Friday, January 11, 2013

தமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்




நமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்து இன்று வரை பின்பற்றி வருகிறார்கள் . தைமாதத்தில் வரும் தைப் பொங்கல் விசேசமானது . புதிய வருடத்தை இனிப்பாக , சந்தோசமாக வரவேற்பார்கள் தமிழர்கள் . 

விவசாயிகள் காலை சேற்றில் மிதித்தால் தான் நாம் சோற்றில் கை வைக்கலாம் . விவசாயிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும் . அதே போல் நாம் எமக்கு ஒளி  கொடுக்கும் , உலக மக்கள் எல்லோருக்கும் ஒழி கொடுக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளும் இந்த தைத்திருநாள் தான். 

தைத்திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல் . இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கல் என்று நாம் எல்லோரும் சந்தோசமாக வரவேற்க காத்திருப்போம் . பழையன  கழிந்து , புதியன போகுதல் வேண்டும் . துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாக வேண்டும் . புதிய பானையில் புது அரிசி இட்டு , கரும்பு கட்டி , சர்க்கரை இட்டு பொங்கும் பொங்கலோ பொங்கல் . 

சூரியன் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை . இதனால் தான் நாம் தைத்திருநாள் அன்று பொங்கலை  சூரியனுக்கு படைத்து விட்டு அதன் பின்பு நாம் உண்கின்றோம் . தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது . உழவுத்தொழிலுக்கு  உதவியாக இருக்கும் கால்நடைகளுக்காக கொண்டாடப்படுகிறது . 

தைபிறந்தால்  வழி பிறக்கும் என்பது நம் முன்னோரின் கூற்று . எல்லோருக்கும் ஒரு நல்ல வழி பிறக்க வேண்டும் என்று உழவர்களும் , நாம் எல்லோரும் நம்பிக்கை கொள்ளும் நாளும் இதுதான் . மனதில் உவகை உண்டாகி இனிப்பாக பொங்கல் உண்ணும் நாளும் இதுவே . 

எமது பண்பாடுகளில்  விருந்தோம்பல் மிகவும் முக்கியமானது . பசித்தோருக்கு உணவு கொடுப்பதிலும் , தானங்களில் சிறந்த அன்னதானம் கொடுப்பதிலும் நாம் எங்கும் , எப்போதும் பின்னிப்பதில்லை . கோவில் திருவிழாக் காலங்களிலும் , பண்டிகைகள் போன்ற விசேச தினங்களிலும் மற்றவர்களுக்கு கொடுத்து உண்பதில் எப்போதும் தமிழர்கள் பின்னிப்பதில்லை . 

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு” என்பது வள்ளுவன் வாக்கு அந்த வாக்கிற்கு ஏற்ப நமக்கு ஒருவர் செய்த உதவியை மறக்காது பிரதியுபகாரம் செய்தல் வேண்டும் .விவசாயிகளுக்கு பயிர்ச்  செய்கைக்கு சூரிய ஒளி அவசியமாகும் அந்த ஒளியை வாரி வழங்குவது சூரியன் . எனவே நாம் சூரியனுக்கு எமது  நன்றியை செலுத்தும் விதமாக சூரியனை வழிபட்டு பொங்கலிட்டு பூசை செய்து தைத்திருநாளை தமிழர்கள் கொண்டாடுவது வழக்கம். அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்கள் தைத்த்ருநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர் . 

இந்த தைத்திருநாளை சந்தோசமாக வரவேற்று புத்தாடை அணிந்து சூரியனுக்கு நன்றி செலுத்தி , அதேபோல் விவசாயிகளுக்கும் நன்றி செலுத்தி தைமகளை புன்னகையுடன் வரவேற்போம் . இந்த ஆண்டு சிறப்பான , சந்தோசம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என உவகையுடன் வரவேற்போம் தைமகளை . .........

Tuesday, January 8, 2013

காமெடி விரதம்.


சேவை வரிக்கெதிராக திரையுலகினர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் கடைசி வரை கமல்ஹாச ன் பங்கேற்கவில்லை. 
காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது.
 மாலையில் கமல் வந்து உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார் என்று தெரிவித்தனர். 
 மாலை 5 மணிவரை கமலுக்காகக் காத்திருந்தனர். ஆனால் கமல் கடைசி வரைவே இல்லை. அவர் அமெரிக்காவுக்குக் கிளம்பிவிட்டார் என்று கடைசியில்தான் சொன்னார்கள்
". இந்த உண்ணாவிரதத்துக்கு அனைவரும் வந்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம்" என்று நடிகர் சங்கம் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது .
kamal
ஆனால் கமல் கடைசிவரை பெப்பே காட்டி விட்டார்.நடிகர் ரஜினி 9.30க்கு வந்து விட்டு 12 மணிக்கு போய்விட்டாராம்.எங்கே சாப்பிடத்தானே?பின் என்ன உண்ணாவிரதப் போராட்டம்?
விஸ்வரூபம் பிரச்னையில்  தனக்கு ஆதரவாக நடிகர் சங்கம்  கூட்டம் போடுவதாகக்கூறி விட்டு கடைசியில் பெப்பே காட்டியதற்கு இது சரியாகப் போயிற்று என்று நினைத்து விட்டார் போல் இருக்கிறது.
ஆனால் 'கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் திரை உலகில் கேளிக்கை வரியும்,சேவை வரியும்தான் அரசுக்கு செல்லும் பணம்.மற்றவை எல்லாம் கருப்பில்தான்.
அப்படி இருக்கையில் வரியை நீக்கக் கூறுவதுஎன்பது சரி அல்ல.,கருப்பு பணத்தை ஒழிக்க வே ண்டும்என்று கருப்பு பணத்தில் குளித்து வரும் திரை உலகத்தினர் சொல்வது கேலிக்குரியதாக்கி விடும்  "என்பதும் தான் கமல்ஹாசனின் கருத்தாம்.அதனால்தான்  தன்னிடம் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள கே ட்டுக்கொண்டவர்களிடம் அவர்இந்தகருத்தைக்கூறி  உண்ணாவிரதத்தை தவிர்த்து விட்டார்  என்று கூறப்படுகிறது.
திரை உலகம் இந்தியாவில் கருப்பு பணம் விளையாடும் தளங்களில் ஒன்று என்பது சின்ன பாப்பாவுக்கு கூட தெரியும்.
suran
உண்மையில் தான் வாங்கும் நடிப்புக்கான சம்பளத்தை கணக்கில் காட்டி வருமான வரி கட்டும் நடிகர்கள்,திரை உலகத்தினர் யார் இருக்கிறார்கள்.
இப்போ ராட்டத்தில் கலந்து கொண்டவர்களில்  ஒழங்காக வரியை கட்டியுள்ளேன் என்று ஒருவராவது சொல்ல முடியுமா? இதில் வருமானவரி சோதனை நடத்தப்படாத நடிகர் யார் உட்கார்ந்திருக்கிறார்கள்?
இவர்களில் வெள்ளையில் மட்டுமே வாங்கி ஒழுங்காக வருமான வரி கட்டுபவர் என்று பெயர் உள்ளவர் கமல் மட்டும்தான்.
அதனால்தான் 50 ஆண்டுகளுக்கும் மேல் திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தும் சொல்லிக்கொள்ளும்படியான சொத்து இல்லாதவராக-கடனாளியாக  இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த போராட்டத்தால் வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதுதான் மிச்சம்.இவர்கள் ப.சி.யை வரி விளக்கு தொடர்பாக பார்க்கப் போகிறார்களாம்.அவர் இவர்களுக்கு வரிச்சலுகை கொடுத்தாலும் கொடுப்பார்.இப்போது அரசை ஏமாற்றும் பெரும் பணக்காரர்களுக்குத்தானே மத்திய அரசு வரித்தள்ளுபடிகளை செய்து வருகிறது.
அவர் இது போ ன்ற கவர்ச்சி போராட்டங்களை  தவிர்ப்பது -தவிர்த்தது சரிதான்.
நடிகர் சங்கம்  நடவடிக்கை எடுப்பது என்னவாக இருக்கும்.? பார்ப்போம்.!

டி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.

தேர்தல் தோல்விக்கு பிறகாவது மு.கருணாநிதி திருந்துவார் என்று யாரேனும் எதிர்பார்த்திருந்தால் அது நடக்காது என திருவாரூர் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் நிருபித்துவிட்டார்.டி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமெண்டை திருவாரூர் வாக்காளர்கள் நேரில் பார்த்தாவது உண்மையை உணர்ந்து கொண்டிருப்பார்கள்.கனிமொழி திகார் சிறையில் வாடுகிறாராம்! நாட்டுக்காகவா? இல்லை.மொழிக்காகவா? இல்லை.வீட்டுக்காக.ஊழல் செய்ததற்காக.ஊழல் செய்ததற்காக என்றுகூட அவமானம் இல்லாமல் எப்படி ஒருவரால் பேச முடிகிறது?இந்த அழுகை சென்டிமெண்டுக்கு டி.வி.சீரியல் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது.எவ்வளவு காலந்தான் உடன்பிறப்புக்களை இவ்வாறு அழுது ஏமாற்றுவது? பொன்முடியின் ஆபாசப் பேச்சிற்கு அளவில்லை.முடி என்றால் மயிர் என்றுதானே பொருள்! இந்த ஆபாசத்திற்கு M.A.,Ph.D.என்ற படிப்பு வேறு கேடா? 

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...