Sunday, August 14, 2022

நீதிபதி சர்ச்சை தவறான முன்னுதாரணம்!

 நீதி பரிபாலனமே நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் உயரிய நம்பிக்கை. அதை வழங்கக்கூடிய நீதிபதிகள் மீது குற்றம் குறை கூறுவது ஏற்புடையதல்ல. நீதிமன்ற நடவடிக்கைகளில், எந்த ஒரு தனி நபரோ, இயக்கமோ தலையிடுவது கூடாது என்பது, நம் நாட்டின் சட்ட விதி.


ஆனால், வழக்குகளில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்று எண்ணி, சிலர் செயல்படுவது வருந்தத்தக்கது. ஒரு வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கும் போது, அது ஒருவருக்கு சாதகமாகவும், மற்றொருவருக்கு பாதகமாகவும் தான் இருக்கும். கறுப்பு துணியால் கண்ணை கட்டிக் கொண்டிருப்பது போல, நீதி தேவதை சிலையை உருவாக்கி இருப்பது எதற்கென்றால், உண்மைக்கும், சட்டதிட்டத்திற்கும் புறம்பான நீதியை வழங்கி விடக்கூடாது என்பதை சூட்சுமமாக உணர்த்தத் தான்.


இந்நிலையில், அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கை, உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பு மனுத்தாக்கல் செய்ததும், தனி நீதிபதி மீது நம்பிக்கைஇல்லை என்று கூறியதும் நற்பண்பு அல்ல. அத்துடன், நீதிபதி தானே முன்வந்து, தன் மீது நம்பிக்கை இல்லாத நிலையில், இவ்வழக்கை விசாரிக்க விரும்பாமல் மனவருத்தத்துடன் விலகி இருப்பது, மிகப்பெரிய களங்கம் என்றால் மிகையாகாது.


இப்படிப்பட்ட சூழல்களை, அவரவர் பொறுப்பில் இருக்கிற போது தான் உணர முடியும். எனவே, இனியாவது நீதித்துறையின் தீர்ப்புக்கு தலை வணங்கும் போக்கை, அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே, நடுநிலை ஜனநாயகவாதிகளின் கருத்தாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...