Friday, December 31, 2021

நள்ளிரவு கோயில்களுக்கு செல்ல வேண்டாம்.

 ஒரு நாளைக்கு அதிகபட்சம், ஆறு கால பூஜைகள் மட்டுமே கோயிலில்களில் நடத்தப்பட வேண்டும்.

ஆறாவது பூஜையானது, இரவு ஒன்பது மணிக்கு நடத்தப்பட்டு, வில்வ இலையில் இறைவனின் சக்தியை மாற்றி, அவரை பள்ளியறைக்கு கொண்டு சென்று மூடிவைத்துவிட்டு, மீண்டும் விடியற்காலை நான்கு மணிக்கே முதல் பூஜையை துவங்க வேண்டும்.
இதற்கேற்றார் போல் தான், அன்றைக்கு தானங்களும் வழங்கப்பட்டுள்ளன. கிரஹண நாட்கள், சிவராத்திரி தவிர்த்து கோயில்கள் நள்ளிரவில் திறக்கக் கூடாது.
நமக்கு, நாளின் துவக்கம் என்பது, சூரிய உதயம் சார்ந்த அதிகாலை தானே தவிர, நள்ளிரவு பனிரெண்டு மணி அல்ல.
ஆகையால் தயவுசெய்து, நள்ளிரவு கோயில்களுக்கு செல்ல வேண்டாம். ஆங்கிலப் புத்தாண்டுக்கு தெய்வதரிசனம் செய்ய நினைப்பவர்கள், விடிந்ததும் காலை நேரத்தில் கோயில்களுக்கு செல்லுங்கள்.
சிறப்பு தரிசனம் என்ற பெயரில் ரூ.300, 500 என்று திருடர்களுக்கு தீனி போட நினைக்கும் பணத்தை, உங்கள் ஊர்களில் ஒருகால-பூஜைக்குக் கூட வழி இல்லாமல் இருக்கும் கோயில்களுக்கு, எண்ணெய் வாங்கிக் கொடுத்து, விளக்கேற்ற வழிவகை செய்யுங்கள்.
அந்த கோயில்கள் புத்தொளி பெறுவது போன்றே உங்கள் வாழ்வும் புத்தொளி பெறும்.
வரும் ஆங்கில புத்தாண்டு 2022 உங்கள் அனைவருக்கும் சிறப்பாய் அமைந்திட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

புத்தாண்டு.....

 ஒரு ஆண்டு:

365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது.
வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.
ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ நாட்காட்டி அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள நாட்காட்டி முறை ஆகும்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன் 45ம் ஆண்டு ஜூலியஸ் சீசர் என்னும் ரோம அரசன் சந்திரனை மையமாக கொண்ட லூனார் நாள்காட்டியை ஒதுக்கி வைத்துவிட்டு எகிப்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில் சூரியனை மையப்படுத்தும் சன் காலண்டரை அறிமுகப்படுத்தினார்.
அவர் தான் லூனார் நாள்காட்டியில் இருந்த வருடத்துக்கு 354 நாட்கள் என்ற அளவிலிருந்து 10 நாட்களை அதிகரித்து, பிப்ரவரி மாதத்திற்கு சலுகையாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அதிகப்படியான நாளை அளித்தார்.
இப்போது வருடத்துக்கு 365.25 நாட்கள் என்றானது. இது பூமி சூரியனைச் சுற்றி வரும் 365.2425 என்னும் கால இடைவெளியுடன் வெகுவாகப் பொருந்திவிட்டது. அது தான் இப்போது நாம் பயன்படுத்தி வரும் வருட காலண்டர் மற்றும் புத்தாண்டு.
நண்பர்களே,
புதிய எண்ணங்கள்,
புதிய கனவுகள்,
புதிய முயற்சிகள்,
புதிய நம்பிக்கைகள்,
புதிய திட்டங்கள்,
புதிய இலக்குகளோடு
புன்னகை ததும்ப 2022
புத்தாண்டு நல்
வாழ்த்துக்கள்
..!!
ஆனால் ஒன்று போதை வேண்டாம். தலைத்தெறிக்கும் வேகம் வேண்டாம், அடுத்தவரின் உயிர் முக்கியம். எரிச்சலூட்டும் காட்டுக்கத்தல் வேண்டாம்.
அன்பால் கூடிக்கொண்டாடுங்கள்.
வாழ்த்துக்கள்
!!!

அனுமன் ஜெயந்தி.....(02/01/2022).

 நாமக்கல்லில் ஆஞ்சனேயர் ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைகளை கொண்டு வடைமாலை அலங்காரம் செய்யப்பட உள்ளது.

அதற்காக வடைகளை தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலில், 18 அடி உயரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் ஆஞ்சனேயர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து 8 வடைகளை கொண்ட மாலை சுவாமிக்கு சாத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு வரும் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் அன்னதான மண்டபத்தில் தொடங்கியது. கோயில் உதவி ஆணையர் ரமேஷ் முன்னிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் அய்யர் தலைமையில் 32 பேர் கொண்ட குழுவினர் வடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவர்கள் தொடர்ந்து 7-ஆம் ஆண்டாக நாமக்கல் ஆஞ்சனேயருக்கு வடை மாலையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 2,050 கிலோ உளுந்த பருப்பு மாவு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 120 கிலோ உப்பு, 900 லிட்டர் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு வடைகளை தயாரித்து வருவதாகவும் கூறினர்.
இதுகுறித்து ஆஞ்சனேயர் கோயில் உதவி ஆணையர் ரமேஷ் கூறியதாவது:-
வடைகள் தயாரிக்கும் பணி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். 1-ஆம் தேதி (சனிக்கிழமை) வடையை மாலையாக கோர்க்கும் பணி நடைபெறும். அன்று நள்ளிரவு முதல் நாமக்கல் ஆஞ்சநேயர் சாமிக்கு வடை மாலை சாத்தப்படும். வருகிற 2-ஆம் தேதி 1 லட்சத்து 8 வடை மாலையுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அன்று தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு வடை பிரசாதமாக வழங்கப்படும் என்றார்.
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்.
May be an image of 4 people

ஆங்கிலப் புத்தாண்டு வரலாறு.

 ஆங்கிலப் புத்தாண்டின் மூடத்தனமான வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!
ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும்.
இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.
ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.
பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.
மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.
ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில் ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘போப்பாண்டவர்’ தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார் . இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜனவரி 1 ஆம் நாளை புத்தாண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பியர்களைப் பார்த்து ஏப்ரல் 1 ஆம் நாள் ‘முட்டாள்களின் தினம்’ என்று அழைக்கத் தொடங்கினர்.இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று
மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
ஜூன் :ரோம கடவுள் ‘ஜு னோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.
ஜூலை : மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.
ஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.
மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும்.
ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம். இது ஒரு புறமிருக்க…
இந்தக் காலண்டரின் மாதங்களின் நாள்களை முடிவு செய்ததிலும் ‘ஒரு முட்டாள்தனமான’ வரலாறு உள்ளது..
முதலில் மாதங்களின் நாள்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களும் மாறி மாறி வந்தன.
அதாவது ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 . . .
இதனை ஜூலியஸ் ஸீஸர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு; அதாவது ஜூலை மாதத்திற்குச் சேர்த்தார். அதனால் 30 நாளாக அதுவரை இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறியது. காலண்டர் மொத்தமும் மாற வேண்டியது வந்தது.
ஆகஸ்ட் 30 நாளானது இப்படிக் கொஞ்ச காலம் போனது. பின்னர் அகஸ்டியஸ் ஸீஸரின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்க வேண்டும் என்று கோரினர். மீண்டும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்க்கப்பட்டது. ஆக இத்தனைக் குழப்பத்திற்குப் பின்னர்தான் நாம் வைத்திருக்கும் இந்தக் காலண்டர் தயாரிக்கப்பட்டது.
இது ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் என்று அழைக்கப்படும்.
இப்படி ‘முட்டாள்தனமான’ ஒரு வரலாற்றை மூடிமறைத்து நம்மைப் பின்பற்ற வைத்துள்ள மேற்கத்தியர்களை உண்மையில் ‘அறிவாளிகள்’ என்ற சொல்ல வேண்டும்.ஆக இந்தக் காலண்டருக்கும் இயேசுவிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஆனால் எப்பொழுது கிறிஸ்தவம் ‘ரோமன் கத்தோலிஸம்’ என்று மாறியதோ, அந்நாள் தொடங்கி கொள்கை முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் ரோம கிரேக்க அநாகரிகம் (Paganism) ஊடுருவி விட்டது.
கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.
உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.
அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.
யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.
அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
ஆண்டு, மாதக் கணக்குகள் ஏதேனும் ஒரு நாட்காட்டியின் அடிப்படையில் தான் கணிக்கப்படுகின்றன. ஆங்கில நாட்காட்டி என்றவுடன் நாம் அது ஆங்கில மொழி தோன்றிய இங்கிலாந்தின் நாட்காட்டி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. கூறப்போனால், இது ஆங்கில நாட்காட்டி என்பதைவிட இதைச் சர்வதேச நாட்காட்டி என்று தான் கூற வேண்டும். இது க்ரிகேரியன் நாட்காட்டி-யை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, தங்கள் நாட்டுக்கெனத் தனித்தனியே வெவ்வேறு நாட்காட்டிகளைக் கொண்ட நாடுகள் தங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் ஒப்பந்தகள் ஆகியவற்றுக்கு இந்த நாட்காட்டியையே பயன்படுத்துகின்றன.
இந்த க்ரிகேரியன் நாட்காட்டி வழக்கத்திற்கு வந்ததே 16-ஆம் நூற்றாண்டில் தான். இது கிருஸ்துவர்கள் (குறிப்பாகக் கத்தோலிகர்கள்) தங்கள் ஈஸ்டர் பண்டிகையைச் சரியாகக் கணிக்க வடிவமைக்கப்பட்டது. முதலில் வெவ்வேறு கத்தோலிகக் குழுக்களாலேயே நீண்ட சர்ச்சைக்குள்ளான இந்த நாட்காட்டி பின்னர் படிப்படியாக பெரும்பாலான நாடுகளால் ஏற்கப்பட்டது.
இது பெருமளவில் ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஜூலியன் நாட்காட்டியின் அடிப்படையிலேயே (சில வேறுபாடுகளுடன்)த் தயாரிக்கப்பட்டது. கிமு-222 ஆண்டிற்கு முன் வரை புத்தாண்டு மே மாதம் முதல் தேதியில் கொண்டாடப்பட்டு வந்துள்ளதாகக் கூறுகின்றனர். கிமு-222 ஆண்டு முதல் கிமு.153 ஆம் ஆண்டு வரை புத்தாண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கிமு.153-ஆம் ஆண்டு முதல் புத்தாண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. கிமு.45 ஆம் ஆண்டு முதல் ஜுலியன் நாட்காட்டி அமலுக்கு வந்த பின்னரும் பல்வேறு நாடுகளில் பல்வேறு அரசுகள் ஆண்டுத் துவக்கத்தை மாற்ற முயன்றும் (கணக்கு வழக்கு ஆண்டுகளை மாற்றிய போதும்) மக்களைப் பொறுத்தவரை பொது ஆண்டின் துவக்கம் ஜனவரி 1-ஆம் தேதியாகவே இருந்து வருகிறது.
இந்தியர்களைப் பொறுத்தவரை ஜனவரி முதல் தேதியை கிருத்துவ ஆண்டின் துவக்கம் என்றும் கூறுவோம். ஆனால், 10-17 நூற்றாண்டுகள் வரை பல்வேறு (ஐரோப்பிய) நாடுகள் கிருத்துவ மதாலயங்களின் ஈர்ப்பால்/தூண்டுதலால் தங்கள் நாடுகளின் ஆண்டு துவக்கத்தை டிஸம்பர்-25, மார்ச்-25 (தேவமாதா கருவுற்ற நாள்), ஈஸ்டர் ஆகிய நாட்களுக்கு மாற்ற முனைந்ததும் நடைபெற்றுள்ளது. க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாறியவுடன் பெரும்பாலான நாடுகள் ஜனவரி முதல் தேதியையே மீண்டும் ஆண்டுத் துவக்கமாகக் கொண்டன.
ஜூலியன் நாட்காட்டிக்கும் க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் இடையில் ஒவ்வொரு நானூறு ஆண்டுகளுக்கும் மூன்று நாட்கள் வித்யாசம் உண்டு. க்ரிகேரியன் நாட்காட்டியில் 1700,1800,1900 ஆகிய ஆண்டுகள் லீப் வருடமாக இல்லாமல் சாதாரண ஆண்டாக (அதாவது, பிப்ரவரியில் 28 தேதிகளுடன் 365 நாட்கள் கொண்டு) இருக்கும். இதனால், கத்தோலிகத் திருச்சபையால் 16-ஆம் நூற்றாண்டில் (1582-இல்) ஜூலியன் நாட்காட்டியிலிருந்து 10-நாட்கள் நீக்கப்பட்டன. 1582-ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி (விழாயக் கிழமைக்கு) அடுத்த நாள் அக்டோபர் 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) என்று குறிக்கப்பட்டு க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாற்றப்பட்டது.
ஆனாலும் பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் 17-18 ஆம் நூற்றாண்டில் தான் க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் மாற்றம் செய்து கொண்டன.
ஆங்கில மொழியின் தாய்நாடான இங்கிலாந்தில் 1752-ஆம் ஆண்டு தான் க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாற்றம் செய்ய தீர்மானிக்கப் பட்டது. அப்பொழுது 11 நாட்கள் குறைக்கப்பட வேண்டியிருந்தது. ’11 நாட்களைத் திருப்பிக் கொடு’ என்பது போன்ற போராட்டங்களும் ஏற்பட மாற்றம் 1800-க்குத் தள்ளிப் போனது. (அப்பொழுது 12 நாட்கள் குறைக்க நேரிட்டது). பழைய நிதி ஆண்டின் துவக்கமான மார்ச்-25 (பெருமாட்டி தினம்) இலிருந்து ஏப்ரல் -6 ஆம் தேதிக்கு நிதி ஆண்டு மாற்றப்பட்டது.
ரஷ்யாவின் க்ரிகேரியன் ஆண்டு 1917-இல் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஏற்கப்பட்டது. கூறப்போனால் அதை அக்டோபர் புரட்சி என்பதே தவறு. ஏனெனில், புரட்சி நடந்தது ஜூலியன் வருடத்தின் அக்டோபர் மாதம்; ஆனால் க்ரிகேரியனில் அப்பொழுது நவம்பர் ஆரம்பம் ஆகிவிட்டது. 1918-இல் ஜனவரி-31 ஆம் தேதிக்குப் பின் பிப்ரவரி-14 ஆம் தேதியாக மாற்றப்பட்டது.
எப்படி இருந்தாலும் தற்போது பெரும்பாலான நாடுகளில் (மதச் சடங்குகளைத் தவிர்த்த விஷயங்களில்) இந்த க்ரிகேரியன் நாட்காட்டிகள் வழக்கத்திற்கு வந்துவிட்டபடியால் ஜனவரி முதல் தேதியே புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
May be an image of text that says 'DECEMEER FEBRUARY MON つ January 1959 WED FRI SAT Co 4 6 8 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31'

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இனிய நினைவுகளையும் மகிழ்ச்சியான நேரங்களையும்
சுமந்து ஒரு வருடம் கடந்துவிட்டது.
இனி அடுத்த ஆண்டும் மகிழ்ச்சிகரமானதாக அமையட்டும்
🤝🤝🤝🤝🤝🤝🤝
புதிய ஆண்டின் (2022) ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை கிடைக்கட்டும்.
💐💐💐💐💐💐💐💐💐
நேர்மறையான ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும். அனைவருக்கும் புத்தாண்டு
வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Thursday, December 30, 2021

இது_கதை_அல்ல #நிஜம் .

 படித்து முடித்ததும் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு சிந்தியுங்கள்...

ஒரு அடியார் குடும்பம், காசிக்குச் சென்று ஈசன் திருவுளையாடலால் அங்கேயே தங்க நேரிடுகிறது.
கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார்.
தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள்.
மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை.
”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!” என்று
ஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா! நான் இறைவன் ஈசன் சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன்.
எனக்குத் திருமணம் வேண்டாம்”என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட“அம்மா! நீ பெண்.
தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்”என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும்
என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று கூறி ஒதுங்கி விடுகிறாள்.
பிறகு, வேறு வழியில்லை என்பதால்,தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, “அம்மா! ஒரு வேளை நான் இறந்து போய்விட்டாலும்,
இந்த செல்வத்தைக் கொண்டு, பிறரை நாடாமல், கையேந்தாமல் வாழ்ந்து கொள்”என்று ஏற்பாடு செய்து, ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு, சில காலங்களில் இறந்தும் விடுகிறார்.
“தந்தை எனக்கு சில விஷயங்களை போதித்தார்! அவற்றை செயல்படுத்தினால் என்ன?” என்று மகளுக்கு ஒரு ஆசை.
எனவே, பல ஊர்களில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக, தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும், உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க, காலம் செல்லச் செல்ல
“இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார்”என்று அறிந்து பலர், மருத்துவ உதவி, கல்வி உதவி வேண்டும் என்று கேட்க, இவளும் செய்து கொண்டே வருகிறாள்.
உலகிற்கே படியளக்கும் ஈசன் சும்மா இருப்பானா,அவன் திருவுள்ளம்,இந்தப்
பெண்ணை, சோதிக்க எண்ணியது.
அந்தக் காசி மாநகரம் முழுவதும், இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து, தந்து, ஒரு கட்டத்தில், வறுமை இவளை சூழ்ந்து கொண்டது.
இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க, வேறு வழியில்லாமல், அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள்.
ஒரு கட்டத்திலே, அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள்.
அது மட்டும் அல்லாமல், ”முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு”என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள்.
இரவில் படுத்தால், இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால், அச்சமும் ஆட்கொண்டுவிட்டது.
இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி
“எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ, இப்படிக் கடனாக என்னை இடர்படுத்துகிறது.
இறைவா!
நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால்,
என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன்.
ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும், கடனை, திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை.
அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்றுதான் கேட்கிறேன்”என்று மனம் உருகி, இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.
ஒரு நாள்,ஒரு பழுத்த மகான், இவளைத் தேடி வருகிறார்.
”மகளே! கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே, மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார் அவரைச் சென்று பார்.
உனக்கு உதவி கிடைக்கும்”
என்று அந்த மகான் கூறுகிறார். “எனக்கு அவரை அறிமுகம் இல்லை.
நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?” என்ற அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது.
என்றாலும், துறவி கூறியதால், அன்று மாலை அந்த செல்வந்தர் இல்லத்திற்குச் செல்கிறாள்.
அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை.
இருந்தாலும் கூட, மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால், அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார்.
அவரைச் சுற்றி ஊர்ப்பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையிலே”பெண்ணே! உனக்கு என்ன வேண்டும்?.
எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?” என்று செல்வந்தன் கேட்க, இவள் தயங்கி, தயங்கி, தனக்கு ஏற்பட்டுள்ள கடன், மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறி,“ஐந்து லட்சம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால், எல்லோரும் இடர் படுத்துகிறார்கள்.
எனவே, நீங்கள், ஐந்து லட்சம் தந்தால், காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு,சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களோ, மிகப்பெரிய செல்வந்தர்.
ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார்.”என்று தயங்கி, தயங்கி கூறுகிறாள். அந்த செல்வந்தர் யோசிக்கிறார். ”இவள் மிகப் பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது.
ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லட்சம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
”தர முடியாது” என்றால் இவள் மனம் வேதனைப்படும்.
நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும்” என்று எண்ணி, அந்த செல்வந்தர் மிக சாமர்த்தியமாகப் பேசுகிறார்.
“பெண்ணே! நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது.
உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார்.
நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும், நீர்த்தடங்களை அமைப்பதும், கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய்.
பாராட்டுகிறேன்.
ஆனால், உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? சரி.
உன் செல்வத்தை தர்மம் செய்தாய்.
ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி, தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா? சரி. நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும், இப்படி தர்மம் செய்த நீயே, நடு வீதிக்கு வந்து விட்டாய்.
எப்படி உன்னால், என்னிடம் வாங்கிய கடனை, திருப்பித் தர முடியும்? அடுத்ததாக, நான் கடன் கொடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய்.
எதை நம்பி, நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது?”
என்று அந்த செல்வந்தர் கேட்கிறார். இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி,
”அய்யா! நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதோ ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை.
உங்களிடம் கோடி, கோடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர்மக்கள் சொல்கிறார்கள்.
அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக, சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள்” என்று கேட்கிறாள்.
“மன்னித்து விடு பெண்ணே! அடமானம் இல்லாமல், நான் எதுவும் தருவதற்கு இல்லை”என்று செல்வந்தர் கூற, அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு, ”அய்யா! உங்களுக்கே தெரியும்.
உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நானும், என் தந்தையும் ஆங்காங்கே, பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று.
தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட, அடியேன் கட்டியதுதான். இந்த நீரை, தினமும், ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா?
என்றாலும், இந்த பொதுக் குளத்தை, எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை.
இருப்பினும், எனக்கு உடன்பாடில்லை என்றாலும், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் திருக்குளத்திலே, நாளைக் காலை, சூரிய உதயத்தில் இருந்து, யாரெல்லாம் நீர் பருகிறார்களோ, அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன்.
ஐந்து லட்சத்திற்கு உண்டான அசல், வட்டிக்கு சமமான புண்ணியம், எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ, அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன்”
என்று கேட்க, அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே, ”பெண்ணே! ஏதாவது ஒரு பொருளைத்தான் அடமானம் வைக்க முடியும். பாவ புண்ணியங்களை அல்ல.
ஒரு பேச்சுக்கு, நீ கூறியபடி, நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம், என் கணக்குக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும், புண்ணியம் அரூபமானது.
கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து, புண்ணியம், என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று கேட்கிறார்.
“அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன்.
என்னுடன் வாருங்கள்என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி,
”எம்பிரானே! அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன்.
“ஈசனே, இந்த திருக்குளத்தின் அடியில் நீ இருக்க வேண்டும்.
எப்பொழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும்,வட்டியுமான புண்ணியம், இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ, அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும்
#ஈஸ்வரா என்று கூறி, பல முறை பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி, அடியாட்களின் துணை கொண்டு, அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி, திருக்குளத்தின் நடுவே இடுகிறாள்.
சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு, அந்த செல்வந்தரைப் பார்த்து,
”அய்யா! நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாக்ஷாத் #சிவபெருமான் தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ, எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால், எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ, அப்பொழுதே, இந்த சிவலிங்கம் மேலே வந்து மிதக்கும்”என்று கூறுகிறாள்.
செல்வந்தரோ நகைத்து, ”அம்மா! சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.
ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே”என்றார் கிண்டலாக.
இளம் பெண்ணோ.. “இல்லை. நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும்”.
இதைக் கல் என்று பார்க்காதீர்கள். #பகவான் என்று பாருங்கள்”என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள். செல்வந்தர் யோசிக்கிறார்.
”இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து, பணம் தர மாட்டேன் என்றால், நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும்.
மேலும், இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது, இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம்.
ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால், இவள் புண்ணியவதி என்பதை நானும், ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும்.
மாறாக நடந்தால்,இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும்.” என்று எண்ணி, அவள் கேட்ட தொகையைத் தருகிறார்.
அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார், யாருக்கு தர வேண்டுமோ, அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு “இறைவா! உன்னை நம்பித்தான், இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன்.
என்னைக் கைவிட்டு விடாதே” என்று வேண்டிக் கொண்டு நிம்மதியாக சிவனை நினைத்து உறங்கச் செல்கிறாள்.
இங்கே செல்வந்தரோ, ”அவசரப்பட்டு விட்டோமோ? ஏமாந்து பெருந்தொகையை கொடுத்து விட்டோமோ?” என்று உறக்கம் வராமல், எப்பொழுது விடியும்?
என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து,”நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு, கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு,
ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன?” என்று குறித்துக் கொண்டே வாருங்கள்.
எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும்”
என்று ஏற்பாடு செய்து விட்டு, அன்று விடிந்ததும் வீட்டின் மேல்விதானத்தில் அமர்ந்து கொண்டு, குளக்கரையை பார்வையிட துவங்குகிறார்.
விடிந்து, காலை மணி ஆறு ஆகிறது. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று, குளத்து நீரை அருந்தி விட்டு மறுபக்கம் செல்கிறது. அவ்வளவுதான். குபுகுபுவென தூப, தீப, சாம்பிராணி, குங்கும சந்தன மணத்தோடு மேளத்தாளத்தோடு, உடுக்கை ஒலிக்க #எம்பெருமான் #சிவலிங்கம் மேலே வந்து மிதக்கிறார்.
அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கி நிலைகுழைந்து தரையில் அமர்ந்து விட்டார்.
“ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே, ஐந்து லட்சத்திற்கு சமம் என்றால், அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால், என் செல்வம் அத்தனையும் வீண்”
என்பதை புரிந்து கொண்டு, “என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே! செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன்.
அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள்.” என்று கூற, ஊரே சென்று பார்த்தது.
அதன் பிறகு, தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து, அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு, தானும் கடைசிவரை தர்மம் செய்து வாழ்ந்தார். இது 300-400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்
”தர்மங்களை செய்கிறோம்? இருப்பினும் நம் வாழ்க்கை சிறக்கவில்லையே? ஒரு வேளை நாம் முட்டாள்தனமாக வாழ்கிறோமா? மற்றவர்கள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக வாழ்கிறார்களே? நாமும் அது போல வாழவில்லையே? தனத்தை சேர்த்து வைக்கவில்லையே?”
என்ற எண்ணம் வரும் போதெல்லாம், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தால், மனதிற்கு கட்டாயம் உற்சாகம் கிடைக்கும்.
எனவே, அன்பர்களே..
இதைக் கதை என்று பார்க்காமல், தர்மத்தின் பாதையை உணர வேண்டும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...