், சென்னையும் உயர் மறைமாவட்டம் ஆகும்.


இதற்கிடையில் இந்த நிலங்கள் தொடர்பாக ஏற்கனவே எழுந்த சர்ச்சையின் கீழ் சபைக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது என்று சபை தரப்பில் கூறப்பட்டாலும், ஆவணங்கள் முறையாக இன்னும் மாற்றத்திற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக புகார் கொடுத்து வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கு விசாரணை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்.

ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை...கைது!: நில மோசடியில் அடுத்த திருப்பம்

திருச்சியில் நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதியின், "துணைவியார்' ராஜாத்தியின் கணக்குப்பிள்ளையாக இருந்த ரமேஷை, போலீசார் நேற்று கைது செய்தனர். ஏற்கனவே, "ஸ்பெக்ட்ரம்' உள்ளிட்ட பல்வேறு ஊழல் பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் முன்னாள் முதல்வர் குடும்பத்துக்கு, மற்றொரு பெரும் பிரச்னையாக இது எழுந்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக, நில அபகரிப்பு மோசடி விவகாரத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களும், அதை ஒட்டி போலீஸ் நடவடிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளன. நிலமோசடி தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கோவை சிறையில் இருக்கிறார். பாளையங்கோட்டை சிறையில், மத்திய அமைச்சர் அழகிரிக்கு வேண்டியவர் தற்போது அடைக்கப்பட்டிருக்கிறார்.
நில மோசடிப் புகார் தினமும் குவிந்த வண்ணமும், அதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.



இந்த நிலையில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள எடமலைப்பட்டிபுதூர், ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள், திருச்சி, டி.ஆர்.ஓ., பேச்சியம்மாளிடம், கடந்த ஜூலை 25ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், "ராஜிவ் நகரில், 1.4 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், 31 குடும்பங்கள் வசித்து வந்தோம். காரைக்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் புஞ்சை நிலத்துக்கு முன், இந்த புறம்போக்கு நிலம் உள்ளது.


ஊர் தலைவர் ஒப்புதலின் பேரில், கடந்த, 20 ஆண்டாக வீடு கட்டியும், குடிசை அமைத்தும் குடியிருந்து வருகிறோம். அந்த பகுதியிலிருந்து அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு, வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. தெருவிளக்கும் அமைத்திருந்தனர். அந்த இடத்துக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்று, அப்போதைய அமைச்சர் நேருவிடம் முறையிட்டோம்.


இதற்கிடையே, முன்னாள் முதல்வர் கருணாநிதியின், "துணைவியார்' ராஜாத்தியின் கணக்குப்பிள்ளையாக உள்ள ரமேஷ் மற்றும் காரைக்குடியை சேர்ந்த, ரியல் எஸ்டேட் அதிபர் தம்பி ராஜா ஆகியோர், "சதுரஅடிக்கு 200 ரூபாய் தருகிறோம், இடத்தை காலி செய்யுங்கள்' என்று எங்களிடம் கேட்டு, மறுத்ததாக கூறப்பட்டது. அங்கு, காலியாக இருந்த மற்றொருவர் இடத்தில் தம்பிராஜா, காளிதாஸ் ஆகிய இருவரும் குடிசை போட்ட போது, நாங்கள் தட்டிக் கேட்டபோது, மிரட்டினர்.


அப்போது, ஆட்சி மற்றும் அதிகார பலம் இருந்ததால், தொடர்ந்து பல வகையில் எங்களுக்கு, "டார்ச்சர்' கொடுத்து ரமேஷ் தரப்பினர் மிரட்டினர். அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, நீதிமன்ற உத்தரவையும் மீறி, எங்களது வீடுகளை இடித்துத்தள்ளி, தரைமட்டமாக்கினர்' என, புகாரில் தெரிவித்தனர்.தனியார் நிலத்தில் உள்ள வீடுகளை இடித்தது எப்படி என்றும், புகாரில் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இந்த விவகாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின், "துணைவியார்' ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை ரமேஷ், தம்பிராஜா ஆகியோர் மீது மட்டுமல்லாது, துணைபோன டி.ஆர்.ஓ., - தாசில்தார் - ஆர்.ஐ., என, அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தனர்.


சிறையில் அடைப்பு: புகார் குறித்து, எடமலைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க, டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார்; போலீசார், வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்து வந்த போலீசார் நேற்று முன்தினம், ரியல் எஸ்டேட் அதிபர் தம்பிராஜாவை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சென்னையில் இருந்த, ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை ரமேஷையும் போலீசார் நேற்று முன்தினம் திருச்சிக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். கூறப்பட்ட குற்றச்சாட்டுகள், விசாரணையில் உண்மை இருப்பதாக தெரியவந்ததால், நேற்று மதியம் ரமேஷையும் எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்.அவர் மீது, ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட ரமேஷ், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.தற்போது கைதாகியுள்ள ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை ரமேஷ் மூலம் தான், தமிழகத்தில் பல இடங்களில் நிலங்கள் வளைக்கப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. ஏற்கனவே, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கித்தவிக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தாருக்கு, துணைவியார் ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை ரமேஷ் கைது மூலம் மற்றொரு பிரச்னை வந்து, அது, பெரிதாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி பேரைக் கெடுக்கும் என்று தமிழ்நாட்டில் ஒரு சொலவடை உண்டு. இந்த சொலவடைக்கு பொருத்தமான நபர் யார் என்று கேட்டால் நமது பிரதமர் மன்மோகன் சிங் தான்.


இந்தியாவின் வெளி யுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் இன்று ஓய்வு பெறுகிறார். வெளியுறவுத் துறைக்குப் பெண் ஒருவர் என்று பெண்ணியவாதிகள் பெருமைப்பட்டதுண்டு. மேற்கொண்டு அமெரிக்கா வுக்கு இந்தியாவின் தூதராகப் பதவியேற்கவும் இருக்கிறார்.
அந்த நிருபமாராவ் இன்றைக்கு எங்கிருக்கிறார். தெரியுமா? இலங்கையிலே இருக்கிறார்? அலுவல் நிமித்தமா? அல்ல அல்ல; சிறப்பு விருந்தினராக - சிறப்பு அழைப்பின் பேரில் சென்று இருக்கிறார். அன்பழைப்புக் கொடுத்த அந்தப் பிதா மகன் யார்? இட்லரின் மலிவுப் பதிப்பான, இடி அமீனின் அசல் நகலான ராஜபக்சேதான் இந்த அழைப்பைக் கொடுத்தவர்.
பதவி ஓய்வு பெறும் நாளில் அப்படி என்ன அவசரம் என்ற ஆவலான கேள்வி எழுமே!

இலங்கைப் பீடாதிபதி சிறப்பு விருந்து கொடுத்து பாராட்டுத் தெரிவிக்கிறராம்; அதில் கலந்து கொள்ளத்தான் இந்த அம்மையார் சென்றுள்ளார்.
ராஜபக்சே விருந்து கொடுத்து உபசரிக்கிறார் என்றால் இதன் பொருள் என்ன? ஈழத் தமிழர்கள் விஷயத்தில் இலங்கை அரசுக்கு விசுவாசமாக நடந்திருந்தால்தான் - ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட பல வகைகளிலும் நேசக்கரத்தை நீட்டியிருந்தால்தான் ராஜபக்சேவிடமிருந்து இந்தப் பாராட்டு, உபசரிப்பு நடக்க முடியும் என்பது எளிதாகப் புரிந்து கொள்ளப்படும் ஒன்றே.
நரவேட்டை ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்ற குரல் உலக அரங்கில் ஓங்கி ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கும் ஒரு கால கட்டத்தில், இந்தியாவின் வெளியுறவுச் செயலர், ராஜபக்சேவின் சிறப்பு விருந்தினராகச் செல்லுகிறார் என்றால் இதன் பொருள் என்ன? ராஜபக்சேக்கள், பெண் உருவத்தில்கூட இருப்பார்களோ! என்று தானே நினைக்கத் தோன்றுகிறது.
இந்திய அரசின் அனுமதியோடுதான் இதில் கலந்து கொண்டு இருக்கிறாரா என்று தெரிய வில்லை. இந்தியா அப்படி ஓர் அனுமதி கொடுத்திருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை! மனித உருவத்தில் நட மாடும் சிங்கள வெறியர் ராஜபக்சே என்ற கொடூரனுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பை இந்திய அரசு கொடுப்பதில்லையா!

 
சந்திரிகா குமாரதுங்கே அளித்த சிங்கள ரத்தினா என்ற விருதை இந்து ஏட்டின் ஆசிரியர் என்.ராம் பெறவில்லையா?
சிங்களவனுக்குத்தான் தமிழன் மாமிசப் பிரியாணி பிடிக்கும் என்று பொருளல்ல - இந்தியாவில் உள்ள ஆரியர்களுக்கும்கூட தமிழனின் மாமிசக் கொத்துக் கறியிலும், பிரியாணியிலும் அமோகமான ஆசை வெறியுண்டே!

மன்மோகன் சிங் என்னும் கல்லுளி மங்கனின் திருட்டுத்தனம் அம்பலம் !

ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி பேரைக் கெடுக்கும் என்று தமிழ்நாட்டில் ஒரு சொலவடை உண்டு. இந்த சொலவடைக்கு பொருத்தமான நபர் யார் என்று கேட்டால் நமது பிரதமர் மன்மோகன் சிங் தான்.
இந்த மன்மோகன் சிங் சாதாரணமான நபர் அல்ல. இன்று இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஊழல்களுக்கும் மன்மோகனே காரணம் என்றால் அது மிகையாகாது.
manmohan
மிஸ்டர்.க்ளீன் என்ற ஒரு இமேஜை வேறு வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நபர் என்றால் அது மன்மோகன் சிங் தான். இந்த மிஸ்டர்.க்ளீன் நினைத்திருந்தால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடைபெற்ற ஊழலை நிச்சயமாக தடுத்திருக்க முடியும்.

25.10.2007 அன்று, அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் டி.எஸ்.மாத்தூர், குறைந்த பட்சம், ட்ராயின் கருத்தைக் கேட்டாவது முடிவெடுக்கலாம் என்றும், ராசாவின் பார்வைக்கு, ஒவ்வொரு மாநிலத்திலும், ஸ்பெக்ட்ரம் எவ்வளவு உள்ளது என்பதையும், பல மாநிலங்களில் கையிருப்பு மிகக் குறைவாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி அலுவலகக் குறிப்பு ஒன்றை வைக்கிறார். பின்னாளில் அளித்த ஒரு பேட்டியில், அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் டி.எஸ்.மாத்தூர் தெரிவித்தது என்ன தெரியுமா ?
“மே 2007ல் மந்திரியாக ஆனதும், ராசா என்னை அழைத்தார். ‘சார் குறைஞ்சது 500 லைசென்ஸாவது குடுக்கனும். என்ன பண்ணலாம்னு சொல்லுங்க’ என்று கூறினார். அதற்கு மாத்தூர், ஸ்பெக்ட்ரம் அந்த அளவுக்கு இல்லை. கொடுக்க இயலாது என்று தெரிவிக்கிறார். உடனே ராசா ‘லாஸ்ட் டேட்ட மாத்திட்டா குடுக்கலாம்ல ?’ என்று எதிர்க் கேள்வி போடுகிறார். அதற்கு மாத்தூர், இது இயற்கை நீதிக்கு எதிரானது. 1 அக்டோபர் 2007 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் கடைசித் தேதியை மாற்றுவது என்பது தவறானது அதனால் அவ்வாறு செய்ய இயலாது” என்று கூறுகிறார். மாத்தூர் இவ்வாறு மறுத்ததும், அவர் லீவ் போட்ட அன்று, தொலைத் தொடர்புத் துறை கமிஷனின், தொழில்நுட்ப உறுப்பினராக இருந்த ஸ்ரீதரன் என்பரிடம் கையெழுத்து வாங்கி விடுகிறார் ராசா….
இது போல ராசாவுக்கு, பல்வேறு எச்சரிக்கைகள் விடப்பட்டன.
ராசா எச்சரிக்கையை சட்டை செய்பவரா என்ன ? பெயருக்கேற்றார் போல எதேச்சதிகாரமாக செயல்பட்டார். தகத்தகாய கதிரவனல்லவா ? 02.11.2007 அன்று, 25.09.2007 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படும். அதுதான் கடைசித் தேதி என்று முடிவெடுக்கிறார். இந்த முடிவின் முக்கியப் பின்னணி, 25.09.2007 அன்று கடைசி தேதி என்று முடிவெடுத்தால், டெல்லியில் உள்ள ஒரே ஒரு நிறுவனத்துக்கான ஸ்பெக்ட்ரம், ராஜாதி ராசாவுக்கு நெருக்கமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு கொடுக்க இயலும்.
சரி. நான் எடுத்ததுதான் முடிவு என்று தொலைத் தொடர்புத் துறையில் சொல்லியாகி விட்டது. ட்ராய் அமைப்புக்கு கூட தகவல் தெரிவிக்க மாட்டேன், என்றும் சொல்லியாகி விட்டது. இத்தோடு விவகாரம் முடிந்து விடுமா என்ன ? ராசாவுக்கு மேல் சக்கரவர்த்தி என்று ஒருவர் இருக்கிறாரே…. மன்மோகன் என்று. அவருக்கு சொல்ல வேண்டாமா ?
02.11.2007 அன்று, ராசா பிரதமர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 25.09.2007தான் விண்ணப்பம் அளிக்க கடைசி தேதி என்ற விபரம் பத்திரிக்கைகளில் அறிவிப்பாக வந்ததாக கூசாமல் ஒரு பொய்யை எழுதுகிறார். அதோடு நில்லாமல், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம், ஸ்பெக்ட்ரம் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாளை நிர்மாணிப்பது தொடர்பான விவகாரத்தை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிய கருத்து, தவறானது என்றும் குறிப்பிடுகிறார். எப்படி இருக்கிறது ? சட்டத்துறை அமைச்சகம் தவறாக கூறியதாம், சரியாகச் சொன்னாராம். இது மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான விவகாரத்தில், தொலைத் தொடர்பு அமைச்சகம், சட்டத்திற்கு உட்பட்டு, நூல் பிசகாமல் நடந்து கொள்வதாகவும் ராசா தெரிவித்திருந்தார். 99ம் ஆண்டின் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை பத்தி 3.1.1ல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டதை ராசா வசதியாக குறிப்பிட மறந்தார்.
Raja_2
இந்தக் கடிதத்தை ராசா அனுப்பிய 02.11.2007 அன்றே, பிரதமர் ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், “அன்பான ராசா, ஸ்பெக்ட்ரம் கொஞ்சூன்டு தான் இருக்கு. நெறய்யயய பேரு அப்பிளிகேசன் போட்ருக்காங்க.. நெறய்ய பேரு கேட்ருக்கதால, இன்னும் பல வருசத்துக்கு ஸ்பெக்ட்ரம் இருக்காதுன்றதால, அப்ளை பண்ண நெறய்ய பேருக்கு ஸ்பெக்ட்ரம் கெடைக்காம பூடும். அத்தோட இல்லாம, டெலிகாம் பாலிசின்னு ஒன்னு வச்சுருக்காங்க. அது படி பாத்தா, இருக்கற ஸ்பெக்ட்ரம்ம, எல்லாருக்கும் நயந்து குடுக்குனும்னு அதுல சொல்லிக்கீது. அதனால, எவ்ளோ ஸ்பெக்ட்ரம் கீதுன்னு, பாத்துப்புட்டு, அப்பாலிக்கா லைசென்ஸ் குடுங்க. ஸ்பெக்ட்ரமே இல்லாம வெறும் லைசென்ஸ் மட்டும் குடுத்தீங்கன்னாக்கா, அந்த கம்பேனிக்காரன் லைசென்ச வச்சுக்கிட்டு இன்னா பண்ணுவான் ?” என்று எழுதுகிறார்.
manmohan_raja_2gspectrum_Page_01

manmohan_raja_2gspectrum_Page_02

manmohan_raja_2gspectrum_Page_03
அவ்வளவுதான், ராசாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்னடா இது, நம்பளுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. நம்பகிட்டயே இவரு கேள்வி கேக்கறாரே என்று அதிசயித்த ராசா, இரவோடு இரவாக, அவருக்கு பதில் அனுப்ப முடிவு செய்கிறார். அது மட்டும் அல்லாமல், ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எல்லாவற்றையும் கரீட்டாக செய்திருக்கிறேன் என்று அனுப்பிய கடிதம், பிரதமர் அலுவலகத்தை அடையும் முன்பே, பிரதமரின் கடிதம் வந்து சேர்ந்ததால் ராசாவின் அதிர்ச்சி மேலும் கூடியது.
அன்று இரவே பதில் கடிதம் தயாரிக்கலாம் என்ற முடிவெடுத்து, தனது செயலாளர் சந்தோலியாவை வரவழைக்கிறார். அவர் வந்தால் போதுமா… கடிதத்தை டைப் அடிக்க நம்பகமான ஆள் வேண்டுமில்லையா….. அதனால், 2004ம் ஆண்டு முதல், ராசாவின் காரியதரிசியாக இருந்த, ஆச்சார்யா ஆசீர்வாதம் என்பவரை, இரவு 8 மணிக்கு உடனே வீட்டுக்கு வாருங்கள் என்று கூறுகிறார். அனைவரும், ராசாவின் வீட்டில் கூடுகிறார்கள்.
ஆசீர்வாதம் வீட்டுக்கு வந்ததும், ராசாவே அவரோடு அமர்ந்து கடிதத்தை டிக்டேட் செய்கிறார். “கண்மணி, அன்போட….” என்று அல்ல. “டியர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்” என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில், ராசா, “எல்லாம் கரீட்டா நடந்துகினு கீது. ஒரு தப்பும் பண்ணல. இந்த மேரி வெளிப்படையா யாருமே நட்ந்து கிட்டது இல்ல. இப்போ மட்டும் இல்ல.. ப்யூச்சர்ல கூட, இதே மேரி நூல் புட்சா மாதிரி எல்லாம் நடக்கும். நீ ஒன்யும் கவலைப் படாதே வாத்யாரே” என்று பதில் எழுதுகிறார்.
ராசா, சந்தோலியா, தொலைத் தொடர்புக் கமிஷன் உறுப்பினர் ஸ்ரீதர், ஆகியோர் சேர்ந்து இந்த கடிதத்தை தயார் செய்கிறார்கள். இரவு 11 மணிக்கு வேலை முடிகிறது. இரவோடு இரவாக, சிறப்புத் தூதுவர் மூலம், அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.
என்ன ஆயிற்றோ தெரியவில்லை. 26.12.2007 அன்று சந்தோலியா, அந்தக் கடிதத்தை தயாரித்த ஆசீர்வாதத்தை அழைத்து, நீங்கள் அடித்த கடிதம் எங்கே என்று கேட்கிறார். அவர் இந்தக் கம்ப்யூட்டரில் தான் இருக்கிறது என்று கூறியதும், அதை பென் டிரைவில் காப்பி செய்து, மீண்டும் ப்ரின்ட் எடுத்து, பிரதமருக்கு அனுப்பப் படுகிறது.
manmohan_raja_2gspectrum_Page_05
manmohan_raja_2gspectrum_Page_06

manmohan_raja_2gspectrum_Page_07
இந்த ஆசீர்வாதம், சிபிஐ ன் முக்கிய சாட்சியாக சேர்க்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவரின் முக்கியத்துவம் கருதி, இவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப் பட்டு, இவருக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த லைசென்ஸ் வழங்குவது குறித்த கோப்புகள், பல்வேறு அதிகாரிகளிடம் சென்று வந்த போது, நேர்மையான அதிகாரிகள் பலர், ராசாவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்துள்ளனர். அப்போது, தொலைத் தொடர்பு கமிஷனின் நிதிக்கான உறுப்பினராக இருந்த மஞ்சு மாதவன் என்பவர், இது வரை லைசென்ஸ் கொடுத்து வந்தது 2001ல் உள்ள விலை. இப்போது ஸ்பெக்ட்ரத்துக்கான தேவை (Demand) மிக அதிகமாக உள்ளது. அதனால், ஏலம் விட்டால், அதிகத் தொகையை ஏலத்தில் கேட்பவர்கள், ஸ்பெக்ட்ரம் பெற இயலும், மேலும், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று, சம்பந்தப் பட்ட கோப்பிலேயே எழுதுகிறார். ஆனால், தகத்தகாய கதிரவன், அவ்வாறு எழுதப்பட்டதன் மீது, எந்த முடிவும் எடுக்காமல், டபாய்து விடுகிறார்.
manmohan_raja_2gspectrum_Page_08
manmohan_raja_2gspectrum_Page_09
அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் மாத்தூர், இது தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் விவாதிக்கும் போதெல்லாம், ஏலமெல்லாம் விட முடியாது என்பதை தீர்மானமாக தெரிவித்தார். மேலும், 2001ல் உள்ள விலைக்குத் தான் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார் என்கிறார் மாத்தூர். ராசா 2001ல் வாங்கிய வீட்டை, இன்று அதே விலைக்கு கொடுப்பாரா ?
26 டிசம்பர் அன்று எழுதிய கடிதத்தில் ராசா, நான் உங்களோடு தொலைத் தொடர்புத் துறை குறித்து விவாதித்தது போல என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்க வேண்டும். மன்மோகனோடு விவாதித்த பிறகு ராசா முடிவெடுத்தார் என்றால், சிபிஐ மன்மோகனை ஒரு சாட்சியாகவாவது விசாரித்திருக்க வேண்டுமா வேண்டாமா ? ஆனால் மன்மோகன் கீழ் பணியாற்றும் சிபிஐக்கு, மன்மோகனை விசாரிக்க எப்படி தைரியம் வரும் ?
manmohan_raja_2gspectrum_Page_13
இவ்வாறு ராசா பிரதமருக்கு கடிதம் அனுப்பியவுடன் பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும் ? சட்ட அமைச்சகம் அமைச்சரவை குழுவுக்கு அனுப்பவும் என்று தெரிவித்த கருத்தை மீறி, நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கக் கூடாது, அதனால் நான் அந்தக் கோப்பை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்புகிறேன் என்றல்லவா உத்தரவிட்டிருக்க வேண்டும். பிரதமரும் பதில் கடிதம் அனுப்பினார். ஆனால் அந்தக் கடிதத்தில், உங்களின் 26.12.2007 நாளிட்ட கடிதத்தை வரப்பெற்றேன் என்று பதில் எழுதுகிறார். அப்போது ராசா மன்மோகனோடு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விவாதித்ததை மறுக்கவில்லை என்றுதானே பொருள்.... ஏன் மவுனமானார் இந்த ஊமைச் சாமியார் ?
ஏன் இவ்வாறு எழுதுகிறார் என்று கேட்கிறீர்களா ? ராசா திமுகவின் அமைச்சராயிற்றே….. மன்மோகன் பிரதமாராக இருக்க வேண்டாமா ? மன்மோகன் பிரதமர் பதவியில் நீடித்ததற்காகத் தான் இந்தியா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இழந்தது. அன்று மன்மோகன், அந்தக் கோப்பை ராசாவிடமிருந்து பறித்து, அமைச்சரவை குழுவுக்கோ, அல்லது தன்னிடமோ மாற்றியிருந்தால், இந்த நஷ்டம், ஊழல் விசாரணை இதெல்லாம் தேவையா ?
கடந்த வாரம் பத்திரிக்கை ஆசிரியர்களோடு நடந்த சந்திப்பின் போது, மன்மோகனிடம், 2ஜி விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்கப் பட்டன.
3408386309_72d31a3f26_o
நீங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளை இன்னும் கடினமாக கையாண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “எது சரியான வழி என்று எனக்குத் தெரியவில்லை. சில விஷயங்களை (ஸ்பெக்ட்ரம்) தவிர்த்திருக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. 2ஜி விவகாரத்தை எடுத்துக் கொண்டால், நான் ராசாவிடம் ஏலம் விடலாம் என்று எழுதினேன். அவர் ட்ராய் ஏலம் விட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ட்ராய் அரசுக்கு ஆலோசனை வழங்கத் தானே இருக்கிறது என்பதால் அத்தோடு அதை விட்டு விட்டேன். நேர்மையாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் படும் என்று ராசா கூறியதை நம்பினேன். என்னுடன் பணியாற்றும் ஒரு நபர் இது போல சொல்லும் போது அதை நம்பாமல் நான் எப்படி இருப்பது ? அதற்குப் பிறகு சிவிசியிடம் புகார் அளிக்கப் பட்டது. சிபிஐ விசாரணையை தொடங்கியது. தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் சோதனையிடப் பட்டது” என்றார்.
இந்த விவகாரம் செய்தித் தாள்களில் தினந்தோறும் வெளி வந்ததே என்ற கேள்விக்கு, “செய்தித் தாள்களை வைத்து முடிவெடுப்பதாக இருந்தால், நான் அத்தனை விவகாரங்களையும் சிபிஐயிடம் தினந்தோறும் அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும்” என்று இறுமாப்பாக பதிலளித்துள்ளார்.
ராசாவை நான் நம்பினேன் என்று மன்மோகன் சிங் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. இன்டெலிஜென்ஸ் ப்யூரோ என்னும், மத்திய உளவுத்துறை ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும். அவ்வாறு கண்காணித்து தினந்தோறும் பிரதமருக்கு அறிக்கை அளிக்கும். ராசாவை யார் சந்திக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார், யாரோடு பேசுகிறார், என்பதையெல்லாம் தினமும் கண்காணிக்கும். அவ்வாறு கண்காணித்தன் விளைவே, ராசா 2.11.2007 அன்று தனக்கு கடிதம் எழுதிய விபரம் அறிந்த மன்மோகன், அந்தக் கடிதம் கிடைக்கும் முன்பே முந்திக் கொண்டு ராசாவுக்கு கடிதம் எழுதியது. அதனால் ராசாவை நான் நம்பினேன் என்பதை ஏற்பதற்கில்லை.
பத்திரிக்கைகளை நான் நம்ப முடியாது என்ற மன்மோகனின் பேச்சு திமிர்த்தனமானது. ஸ்பெக்ட்ரம் விவகாரம், வெளி வந்ததும், இன்று ராசா, கனிமொழி உள்ளிட்டோர் சிறையில் இருப்பதற்கும், 80 சதவிகித காரணம் பத்திரிக்கைகளே…. பயனீர் நாளேடு, டிசம்பர் 2008ல் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த முதல் செய்தியை வெளியிடாமல் போயிருந்தால் இன்று ராசாவும் கனிமொழியும் சிறையில் இருந்திருப்பார்களா ?
பத்திரிக்கைகள் என்ன பொறுப்பில்லாமல் எழுதுகிறார்களா என்ன ? அவ்வாறு எழுதினால் மன்மோகன் சிங் அரசு விட்டு விடுமா என்ன ?
மன்மோகன் சிங்கின் அடுத்த அயோக்கியத்தனம் இன்னும் மோசமானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 1ல் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர், தமிழகத்தைச் சேர்ந்த மணி சங்கர் அய்யர். இவர் 9 மார்ச் 2006ல், இவர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில் “காமன் வெல்த் விளையாட்டுக் போட்டிகளுக்காக 150 கோடிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டும் என்று செய்யப் பட்ட மதிப்பீடு 500 கோடியாக உயர்ந்துள்ளது. 250 கோடி என்று நிர்ணயிக்கப் பட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்காக செலவுகள், 900 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பீடு நம்ப முடியாத வண்ணம் உள்ளது. உடனடியாக என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்குவீர்களேயானால், விரிவாக எடுத்துரைக்கிறேன்“ என்று எழுதுகிறார்.
manmohanpranab_20110614
மன்மோகன் என்ற ஊமைச் சாமியார் எதுவும் பேசவில்லை. 25 அக்டோபர் 2007ல் அடுத்த கடிதம் எழுதுகிறார் அய்யர். இந்தக் கடிதத்தில், “காமன் வெல்த் விளையாட்டுக்களில் பங்கேற்பது போன்ற முக்கால் அளவுக்கு விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற ராணுவ விளையாட்டுக்கள் 200 கோடி செலவில் நடந்து முடிந்தன. ஆனால், காமன் வெல்த் போட்டியை நடத்த 20 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவாகும் என்று நிர்ணயித்திருப்பது, மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. சுரேஷ் கல்மாடியின் நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது“ என்று எழுதினார். இதற்கும் இந்த ஊமைச் சாமியார் வாயைத் திறக்கவில்லை.
சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த ஊமைச் சாமியாரிடம், மணி சங்கரின் கடிதம் குறித்து கேட்கப் பட்டது. அதற்கு மன்மோகன் சிங் “மணி சங்கர் அய்யரின் கடிதம் தத்துவார்த்த ரீதியானது. சுரேஷ் கல்மாடி காமன் வெல்த் விளையாட்டுக்களை நடத்தக் கூடாது என்பது தொடர்பானது. மணி சங்கர் அய்யர் பல கடிதங்களை எழுதியிருக்கிறார். காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் 2003ல் முந்தைய அரசாங்கத்தால் கையொப்பம் இடப்பட்டது.”
எப்பேர்பட்ட அயோக்கியத்தனம் பாருங்கள். முந்தைய அரசாங்கம் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டால் என்ன ? அவர்களா 20 ஆயிரம் கோடியை கொள்ளையடித்தார்கள் ? சுரேஷ் கல்மாடி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் என்பது நன்றாக தெரிந்தும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, இப்போது ஒன்றுமே தெரியாதது போல பசப்புவது இந்த ஊமையின் உச்சபட்ச குசும்பு.
இந்த குசும்புகளைத் தவிர்த்து, மன்மோகனின் மற்றொரு சிறப்பு, அமெரிக்காவின் அடிமையாக இருப்பது. அமேரிக்காவின் காலை நக்குவது என்றால், மன்மோகனுக்கு அவ்வளவு பிடிக்கும். அணு ஆயுத ஒப்பந்தத்தைச் செய்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த மன்மோகன், இடது சாரிகள் இதன் காரணமாக ஆதரவை வாபஸ் பெற்ற போது, பல ஆயிரம் கோடிகளை எம்.பி.க்களுக்கு லஞ்சமாக கொடுத்து, அரசைக் காப்பாற்றி, அணு ஆயுத ஒப்பந்தத்தை செயல்படுத்தியவர் தானே இந்த மன்மோகன் ? இவர் என்ன மிஸ்டர் க்ளீன்…. ?
l2010110831650
2004ல் நவம்பர் மாதத்தில், ப்ரான்ஸ் நாட்டில், பள்ளிக்குச் செல்லும், சீக்கிய மாணவர்கள் டர்பன் அணியக் கூடாது என்று உத்தரவு போட்ட போது, ப்ரான்ஸ் பிரதமரிடம் பேசி, உடனடியாக அந்தப் பிரச்சினையில் தலையிட்டவர் மன்மோகன் சிங். சீக்கியனின் மயிருக்காக துடித்த மன்மோகன், தமிழனின் உயிர் போன போது என்ன செய்தார் ? தமிழினத்தை அழித்தவனோடு கூட்டு சேர்ந்து அவனுக்கு ஆயுதம் வழங்கினார். இந்திய மீனவனை கொன்று குவிப்பவனோடு, கொஞ்சிக் குலவினார்.
l2010101430992
கடைசியாக இந்த ஊமை செய்த குசும்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து சிபிஐக்கு விலக்கு அளித்து போடப்பட்ட உத்தரவு. அப்படி விலக்கு அளிக்க வேண்டிய காரணம் என்ன ? ஏனென்றால், சோனியாவின் குடும்ப நண்பர் ஒட்டாவியோ கொட்டராச்சியின் மீது இருந்த ரெட் கார்னர் நோட்டிசை விலக்கிக் கொள்ளச் சொல்லியும், முடக்கப் பட்டிருந்த கொட்டரோச்சியின் வங்கிக் கணக்கை விடுவிக்கவும் இந்த ஊமை சிபிஐக்கு போட்ட உத்தரவுகளும், 2ஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடும் வரை அமைதி காத்த விவகாரமும் சந்திக்கு வந்து விடும் அல்லவா ? அதற்காகத் தான்.
l2010110731628
இப்படிப் பட்ட ஊமைக் குசும்பரை பிரதமராக இன்னும் நீட்டிக்கச் செய்வது சோனியாவுக்கு வசதியாக இருக்கிறது. இப்படி ஒரு விசுவாசமான அடிமை கிடைப்பாரா ? இவர் மிஸ்டர் க்ளீன் அல்ல. சென்னை மாநகரின் அத்தனை அழுக்குகளையும் சுமக்கும் கூவம் நதி.

குழந்தைகளையும் விட்டு வைக்காத திமுக

கலைஞர் மற்றும் கனிமொழியின் படைப்புகளை எந்த ஒரு இலக்கியவாதியும் இலக்கியம் என்று சொல்லவே மாட்டார்கள். கலைஞரின் இலக்கியம் சுய நலம் சார்ந்தது. கனிமொழியின் இலக்கியம் என்பது திணிக்கப்பட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் அரசுக்கு ஜால்ராக்கள் இருந்து கொண்டே இருப்பர். அந்த ஜால்ராக்கள் இவர்களின் படைப்புகளை இலக்கியம் என்றுச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உண்மையான இலக்கியவாதிகள் எவரும் மேற்கண்ட இருவரின் படைப்புகளை பார்த்தால் சிரிப்பர்.
செம்மொழி மாநாடு என்ற ஒரு அயோக்கியத்தனமான மாநாடு நடத்தியது திமுக. இலங்கையில் கொத்துக் கொத்தாய் தமிழ் பேசியதற்காக கொல்லப்பட்டார்கள். அதை மூடி மறைக்க திமுகவினர் நடத்திய விழா தான் செம்மொழி மா நாடு. உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி இன்றி நடத்தப்பட்ட இந்த விழா கலைஞரின் குடும்ப விழாவாக நடத்தப்பட்டது. அவரின் குடும்பம் மட்டுமே முன் வரிசையில் அமர்ந்து கொண்டு ஆர்ப்பரித்தது. இதையெல்லாம் தமிழகம் மட்டுமின்றி உலகமே பார்த்தது. தமிழின் பெயரால் மிகப் பெரும் லாபம் அடைந்தவரில் கலைஞர் தான் உச்சம்.
பள்ளிக் குழந்தைகளின் பாடங்களில் எந்தத் தகுதியை வைத்துக் கொண்டு கலைஞர் தன் படைப்புகளையும், மகளின் படைப்பினையும் வைத்தார் என்பதைச் சற்று யோசிக்க வேண்டும். எதிர்காலத்தில் குழந்தைகளின் மனதில் திமுகவைப் பற்றிய பாசிடிவ் தோற்றத்தினை உருவாக்க வேண்டுமென்பதற்காக, கலைஞரின் பேரன் பேத்திகள் எளிதில் முதல்வராக, மந்திரிகளாக வருவதற்கு ஏதுவாய், நாட்டுக்கு நன்மை செய்தவராய் தங்கள் குடும்பத்தை முன்னுறுத்துவதை மிகத் தந்திரமாய் திட்டமிட்டு காய் நகர்த்தி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கிட வேண்டுமென்பதற்காக சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே தற்போது நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது தெரியவருகிறது. மக்களுக்கு நன்மை செய்கிறேன் பேர்வழி என்று சமச்சீர் கல்வித் திட்டத்தினைக் கொண்டு வந்து, மிகத் தந்திரமாக தங்களைப் பற்றிய பாடங்களைப் புகுத்தியது என்பது எவராலும் மன்னிக்க முடியாத ஒன்று.
அதிமுக அரசு இவர்களின் பாடத்தினை கிழித்து எரிந்தாலும், அது ஏன் கிழிக்கப்பட்டது என்பதைக் குழந்தைகள் அறிய முனைவர். அதிலும் திமுகவிற்கு ஒரு ப்ளஸ்தான். எது செய்தாலும் அதிமுகவிற்குப் பிரச்சினை வரும்படி திட்டமிடுதல் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால், உங்களுக்கு என்ன தோன்றுகிறது?????
சமச்சீர் கல்வித் திட்டத்திலும் பெரும் பிரச்சினைகளை உள்வைத்து, தன் அரக்கத்தனமான ராஜ தந்திரத்தை காட்டிய திமுக, குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை என்பது தான் உண்மை.

2ஜியில் அடித்த கொள்ளை போதாது என்று கோவில்களையும் விடாது கடந்த ஆட்சியில் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

எப்போதும் இல்லாத அளவுக்கு தி.மு.க. ஆட்சியில் கோயில்கள் அதிக அளவில் சீரமைக்கப்பட்டது. தங்கக்  கோபுரம், தங்கக் கலசம் என பல கோயில்களின் மாற்றங்களை பக்தர்களே ஆச்சரியத்தோடு கவனித் தார்கள். மாற்றத்திற்குப் பின்னால் இருந்தது பக்தி அல்ல… பணம் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந் துள்ளது.இந்து அறநிலையத்துறையின் கீழ்வரும் கோயில்கள், தங்க விக்கிரகம், தங்கக் கலசம், தங்கக் கோபுரம் என  எல்லாமே தங்கத்தால் மின்ன ஆரம்பித்தது. பொதுவாகவே, பக்தர்களின் நன்கொடை, காணிக்கைப் பணத் தை வைத்து அறநிலையத்துறை இந்தப் பணிகளை நிறைவேற்றுவது வழக்கம். இந்த வேலைகளில்தான்  பெருமளவு முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக அரசு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
கோயிலில் தங்கத்தாலான பணிகள் எது செய்வதாக இருந்தாலும் அறநிலையத்துறை, தமிழக அரசின்  பூம்புகார் நிறுவனம் மூலம் நிறைவேற்றுவதுதான் வழக்கம். எந்த வேலைக்கு எவ்வளவு செலவாகும் என் பதை வரையறுத்து தரும் பூம்புகார். அவர்களே அந்தப் பணிகளை தனியார் காண்ட்ராக்டர்கள் மூலம்  நிறைவேற்றிக் கொடுப்பார்கள். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நடைமுறையில் பெரிய மாற்றம்  வந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள் நேரடியாக காண்ட்ராக்டர்கள் மூலம் வேலைகளைச் செய்துள்ளனர். இங்குதான் முறைகேடு தொடங்கியிருக்கிறது.
இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘கோயில்களுக்கு தங்க முலாம் பூசும்  வேலைகளில் முறைகேடு நடந்துள்ளது.பொதுவாக கோபுர வேலைகளுக்கு கோபுரத்தின் அடிப்பாகத்தை  அளந்து விட்டு, அதன் மேல் நுனியில் இருந்து பக்கவாட்டில் சரித்து அளப்பதுதான் வழக்கம். கூடவே  இடைவெளிகள், சிலைகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு தனியாகப் பணம் கொடுக்கப்படும்.
ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் வரும் காண்ட்ராக்டர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தையும்  பக்கவாட்டையும் அப்படியே அளந்து மதிப்பிடுகிறார்கள். அதாவது, கோபுரம் கீழிருந்து மேல்வரை  பக்கவாட்டில் ஒரே அளவில் (செவ்வக வடிவில்) இருப்பதாகக் காண்பித்து அதற்கும் தங்கம் வாங்கிக்  கொள்கிறார்கள். சிலைகள், இடைவெளிகள் ஆகியவற்றிற்கான தங்கத்தை தனியாக வாங்கிக் கொள்கிறார்கள்.

1000 சதுர அடியில் வேலை செய்வதற்கு, 1500 சதுர அடி என கணக்கிடுவார்கள். இதனால் பத்து கிலோ  தங்கத்தில் முடிய வேண்டிய வேலைக்கு 15 கிலோ தங்கத்தை வாங்கிக் கொள்கிறார்கள். . இதற்காக பெரு மளவில் லஞ்சம் கொடுக்கப்படுகிறது.  கூடுதலாக வாங்கப்படும் ஒவ்வொரு கிலோ தங்கத்துக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் கொடுப்பார்களாம். இந் தப் பணம் முந்தைய ஆட்சியில் அமைச்சர்கள் வரையில் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இதையெல்லாம் விட இன்னொரு விஷயமும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எந்தக் கோயிலாக  இருந்தாலும் தங்கத் தேர் ஒரு குறிப்பிட்ட உயரம்தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் உயரமோ, எடையோ அதிகமாகாத நிலையில் தங்கத்தின் அளவு மட்டும் உயர்த்திக் கொடுக்கப்ப ட்டுள்ளது. அதாவது,தங்கத் தேர் செய்ய இதுவரையில் 9 கிலோ தங்கம் கொடுக்கப்பட்டு வந்தது. அது  கடந்த மூன்று ஆண்டுகளாக 12 கிலோவாக உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஏன் என்பது பற்றி  இப்போது விசாரணை நடந்து வருகிறது’’ என்று சொல்லி அதிர்ச்சி அளித்தார்.
பூம்புகார் அதிகாரிகளிடம் பேசியபோது,‘‘கோயில் வேலைகள் எங்கள் மூலமாக காண்ட்ராக்ட் கொடுக்கப்ப ட்ட போது நேர்மையாகத்தான் நடந்தது. கோபுரங்கள், சிலைகளுக்கு தங்கம் பூசும்போது ஒன்பது லேயர்கள்  பூசவேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இப்போது இரண்டு அல்லது மூன்று லேயர்கள்தான் பூசப்படு கிறது. இதன் மூலம் மிச்சமாகும் தங்கத்தை காண்ட்ராக்டர்கள் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். கடந்த மூன் றாண்டுகளில் இது போல சுமார் 200 கிலோ தங்கம் வரையில் சுரண்டப்பட்டிருக்கலாம் என்று தெரிய  வந்துள்ளது’’ என்றார்.
‘எப்படி இந்த தங்கத்தை எடுத்துச் செல்கிறார்கள்?’ என்று கேட்டபோது, அவர் சொன்னது அத்தனையும்  அதிர்ச்சி ரகம்.
‘‘கோயில்களில் பயன்படுத்துவது அனைத்தும் 24 காரட் தங்கம். தங்கக் கட்டிகளை வாங்கிய பின்னர் சின் னச் சின்ன தகடுகளாக ஆக்குவார்கள். குறிப்பிட்ட வடிவத்தில் செப்புத் தகடுகளுடன் அவற்றைச்  சேர்ப்பார்கள். இதற்காக பாதரசத்துடன் சேர்த்து செப்புத் தகடையும், தங்கத் தகடையும் அடிப்பார்கள். பி ன்னர் அதை தீயில் வைத்து பாதரசத்தைப் பிரிப்பார்கள். இதற்கு ‘ரசப்புட்டு’ என்று பெயர். இதில் பாதரச த்தோடு தங்கமும் சேர்ந்து இருக்கும்.அதை தனியாக எடுத்துச் சென்று தங்கத்தைப் பிரித்து எடுத்துக்  கொள்வார்கள். இப்படி தங்கம் பூசுவதற்கு முன் ஒவ்வொரு நிலையிலும் காண்ட்ராக்டர்கள் லாபம் பார்த்து  விடுகிறார்கள்.
இதே போல தங்கக் கட்டிகளை தகடுகளாக்கும் போது சின்னச் சின்ன துண்டுகளாக தங்கம் கீழே விழும். அதை நகக்கண்களில் வைத்து எடுத்துக் கொள்வார்கள். இப்படி பல வழிகளில் காண்ட்ராக்டர்கள் தங்கத் தைச் சுரண்டியிருக்கிறார்கள்’’ என்றார்.
இந்த வேலைகள் அனைத்துமே வெளிப்படையாக நடக்குமாம். ஆனால் இது குறித்த போதிய அறிவு  அதிகாரிகளுக்கு இல்லாததால், அவர்கள் கண்முன்பே இது நடந்துள்ளது. அதே போல அளவு எடுப்பது,  எஸ்டிமேட் போடுவது என்ற பணிக்காக கோயில்களில் தனியாக சிலரை நியமித்துள்ளார்கள்.அவர்களும் காண்ட்ராக்டர்களுக்கு துணை போயிருக்கிறார்கள்.
‘‘சமீபத்தில் ஒரு கோயிலில் 90 கிலோ தங்கத்தில்  விமானம் செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள்.  கோயில் அதிகாரி கண்டிப்பாக இருந்து, காண்ட்ராக்டரின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துள்ளார்.தங்க  விமானம் செய்து முடித்த போது 62 கிலோ தங்கம்தான் செலவாகி யிருந்ததாம். இப்படித்தானே மற்ற  கோயில்களிலும் தங்கம் கொள்ளை போயிருக்கும்.
அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் கோயில்களில் நடந்த இந்த முறைகேடுகள் வெளியே வரத்  தொடங்கி இருக்கிறது. திருச்சி அருகிலுள்ள அம்மன் கோயிலில் ஆறு கிலோ தங்கத்தில் தங்கத்தேர்  செய்ய ஒரு செயல் அலுவலர் எஸ்டிமேட் தயாரித்துள்ளார். அவர் மாறியதும், புதிதாக வந்த இன்னொரு  அதிகாரி தங்கத்தேர் செய்வதற்கு 11 கிலோ தங்கம் தேவைப்படும் என்று எஸ்டிமேட்டையே மாற்றியி ருக்கிறார். இதையெல்லாம் தீவிரமாக விசாரித்தால் இன்னும், பல அதிர்ச்சிகள் வெளியே வரும்’’ என் கிறார்கள் கோயில் ஊழியர்கள்.
இந்த விவரங்களை கொஞ்சம் தோண்டியபோதுதான் தமிழகம் முழுவதும் கோயில்களில் இதுபோல் பெரு மளவு பணம் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாம்.
இதுதொடர்பாகப் பேசிய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர்,‘‘கடந்த ஆட்சியில் நடந்த கோயில்  புனரமைப்புப் பணிகள் அனைத்தையும் விசாரணை செய்வார்கள் எனத் தெரிகிறது. வேலைகள் நடந்துள்ள  கோயில்களில் வாங்கிய செப்புத்தகடுகளையும்,பயன்படுத்திய செப்புத்தகடுகளையும் கணக்கெடுத்து வரு கிறார்கள்.இந்த செப்புத் தகடுகளுக்கு எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்பதை தோராயமாக கணக்கிட் டுப் பார்த்தபோது 200 கிலோவுக்கு மேல் தங்கம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இ ன்றைக்கு ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ. 22 லட்சம். அப்படியானால் எத்தனை கோடி ரூபாய்க்கு  ஊழல் நடந்திருக்கிறது என்பது தெரிந்து அதிர்ந்து போய்விட்டோம்’’ என்றார் ஆச்சரியம் விலகாமல்.
மேலும், ‘‘ஒரு கிராமுக்கு 7ரூபாய் என்கிற அளவில் காண்ட்ராக்டர்களுக்கு அறநிலையத்துறை பணம் த ருகிறது. ஆனால் வெளியில் அவர்கள் 14 முதல் 15 ரூபாய் வரை வாங்குகிறார்கள்.பெருமளவு லாபம்  இல்லையெனில் இப்படி குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொள்வார்களா?’’ என்றும் கேள்வி எழுப்புகிறார்.
கோபுரம், கலசம் ஆகியவற்றிற்கு தங்க முலாம் பூசுவது, தங்க விக்கிரகங்கள் செய்வது, தங்கத்தேர் செய்வது  ஆகிய பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் இந்த தங்கம் முழுவதும் பக்தர்களுடையது. உண்டியல் பணம்  தவிர, பக்தர்கள் காணிக்கையாகத் தரும் நகைகளை உருக்கித்தான் இந்த வேலைகள் செய்யப்படுகிறது. இதிலும் ஊழல் நடந்துள்ளது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது குறித்து பக்தை ஒருவரிடம் கேட்டபோது, ‘‘என் கணவரது உடல்நலம் சரியானால், தாலியை  காணிக்கையாகத் தருவதாக வேண்டியிருந்தேன். அதன்படி தாலியை உண்டியலில் போட்டேன். என் னைப்போல் பலரும் தாலி, மோதிரம், குழந்தைகளின் நகைகள் என வேண்டுதலுக்காக கோயிலுக்குச் செலுத்துகிறார்கள்.அந்த நகை சாமி காரியத்துக்கு செலவாகிறது என நினைத்தோம்.அதையும் விட்டு வைக்காமல் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால் எங்கே சென்று முறையிடுவது? அப்படிப்பட்டவர்களை  கடவுளே தண்டிப்பார்’’ என்றார் வேதனையுடன்.
இந்த ஊழல் தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது குற்றச்சாட்டு எழுந்து ள்ளது. அவர்களுக்கு இதுவரையில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஒரு அதிகாரியைப் பற்றி  விசாரித்த போது,மூன்று கோடி வரையில் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளதாம். விசாரணை  தீவிரமாகும் போது, யாரெல்லாம் மாட்டிக் கொள்ளப் போகிறோமோ என பயத்தில் உறைந்து போயுள்ளனர்  அறநிலையத்துறை அதிகாரிகள்.

தமிழகத்தில் 2000 ஆயிரம் கோடி கருப்புபணம்

இன்றைய செய்தி தாளைத் திறந்தவுடனே 2ஜிக்கும் இணையான ஊழல் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை ஒன்றினைப் பார்த்தேன். கருப்புப் பண முதலைகள் யார் என்று அரசுக்குத் தெரிந்து அவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்பது மக்களை ஏமாற்றும் அரசியல் அல்லவா என்று நினைத்தேன். இதோ அந்தச் செய்தியும் அதன் தொடர்பான சில கருத்துக்களும்.
தமிழத்தில் மொத்தம் 11 மெடிக்கல் காலேஜ்கள் இருக்கின்றன. அதில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சீட் ஒன்றிற்கு 35 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை வசூல் செய்கிறார்கள். ஒவ்வொரு காலேஜ்ஜிலும் 35 லிருந்து 53 சீட்டுக்கள் இருக்கின்றன என்றால் மொத்தம் இந்த 11 கல்லூரிகளும் வசூலிப்பது 210 கோடி கருப்புப் பணம். இது அத்தனையும் அன்னக்கவுண்டட் மணி.
7 டீம்டு பல்கலைகழங்கள் அரசுக்கு எந்த வித சீட்டுகளும் ஒதுக்க வேண்டியதில்லை. ஆக இவர்கள் அடிக்கும் கொள்ளைப் பணம் 280 கோடி. இதுவும் கருப்புப் பணம்.
மெடிக்கல் கல்லூரிகள் வருடம் தோறும் மொத்தமாய் மக்களிடமிருந்து உருவும் பணம் ரூபாய் 500 கோடி என்று வைத்துக் கொண்டால் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறோம் பேர்வழி என்று கிளம்பியிருக்கும் தனியார் டிரஸ்ட் மொதலாளிகளின் கருப்புப் பணத்தின் அளவினை எண்ணிப் பாருங்கள். இது ஸ்பெக்ட்ரம் பணத்தினை விட அதிகமல்லவா????
அடுத்து, இஞ்னியரிங் கல்லூரிக் கணக்கு.
தமிழகத்தில் அரசு அனுமதி பெற்ற கல்லூரிகள் 494. இக்கல்லூரிகளில் 100 கல்லூரிக்கும் மேலே உயர்ந்த தரம் கொண்டவையாக ஆக்கப்பட்டிருக்கின்றன. அரசு கோட்டா தவிர மீதமுள்ள மேனேஜ்மென்ட் கோட்டாவிற்கு ஆவரேஜாக 10 லட்சம் வைத்தால் மொத்தமாக 1500 – 2000 கோடி ரூபாயை மேற்படிக் கல்லூரிகள் கருப்புப் பணமாக வசூலிக்கின்றன.
இவ்வளவு பணமும் மொத்தமாய் 500 பேருக்கு மட்டுமே பங்கிடப்படுகின்றன என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏழைகளிடம் இருக்கும் பணம் கல்வி என்ற பெயரில் கொள்ளை அடிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் வருடத்திற்கு 2000 கோடி ரூபாய்க்கும் மேல் கல்வி நிறுவனங்கள் கருப்புப் பணமாகப் பெறுகின்றன என்று வைத்துக் கொண்டால், இந்தியாவெங்கும் கணக்கெடுத்தால் தலையைச் சுற்றும் அல்லவா?
கல்லூரிகளில் மட்டும் இத்தனை கருப்புப் பணம் என்றால் ஆரம்ப கல்வி நிலையங்களில் எத்தனை கருப்புப் பணம் சேரும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.  தனியார் கலைக்கல்லூரிக் கணக்குகள் என்பது வேறு. ஆசிரியர் கல்வி, பட்டயப்படிப்புகள் கல்விக் கணக்குகள் வேறு தனியாக இருக்கின்றன.
இவ்வளவு கருப்புப் பணம் விளையாடுவது அமலாக்கத்துறைக்கு தெரியாது என்றா நினைக்கின்றீர்கள்??? இல்லை சிபிஐக்குத்தான் தெரியாதா? இல்லை நீதிமன்றங்களுக்குத்தான் தெரியாதா? அரசுக்கு தெரியாதா? அனைவருக்கும் நன்றாகத் தெரியும் இந்த பிசினசை ஏன் இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை? காரணம் அரசுகளும், அரசு அமைப்புகளும் மக்களை ஏமாற்றுகின்றன.
அன்னா ஹசாராவிற்கு இது தெரியாதா? ஏன் அன்னா ஹசாரே இந்தியாவிலிருக்கும் தனியார் பள்ளி நிறுவனங்களை அரசுடைமையாக்கப் போராடவில்லை. இங்கிருந்துதானே கருப்புப் பணம் சேர ஆரம்பிக்கின்றது? இந்தியாவில் கருப்புப் பணமுதலைகள் என்போர் தனியார் கல்வி நிறுவன அதிபர்களே. இவர்களிடமிருந்து கல்வி பிடுங்கப்பட்டால் அதுவே கருப்புப் பணத்திற்கான போராட்டத்தின் முதல் ஆரம்பமாய் இருக்கும்.
ஆனால் யார் செய்வார்கள்????
தனியார் பிராந்திக்கடை நடத்திக் கொள்ளை அடிக்கின்றார்கள் என்பதற்காக, அரசே மதுக்கடைகளை நடத்தச் செய்த அம்மா, தனியார் கல்விக் கூடங்களையும் அரசுடமையாக்குவாரா? கேபிள் டிவியை அரசுடைமையாக்கினால், அது போல கல்வித் துறையையும் அரசுடைமையாக்கினால் என்ன?? யாராவது வழக்குப் போடுவார்களா? யார் செய்வார்கள் இந்த நற்காரியத்தை?????
மக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது ! கருப்புப் பண ஒழிப்புப் போராட்டம், ஊழல் ஒழிப்பு போராட்டத்துடன், தனியார் கல்வி ஒழிப்புப் போராட்டமும் ஆரம்பிக்கப் பட வேண்டிய சரியான தருணம் இது
இந்திய அரசு மட்டுமல்லாமல் மா நில அரசுகளும் கல்வியில் தனியாரை உடனடியாக நீக்கி, அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களும் அரசுடமையாக்கப்படல் வேண்டும். அதை விடுத்து, ஊழல், கருப்புப் பணம் என்பதெல்லாம் வெற்றுக் கூச்சலாய் முடியும்.

சத்தான கல்வி கொடுக்க அரசு போராடுகிறது

:""மாணவர்களுக்கு, தரமான கல்வி கொடுக்கத்தான் இன்றைய அரசு போராடுகிறது. எனவே, கருணாநிதியின் போராட்ட சூழ்ச்சியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.
கட்சி, "டிவி' மூலம் பொதுமக்களின் இ-மெயில் கேள்விகளுக்கு நேற்று அளித்த பேட்டி:


* லோக்பால் வரம்பிற்குள் பிரதமரை சேர்க்காதது குறித்து உங்கள் கருத்து?
"2ஜி' ஒதுக்கீடுகள் பிரதமருக்கு தெரிந்தே நடந்தது என ராஜாவும், அவரது உதவியாளர் பெகுராவும் கூறுகின்றனர். அப்படியென்றால், இது குறித்து பிரதமரை அழைத்தும் விசாரிக்க வேண்டும். லோக்பால்
வரம்பிற்குள் பிரதமர், நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள் வரவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அவர்களை மட்டும் லோக்பால் வரம்பிற்குள் ஏன் கொண்டுவரவில்லை என்பது எனக்கு புரியவில்லை.
* லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ., வரவேண்டும் என அன்னா ஹசாரே கூறியுள்ளது பற்றி?
பிரதமரின் கட்டுப்பாட்டில் தான் சி.பி.ஐ., உள்ளது. ஊழல் செய்தவர்களை பிடிக்காமல், ஆளுங்கட்சிக்கு துணையாக எதிர்க்கட்சிகளை பயமுறுத்தும் நடவடிக்கையை தான் சி.பி.ஐ., செய்கிறது. முன்பு காங்கிரசை ஆதரித்த மாயாவதி, முலாயம்சிங் ஆகியோர் இதற்கு உதாரணம்.

கோதுமை பேர ஊழல், பூச்சிக்கொல்லி மருந்து ஊழலில் இருந்து தப்பிக்க இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கருணாநிதி கூட்டு சேர்ந்தார். அதோடு இந்த ஊழல் குற்றச்சாட்டு முடிந்துவிட்டது. "2ஜி' விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தோண்டியதால் தான் சி.பி.ஐ., இவ்வழக்கில் முறையாக நடந்து கொள்கிறது. எனவே, லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ.,யை கொண்டு வர வேண்டியது அவசியம்.

* ராஜா, பெகுரா ஆகியோர், சிதம்பரத்தை பற்றி கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் என்கிறாரே கபில் சிபல்?
ராஜா உண்மை பேசுகிறாரா அல்லது பொய் பேசுகிறாரா என தெரியவில்லை. எனவே, கோர்ட்டிற்கு சென்று ராஜா சொல்வது பொய் என்பதை சிதம்பரம் தான் நிரூபிக்க வேண்டும்.

* தி.மு.க., பொதுக்குழுவிற்கு பின் பிரதமர் மற்றும் சிதம்பரம் மீது ராஜா குற்றம்சாட்டியுள்ளதில் உள்நோக்கம் உள்ளதா?
காங்கிரசுடன் நட்பாக இருக்கிறோம் என, பொதுக்குழுவில் கருணாநிதி கூறியுள்ளார். கொஞ்சம் நாட்களுக்கு முன், இதே வாயால், "கூடா நட்பு கேடாய் முடியும்' என்றார். "தனி ஒருவனால் இந்த ஊழலை செய்யமுடியாது' என்று கூறி, முன்பு, காங்கிரசை பயமுறுத்தினார்.
"காங்கிரஸ் சொன்னால் மட்டுமே கூட்டணியை விட்டு வெளியே போவோம்' என்கிறார். இப்போது தி.மு.க., பொதுக்குழுவிற்கு பிறகு கோர்ட்டில் ராஜா காட்டிக்கொடுக்கிறார் என்றால், இதில் உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது.

* சமச்சீர் கல்வியை தி.மு.க., அரசியலாக்க பார்ப்பது குறித்து உங்கள் கருத்து?
பொதுப்பாடத்திட்டத்தைதான் இவர்கள் சமச்சீர் கல்வி என்கின்றனர். சென்னையை தாண்டி வெளியே சென்றால், அரசு பள்ளிகள் மரத்தடியில்தான் இயங்குகின்றன. ஐந்து முறை முதல்வர் என கூறிக்கொண்ட கருணாநிதி இந்த குறைகளை சரிசெய்யாமல் இப்போது குதிக்கிறார். கவிஞர் கனிமொழியின் கவிதை ஆராய்ச்சி என்ற பாடத்தை வைத்துள்ளனர். அவர் இன்று திகார் ஜெயிலில் ஆராய்ச்சி செய்துக்கொண்டுள்ளார். அந்தளவிற்கு சத்தான உணவு போல் சத்தான கல்வி இல்லை. மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்கத்தான் இன்றைய அரசு போராடுகிறது. கூட்டணி கட்சி என்பதற்காக இதை சொல்லவில்லை; உண்மையைதான் பேசுகிறேன்.

* சமச்சீர் கல்வி தொடர்பாக, கருணாநிதி அறிவித்துள்ள அறப்போராட்டம் பற்றி?
மாணவர்களை படிக்க சொல்லாமல் போராட்டம் நடத்த சொல்கிறார். நில அபகரிப்பு, ஊழல் வழக்கு என, தி.மு.க., தொண்டர்கள் ஓடி ஒளிந்துக் கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் மாணவர்களையும், ஆசிரியர்களையும் இழுக்கிறார். தமிழின தலைவர் எனக் கூறி இலங்கை தமிழர்களை அழித்ததுபோல் மாணவர்களையும், ஆசிரியர்களையும் அழிக்க பார்க்கிறார். அவரது சூழ்ச்சியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

* உளவுத்துறை முன்னாள் ஏ.டி.ஜி.பி., ஜாபர்சேட் வீடுகளில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியுள்ளதே?
போலீஸ் உங்கள் நண்பன் என்பார்கள். ஆனால், இந்த போலீஸ் அதிகாரி, கருணாநிதியை தவிர மற்ற எல்லாருக்கும் எதிரியாகவே இருந்துள்ளார். அவசர தேவைக்கு பேசும் மொபைல்போன் பேச்சை ஒட்டுகேட்கும் கேவலமான தொழில் செய்துள்ளார். அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டியவர்கள் இப்படி இருக்கும் வரை நாடு உருப்படாது.

* தி.மு.க., தோற்றதற்கு நானே காரணம் என்கிறாரே கருணாநிதி?
அவர் தான் காரணம் என்றால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். இளைஞர்களுக்கு வழிவிட்டு பதவியில் இருந்து விலக வேண்டும். தமிழகத்தில் வெறுப்பு அரசியல் நடப்பதாக கூறுகிறார். மக்கள் வெறுத்துபோய்தான் இவரை வேண்டாம் என வெறுத்துவிட்டனர்.
தன் மகள் சிறையில் இருந்து வெளியில் வந்தால், அமைச்சர் பதவி வாங்கி கொடுப்பதற்காகவே, இரண்டு அமைச்சர் பதவியை வேண்டாம் என கருணாநிதி கூறியுள்ளார். இவரை பொறுத்தவரை, குடும்பம்தான் கழகம் என்பது தெளிவாகிவிட்டது.
இவ்வாறு விஜயகாந்த் பேட்டியளித்தார்.

அழகிரி - வீரபாண்டி சந்திப்பு:

* சைரன், தேசியக்கொடி பொருத்தப்பட்ட காரில் சென்று கைதிகளை மத்திய அமைச்சர் அழகிரி சந்தித்துள்ளாரே?
இதேபோல முன்பு வீரபாண்டி ஆறுமுகம் செய்தார். இப்போது அழகிரி, பாளையங்கோட்டை சிறைக்கு சென்று நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கூறுகிறார். அயோக்கியத்தனம், அட்டூழியம், நில அபகரிப்பு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை நண்பர் என அழகிரி கூறுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து எதிர்க்கட்சியினர், பார்லிமென்டில் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஸ்டாலினுடன் வாரிசு சண்டை நடப்பதால், தனக்கு ஆதரவாக ஆட்களை திரட்டவே வீரபாண்டி ஆறுமுகத்தை அழகிரி சந்தித்துள்ளார்.

* கடந்த, 2006ம் ஆண்டுக்கு முன் நடந்த நில அபகரிப்பு குறித்தும் விசாரிக்க வேண்டும் என கருணாநிதி சொல்கிறாரே?
நில அபகரிப்பு நடந்ததென்றால் ஐந்தாண்டாக முதல்வராக இருந்தபோது ஏன் கருணாநிதி வழக்கு போடவில்லை. அப்படியென்றால் அவர் செயல்படாத முதல்வராக இருந்தாரா? தான் யோக்கியன் என்பதை சொல்வதற்காகவே அ.தி.மு.க.,வினர் மீது அவர் புகார் கூறுகிறார்

லோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா?

வாங்க...வாங்க... அப்ப அவசியம் நீங்க தெரிந்து கொள்ள வேண்டியது.


லோன் தவணை(Due) முடிந்தவுடன் நீங்கள் கடமை முடிந்தது என்று இருந்து விடாதீர்கள். உங்கள் வண்டி ரெஜிஸ்டரசென் செர்டிபிகட் மற்றும் இன்சூரன்ஸ் பேப்பரில் ஹைபோதிகேசன் (Hyphothecation) நீக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் உங்கள் வண்டிக்கு முழு உரிமையாளர் ஆக முடியும். மறவாமல் இன்சூரன்ஸ் பேப்பரிலும் இந்த ஹைபோதிகேசன்’ஐ நீக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வண்டிக்கு ஏதேனும் இன்சூரன்ஸ் பெற வேண்டிய சூழ்நிலை வந்தால் பணம் உங்கள் பெயருக்கு வரும், இல்லை எனில் நீங்கள் லோன் பெற்ற வங்கிக்கு பணம் சென்று விடும்.

சரி இப்போது இதை எப்படி செய்ய வேண்டும் என பார்ப்போம்.

1) நீங்கள் கடனை முழுவதுமாக செலுத்தி 15 நாட்களுக்குள் உங்கள் வங்கியிலிருந்து NOC (No Objection Certificate) மற்றும் FORM-35 இந்த இரண்டும் தலா இரண்டு காப்பிகள் உங்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி  அனுப்பி வைப்பார்கள். அப்படி அனுப்பாவிட்டால் உடனடியாக தொடர்பு கொண்டு இந்த இரண்டையும் கேட்டு வாங்கி கொள்ளுங்கள்.

2) உங்கள் வண்டிக்கு புகை கட்டுபாடு அலுவலகத்தில் ஒரு செர்டிபிகட் வாங்கி கொள்ளுங்கள். இது உங்கள் வண்டி, அரசு நிர்ணயித்துள்ள அளவின் படியே புகையை சுற்று சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாதவாறு வெளிவிடுகிறது என்பதை உறுதி செய்யும்.

3) மாசு கட்டுப்பாடு செர்டிபிகட், இரண்டு FORM-35 மற்றும் ஒரு NOC காப்பியை, உங்கள் ஒரிஜினல் ரெஜிஸ்டரசென் செர்டிபிகட்’யும் எடுத்துக்கொண்டு RTO அலுவலகம் சென்று ஹைபோதிகேசன்’ஐ நீக்க வேண்டியதற்கு உண்டான தொகையை செலுத்திவிட்டு அந்த அலுவலகத்திலேயே கொடுத்து விடுங்கள்.

4) உங்கள் ஒரிஜினல் ரெஜிஸ்டரசென் செர்டிபிகட்’ல் ஹைபோதிகேசன்’ஐ நீக்கி சான்றளித்து, ஒரிஜினல் மாசு கட்டுப்பாடு செர்டிபிகட், இந்த இரண்டையும் உங்களிடம் கொடுத்து விடுவார்கள்.
இப்போது உங்கள் வண்டி ரெஜிஸ்டரசென் செர்டிபிகட்’ல் ஹைபோதிகேசன்’ஐ நீக்கம் செய்தாயிற்று. இப்போதுதான் நீங்கள் உங்கள் வண்டிக்கு முழு உரிமையாளர். 

சரி இப்போது உங்கள் வண்டியின் இன்சூரன்ஸ் செர்டிபிகட்’ல் எப்படி  ஹைபோதிகேசன்’ஐ நீக்க வேண்டும் என்று பார்ப்போம்.


1) உங்கள் வண்டியின் ஹைபோதிகேசன் நீக்கப்பெற்ற ரெஜிஸ்டரசென் செர்டிபிகட் செராக்ஸ் பேப்பர், ஒரு NOC copy இவற்றோடு ஒரு விண்ணப்பத்தை எழுதி இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு அனுப்பவும்.

2) இன்சூரன்ஸ் அலுவலத்தில் இருந்து ஹைபோதிகேசன் நீக்கப்பெற்ற புதிய இன்சூரன்ஸ் பாலிசி அனுப்பி வைப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
இப்போதுதான் உங்கள் வேலை முழுமை அடைந்ததாக அர்த்தமாகும்.

குறிப்பு: NOC யின் ஆயுட்காலம் மூன்று மாதங்கள்தான். அதற்குள் இந்த வேலைகளை நீங்கள் முடித்து விடவேண்டும். இல்லையெனில் கட்டணம் செலுத்தி வங்கியிலிருந்து மீண்டும் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும்.

எனவே லோன் தவணை (Due) முடிந்தவுடன் உங்கள் வண்டி ரெஜிஸ்டரசென் செர்டிபிகட் மற்றும் இன்சூரன்ஸ் பாலிசியில் ஹைபோதிகேசன் (Hyphothecation) நீக்கம் செய்துகொண்டு தேவை இல்லாத டென்ஷனை தவிர்த்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்!

Saturday, July 30, 2011

சென்னையில் சமச்சீர் கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு தனியார் பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழகம், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்கம் ஆகியவை சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை சைதாப் பேட்டை பனகல் மாளிகை அருகே மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
 சென்னையில் சமச்சீர் கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்பு
மோகன்ராஜ், நீலன் அரசு, உதயகுமார், வேலம்மாள் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். சமச்சீர் கல்வியை தமிழக அரசு அமல்படுத்தாமல் இருப்பது சரியான நடவடிக்கை. தரமான கல்வியை தரவேண்டும் என்பதற்காக பழைய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சி வரவேற்கத்தக்கது.
 
இவற்றை வரவேற்றும் தி.மு.க. மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தியதை கண்டித்தும், நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை ரத்து செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஆதரவாக கோஷங்களும் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள்- ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:-
 
தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக முதல்- அமைச்சர் ஜெயலலிதா, எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழக மாணவர்கள் தேசிய அளவில் போட்டிகளை சமாளிக்க கல்வி தரத்தை உயர்த்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டியது இல்லை. நிர்ணயிக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி கல்வி கட்டணம் ஏற்க கூடியது அல்ல. முத்தரப்பு குழு அமைத்து கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் இணைப்பு பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்; அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்

சட்டசபை தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்- அமைச்சர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு
பிரதமர் பதில் அளிக்க வேண்டும்; அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்


கோவையில் ரூ.12 கோடி பேப்பர் மில் அபகரிப்பு வழக்கு; தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கைது

கோவை, சித்ரா காளப்பட்டி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் கிங்ஸ்லி(வயது 42). இவருடைய மனைவி ஜெமிலா கிங்ஸ்லி. இவர்களுக்கு சொந்தமான ஜியான் பேப்பர் மில் நிறுவனம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள காடுவெட்டிபாளையத்தில் இருந்தது.
 
கோவையில் ரூ.12 கோடி பேப்பர் மில் அபகரிப்பு வழக்கு; தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கைது
 
இந்த பேப்பர் மில்லை கிங்ஸ்லி விற்பனை செய்ய முடிவு செய்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த புரோக்கர் சுப்புரத்தினம் மூலம், உடுமலையைச் சேர்ந்த கோகுல்தாஸ் மகன் சீனிவாசன் (39), அந்த பேப்பர் மில்லை வாங்கி ஓட்டி வந்தார்.
 
பேப்பர் மில் லாபகரமாக ஓடிய நிலையில், சீனிவாசனிடம் இருந்து அந்த மில்லை திரும்ப வாங்க கிங்ஸ்லி நினைத்தார். இந்த நிலையில், சென்னை தென்மாவட்ட தி.மு.க. செயலாளர் அன்பழகன், சீனிவாசனை தனது அலுவலகத்துக்கு அழைத்து மிரட்டி, போலி ஆவணங்கள் தயாரித்து அவரிடம் இருந்த ஜியான் பேப்பர் மில் நிறுவனத்தை மீண்டும் கிங்ஸ்லி பெயரில் மாற்றி எழுதி வாங்கிக்கொண்டதாக தெரிகிறது.
 
 பேப்பர் மில்லை பறி கொடுத்த சீனிவாசன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:- கடந்த 2008-ம் ஆண்டு ஜியான் பேப்பர் மில் நிறுவனத்தை வாங்க முடிவு செய்தேன். கடந்த 1-5-2008-ம் ஆண்டு கிங்ஸ்லி, அவருடைய மனைவி ஜெமீலா கிங்ஸ்லி ஆகியோரிடம் ரூ.12 கோடியே 10 லட்சத்துக்கு விலை பேசி அதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது.
 
 பேப்பர் மில் வாங்குவதற்காக ரூ.2 கோடி பணம் கிங்ஸ்லியிடம் கொடுத்தேன். பேப்பர் மில்லின் ஆவணங்கள் அனைத்தையும் எனது பெயருக்கு மாற்றி கொடுத்தனர். அதன்பிறகு ரூ.5 கோடி செலவில் நவீன எந்திரங்களை அமைத்து ஜியான் பேப்பர் மில்லை தரம் உயர்த்தினேன். நாள் ஒன்றுக்கு 40 டன் பேப்பர் தயாரிக்கும் அளவுக்கு பேப்பர் மில் சிறப்பாக செயல்பட்டது.
 
 கிங்ஸ்லியிடம் பேசியது போல் பேப்பர் மில்லுக்கான தொகையை தொடர்ந்து செலுத்தினேன். இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு ஜுலை மாதம் கிங்ஸ்லி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் உதவியாளர் அய்யப்பன், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் அன்பழகன் ஆகியோர் எனது ஜியான் பேப்பர் மில் நிறுவனத்தை என்னிடம் இருந்து அபகரிக்கும் வகையில் எனக்கும் எனது குடும்பத்துக்கும் மிரட்டல் விடுத்தனர்.
 
  கடந்த 29-7-2009 அன்று சென்னை தி.நகரில் உள்ள அன்பழகன் அலுவலகத்துக்கு என்னை அழைத்தனர். நான் அங்கு சென்றேன். அங்கு அன்பழகன் முன்னிலையில் அய்யப்பன், கிங்ஸ்லி, சுப்புரத்தினம் ஆகியோர் என்னை மிரட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்து ஜியான் பேப்பர் மில் நிறுவனத்தை கிங்ஸ்லியின் பெயருக்கு எழுதி வாங்கினார்கள். அதற்கான பணத்தையும் திருப்பி கொடுக்காமல் என்னை மிரட்டினார்கள். இதற்கு ஹன்ஸ்ராஜ் சக்சேனாவும் உடந்தையாக இருந்தார்.
 
 கிங்ஸ்லி, அவருடைய மனைவி ஜெமிலா கிங்ஸ்லி, கிங்ஸ்லியின் சகோதரர் ரவி சாம்ராஜ், அவருடைய மனைவி மார்ஜினோ சாம்ராஜ், அய்யப்பன், புரோக்கர் சுப்புரத்தினம், சன் பிக்சர்ஸ் முதன்மை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் அன்பழகன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்து இருந்தார்.  
 
 புகாரை பெற்ற திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், இந்த வழக்கு தொடர்பாக கிங்ஸ்லி, அவருடைய மனைவி ஜெமிலா கிங்ஸ்லி, கிங்ஸ்லியின் சகோதரர் ரவி சாம்ராஜ், அவருடைய மனைவி மார்ஜினா சாம்ராஜ், அய்யப்பன், சுப்புரத்தினம், ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அன்பழகன் ஆகிய 8 பேர் மீது பலவந்தமாக அடைத்து வைத்தல், ஆவணங்கள் மூலம் ஏமாற்றுதல், ஏமாற்றி மோசடி செய்தல், போலி ஆவணங்களை உண்மையான ஆவணங்கள் என்று மோசடி செய்தல், சொத்தை மிரட்டி பறித்தல், கொலைமிரட்டல், கூட்டு சதி செய்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்த நிலையில், தென்சென்னை தி.மு.க. மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான அன்பழகனை கைது செய்ய போலீசார் சென்னை வந்தனர். திருப்பூரில் இருந்தே 3 போலீஸ் வேனில் சுமார் 50 போலீசார் வந்திருந்தனர். இவர்களின் திடீர் வருகை சென்னை போலீசாருக்குக் கூட தெரியாது. அதிகாலை 4.45 மணிக்கு எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வீட்டிற்கு வந்த போலீசார், கதவை தட்டி அவரை எழுப்பினார்கள்.
 
கதவை திறந்த எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனிடம், வாரண்டுடன் வந்திருப்பதாகவும், தங்களை கைது செய்வதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதற்கு அவர், `மக்கள் பிரதிநிதியான என்னை காரணம் சொல்லாமல் கைது செய்ய முடியாது' என்று கூறினார். `நீங்கள் எதுவேண்டுமானாலும் போலீஸ் நிலையத்தில் வந்து சொல்லுங்கள்' என்று கூறி, போலீசார் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
 
இதேபோல் இந்த வழக்கின் முதல் குற்றவாளியான கிங்ஸ்லியை, கோவையில் அவரது வீட்டில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர்.   சென்னையில் கைது செய்யப்பட்ட அன்பழகன் எம்.எல்.ஏ.வை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று மதியம் 1.30 மணிக்கு அழைத்து வந்தனர். மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தி முடித்தவுடன் உடுமலைக்கு அழைத்து சென்றனர்.
 
உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கு மருத்துவபரிசோதனை நடந்தது. கோர்ட்டு விடுமுறை என்பதால், உடுமலை 1-வது மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு அவரை அழைத்து சென்றனர். மாலையில் மாஜிஸ்திரேட்டு தீபா முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு தீபா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ.வை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை கொண்டு சென்று மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
 
திருச்சி மதுரை சென்னை இப்படி எல்லா மாவட்டங்களிலும் வரும் புகார்கள் "மலைக்க" வைக்கின்றன!! இதில் எங்கே அம்மாவின் பழிவாங்கும் செயல் வருகின்றது? புகார் கொடுத்தவர்கள் பொதுமக்கள்..போலீசார் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது அவர்கள் "கடமை"..இதில் எங்கே போலீசார் குறுக்கீடு செய்கின்றனர். திமுக எல்லா மாவட்டங்களிலும் "வாஷவுட்" ஆக காரணம் என்ன? சிந்தியுங்கள்..!! பணம் பட்டுவாடா செய்தும்கூட இவர்களுக்கு மக்கள் வாக்களிக்க தயாராய் இல்லையே..! ஏன்? ஆடிய ஆட்டம் அப்படி..! கட்டபஞ்சாயத்தில் பிடுங்கிய சொத்துக்கள் ஏராளம்..!! ரௌடியிசம் தலைதூக்க காரணமே இந்த அமைச்சர்களின் கொட்டம்தான்.! அதன் விசுவாசம்தான் இன்றைக்கு பஸ் கண்ணாடி உடைப்பு போன்றவை. இப்படி செய்துவிட்டால் போலீசார் பயந்து குற்றவாளியை விட்டுவிடுவார்களா என்ன? இதற்க்கு முழு முதற்காரணம் இந்த மஞ்ச துண்டார்தான். கண்டிக்க மறுத்தார்..ஏன்? "கப்பம்" வீடுகள் தேடி வந்தது..! மனைவி இனைவிகளின் தலியீடு அதிகம் காணப்பட்டது. கப்பம் கட்டியவர்கள் ஆதரிக்கப்பட்டார்கள்..!! போலிசின் கைகள் கட்டப்பட்டது..பொதுமக்களின் புகார்கள் மீதான நடவடிக்கைக்கு பதிலாய் அவர்கள் "மிரட்டப்பட்டனர்"..! இது கொடுமைதானே..? ஏற்புடையதா? சொல்லுங்கள்..! மாண்பு மிகு புரட்சித் தலைவி அவர்களே தாங்கள் எடுக்கும் நடவடிக்கை நேர்மை உள்ள மனசாட்சி உள்ள அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது ஊழல் அரசியல்வியாதிகளிடம் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து அதை அரசுடமையாக்கினால் மிகவும் நன்றாக இருக்கும்.
 
திநகர் ரங்கநாதன் தெருவில் பிளாட்பாரத்தில் கரும்பு ஜூஸ் கடை வைத்திருந்த ஆள் இவரு! மெதுவாக சின்னக் கடையாக்கி, பிளாட்பாரத்தையும் விழுங்கி, கடையைப் பெரிசாக்கினாறு! பின்னர், நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வசூல் வாழ்க்கை! இப்போதோ..பல நூறு கோடிக்கு அதிபதி! புடிச்சு போலீஸ் கட்டு கட்டினால் திநகர் , ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோட்டில் எத்தனை கட்டிடங்கள் பினாமியா இவர் கைல இருக்குன்னு தெரியவரும்! இவருக்கு நெருங்கினவங்க கட்டப் பஞ்சாயத்து, வட்டி வியாபாரத்தில் கொடிகட்டிப் பர்ந்ததை ஊரே பேசுது!
 
 

திமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகளும் 'பை பை'!

பாமகவைத் தொடர்ந்து திமுக கூட்டணியை விட்டு விடுதலைச் சிறுத்தைகளும் விலக முடிவு செய்துள்ளது.

திமுக கூட்டணியை விட்டு விலகி பாமக தலைமையிலான புதிய அணியில் சேருவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், பாமக தலைவர் ராமதாஸ் அழைப்பு விடுத்தால், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, பாமக கூட்டணியில் சேர்வது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடமும் பேசியிருக்கிறேன்.

தற்போது என்னுடைய எண்ணத்தின்படி, பாமக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ராமதாசின் இந்த முடிவை வரவேற்கிறேன். ராமதாஸ் அழைப்பு விடுத்தால், எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து, பாமக அணியில் சேர்வது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...