Monday, January 30, 2012

மனிதனின் கட்டாயத் தேவையான கொழுப்பு அமிலம்...!



omega_3மனிதனின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் சர்க்கரை/மாவுப்பொருள், புரதம் மற்றும் கொழுப்பு தேவை. அதிலும் குழந்தைகளுக்கு புரதமும் கொழுப்பும் அதிகம் தேவை. கொழுப்பில், கிளிசராலின் மூன்று எஸ்டர்களும், கொழுப்பு அமிலங்களும் உள்ளன. வைட்டமின் A ,D , E & K போன்றவை கொழுப்பில்தான் கரையும். நம் உடலின் தோல், முடி போன்றவை நன்றாக இருக்கவும், உடலின் வெப்பநிலையை ஒரே அளவில் சீராக பராமரிக்கவும், செல்கள் நன்கு செயல்படவும், உடலுக்கு அதிர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கவும், நமக்கு கொழுப்பு கட்டாயம் வேண்டும். மேலும் கொழுப்பு உடலுக்கு வேண்டிய ஆற்றலை சேமித்தும் வைக்கிறது. நீங்கள் விரதம் என்று பட்டினி கிடக்கும்போது, உங்களுக்கு தேவையான சக்தியைத் தருபவர் சேமிக்கப்பட்ட கொழுப்புதான்..! அதிக கலோரி தரும் பொருளும் கொழுப்புதான்..! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் விளைவுதான் கொலஸ்டிரால்..!
இன்றியமையாத கொழுப்பு அமிலம் ஒமேகா 3!
  கொழுப்பே இல்லாத உணவை உண்பது என்பது சாத்தியம் அல்ல. அரிசியில் கூட கொஞ்சூண்டு கொழுப்பு உள்ளது. சில கொழுப்பு அமிலங்கள் நம் உடல் செயல்பாட்டுக்கு கட்டாயம் தேவை. நம் உடலால் உற்பத்தி செய்ய முடியாதவைகளையே, உடலுக்குத் தேவையான கட்டாய பொருள்கள் என்கிறோம். அது போல ஒரு முக்கியமான கொழுப்பு அமிலம்தான் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ( ω−3 fatty acids or omega-3 fatty acids) கடந்த 20 ஆண்டுகளாக, இதன் மகத்துவம், ஆராய்ச்சி மூலம் அறியப்பட்டு, மிகவும் மதிக்கப்படுகிறது. அப்படி என்ன இது செய்கிறது என்கிறீர்களா? இதயப் பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயமாக இதன் பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
  ஒமேகா-3-கொழுப்பு அமிலம் என்பது ஒரு பூரிதமற்ற கொழுப்பு அமிலம் (poly-unsaturated fatty acid). இந்த அமிலம் பொதுவாக மீன், விதைகள் மற்றும் அதிக பசுமையான அனைத்துப் பொருள்களிலும் முக்கியமாக கீரை வகைகளில் காணப்படுகிறது. இது இதய நோய்கள், வீக்கம், சிலவகை புற்றுநோய்கள், சர்க்கரை நோய், கண் தொடர்பான வியாதிகள் போன்றவற்றிலிருந்து நமக்கு பாதுகாப்பு கவசம் தருகிறது. மேலும் சூலுற்ற பெண்ணின் கருப்பையில் வளரும் கருவின், மூளை நன்கு உருவாக ஒமேகா-3-கொழுப்பு அமிலம் அவசியம் தேவைப்படுகிறது. இது வளரும் சிசுக்களின் சரியான மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு செயல்பாடுகளுக்கு மிக முக்கிய தேவையாக இருக்கிறது.
அதனால்தான் குழந்தைகளுக்கான பால் பவுடரில் இது கலக்கப்படுகிறது. அதுதான் டோகொசா ஹெக்சனாயிக் அமிலம்/ஆல்பா லினோலெனிக் அமிலம் ( docosahexaenoic acid (DHA) / α-linolenic acid (ALA) எனப்படுகிறது. இது ஒமேகா-3-கொழுப்பு அமிலத்தின் வழியே உருவாகும் ஒரு வேதிப்பொருள். இது அதிகமுள்ள உணவு, கெட்ட கொழுப்பை(LDL - Low Density Lipid , VLDL - Very Low Density lipid ) குறைக்கிறது; நல்ல கொழுப்பை (HDL -High Density Lipid)அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்த தமணிகளின் மேல் படிந்துள்ள கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும், மன அழுத்தத்தையும் குறைப்பதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனுக்கு வயதான காலத்தில் ஏற்படும் நினைவு மறதி நோயை (Alzheimer's disease) தடுக்கவும் இது உதவுவதாக, 2005 ம் ஆண்டின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
 அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 -கொழுப்பு அமிலம் காணப்படுகிறது. மீனில் மிகக் குறைந்த கொழுப்பே உள்ளது. மேலும் இதில் நமக்குத் தேவையான புரதம், வைட்டமின் A &D உடலின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், ஐயோடின், புளுரின் போன்ற ஏராளமான தாது உப்புக்கள் உள்ளன. இதில் கொஞ்சம் கூட மாவுப்பொருள் கிடையாது. மிக குறைந்த கலோரியே உள்ளது. அமெரிக்க இதய சங்கம் வாரத்திற்கு இருமுறை, மீன் சாப்பிடச் சொல்லி சிபாரிசு செய்கிறது. இதன் முக்கியத்துவம் கருதி, நிறைய உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், ரொட்டி, கேக், யோகர்ட் என்னும் இனிப்பான தயிர், குழந்தைகளுக்கான உணவுகள் இவற்றில் ஒமேகா-3 -கொழுப்பு அமிலம் சேர்க்கின்றன . மீன் தவிர, இது சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றிலும் உள்ளது. 
  கடல் மீனின் நன்மைகள்..! 
   heart_303_copyநீங்கள் 150 கிராம் கடல் மீன்/கடல் உணவு சாப்பிட்டால், அது உங்களின் ஒரு நாளைய புரத தேவையின் 50 -60%த்தை நிறைவு செய்துவிடும். அனைத்துவித கடல் உணவுகளும், இறால் தவிர, குறைவான கொழுப்பு உள்ளவையே..! கடல் மீனில் 5%கும் குறைவான கெட்ட கொழுப்பே உள்ளது. இவைகளில், அதிக கொழுப்பு இருந்தாலும், அதனை இதிலுள்ள ஒமேகா-3-கொழுப்பு அமிலத்தின் ஆல்பா லினோலினிக் அமிலம் ( DHA - α-linolenic acid (ALA),எபிகோசாபெண்டானாயிக் அமிலம் ( EPA -eicosapentaenoic acid (EPA) ஈடுகட்டிவிடுகின்றன. வாரம் இருமுறை மீன் சாப்பிட்ட மாதவிடாய் நின்று போன சுமார் 3 ,500 பெண்களிடம் ஆய்வு செய்ததில் இவர்களின் கருப்பை புற்றுநோய் விகிதம் குறைந்துள்ளதாம். கருவுற்ற காலத்தில் நிறைய மீன் உண்டதால், குறைமாத குழந்தை பிறப்பும், எடை குறைவான குழந்தை பிறப்பும் குறைந்துள்ளதாம்.
டிமென்ஷியா(Dementia) என்னும் ஞாபக மறதி நோயை 30% கட்டுப்படுத்துகிறது. மிகவும் நாள்பட்ட நோய்களை சரியாக்குகிறது. மேலும் 2009ல் இதய நோய் உள்ளவர்ககுக்கு, மீன் சாப்பிடச் சொல்லி, பல நாடுகள் நடத்திய ஆய்விலும் இதய நோயாளிகளின், இதய நிலைமையில், சீரான நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன.

ஒமேகா-3 -கொழுப்பு அமிலத்தின் சிறப்பு நன்மைகள்:
இரத்தக் குழாய் நோய்கள், இதயம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
கெட்ட கொழுப்பைக் குறைத்து, நமக்குத் தேவையான நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
ஜியார்டியா பல்கலைக் கழக ஆய்வின்படி, உடல் எடையைக் குறைத்து சீராக்குகிறது.
மார்பகம், பெருங்குடல் மற்றும் பிராஸ்டேட் புற்றுநோயைத் தவிர்க்கிறது. மேலும் புற்றுநோய் பாதிப்பு வந்தவர்களுக்கும், மீன் உணவு உதவுகிறது.
மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் உதவுவதால், அல்சீமர் மற்றும் மறதி நோயைக் கட்டுப்படுத்துகிறது. சிலருக்கு குணப்படுத்தியும் இருக்கிறது.
மூட்டு வாத நோயையும், வீக்கத்தையும் குணப்படுத்தும்.
கண் பார்வைக்கு பெரிதும் உதவும். மீன் உண்பதால், வயது மூப்பால் ஏற்படும் பார்வை பிரச்சினை தவிர்க்கப்படும்.
தோலை பளபளப்பாக, பளிங்கு மேனியாக வைக்க பணிபுரியும்.
மன அழுத்தம், சோர்வு, மன உளைச்சல் போனவற்றை விரட்டும்.
ஆஸ்துமாவின் நிவாரணி.
புற்றுநோய் வருவதை தவிர்க்கும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
தோலின் சொறி, சிரங்கு வராமல் பாதுகாக்கும்.
ஒற்றைத் தலைவலி, வராமல் விரட்டும்.
உடல் பருமனை வளர விடாது.
மீனை குழம்பில் போட்டு சாப்பிட்டால் மட்டுமே இந்த பலன்கள் கிட்டும். எண்ணெயில் பொரித்தால்....கொலஸ்டிரால் கூடும். கவனம் இதில் தேவை..!

Thursday, January 12, 2012

நா‌‌ம் வா‌ங்‌கிய‌ப் பொரு‌ள் ச‌ரியானதா,

எதனை பார்த்தாலும் எல்லாத்திலும் கலப்படம் தான் . இப்பிடியே போனால் நிலைமை என்னாவது ? அதுவும் கலப்படம் கலந்து இருப்பதை சில பொருட்களை பார்த்தால் கூட கண்டு பிடிக்க முடியாது . அவ்வளவுக்கு கலப்படம் கலந்ததே தெரிவதில்லை .

நான் யோசிப்பதுண்டு . இதென்னடா முன்னம் வாழ்ந்த மனிதர்கள் எல்லோரும் எண்பது, எழுபது , நூறு வயது வரை இருந்தார்கள் .  நோய் நொடி இன்றி இருந்தார்கள் .. இப்போது பார்த்தால் சிறு வயதிலேயே ஒவ்வொரு வருத்தங்கள் வந்து இறந்து போகிறார்கள் . வயிறில் கல்லு , கிட்னி பழுதாகி விட்டுது , இரத்த அடைப்பு  என சொல்லி கொண்டே போகலாம் . இப்போது பார்த்தால் இந்த பொருட்களுக்கு சேர்க்கப்படும் கலப்படம் தான் காரணம் . அவர்களுக்கு ஒவ்வொரு வருத்தங்கள் வர காரணம் . நச்சு தன்மை கொண்டமைந்து , உடலுக்கு தீங்கு பயக்கும் பொருட்களை கலக்கின்றார்கள் . அதனால் தான் இந்த நிலைமை .










முன்னைய கால மனிதர் பச்சை பசெலேன்று நல்ல மரக்கறிகள் , பழங்கள், மீன்கள் என அன்றாட தேவைக்கு வாங்கி அன்றாடம் சாப்பிட்டார்கள் . பழங்கள் எல்லாம் மரத்தில் பழுக்கும் வரை பிடுங்காமல் பழம் நிலத்தில் விழும் வரை காத்து இருந்து  உடனே உண்பார்களாம் . அதில் நல்ல ருசி இருக்கும் . பழம் கனிந்து நான்றாக தானே இருக்கும் .

ஆனால் இப்போது அப்படியா நிலைமை ?
இல்லையே . மரத்தில் மாங்காய்களை காயுடன் வாங்கி அவற்றுக்கு உடனே பழுக்க கூடியவாறு மருந்துகளை அடித்து மாங்காய்களை பழுக்க வைக்கிறார்கள் . முன்னம் எல்லாம் மாங்காய்களை பழுக்க வைக்க வைக்கோலுக்குள் தாட்டு வைப்பார்கள் . இப்போது எல்லாம் அப்பிடி வைத்தா பழுக்க வைக்கிறார்கள் .

மீன்களுக்கு எல்லாம் பல மருந்துகளை அடித்து  நாறாமல் வைத்து அடுத்தநாளைக்கு விக்கிறார்கள் . பார்த்தால் புது மீன் போல் இருக்கும் . வீட்டில் கொண்டு வந்து வெட்டினால் நாறும் . அப்படி இப்படி எல்லாம் ஒன்றா , இரண்டா . சொல்லிக்கொண்டே போகலாம் இந்த கலப்படம் எவ்வளவு பொருட்களில் சேர்க்கப்படுகிறது என்று ........



தேனுக்குள் சர்க்கரை பாணியை கலக்கிறார்கள் , அரிசிக்குள் சிறு கற்கள்  மற்றும் சில கூடாமல் போன அரிசி குறினிகள் எனவும் உப்புக்குள் சின்ன வெள்ளை கற்கள் , புளிக்குள் தண்ணீரை கலந்து பிசைவது  என எல்லாமே கலப்படம் தான்.



மஞ்சள் தூளுடன் கலப்படம் செய்ய லெட் க்ரோமேட் என்கிற கெமிக்கலைப் பயன்படுத்துகிறார்கள்… இது எப்பவாவது  ஒரு நாள் கிட்னியை செயலிழக்கச் செய்துவிடும். இந்த  மஞ்சள் தூளில்  இது கலந்துள்ளது என்பதெல்லாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாது .முழு மஞ்சளைவிட, மஞ்சள் தூள் தான்  சமையலுக்கு எளிது என்று நாமும் எளிதாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறோம்.


ஆனா‌ல் பலரு‌ம் கவ‌னி‌க்காத ‌விஷ‌ய‌ம், நா‌‌ம் வா‌ங்‌கிய‌ப் பொரு‌ள் ச‌ரியானதா, தரமானதா, கல‌ப்பட‌ம் இ‌ல்லாததா, எங்கே தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டது அ‌ல்லது போ‌லி பெய‌ர்க‌ளி‌ன் உருவானதா எ‌ன்பதை‌த்தா‌ன். இவற்றை எல்லாம் நாம் கவனிப்பதில்லை . கடைக்கு சென்றோமா , பொருட்களை வாங்கினோமா என்று இருப்போமே தவிர இவற்றை எல்லாம் எல்லோரும் கவனிப்பதில்லை . இதனால் தான் மோசடி வேலை பார்ப்பவர்களும் அதிகரிக்கிறார்கள் . இப்படி செய்தால் எவர்கள் என்ன கவனிக்கவா போகிறார்கள் என்று பாலுக்குள் தண்ணீர் கலக்கிறார்கள் , எண்ணைக்குள் கூடாமல் போன எண்ணைகளை கலக்கிறார்கள் .



நா‌ம் வா‌ங்கு‌ம் கடு‌கி‌ல் இரு‌ந்து  புடவை முத‌ல் த‌ங்க‌ம் வரை எ‌ல்லாவ‌ற்‌றிலு‌ம் கல‌ப்பட‌ம்  இருக்கிறது .  பாலில் நீர் சேர்ப்பதும், அரிசியில் கல் இருப்பதும்  தான் எல்லோரும் அறிந்த விடயம் . இன்னும் பல பொருட்களில் இந்த கலப்பட வேலை நடைபெறுகிறது . அது எல்லோருக்கும் புரிவதில்லை .


பாலுக்குள் தண்ணீர் , அரிசிக்குள் கல்லு ,  பருப்புக்குள் கேசரி பருப்பு ,  மிளகுக்குள் பப்பாளி விதைகள் ,  மிளகாய் தூளுக்குள் செங்கட்டி தூள் ,  தேயிலைக்குள் அரைத்த உளுத்தம் தோல் , எப்படி ஏராளம் .


இப்படி எல்லாம் எதற்காக என்றால் ? அவர்கள் தங்களுடைய வருமானத்தை உயர்த்துவதற்கு பயன்படுத்தும் உக்தி தான் . நல்லா சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் . இவர்களுக்கு எல்லாம்  மனசாட்சியே இருக்காதா? அதே கலப்பட பொருட்களை அவர்களின் குடும்பத்தினரும் தானே சாப்பிடுவார்கள்? இதை எல்லாம் ஏன் அவர்கள் உணர்வதில்லை ? இவர்களை எல்லாம் என்ன செய்வது ? திருந்த மாட்டார்களா ?


 


தேங்காய் எண்ணெயுடன், பெட்ரோலியத்தில் இருந்து கிடைக்கும் ஆயில் கலக்கப்படுவதும் உண்டு.
அதேப்போல நல்லெண்ணெயுடன் விலை குறைந்த பாமாயில் அல்லது தவிட்டு எண்ணெய் கலக்கப்படுகிறதும் பலரும் அறிந்ததே. இவற்றால் எல்லாம் உடம்புக்கு பாதிப்பு தானே ? இப்படி எல்லாம் நடந்தால் உடம்பில் பாதிப்பு வரத்தான் செய்யும் .

கலப்படம் செய்பவர்கள் திருந்தினால் தான் உண்டு . அல்லாவிடில் ஒவ்வொரு நோய்களால் மனிதர்கள் இறப்பது தொடர்ந்த வண்ணமே இருக்கும் . ஒன்றும் செய்ய முடியாது .

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் !!!

http://www.sundayobserver.lk/2009/01/11/z_jun-p03-Thai-Pongal,-the.jpg

தமிழர் பண்பாடு, கலாசாரம் என்பதை கட்டி காக்க வேண்டியது நம் தமிழர்கள் அனைவரினதும் கடமை . விழாக்கள் , பண்டிகைகள் என்பன நம் அடையாளங்கள் . தை மாதம் வந்தால் தை பொங்கலும் , தை பூசமும் விசேசம் . மாசி மாதம் வந்தால் மாசி மகம் . இப்படி எமது கலாசாரத்தில் ஒவ்வொரு விழாக்களும் , பண்டிகைகளும் வந்து போகின்றன. அதுபோல் தை பொங்கலும் விசேசம் .
http://www.pongalfestival.org/gifs/pongal-pooja.jpg
தை பொங்கலுக்கு எல்லோர் வீட்டிலும் புதிய பானை வாங்கி பொங்கல் பொங்கி , வெடி கொளுத்தி எல்லோரும் சந்தோசமாக , குடும்பத்துடன் தை பொங்கலை  கொண்டாடுவார்கள் . மனதில் உள்ள துக்கங்கள் நீங்கி சந்தோசம் உண்டாகி எல்லோரிடனும் அன்பாக கொண்டாடுங்கள் தை பொங்கலை எல்லோரும் . குடும்பத்தினருடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு நல்ல காரியங்களை செய்யலாம் .
http://jaffnahindu.info/HinduData/imgnews/culture/JaffnaHindu_Pongal.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbWFaKB_qWxGNB4TnHy9NnmpniHS-U7YfdPfb8PMAkaMKPQGDxhPdObFhsM8NznSyrKbbdBz51FbFmOWQSwh-ea897nkhyMWIzgawrE0nRA-EesaMn1CFp2J7VeRfoM_UUbSEL2gyV0-I/s400/Thai+Pongal+at+Sivan+6.jpg
எனது நண்பர்களுக்கும் , அவர்களது உறவினர்களுக்கும் எனது தை பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . இந்த தை பொங்கலை எல்லோரும் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடுங்கள் . சந்தோசமாக இருங்கள் .  அனைத்து நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
http://www.lankanewspapers.com/news/2009/1/images/newsThipongal.jpg

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...