''வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. பாலின பேதம், பிராந்திய ஏற்றத் தாழ்வுகள் மறைந்து வருகின்றன,'' என, ஜனாதிபதி திரவுபதி முர்மு குறிப்பிட்டார்.சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டு மக்களுக்கான தன் முதல் உரையை நேற்று நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியாவின் ஜனநாயக முறை வெற்றி பெறாது என்று பலர் பேசினர்.

அதில் வெற்றியை அடைந்ததுடன், ஜனநாயகத்தையும் மேம்படுத்திஉள்ளோம். இந்த விஷயத்தில், உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக நம் நாடு உள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களிலும் நம் நாடு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் காலத்துக்குப் பின், உலக அரங்கில் இந்தியாவின் உதவியை பல நாடுகளும் எதிர்நோக்கிஉள்ளன.கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது மற்றும் தடுப்பூசி இயக்கத்தில் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாகவும் இந்தியா உள்ளது.பாலின பேதம், பிராந்திய ஏற்றத் தாழ்வுகள் மறைந்து வருவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக உள்ளது. தன்னுடைய வளர்ச்சியுடன், மற்றவருக்கும் வளர்ச்சியின் பலன் கிடைப்பதை அனைத்து மக்களும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment