Thursday, February 23, 2023

அப்பா ஏன் எப்போதும் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை...

 1. அம்மா 9 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25 வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் காதல் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் காதல் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.
4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது நினைத்திருக்கிறாரா? குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறும்போது, ​​தலைமுறை தலைமுறைகளாக, அப்பா எப்போதும் பின் தங்கியே இருக்கிறார்.
5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை. அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கு தங்க நிற இழை கொண்ட ஒரு சில வேட்டிகள் மட்டுமே இருக்கும். அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும்போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார்.
8. அம்மா கூறுகிறார், "நாம் இந்த மாதம் குழந்தைகளின் பள்ளி/ கல்லூரிக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வரும் விசேஷத்துக்கு எனக்காக சேலை எதுவும் வாங்க வேண்டாம்" என்கிறாள். குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த உணவை வீட்டிலும், வெளியிலும் அனுபவித்து உண்டு அப்பாவுக்கு என்று எதையும் வைப்பது இல்லை. அப்பா அன்று உணவுடன் ஊறுகாயைப் பொரியலாக எண்ணி சாப்பிடுகிறார். பிள்ளைகள் மீது அவர்களின் காதல் இரண்டுமே சமம்தான். ஆனால், அப்பா ஏன் பின் தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
9. பெற்றோர்களுக்கு வயதாகும் போது, ​​குழந்தைகள் சொல்கிறார்கள், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்வதில் அம்மா தங்கள் உடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று. ஆனால், அப்பாவோ பயனற்றவர் என்று குழந்தைகள் சொல்கிறார்கள்.
அப்பா ஏன் பின்தங்கியே இருக்கிறார்?
ஏனெனில், அவர்தான் குடும்பத்தின் #முதுகெலும்பாக இருக்கிறார். அவர் இருக்கும் காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது.
அநேகமாக, அவர் பின்தங்கியிருப்பதற்கு இதுவே காரணம்...
எப்போதும் பேசாத முகமூடி எப்பொழுதும் திரைக்குப் பின்னால் தனது வேலையில் மூழ்கியேதான் இருக்கும்.

நம்பி அருகே வைத்தவர்களால் வீழ்ந்தார்.

 ஜெயலலிதாவை ஆணாதிக்கம் கொண்டு நீங்கள் விமர்சிக்கலாம் ...ஜெயலலிதாவை ஒரு திரைப்பட நடிகையாக மருத்துவர் ராமதாஸ் போல நீங்கள் கேவலப்படுத்தலாம் ...ஜெயலலிதாவை விமர்சித்து சசியை நம்பியதற்காக நீங்கள் காரணம் சூட்டலாம்... ஆனால் ஒரு பெண் தனித்து வாழ்ந்து உச்சத்திலிருந்து மிகப்பெரிய மக்கள் ஆதரவு பெற்று தொடர்ந்து 50 ஆண்டுகள் சாதிக்க முடியும் என்பது கருத்தில் கொண்டு அந்த விமர்சனம் இருக்க வேண்டும் ..தந்தை சொத்துக்களை அழித்து விட்டு சென்று விட்டார் .தாயோ இரண்டாம் தாரமானார் ...இறைவன் கொடுத்த அழகு நடிக்க எத்தனைத்த அந்த முடிவு அதுதான் அவரை உச்சத்துக்கு கொண்டு வந்தது... ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் புறம் தள்ள முயற்சித்தார் அதை மீறி வர வேண்டி இருந்தது... எம்ஜிஆர் இறந்தவுடன் புரோக்கர் r m வீரப்பன் தடுத்தார் அதை மீறி வர வேண்டி இருந்தது ...கருணாநிதிக்கு எம்ஜிஆர்யே போட்டியாளராக எடுத்துக் கொள்ளும் எண்ணமில்லை அவர் ஜெயலலிதாவை அப்படித்தான் நினைத்தார் ஆனால் ஒரு கட்டத்தில் ஜெயலலிதா கருணாநிதி என்கின்ற நிலை வருவதற்கு காரணமாக இருந்தது ..அரசு 2006 வரை நிகர பட்ஜெட் கொடுக்கும் தமிழகமாக இருந்தது ...மின்சார பிரச்சனையை தீர்ப்பதற்காக மிகப்பெரிய கடனை உருவாக்க வேண்டிய அவசியம் ஜெயலலிதாவுக்கு வந்தது ...இன்றைக்கு அது ஆறரை லட்சம் கோடி நிதி பற்றாக்குறை என்கின்ற நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது... 50000 கோடி நஷ்டம் என்ற நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது ...ஜெயலலிதா இந்திரா காந்தியை நம்பினார் சோனியா காந்தி உடன் துணை நின்றார் ராஜீவ் காந்தி நட்பை கேட்டுப் பெற்றார் ....அனைவரும் அவரை கைவிட்டனர்.... வாழ்ந்து முடிந்த ஒருவரை விமர்சிப்பது என்பது மிக சுலபமான ஒரு விஷயம்... கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் spectator போல ..ஆனால் விளையாடுவதும் அடுத்தவனை வீழ்த்த வியூகம் அமைப்பதும் முடிவுகளை சரிவாக சொல்லுவதும் களத்தில் நடக்கும் ஒரு விஷயம் ....ஜெயலலிதா அரசியலில் ஈடுபட்ட பெண்களில் மிக தைரியமாக... எந்த ஒரு பின்பலமும் இல்லாமல் போட்டியிட்டு இறைவனடி சேர்ந்தவர்.... அவரை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை அவரை தூற்றுவதற்கு கொஞ்சம் தகுதி வேண்டும் .

All reactions

அழகு அறிவு திறமை இருக்குமிடத்தில் பல ஏமாற்றங்களும் இருக்கும் .

 'மேடம் ஜெயலலிதா' அவர்கள் 'முதல்வராக' இருந்த போது, ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கான நேர்க்காணலில்,

'சினிமா, அரசியல் இரண்டில் எந்தத் துறையை நீங்கள் மிகவும் நேசிக்கிறிர்கள் ?' என்ற கேள்விக்கு, 'இரண்டுமல்ல... எனக்கு விருப்பமில்லாமல், காலத்தின் சூழலால், இந்த இரண்டுக்குள்ளும் பிரவேசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.' என்றார். 'அப்படியானால், நீங்கள் எந்த மாதிரியான வாழ்வை விரும்புனீர்கள் ?' என்ற போது, 'ஒரு சாதாரண குடும்பப் பெண் போன்ற வாழ்வைத்தான் நான் விரும்பினேன்.' என்று பதிலளித்திருந்தார்.
அப்போது, என் நினைவுக்கு வந்த ஒரு பாடல் காட்சி,
'ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப் பொழுது... நல் காலைப் பொழுது...
மன்னன் இட்ட தாலி... பொன் வேலி
மானம் என்னும் வேலி... தன் வேலி
குலமகள் அவள் கோலம் குங்குமச் சிலையாகும்
நாயகன் கைகளில் நாயகி ஆடிடும்,
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப் பொழுது... நல் காலைப் பொழுது'
... என்ற, சுமதி என் சுந்தரி' ( இயக்குனர் : சி.வி. ராஜேந்திரன். 1971 ) படத்தில் இடம் பெறும் முதல் காட்சி் பாடல்தான்.
கதையின் நாயகியாக வரும் ஜெயலலிதா அவர்கள், அதிலும் ஒரு பிரபலமான நடிகையாக இருப்பார். பிரபலங்களின் வாழ்வில் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபட்டு ஒரு சாதாரண பெண்ணாக வாழ விரும்புபவராக இருப்பார்.
ஒரு நாள் காலை வேளையில், காய்கறி வாங்க கடை விதிக்குச் செல்லும் அவரை, சுற்றிச் சூழும் ரசிகர்கள் கூட்டத்திலிருந்து விடுவித்து அழைத்து வரும் தன் காரியதரிசியிடம், 'என்னால் ஒரு சராசரிப் பெண் போன்ற வாழ்வை வாழ முடியாதா ?' என்று அங்கலாய்ப்புடன் கேட்பார்.
பின்னாளில், அது போன்ற ஒரு சூழல் ஏற்படுகிறது. படப் பிடிப்புக்காக, வெளியூர் செல்லும் வேளையில், தனிமையைத் தவிர்த்து, தனது படக் குழுவுடன் இணைந்து கொள்வதற்காக, ரயிலில் இருந்து இறங்கி, அடுத்தப் பெட்டிக்குள் ஏறுவதற்காக நடந்து செல்லும் வேளையில், ரயில் கிளம்பி விடுகிறது.
ரயிலைத் தவிர விட்ட அந்த இரவு நேரத்தில், அந்தத் தொலைதூரத் தேயிலைத் தோட்டத்தில், ஒரு தனி பங்களாவில், மிகவும் எதார்த்தமான, வெள்ளையுள்ளம் கொண்ட நாயகனை (நடிகர் திலகம்) சந்திக்கிறார். அதற்குப் பின், அவர் வாழ்வில் நடப்ப்தெல்லாம், அவர் விரும்பியபடியே, ஒரு சாதாரண, நிறைவான வாழ்வாக அமைகிறது.
இந்தப் படத்தைப் பார்க்கும் போதெல்லாம், திரையுலகிலும்... அரசியலுலகிலும்... மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவரின் வாழ்வில், இப்படி ஒரு ஏக்கம் இருந்திருப்பதாகவே தோன்றும் !
இரும்பு பெண் மணி ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாள்...
அம்மா என்ற சொல்லுக்கு சொந்தக்காரர்... I love u, amma
💐💐💐💐💐💐💐💐💐
திரைப்பட நடிகையாக வலம் வந்து, ஐந்து முறை தமிழக முதல்வராக சாதனை புரிந்த மிகவும் தைரியம் நிறைந்த பெண்மணி செல்வி.J.ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்த நாள் இன்று பிப்ரவரி 24,2023.
இந்திய முழுவதும் அனைவரின் கவனத்தையும் மனதிலும் நிறைந்தவர் என்றால் மிகையாகாது.
💐💐💐💐💐💐💐💐💐💐💐
May be a black-and-white image of 1 person
All reactions

தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்கள் ரெட்லைட்ஏரியாஊடகங்கள்.

 நேற்று அமைச்சர் சேகர்பாபுவிடம் ஒரு பத்திரிக்கை நிருபர் ஒரு கேள்வி கேட்கிறார்.

சேகர் பாபு : எந்தப் பத்திரிக்கையா நீ? எந்தச் சேனல்னு சொல்லு...
பரத்தையரிக்கை நாய்கள் கூட்டமாக சேகர்பாபுவிடம், பல்லை இளித்துக் கொண்டு, வழிந்து நெளிந்து கொண்டு, “சார்...சார்... என்ன சார் நீங்களும் அண்ணமலை போலவே கேட்டுட்டீங்க”.. என்ற குழையுதுக.
இதே நாய்க்குப் பிறந்த நாய்கள் தான் அண்ணாமலையிடம் உக்கிரமாகக் கேள்வி கேட்டு புர்ஸி பண்ணினதுக.
அதனினும் கொடுமை, சேகர்பாபு அவர்களை சமாதானம் செய்வதற்காக , “சரி சரி சாயங்காலம் சந்திப்போம்” என்று சொல்கிறார். சுற்றியிருந்த பரத்தையரிக்கை நாய்கள் சாயங்காலம் நிறைய எலும்புத் துண்டுகள் கிடைக்கப் போகுதுனு பல்லை இளிச்சுக்கிட்டு சரிங்க சார் சாயங்காலம் வாரோம்றானுக.
ஏன்டா அஜெண்டாவுக்குப் பொறந்த பிச்சைக்காரனுகளா... இப்படியெல்லாம் சம்பாதித்து தான் உங்க பொண்டாட்டி புள்ளைக மானத்தை மறைக்க துணிமணிகள் வாங்கிக் கொடுக்கணுமா? நேர்மையாக உழைத்து வாங்கிக் கொடுக்கும் துணிகள் கூட மானத்தை மறைக்கும்டா...
இதைவிட இழிவான ஜென்மங்கள், இழிவான தொழில் என்று இந்த உலகத்தில் ஏதுமே இருக்க முடியாது.
த்த்த்தூஊஊ....

காக்கை பறவை இனத்திற்கு, மற்ற பறவைகளிடம் இல்லாத அபூர்வ சக்தி நிறையவே இருக்கின்றது.

 **காகத்திற்கு இப்படி சாதம் வைத்தால் நமக்கு வரக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். காகத்தைப் பற்றி இதுவரை அறிந்திடாத அபூர்வமான தகவல்கள் இதோ உங்களுக்காக.**

காக்கை ஒரு பறவை இனம் என்பதை நம்மில் பல பேர் மறந்திருப்போம். ஏனென்றால் காகத்தை காக்க காக்க என்று சொல்லுவோமே தவிர, அதை ஒரு பறவை என்று நாம் என்றுமே உணர்ந்து மதித்தது கிடையாது. அதாவது கிளி, குருவி, புறா, போன்ற பறவைகளை நாம் பறவைகளாக பாவிக்கின்றோம். ஆனால் காகத்தை பார்க்கும் போது அதோ காகம் பறவை என்று என்றாவது சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோமா. ஆனால் இந்தப் காக்கை பறவை இனத்திற்கு, மற்ற பறவைகளிடம் இல்லாத அபூர்வ சக்தி நிறையவே இருக்கின்றது.
மனிதர்களை விட பல மடங்கு உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய உயிரினம் தான் இந்த காகம். நம்முடைய இந்து சாஸ்திரப்படி காகம் நம்முடைய முன்னோர்களாக கருதப்படுகிறது. இந்த காகத்தை பற்றிய சில அரிதான புத்தம்புதிய விஷயங்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பொதுவாக மற்ற பறவைகள், மற்ற உயிரினங்கள் எல்லாம் வீதியில் இறந்து கிடப்பதை நாம் பார்த்திருப்போம். பெரும்பாலும் இந்த காகம் அப்படி எல்லா இடங்களிலும் இறந்தபடி இருக்காது. அரிதாக சில இடங்களில் பார்க்கலாம். ஆனாலும் கூட்டம் கூட்டமாக பெரிய பெரிய ஆல மரத்தின் மேல் கூடு கட்டி வாழக்கூடிய நூற்றுக்கணக்கான காக்கைகள் எங்கு சென்று இறக்கின்றது என்பது யாருக்கும் தெரியாது.
நம் வீட்டின் அருகில் பெரிய மரம் இருந்தால் அங்கே நூற்றுக்கணக்கான காகங்களை பார்க்கலாம். அந்த காகங்கள் எல்லாம் எப்படி உயிர் விடுகின்றன என்று நாம் என்றாவது சிந்தித்து இருக்கின்றோமா.
காகத்திற்கு, தான் உயிர் விடக்கூடிய நேரம் எப்போது வரும் என்பது முன்கூட்டியே தெரிய வருமாம். அப்போது அது அடர்ந்த காடுகளுக்குள் சென்று தனக்குத் தானே ஒரு கூடு அமைத்துக் கொண்டு ஜீவசமாதி அடைந்துவிடும் என்றும் சொல்லப்படுகின்றது. இப்படி ஒரு அற்புத சக்தி வாய்ந்த இந்த காகத்திற்கு தினம் தோறும் உணவு வைப்பவன் வாழ்க்கையில் மேலும் மேலும் வளர்ச்சி அடையக்கூடிய வாய்ப்புகளை பெறுவான் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகமே கிடையாது.
இனி காகத்திற்கு நீங்கள் உணவு வைத்தால் இந்த விஷயத்தை கவனித்து பாருங்கள். தினமும் நீங்கள் காகத்திற்கு உணவு வைக்கும் போது அந்த காகம் சந்தோஷமாக அந்த உணவை எடுத்துவிட்டு, உணவு வைத்த வரை ஒரு முறை பார்த்து விட்டு தான் பறந்து செல்லும். பொதுவாக தெரியாத இடத்தில், அதாவது முன் பின் பழக்கம் இல்லாத இடத்தில் உணவு வைத்தால் காகம் அவ்வளவு எளிதில் வந்து எடுக்காது.
தினமும் சாப்பாடு வைத்து பழகி விட்டால் சாதத்தை வைத்த உடனேயே காகம் கூப்பிடாமலே வந்து அந்த சாதத்தை எடுத்து சாப்பிட்டு விடும். (அப்போது சாதத்தை வைத்த உங்களுடைய மனதில் ஒரு திருப்தி ஏற்படும் பாருங்கள். அதை சொல்வதற்கு வார்த்தை கிடையாது. இதை நிறைய பேர் உணர்ந்தும் இருப்பீர்கள்.)
இப்படி நாம் வைக்கக்கூடிய சாதத்தை தினமும் வந்து எடுக்கக்கூடிய அந்த காகமானது நமக்கு சில நல்ல சகுனங்களையும் அறிவுறுத்தும். சில சமயம், சில கெட்ட சகுனங்களையும் தெரியப்படுத்தும். உதாரணத்திற்கு நம்முடைய ஜன்னல் பக்கத்திலோ அல்லது வாசலிலோ காகம் வந்து கா கா என்று அழைத்தால் உறவினர்கள் வருவதாக அர்த்தம் என்று சொல்லுவார்கள் அல்லவா அதே போல் தான் இதுவும்.
அன்றாடம் வந்து சாதம் எடுக்கக்கூடிய காகம் திடீரென்று ஒரு நாள் நீங்கள் வைத்த சாதத்தை எடுக்க வரவில்லை. அப்படியே சாதம் வைத்தவுடன் காகம் வந்தாலும், அந்த சாதத்தின் அருகில் அமர்ந்து கொண்டு உங்களைப் பார்த்து சத்தம் எழுப்பிக் கொண்டுதான் எடுக்கும். அந்த சாதத்தை எடுக்காது. அப்போது உங்களுக்கு ஏதோ ஒரு எதிர்பாராத குழப்பம், எதிர்பாராத பிரச்சனை வரப்போகிறது என்பதை முன்கூட்டியே உங்களுக்கு அறிவுறுத்துவதாக அர்த்தம் என்று சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாகவே இறந்தவர்கள் வீட்டில், இறந்தவர்களுக்கு உணவை வைத்து படைத்து, சாமி கும்பிட்ட பிறகு அந்த சாப்பாட்டை கொண்டு போய் முதலில் காகத்திற்கு தான் வைப்பார்கள். சில பேர் வீடுகளில் இந்த சம்பிரதாயத்தை செய்யும்போது சாப்பாட்டை வைத்த உடன் எங்கிருந்தோ காகம் பறந்து வந்து அந்த சாப்பாட்டை எடுத்துச் செல்லும். இப்படி இறந்தவர்கள் வீட்டில் சாதம் வைத்த உடன், காகம் வந்து எடுக்கின்றது என்றால் அந்த இறந்த ஆத்மா சாந்தி அடைந்து விட்டது. இறந்த ஆத்மா பரிபூரணமாய் நல்ல ஆத்மாவாக முக்தி அடைந்து விட்டது என்று அர்த்தம்.
சில பேர் வீடுகளில் இப்படி சாதம் வைக்கும் போது, அந்த காகம் வந்து எடுக்கவே எடுக்காது. மேலே காகம் அங்கும் இங்கும் ஆக பறந்தாலும், அந்த சாப்பாட்டை உண்ணுவதற்கு காகம் வரவே வராது. இப்படிப்பட்ட சம்பவம் நடந்தால் நிச்சயமாக இறந்தவர்கள் செய்த பாவங்கள் தான் இதற்கு காரணம். இப்படி மேலே பறக்கும்போதே சாதம் வைப்பவர்களை பற்றிய இறந்த காலத்தை, நிகழ்காலத்தை எதிர்காலத்தை ஆராய கூடிய சக்தியும் இந்த காகத்திற்கு உண்டு. யார் வைத்த சாதத்தை எடுக்க வேண்டும். யார் வைத்த சாதத்தை எடுக்கக் கூடாது என்பதை காகம் தான் முடிவு செய்ய வேண்டும்.
இப்படி எல்லா விஷயங்களும் தெரிந்த இந்த உயிரினத்திற்கு தினமும் மனதார சந்தோஷத்தோடு காலை எழுந்தவுடன் உங்களால் இயன்ற உணவை வைத்து வாருங்கள்.‌ உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் மேலும் மேலும் உயருவீர்கள். செய்த கர்மாவும் படிப்படியாக குறையும். என்னால் இந்த சாப்பாடு வைக்க முடியவில்லை, அந்த சாப்பாடு வைக்க முடியவில்லை என்ற கஷ்டப்படாதீங்க.
ஒரு மிக்சர், ஒரு பிஸ்கட் என்று எந்த உணவை நீங்கள் வைத்தாலும் உங்கள் மனம் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் வைத்த உணவை தினந்தோறும் அந்த காகம் வந்து சாப்பிடும். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
இது வெறும் காக்கா தானே மற்ற பறவைகள் போல இதுவும் ஒரு ஜீவராசி என்பவர்களுக்கு மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் மூடநம்பிக்கையாக தெரியும். காகத்தை சனி பகவானின் வாகனமாக பார்த்து, அதை நம் முன்னோர்களாக நினைத்து சாஸ்திரம் சம்பிரதாய முறையில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மட்டும் மேல் சொன்ன விஷயங்களை நம்பி பின்பற்றும் போது உங்களுக்கு தானாக நல்லது நடக்கும்
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
All reactions

அளவுக்கு மிஞ்சி எதிர்பார்ப்புகள் உள்ளதால் எதுவுமே அமையாமல் போய்விடும்.

 சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் நண்பரிடம் அறிந்த செய்தி..

இவரதுமேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன்.
சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன்.
பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா?
உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...
‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம்.
ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா..
நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.
‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’
வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா.
அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான்.
அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே,
நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன்.
எங்கிட்டேயே இவ்வளவு(!) பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா.
அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா(!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...
அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார்.
பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை)
நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான்.
இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ்.
எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.
இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.
‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண்.
அவளும் 30 வயதை நெருங்குகிறாள்....
ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம்.
அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி பையன் இருக்கா?’’ என்றார்கள்...
இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம்.
அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.
‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...
‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.
‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க.
அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...
இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப்போயிருக்கிறது!
என்று புரிந்து கொள்ள முடிகிறது.
வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக கேட்கிறார்கள்.
பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட...
பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள்.
இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...
‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.
‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.
பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான்.
‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்!...’’ என்கிறார்கள்.
தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது.
அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்...
தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.
உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...
சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது...
‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய்,
இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள்.
அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்!...
இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை.
நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது.
என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.
தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்
பட்டிருக்கிறார் என்றால்..
அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது.
இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?
பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது.
வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.
கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க...
கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.
படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60 +வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.
முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி,
தெய்வ பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை!

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...