Monday, April 29, 2013

பக்கவாதம் அறிகுறிகளும், ஆபத்தும்..!

உலகிலே மிக அதிக அளவு மக்களை ஊனமாக்குவது..! வருடத்திற்கு ஆறு கோடி மக்களை உலகம் முழுக்க படுக்கையில் தள்ளி, முடக்கிப் போடுவது..! வருடத்திற்கு ஒன்றரை கோடி மக்களை உலகம் முழுக்க பலிவாங்கிக் கொண்டிருப்பது..! எந்த நோய் தெரியுமா? ப்ரெயின் அட்டாக் எனப்படும் பக்கவாத நோய்!!
உலகம் முழுக்க 6 வினாடிக்கு ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பதால், இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மிக மிக அவசியம். நடை பயிலும் குழந்தை முதல், நடக்க தள்ளாடும் தாத்தா வரை யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இந்த நோய் தாக்கலாம்.
மின்னல்போல் திடீரென்று இந்த நோய் மனித மூளையை தாக்குவதால் ப்ரெயின் அட்டாக் என்கிறோம். பக்கவாதம் நரம்பியல் சார்ந்த நோய். நரம்புகள் மூளையிலும், தண்டுவடத்திலும் ஆரம்பித்து தசைகளை இயக்குகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்தாலோ, அந்த ரத்தக் குழாய்கள் வெடித்தாலோ ப்ரெயின் அட்டாக் ஏற்படும்.
அப்போது மூளையின் எந்த பகுதிக்கு ரத்த ஓட்டம் குறையுமோ அந்தப் பகுதி பாதிக்கப்படும். உடனடியாக கவனிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி செயலிழந்துபோகும். பக்கவாதத்தால் உடல் செயலிழந்துபோவதை தடுக்க முடியுமா? – முடியும்.
வாய்கோணுதல், வார்த்தைகள் குளறுதல், நடையில் தள்ளாட்டம், தடுமாற்றம், கை-கால் தூக்கமுடியாத நிலை, கை-கால்கள் உணர்ச்சியற்று மரத்துபோதல் போன்ற அறிகுறிகள் தென்பட்ட நாலரை மணி நேரத்திற்குள் நோயாளியை அதற்குரிய மருத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றால் பக்கவாத செயலிழப்பை தடுத்திட முடியும்.
மேற்கண்ட அறிகுறிகளை கொண்ட நோயாளிக்கு மூளையில் என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய உடனடியாக அவருக்கு சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செய்யப்படும்.
கண்டறிந்து மூளைக்கு செல்லும் குழாயில் ரத்தம் உறைந்திருந்தால் அதை சரிசெய்வதற்கான ஊசியும், ரத்தக் குழாய் வெடித்திருந்தால் அதை ஒட்டி சரிசெய்யும் தன்மை கொண்ட ஊசி மருந்தையும் செலுத்தவேண்டும். அறிகுறிகள் தென்பட்ட நாலரை மணி நேரத்திற்குள் பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை செய்யாவிட்டால், பக்கவாத பாதிப்பு உடலின் ஒரு பகுதி இயக்கத்தையே முடக்கிவிடும்.
பாதிக்கப்பட்ட மூளைப்பகுதியை மீண்டும் சரி செய்ய இயலாது என்பதால், முடங்கிப் போகும் உடல் பகுதியை மீண்டும் சீராக்கும் வாய்ப்பு குறைவு. இந்தியாவில் பெரும்பாலான நோயாளிகள் பக்கவாதத்திற்கான அறிகுறி தென்பட்ட பின்பு, ஒரு மணி நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம், நமது டாக்டர் மாலையில்தான் வருவார்.
அதுவரை காத்திருக்கலாம் என்று நினைத்து அமைதியாகி, நாலரை மணி நேரத்திற்குள் சிகிச்சையை பெறாமல் தவிர்த்துவிடுகிறார்கள். அதனால் பாதிப்பு அதிகமாகிவிடுகிறது. பக்கவாதம் ஏற்பட என்ன காரணம்?
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மது அருந்துதல், புகைபிடித்தல், உடல் குண்டாக இருத்தல், தேவையற்ற கொழுப்பு அதிகமாக இருத்தல் போன்றவை முக்கிய காரணங்களாகும். பாரம்பரியமும் ஓரளவுக்கு காரணமாக இருக்கிறது. உடற்பயிற்சியின்மை, மனஅழுத்தம், ஓய்வின்மை போன்றவைகளும் இதற்கு காரணமாகும்.
அதனால் பக்கவாதத்தை லைப் ஸ்டைல் நோய் என்று கூறுகிறோம். இந்த நோய் அதிகமாக ஆண்களைத்தான் தாக்கும் என்ற பொது வான கருத்து உள்ளது. ஆனால், பெண்கள்தான் அதிக தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். மாதவிலக்கு நின்றுபோகும் மெனோ பாஸ் காலம் வரை பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு நன்றாக இருக்கும். அந்த காலகட்டத்திற்கு பிறகு பெருவாரியான பெண்களை பக்கவாதம் தாக்குகிறது.
அதனால் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுக்க இந்த நிலைதான் நீடிக்கிறது. முன்பெல்லாம் பக்கவாதம் போன்ற நோய்கள் 40 வயதிற்கு மேல்தான் வரும் என்ற நிலை இருந்தது. இப்போது இளைஞர்களும் இந்த நோயால் தாக்கப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம், உணவுப் பழக்கம்.
எண்ணெய்யில் வறுத்த, பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். ஜங்க் புட்ஸ், பாஸ்ட் புட்ஸ் போன்றவைகளை விரும்பி சாப்பிட்டு, உடற் பயிற்சியும் உடல் உழைப்பும் இல்லாமல் இருப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகமாகிறது. குண்டாகிறார்கள். பக்கவாதத்தை தடுக்க விரும்புகிறவர்கள் உணவு பழக்கத்தை சரிசெய்யவேண்டும்.


நிறைய தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் அதிகம் பருகினால் மூளைக்கு அதிக ரத்தம் செல்லும். ரத்த அழுத்தம் அதிகரிப்பதும் ஆபத்து. ரத்த அழுத்தம் அதிகரித்தால் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் வெடிக்கும் சூழ்நிலை உருவாகும். சர்க்கரை நோயையும் எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
பக்கவாத தாக்குதல் ஏற்படக்கூடாது என்று கருதும் பெற்றோர் முறையான உணவு, உடற்பயிற்சி, நோய்க்கட்டுப்பாடு போன்றவைக ளை கடைப்பிடிக்கும் அதே நேரத்தில், தங்களது வாரிசுகளை சிறுவயதில் இருந்தே முறையான உணவுப் பழக்கம், நன்றாக வியர்க்கும் அளவுக்கு விளையாடுதல் போன்றவைகளில் ஈடுபடுத்தவேண்டும்.
சிறுவயதில் இருந்தே வாழ்வியல் முறைகளை செம்மையாக கடைபிடித்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். மது பழக்கமும் பக்கவாதத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது. குடிப்பவர்களால் பெரும்பாலும் மது அளவை கட்டுப்படுத்த முடிவதில்லை.
வாரத்திற்கு ஒருமுறை, மாத்திற்கு ஒருமுறை என்பது போன்ற கட்டுப்பாடுகளை அவர்கள் மீறிவிடுவது, இந்த நோய்க்கு காரணமாக அமைகிறது. பள்ளிப்பருவம், கல்லூரிப் பருவத்திலே குடிப்பழக்கம் வந்துவிட்டால் எதிர்காலத்தில் அனேகமாக அவர்கள் பக்கவாத தாக்குதலுக்கு உள்ளாகிவிடுவார்கள். மது அருந்தும் பழக்கம் இருந்தால் இப்போதே கைவிட்டுவிடுங்கள்.
மற்ற நோய் பாதிப்புகளுக்கும்- பக்கவாத நோய் பாதிப்பிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மற்ற நோய்களின் தாக்குதலுக்கு உள்ளான நோயாளி, சிகிச்சை எடுத்துக்கொண்டே தனது அன்றாட வேலைகளை ஓரளவாவது பார்ப்பார். அதனால் அவருக்கு உடல் இயக்கம் இருக்கும். பக்கவாத நோயாளி படுத்தபடுக்கையாகிவிடுவார். அவரால் உடற்பயிற்சி செய்ய முடியாது.
கொழுப்பு குறையாது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவைகளையும் கட்டுக்குள் கொண்டுவருவது கடினம். ஓடி ஆடி வேலை பார்த்த அவர் படுக்கையில் முடங்கும்போது சாப்பிடுவது மட்டுமே அவரது பொழுதுபோக்குபோல் ஆகிவிடும். வீட்டிலும் நோயாளி என்று நிறைய உணவுகளை வழங்குவார்கள்.
அதனால் உடலில் இருக்கும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுவதற்கு பதில் அதிகரித்துவிடும். பக்கவாத தாக்குதல் ஏற்படுகிறவர்களில் 6 சதவீதம் பேருக்கு மாரடைப்பும் சேர்ந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு இருவிதமான சிகிச்சைகளையும் உடனே வழங்கவேண்டும். சிறுமூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது, பக்கவாத தாக்குதலில் அபாயகரமானதாகும்.
இந்த பாதிப்பிற்குள்ளா கிறவர்களில் 85 சதவீதம்பேர் கோமா அல்லது மூச்சு நின்றுபோய் இறந்துவிடுவார்கள். பொதுவாக தூக்கத்திலே ஒருவர் இறந்துபோய்விட்டால் அவரது உயிர் பிரியக் காரணம், மாரடைப்பு என்பார்கள். சிறுமூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலும், தூக்கத்திலே உயிர் பிரிந்துவிடுவது உண்டு.
சிறுமூளை பாதிப்பை சரிசெய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்போதுதான் அவரை மூளைச்சாவு அடைந்தவராக அறிவிக்கிறார்கள். இப்போது கருவில் இருக்கும் சிசுவை ஆராய்ந்து, எதிர்காலத்தில் அதற்கு ஏற்பட இருக்கும் ஒரு சில நோய்களை முத லிலே கண்டறிந்துவிடலாம். பக்கவாதம் மல்ட்டி பேக்டராக இருப்பதால், அதற்கு ஏராளமான ஜீன்கள் காரணமாக இருக்கின்றன.
அதனால் சிசுவிலே, எதிர்காலத்தில் பக்கவாதம் வருமா என்று கண்டறிய இயலாது. பிறந்த பின்பு, சிறுவயது பருவத்தில் இருந்தே குழந்தைகளின் உணவு, உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொண்டு வளர்த்தால் பக்கவாத பாதிப்பில் இருந்து குழந்தைகளை காக்கலாம். டீன் ஏஜ் மற்றும் நடுத்தர வயதினரும் சரியான வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்து, விழிப்புடன் இருந்தால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
கவனமாக இருந்தும் பக்கவாத பாதிப்புகள் வந்துவிட்டால் அடுத்த நாலரை மணி நேரத்திற்குள் தீவிர சிகிச்சைக்கு உள்படுத்தி காப்பாற்றுவதே சிறந்த வழி.

கட்டுரை: பேராசிரியர் எம்.ஆர். சிவகுமார் M.D.,D.M.,FRCP,
(பக்கவாதநோய் சிறப்பு மருத்துவர்)

இயற்கையான முறையில் புற்றுநோயை தடுப்பதற்கு

 

மனிதர்களுக்கு மரணம் ஏற்படக்கூடிய முக்கிய காரணங்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது.
புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணங்கள் பலதரப்பட்டதாக இருக்க முடியும். ஆனால் இந்த நோய் பெரும்பாலும் ஒரு ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழ்வதால் ஏற்படுகிறது.
ப்ராக்கோலி
புற்றுநோயை திறம்பட தடுக்க உதவும் மிகச்சிறந்த உணவுப் பொருட்களில் ப்ரோக்கோலி ஒன்றாகும்.
எனினும் ப்ரோக்கோலியை மைக்ரோவேவ் ஒவனில் சமைப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை.
ஏனெனில் புற்றுநோயை எதிர்க்ககூடிய ப்ளேவோனாய்டுகள் மைக்ரோவேவினால் அழிக்கப்படுகிறது.
ப்ரோக்கோலியை கொதிக்க வைத்தோ அல்லது அப்படியே சிற்றுண்டியாக சாப்பிடுவது சிறந்தது.
பூண்டு
பூண்டிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற பண்புகள் உண்டு. இது நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தி புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
பல்வேறு ஆய்வுகள் பூண்டு சாப்பிட்டால் அதிவேகமாக வயிற்று புற்றுநோய் முரண்பாடுகளை குறைக்கலாம் என்று காட்டுகின்றன.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்பெற செய்து உடலில் இரசாயன, என்சைம்கள் மற்றும் ஹோர்மோன்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
டார்க் சொக்லெட்
கொக்கோவில் உள்ள பெண்டாமெர் போன்ற ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகளை பெற்றுள்ளன.
டார்க் சொக்லேட்டில் கொக்கோ அதிகம் உள்ளது. ஆகவே நிச்சயமாக புற்றுநோயில் இருந்து விலகி இருக்க உதவும் மிக ருசியான வழிகளில் இது ஒன்றாகும்.

கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ?

கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரா ? தென்கச்சி .கோ . சுவாமிநாதன் 




http://www.shotpix.com/images/01476438004768217768.jpg

ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான் . அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்குவான் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவான் .விறகு வெட்டுவான் .அதை கொண்டுகிட்டு பொய் விற்பனை செய்வான் .

ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான் .

ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான் .

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்ட போல இருக்கு ! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு

அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம்
" இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?"
அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது
அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டான் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சான்
அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ... அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு    போய்ட்டது

புலி போனதுக்கபரம் கால் இல்லாத அந்த நரி மெது நகர்ந்து கிட்ட வந்தது ... மிச்சமிருந்ததை சாப்பிட்டது .. திருப்பதியா போய்ட்டது !
இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு அந்த ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கான்

இப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சான்

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ .. தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம் , நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?
இப்படி யோசிச்சான் .

அதுக்கப்பறம் அவன் காட்டுக்கே போறதில்லை .
கோடலியை தூக்கி எறிஞ்சான்
பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டான் .
அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான் .
" கடவுள் நம்மை காப்பாத்துவார்  ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படினு நம்பினான் , கண்ணை முடிகிட்டு .
கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டான் .

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடு வந்த பாடில்லே !
இவன் பசியால வாடி போனான் . உடம்பு இளைச்சு போச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டான் .

ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தான் ...

" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?  நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னான்

இப்போ கடவுள் மெதுவா கண்ணை  திறந்து சொன்னாராம்

" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து ! அப்படின்னாராம் .

இன்னைக்கு பொதுவா கடவுள் பக்தி மக்கள் கிட்ட எப்படி இருக்குங்கறதுக்காக  இப்படி ஒரு கதையை பெரியவர்கள் சொல்றது உண்டு .



ஒரு வீட்டுல ஒரு அம்மா தன் கணவர் கிட்ட சொன்னங்க

 " ஏங்க  நம்ம  பொண்ணுக்கு கல்யாண வயசாகுது , காலகாலத்துல கல்யாணம் பண்ணிவைக்க வேண்டாமா ?" அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க . ன்னாங்க.

நானும் அது விசயமாத்தான் தரகர் ஒருத்தர நாளைக்கு போய் பார்க்கலாம் ன்னு இருந்தேன் சொன்னார் .

பொண்ணும் இவங்க பேசுனத கேட்டுகிட்டு இருந்தாள் .

அடுத்த நாள் பொண்ணு ஒரு பையனை வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாள்

அப்பா கேட்டார் " யாரும்மா இவர்! ...? "

அப்பா இவர் பேர் சுரேஷ் .  இவர நான் விரும்பறேன்  , அதான் உங்க கிட்ட பேச அழைச்சிட்டு வந்தேன் . ன்னு சொன்னாள்.

அப்படியா!  உக்காரப்பா ன்னு சொல்லி சில கேள்விகளை கேட்டார்

நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ? அப்படின்னார்


சார்............. நான் கடவுளை பத்தி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் ன்னு சொன்னான்

உங்க ஆராய்ச்சி எல்லாம் எந்த அளவுக்கு போய்கிட்டு இருக்கு  அப்படின்னு  கேட்டார்

சார் ,... நான் கிட்டத்தட்ட கடவுளை கண்டுபுடிசிட்டேன் ன்னு பெருமையா சொன்னான்

உங்க வருமானத்துக்கு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ன்னு இவர் கேட்டார் .
அவன் " அதெல்லாம் கடவுள் பாத்துக்குவார் சார்" ன்னு சொன்னான்

சரிப்பா , ரொம்ப சந்தோசம் , போயிட்டு வா ன்னு வழியனுப்பினார்

இப்போ அந்த அம்மா கேட்டாங்க " எங்க........ பையன் எப்படி? ங்க  ன்னாங்க

அவர் சொன்னார்  " பையனுக்கு எந்த வேலையும் இல்லை !  வருமானத்துக்கும் வழியே இல்லை !

அவன்.......... என்னைய்யா  தான்  ........  க..ட..வு..ளா.......... நினைசுகிட்டு இருக்கான் .அப்படின்னார்

இளைஞர்களே இந்த நிலைமை உங்களுக்கு வேண்டாம் .

                                    

Friday, January 11, 2013

தமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்




நமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்து இன்று வரை பின்பற்றி வருகிறார்கள் . தைமாதத்தில் வரும் தைப் பொங்கல் விசேசமானது . புதிய வருடத்தை இனிப்பாக , சந்தோசமாக வரவேற்பார்கள் தமிழர்கள் . 

விவசாயிகள் காலை சேற்றில் மிதித்தால் தான் நாம் சோற்றில் கை வைக்கலாம் . விவசாயிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும் . அதே போல் நாம் எமக்கு ஒளி  கொடுக்கும் , உலக மக்கள் எல்லோருக்கும் ஒழி கொடுக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளும் இந்த தைத்திருநாள் தான். 

தைத்திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல் . இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கல் என்று நாம் எல்லோரும் சந்தோசமாக வரவேற்க காத்திருப்போம் . பழையன  கழிந்து , புதியன போகுதல் வேண்டும் . துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாக வேண்டும் . புதிய பானையில் புது அரிசி இட்டு , கரும்பு கட்டி , சர்க்கரை இட்டு பொங்கும் பொங்கலோ பொங்கல் . 

சூரியன் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை . இதனால் தான் நாம் தைத்திருநாள் அன்று பொங்கலை  சூரியனுக்கு படைத்து விட்டு அதன் பின்பு நாம் உண்கின்றோம் . தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது . உழவுத்தொழிலுக்கு  உதவியாக இருக்கும் கால்நடைகளுக்காக கொண்டாடப்படுகிறது . 

தைபிறந்தால்  வழி பிறக்கும் என்பது நம் முன்னோரின் கூற்று . எல்லோருக்கும் ஒரு நல்ல வழி பிறக்க வேண்டும் என்று உழவர்களும் , நாம் எல்லோரும் நம்பிக்கை கொள்ளும் நாளும் இதுதான் . மனதில் உவகை உண்டாகி இனிப்பாக பொங்கல் உண்ணும் நாளும் இதுவே . 

எமது பண்பாடுகளில்  விருந்தோம்பல் மிகவும் முக்கியமானது . பசித்தோருக்கு உணவு கொடுப்பதிலும் , தானங்களில் சிறந்த அன்னதானம் கொடுப்பதிலும் நாம் எங்கும் , எப்போதும் பின்னிப்பதில்லை . கோவில் திருவிழாக் காலங்களிலும் , பண்டிகைகள் போன்ற விசேச தினங்களிலும் மற்றவர்களுக்கு கொடுத்து உண்பதில் எப்போதும் தமிழர்கள் பின்னிப்பதில்லை . 

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு” என்பது வள்ளுவன் வாக்கு அந்த வாக்கிற்கு ஏற்ப நமக்கு ஒருவர் செய்த உதவியை மறக்காது பிரதியுபகாரம் செய்தல் வேண்டும் .விவசாயிகளுக்கு பயிர்ச்  செய்கைக்கு சூரிய ஒளி அவசியமாகும் அந்த ஒளியை வாரி வழங்குவது சூரியன் . எனவே நாம் சூரியனுக்கு எமது  நன்றியை செலுத்தும் விதமாக சூரியனை வழிபட்டு பொங்கலிட்டு பூசை செய்து தைத்திருநாளை தமிழர்கள் கொண்டாடுவது வழக்கம். அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்கள் தைத்த்ருநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர் . 

இந்த தைத்திருநாளை சந்தோசமாக வரவேற்று புத்தாடை அணிந்து சூரியனுக்கு நன்றி செலுத்தி , அதேபோல் விவசாயிகளுக்கும் நன்றி செலுத்தி தைமகளை புன்னகையுடன் வரவேற்போம் . இந்த ஆண்டு சிறப்பான , சந்தோசம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என உவகையுடன் வரவேற்போம் தைமகளை . .........

Tuesday, January 8, 2013

காமெடி விரதம்.


சேவை வரிக்கெதிராக திரையுலகினர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் கடைசி வரை கமல்ஹாச ன் பங்கேற்கவில்லை. 
காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது.
 மாலையில் கமல் வந்து உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார் என்று தெரிவித்தனர். 
 மாலை 5 மணிவரை கமலுக்காகக் காத்திருந்தனர். ஆனால் கமல் கடைசி வரைவே இல்லை. அவர் அமெரிக்காவுக்குக் கிளம்பிவிட்டார் என்று கடைசியில்தான் சொன்னார்கள்
". இந்த உண்ணாவிரதத்துக்கு அனைவரும் வந்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம்" என்று நடிகர் சங்கம் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது .
kamal
ஆனால் கமல் கடைசிவரை பெப்பே காட்டி விட்டார்.நடிகர் ரஜினி 9.30க்கு வந்து விட்டு 12 மணிக்கு போய்விட்டாராம்.எங்கே சாப்பிடத்தானே?பின் என்ன உண்ணாவிரதப் போராட்டம்?
விஸ்வரூபம் பிரச்னையில்  தனக்கு ஆதரவாக நடிகர் சங்கம்  கூட்டம் போடுவதாகக்கூறி விட்டு கடைசியில் பெப்பே காட்டியதற்கு இது சரியாகப் போயிற்று என்று நினைத்து விட்டார் போல் இருக்கிறது.
ஆனால் 'கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் திரை உலகில் கேளிக்கை வரியும்,சேவை வரியும்தான் அரசுக்கு செல்லும் பணம்.மற்றவை எல்லாம் கருப்பில்தான்.
அப்படி இருக்கையில் வரியை நீக்கக் கூறுவதுஎன்பது சரி அல்ல.,கருப்பு பணத்தை ஒழிக்க வே ண்டும்என்று கருப்பு பணத்தில் குளித்து வரும் திரை உலகத்தினர் சொல்வது கேலிக்குரியதாக்கி விடும்  "என்பதும் தான் கமல்ஹாசனின் கருத்தாம்.அதனால்தான்  தன்னிடம் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள கே ட்டுக்கொண்டவர்களிடம் அவர்இந்தகருத்தைக்கூறி  உண்ணாவிரதத்தை தவிர்த்து விட்டார்  என்று கூறப்படுகிறது.
திரை உலகம் இந்தியாவில் கருப்பு பணம் விளையாடும் தளங்களில் ஒன்று என்பது சின்ன பாப்பாவுக்கு கூட தெரியும்.
suran
உண்மையில் தான் வாங்கும் நடிப்புக்கான சம்பளத்தை கணக்கில் காட்டி வருமான வரி கட்டும் நடிகர்கள்,திரை உலகத்தினர் யார் இருக்கிறார்கள்.
இப்போ ராட்டத்தில் கலந்து கொண்டவர்களில்  ஒழங்காக வரியை கட்டியுள்ளேன் என்று ஒருவராவது சொல்ல முடியுமா? இதில் வருமானவரி சோதனை நடத்தப்படாத நடிகர் யார் உட்கார்ந்திருக்கிறார்கள்?
இவர்களில் வெள்ளையில் மட்டுமே வாங்கி ஒழுங்காக வருமான வரி கட்டுபவர் என்று பெயர் உள்ளவர் கமல் மட்டும்தான்.
அதனால்தான் 50 ஆண்டுகளுக்கும் மேல் திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தும் சொல்லிக்கொள்ளும்படியான சொத்து இல்லாதவராக-கடனாளியாக  இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த போராட்டத்தால் வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதுதான் மிச்சம்.இவர்கள் ப.சி.யை வரி விளக்கு தொடர்பாக பார்க்கப் போகிறார்களாம்.அவர் இவர்களுக்கு வரிச்சலுகை கொடுத்தாலும் கொடுப்பார்.இப்போது அரசை ஏமாற்றும் பெரும் பணக்காரர்களுக்குத்தானே மத்திய அரசு வரித்தள்ளுபடிகளை செய்து வருகிறது.
அவர் இது போ ன்ற கவர்ச்சி போராட்டங்களை  தவிர்ப்பது -தவிர்த்தது சரிதான்.
நடிகர் சங்கம்  நடவடிக்கை எடுப்பது என்னவாக இருக்கும்.? பார்ப்போம்.!

டி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.

தேர்தல் தோல்விக்கு பிறகாவது மு.கருணாநிதி திருந்துவார் என்று யாரேனும் எதிர்பார்த்திருந்தால் அது நடக்காது என திருவாரூர் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் நிருபித்துவிட்டார்.டி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமெண்டை திருவாரூர் வாக்காளர்கள் நேரில் பார்த்தாவது உண்மையை உணர்ந்து கொண்டிருப்பார்கள்.கனிமொழி திகார் சிறையில் வாடுகிறாராம்! நாட்டுக்காகவா? இல்லை.மொழிக்காகவா? இல்லை.வீட்டுக்காக.ஊழல் செய்ததற்காக.ஊழல் செய்ததற்காக என்றுகூட அவமானம் இல்லாமல் எப்படி ஒருவரால் பேச முடிகிறது?இந்த அழுகை சென்டிமெண்டுக்கு டி.வி.சீரியல் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது.எவ்வளவு காலந்தான் உடன்பிறப்புக்களை இவ்வாறு அழுது ஏமாற்றுவது? பொன்முடியின் ஆபாசப் பேச்சிற்கு அளவில்லை.முடி என்றால் மயிர் என்றுதானே பொருள்! இந்த ஆபாசத்திற்கு M.A.,Ph.D.என்ற படிப்பு வேறு கேடா? 

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...