Friday, May 13, 2011

தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்

தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்
 
இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க கூட்டணி 204 தொகுதிகளிலும், தி.மு.க கூட்டணி 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 13ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் தி.மு.க அணியில் காங்கிரஸ், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளன.
அ.தி.மு.க அணியில் தே.மு.தி.க, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய குடியரசு கட்சி, பார்வர்ட் பிளாக், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையும் இடம் பெற்று தேர்தலை சந்தித்தன.
வாக்கு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 8 முதல் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு மேஜைக்கு 3 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு மேஜையிலும் வீடியோ கமெரா, வெப் கமெரா வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை முழுமையாக பதிவு செய்யப்பட உள்ளது.


 தமிழக மக்கள் வரலாறு காணாத வகையில் அமைதியான புரட்சியை நடத்தி முடித்திருப்பதை நான் மனமாறப் பாராட்டுகிறேன். சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட, பெரும்பாலான திமுக அமைச்சர்களும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக – காங்கிரஸ் கட்சிகள் செய்த அப்பட்டமான துரோகத்திற்கும், தமிழக மீனவர்களை
காக்கத் தவறியதற்கும், இந்தியாவின் மிகப் பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்ததற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தச் செய்யப்பட்ட முயற்சிக்கும் சரியான பாடத்தினை மக்கள் கற்பித்திருக்கிறார்கள்.
பண பலம், அதிகார பலம், இலவசங்களை வாரி இறைத்தல் ஆகிய எதற்கும் மக்கள் ஏமாறவில்லை. திமுக கூட்டணி செய்த முறைகேடுகளை முறியடித்துள்ளனர். திருமங்கலம் சூத்திரத்தை செயற்படுத்த விடாமல் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நேர்மையான நடவடிக்கைகள் ஜனநாயகத்தைக் காப்பாற்றி உள்ளன.
மத, சாதி, பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்தத் தமிழகமும் திமுக கூட்டணிக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது. மக்கள் அளித்த இந்த தீர்ப்பினை வரவேற்றுப் பாராட்டும் அதே வேளையில் புதிய அரசை அமைக்கவிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களுக்கும் எனது பாராட்டுதலையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை முதல் கடமையாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

தமிழகத் தேர்தல் 2011 - சில செய்திகளும், சில கமெண்ட்சும்

கலைஞர் டிவி காலை 945 மணி வரை சிறப்பு ஓளிபரப்பை வைத்துக்கொண்டு திமுக 29 இடங்களில் முன்னிலை, அதிமுக 28 இடங்களில் முன்னிலை என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தார்கள், அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் பாடல்கள் ஒளிபரப்பினர். நக்கீரன் கோபால் 945 மணிக்கும் நாங்கள்தான் ஆரம்பத்திலேயே சரியாகக் கணித்தோம் திமுக வெற்றிபெறுமென்று கூவிக் கொண்டிருந்தார்.
கமெண்ட்: கோவாலு, உங்க கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லியா? உங்கள கடல்ல தள்ளினாக் கூட கட்டுமரமா மிதப்பீங்க போலிருக்கே!!

அதிமுக கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது.வடிவேலு: அப்ப நானாத்தான் மாட்டிட்டனா??

கொளத்தூரில் முடிவு தள்ளிவைப்பு, மெஷின் கோளாறால் இழுபறி
ஸ்டாலின்: நமக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் நடக்குதோ??

கலைஞர்: தமிழக மக்கள் எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து விட்டார்கள்அப்ப இனிமே இளைஞன், பொன்னர் சங்கர் மாதிரி நிறைய படம் கொடுப்பீங்க போலிருக்கே, பாவம்தான் நாங்க!!

தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர் கட்சியாகிறது.ரஜினி அப்பவே தமிழக மக்களை இனிமே ஆண்டவனாலும் காப்பாத்த முடியாதுன்னு இதை நினைச்சுத்தான் சொன்னாரோ? என்ன கொடுமை சரவணன் இது??
ரஜினி பூரண நலமாக உள்ளார்
இதுக்கும் எலக்சன் ரிசல்ட்டுக்கும் சம்பந்தம் இல்லை. அவரு ஓட்டு போட்டதை வீடியோ எடுத்த நாளிலிருந்தே உடம்பு சரியில்லாம் இருந்தாரு, பாவம் இப்பதான் பாதி உசுரு வந்துருக்கு!!

சட்டசபை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்படும்
ஆரம்பிச்சீட்டிங்களா? இன்னும் ரிசல்ட்டே முழுசா வரலையே?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...