Wednesday, May 16, 2012

இத்துப் போன திமுக! இந்த ஜென்மத்தில உருப்படுமா?

சுய சிந்தனையற்ற தொண்டர்களாலும், சுய நல தலைவராலும் சிதறிப் போகும் உதிரி கட்சியாக இப்போது திமுக! 

ஒரு காலத்தில் திமுக என்றால் தமிழ் செழுமைக்கும், மக்கள் நலனுக்கும் பேர் போன கட்சி என்று சிறப்பான பேர் இருந்திச்சு. ஆனால் இன்றளவில் ஆட்சியினை தக்க வைக்கும் நோக்கிலும், மந்திரிப் பதவியினை மக்களை ஏமாற்றி கைப்பற்றி சொகுசு அரசியல் நடாத்தும் நோக்கிலும் திமுக கட்சி செயற்படுவதால் தமிழ் நாட்டில் மூன்றாவது அணியாக கூட இருக்க லாயக்கு இல்லா நிலமைக்கு திமுக கட்சி ஆளாகி விட்டது. அப்பாவி மக்களுக்கு இலவசத்தை கொடுத்து தம் ஆட்சி வெறியினை இன்பமாக மாற்றலாம் என நினைத்த கட்சி தலமைகளுக்கு இலவசத்தை வாங்கி விட்டு ஓட்டுப் போடாம ஏமாற்றும் நல்ல செயலுக்கு மக்கள் ஆளாகி உள்ளதன் மூலம் கடந்த தேர்தலில் பாடம் கற்பித்தாங்க.

தமிழில் பேச வெட்கப்படும் தமிழரா நீங்கள்: இதைக் கொஞ்சம் பாருங்கள்!!!!

தமிழ்…இது எங்களுக்கு மொழிமட்டுமல்ல, எங்கள் வாழ்க்கை, எங்கள் உயிர், இதனால்த்தான் பாவேந்தன் பாரதிதாசன் அன்றே பாடினான் ”தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்(நிகர்)” என்று, ஆனால் இண்றைய சமுதாயம் ஆங்கிலமோகத்தில் சிக்கித்திளைப்பதால் அதற்குத் தமிழின் பெருமை சரிவரத்தெரிவதில்லை,
சிரட்டையின் மூலம் நாங்கள் உங்களுக்கு கணிதரீதியாக தமிழின் பெருமையை உணர்த்த விளைகின்றோம், உங்களுக்குத் தெரிந்த ஆங்கல இலக்கங்களின் அதிகூடிய இலக்கத்தின் பெயர் என்ன என்று சொல்லமுடியுமா உங்களால், அதற்குப் பெயர் ஸில்லியன் என்பார்கள் அதாவது,
1000000000000000 = ஒரு ஸில்லியன்
அதற்கு அடுத்த பத்தின் மடங்கை உங்களால் ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா? 100 ஸ்ல்லியன் என்பீர்கள், அதற்கும் அடுத்த மடங்கு??? சொல்லுங்கள் பார்க்கலாம் உங்கள் ஆங்கிலத்தில்….நிச்சயமாக முடியாது உங்களால், ஆனால் எங்கள் தமிழில் தேடிப்பாருங்கள் அதற்கு அடுத்தது மட்டுமல்ல அடுத்ததுக்கு அடுத்த மடங்குக்கும் பெயர் வைத்திருக்கிறான் எங்கள் மூதாதைத் தமிழன், கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு நிச்சயமாக தமிழின் பெருமையை உணர்த்தும் என நம்புகின்றோம்,
இனியாவது தமிழன் என்று சொல்வதில் தலை நிமிரப் பாருங்கள்….

எச்சரிக்கையாக இருங்கள் ராசா!! நீங்கள் கொல்லப்படலாம்.......

ராசா ஜாமீனில் ஓடிய டீல் என்ன ?



ஆ.ராசா தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இது நாள் வரையும் கடந்த 15 மாதங்களாக சிறையில் ஜாமீனே கோராமல் ராசா இருந்து வந்ததன் காரணம் தினமும் மணக்க மணக்க பரிமாறப்பட்ட இட்லி-சாம்பார் தான் என நீங்கள் நினைத்தால் உங்களைப் பாராட்டத்தான் வேண்டும்.( ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க! )

ராசா இதுவரை ஜாமீன் கோராமல் சிறையிலேயே இருந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன.அவற்றில் முதலாவது பிரதான காரணம் ராசா மூலம் 2G  லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும் என்கிற அச்சம். இரண்டாவது காரணம் ராசா வெளியே வருவதற்கு சி.பி.ஐ. கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்பது.
இதுவரை ஜாமீன் பெற்ற எஞ்சிய 13 பேருமே மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மனு மேல் மனுப் போட்டுத்தான் ஜாமீன் கனியை எட்டிப் பறித்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரையுமே விட பிரதான குற்றவாளியான ராசாவுக்கு மட்டுமே முதல் மனுவிலேயே ஜாமீன் கிடைக்கக் காரணம் என்ன? அங்கே தான் நிற்கிறார் நம்ம ராசா.
 இதுவரையும் இருந்து வந்த தி.மு.க.- காங்கிரஸ் உறவு அவ்வளவு பிரமாதமாக இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் தற்போது நிலைமை அவ்வாறு இல்லை. காங்கிரஸ் தனது ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. வுடன் கொஞ்சம் ஒட்டி உறவாட ஆரம்பித்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் அண்மையில் ஏ.கே.அந்தோணி கருணாநிதியை என்றுமில்லாதவாறு C.I.D. காலனியில் (ராசாத்தி அம்மாள் வீடு) வைத்துச் சந்தித்ததும், பின்னர் ராசாத்தி அம்மாளுடனும் கனிமொழியுடனும் ஏ.கே.அன்டனி போட்டோவுக்குப் போஸ் கொடுத்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இதோ, இதேதான் அந்த பொன்னான சந்திப்பு!!
இவர்களில் யாருக்கு நன்றி சொல்வது என்று ராசா இப்போது செம குழப்பத்தில் இருப்பார்
அங்கே தான் இந்த டீல் தொடங்கியது. தமது ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என ஏ.கே.அந்தோணி கேட்க; எனது மகளின் மீது வழக்கு உள்ள நிலையில் நான் எவ்வாறு ஆதரவு தர முடியும்? என்று கருணாநிதி முகத்தில் அறைந்தால்ப் போல் நேரடியாகவே கேட்டார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
பின்னர் முடிவேதுமில்லாமல் முடிந்த அந்தச் சந்திப்பின் பின்னர் கனிமொழி தன்னை 2G வழக்கிலிருந்து நிரந்தரமாகவே கழட்டி விட வேண்டும் என்று கோரிய மனு கடந்த 11 ந் தேதி (மே) விசாரணைக்கு வந்தது. எதிர்பார்த்தபடியே C.P.I. யும் கனிமொழியைக் கழட்டி விடுவதற்கு மறைமுகமாக உதவி செய்தது. 
அதாவது கனிமொழிக்கெதிரான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் C.P.I. க்கு உத்தரவிட்ட நிலையில் C.P.I. வழக்கறிஞரோ வெறுங்கையை வீசியவாறு மன்றுக்கு வந்து ஆதாரங்களைச் சமர்ப்பிக்க இன்று தாம் விரும்பவில்லை என்றார், கூலாக! இதே நிலைமை வேறு வழக்கில் இருந்தால் குற்றவாளிக்குச்(மனுதாரருக்கு) சாதகமாக தீர்ப்பு வந்திருக்கும். கனிமொழியும் அதைத்தான் எதிர்பார்த்தார், C.P.I.  யும் அதைத்தான் எதிர்பார்த்தது. அதாவது சத்தமில்லாமல் கழட்டிவிடப் பார்த்தார்கள்!! ஆனால் நம்ம நீதிபதி இது போல் எத்தனை பேரைப் பார்த்திருப்பார்? அவர் கடுப்பாகி C.P.I. க்கு எச்சரிக்கை விடுத்து விட்டு வழக்கை செப்டம்பர் 5, 6, 7-ம் தேதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டு விட்டார். அந்தோ பரிதாபம், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது ஜனாதிபதித் தேர்தல் முடிந்து விடும்!! நீதிபதியா ? கொக்கா?
இப்பொழுது இதே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே ராசா ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் தான் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது. அந்த நாள்... ஞாபகம்... நெஞ்சிலே... வருகிறதா ? ஹா ஹ ஹா
ராசா ஜாமீனில் வெளியே வருவதைக் கருணாநிதியும் விரும்பவில்லை. கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் வழக்குத் தொடர்பான ஒவ்வொரு நிறுவனங்களும் தாம் கொடுத்த பணத்தில் ஒரு பகுதியைத் திருப்பித் தருமாறு கேட்ட போதெல்லாம் ராசா தானே உங்களுடன் டீல் பண்ணிய நபர், அவர் முதலில் வெளியே வரட்டும் என்று கருணாநிதி நிறுவனங்களைச் சமாளித்துக் கொண்டிருந்தார். அதனால் ராசா சிறை வாழ்க்கை கசந்து கொந்தளித்த போதெல்லாம் தனது தூதுவர்களை அனுப்பிச் சமாதானப்படுத்தி வந்தார் கருணாநிதி. ஆனால் இப்பொழுது உள்ள நிலைமையைப் பயன்படுத்தாவிட்டால் தான் 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் வெளியே வர முடியாது என்பது ஒரு வழக்கறிஞரான ராசாவுக்குத் தெரியாதா என்ன?
அதனால் தான் அவர் சரியான நேரத்தில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளியே வந்துவிட்டார். இது நிச்சயமாக கருணாநிதிக்கு மகிழ்ச்சி இல்லாத ஒரு விடயமாகவே இருக்கும். இனிமேல் நிறுவனங்களைச் சமாளிப்பது யார்? So, தற்போது ராசாவுக்குக் கிடைத்துள்ள ஜாமீன் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே தோற்றுகின்றது. சுப்பிரமணிய சுவாமியும் ஆரம்பம் முதலே ராசாவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி வருகின்றார் என்பதையும் கவனிக்க வேண்டும். 2G ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்களின் தொல்லை அதிகமானால் ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் நிலையே ராசாவுக்கும் ஏற்படும் என்று யூகிக்கலாம்.....
ஏனென்றால் ராசாவின் உயிரின் பெறுமதி இரண்டுலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை விட ரொம்ப சின்னது !!
 
..........Wait and See
 2G அலைக்கற்றை ஊழலில் பிணையில் வெளிவந்துள்ள ஆ.ராசா உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்
2G அலைக்கற்றை அலைவரிசை  ஒதுக்கீட்டு ஊழலில் பிணையில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, அந்த ஊழலில் மிகச் சிறிய பங்கே வகிக்கிறார் என்றும் பெரிய திமிங்கலங்கள் வேறு இருக்கின்றன என்றும் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். ஆ.ராசாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும்  ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மீண்டும் கூறியுள்ளார். இந்த அலைக்கற்றை ஊழல் தொடர்பாக மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை வளையத்தில் சிக்கியிருந்தவரும், ஆ.ராசாவின் கூட்டாளியுமான சாதிக்பாட்சா மர்மமான முறையில் இறந்தது நினைவுகூரத்தக்கது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் பலரும் சிறை செல்ல சுப்ரமணிய சாமியின் வழக்குப்பதிவுகள் காரணமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆ.ராசாவுக்கு பிணை கிடைத்துள்ளது பற்றி   சுப்ரமணிய சாமி கூறுகையில்

ராசாவுக்கு சட்டப்படிதான் பிணை கிடைத்திருக்கிறது. அவரால் இந்த வழக்கின் விசாரணையில் எந்தவித குறுக்கீட்டையும் செய்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரையில் அலைக்கற்றை அலைவரிசை ஊழலில் ராசாவின் பங்கு மிகச் சிறியதுதான். இன்னும் பெரிய திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருக்கிறன. அதனால்தான் நான் சொல்லி வருகிறேன் ராசாவின் உயிருக்கு ஆபத்து என்று. அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  என்றும் சுப்ரமணிய சுவாமி கூறினார்

Tuesday, May 15, 2012

நேர்மை ஜாமீனில் வந்தது.

"இனி தர்மம் வெல்லும்."


நேர்மைக்கு ஜாமீன் கிடைத்து விட்டதால்,

"இனி தர்மம் வெல்லும்."


என எதிர்பார்க்கப் படுகிறது.

இது நேர்மைக்கு கிடைத்த வெற்றி என நாணயம் நாளை அறிக்கை வெளியிடும். 

கன்னியத்திற்கு(கனி) விரைவாக கிடைத்த ஜாமீன், நேர்மைக்கு லேட்டாக கிடைத்தாலும் லேட்டஸ்டாக கிடைத்துள்ளது என்பது திருவிழாவை போல இனிப்பு வெட்டி சந்தோசமாக கொண்டாட வேண்டிய விஷயம்.

இந்த திருவிழாவையொட்டி கடமைக்கும், கட்டுப்பாட்டுக்கும் நடந்து கொண்டிருக்கும் சகோதர யுத்தம், சிறிது நாளைக்கு நிறுத்தி வைக்கப்படும்.

கோர்ட் நேர்மைக்கு விதித்த நிபந்தனைகள்:
நேர்மை தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
நேர்மை எங்கும் ஓடி விடக் கூடாது என்பதால் 20 லட்ச ரூபாயை பிணைய தொகையாக ஒப்படைக்க வேண்டும். (நேர்மையிடம் அவ்வளவு பணம் இருக்குமா?)
நேர்மை டில்லியில் தங்கியிருக்க வேண்டும்.
நேர்மை சென்னைக்கு செல்ல கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும்.

இனி நேர்மையை டில்லியில் மட்டும் தான் பார்க்க முடியும்.

ஆகவே, இன்னும் கொஞ்ச நாட்களுக்கு சென்னையில் திருடர்களிடம் கூட நேர்மையை எதிர்பார்க்காதிர்கள்!

Tuesday, May 8, 2012

25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டெசோ- என்ன சாதிக்கப் போகிறார் கருணாநிதி?

25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் டெசோ- என்ன சாதிக்கப் போகிறார் கருணாநிதி?

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈழத் தமிழர் ஆதவாளர்கள் அமைப்பு எனும் டெசோவை உயிர்ப்பித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
அவர் தலைமையில்,  நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதாவது முந்தா நாள் அறிவித்து, இன்று தொடங்கிவிட்டார் கருணாநிதி இந்த அமைப்பை. ஆனால் டெசோவுக்கு முன்பு கிடைத்த ஏகோபித்த ஆதரவு இந்த முறை அவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக கடும் விமர்சனங்களே எழுந்துள்ளன.
டெசோ மூலம் என்ன சாதிக்க முடியும் கருணாநிதியால்?
டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு கடந்த 1985ம் ஆண்டு மே 13ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. கருணாநிதியைத் தலைவராகவும், கி.வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அப்போது அது அமைந்தது. இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கையாக வடக்கு கிழக்கு இலங்கைப் பகுதிகளை இணைத்து தமிழ் ஈழ நாடு அமைக்க வேண்டும் என்பதே.
டெசோ அமைப்பின் சார்பில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டையும் கருணாநிதி நடத்தினார்.அதில் வாஜ்பாய் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்த எம்ஜிஆரின் அதிமுக கூட இதைக் கண்டு கொள்ளவில்லை. கருணாநிதிக்கு ஏகாபித்த ஆதரவு இருந்தது.
இந்த டெசோவின் முழுமையான நோக்கமே தனி ஈழம்தான் என்று பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் தனி ஈழம் வந்தால் அது பிரபாகரன் தலைமையில்தான் என்ற ஒரு நிலை அன்றே உருவாகிவிட்டது. அதைத்தான் எம்ஜிஆர் நேரடியாகக் கூறிவந்தார்.
ஆனால் பிரபாகரனோ கருணாநிதியின் ஈழ ஆதரவு கோஷங்களின் பின்னணியில் உள்ள  வெற்று அரசியல் புரிந்ததால், டெசோ விவகாரங்களில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. டெசோ மாநாட்டுக்குக் கூட அவர் திலகர் என்பவரைத்தான் அனுப்பினார்.
இந்தப் பின்னணியில்தான் டெசோவை கலைத்துவிட்டதாக பின்னர் கருணாநிதி அறிவித்தார். தனி ஈழம் வேண்டும் என ஆரம்பிக்கப்பட்ட டெசோ, அந்த நோக்கம் நிறைவேறும் முன்பே கலைக்கப்பட்டது. இப்போது மீண்டும் டெசோ தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்து முதல் கூட்டத்தையும் கருணாநிதி நடத்தியுள்ளார். இதன் மூலம் அவர் என்ன சாதிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்றைக்கு முழுக்க முழுக்க அவருக்கு எதிரான சூழலே ஈழ அரசியல் களத்தில் நிலவுகிறது. கருணாநிதியின் வார்த்தைகள் நம்பகத்தன்மை அற்றவையாகப் பார்க்கப்படுகின்றன. காரணம், சர்வ பலமிக்க முதல்வராக அவர் பதவியில் இருந்த போது தனிஈழம் வேண்டும் என்பதை அவர் சொல்லத் தவறினார். பிரணாப் முகர்ஜிக்கு இணையாக இலங்கையின இறையாண்மை பற்றி கவலைப்பட்டார்.
விமானங்களிலிருந்து குண்டுமழை பொழிவது நிறுத்தப்பட்டாலும், பீரங்கிக் குண்டு வீச்சும், துப்பாக்கிச் சூடுகளும் தொடர்வதாக அவரது புகழ்பெற்ற 3 மணி நேர உண்ணாவிரதத்தின் போது தகவல் சொல்லப்பட, ‘மழைவிட்டும் தூவானம் விடவில்லை’ என கொடூரமான உவமையைச் சொன்னதை யாரும் இன்னும் மறக்கவில்லை.
இன்றைய கூட்டத்துக்குப் பின் கருணாநிதி பேசுகையில், “சிங்களர்களை ஒருபோதும் நாம் நம்ப முடியாது. நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதியமொழியை அளித்து விட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர்.
இனியும் தமிழ் மக்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது. தமிழர்களுக்கென் தனி் நாடு, தமிழ் ஈழ நாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா. பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,” என்றார்.
கருணாநிதியிடம் உள்ள பிரச்சினையும் இதுதானே. 2008-லிருந்து 2009 தொடக்கம் வரை ஈழப் போராட்டம் என்ற பெயரில் அனைவரையும் பலமாக உசுப்பேற்றி நம்ப வைத்துக் கழுத்தறுத்தார் என்பதுதானே இவர் மீதுள்ள குற்றச்சாட்டும். இவரை ராஜபக்சேவை நம்பச் சொன்னது யார்? அதையெல்லாம் தாண்டி உறுதியோடு நின்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் போனாதுதானே கருணாநிதி மீது தீராத பழியாக நிற்கிறது!
சொந்த அரசியல் காரணங்கள், தன் பிடியைவிட்டு நழுவும் தமிழகத்தை இழுத்து நிறுத்துததல் போன்ற காரணங்களுக்காகவே அவர் இத்தனை நாட்களும் இல்லாமல் இப்போது தனி ஈழக் கோரிக்கையை கையில் எடுத்திருக்கிறார் என்ற விமர்சனங்களை அவரே கூட புறக்கணிக்க முடியாது.
ஈழத்தில் போர் உக்கிரமடைந்து லட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் உயிரிழந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரே ஒரு வார்த்தை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக கருணாநிதி பேசியிருந்தால் கூட, தமிழ் வரலாறு அவரைக் கொண்டாடி இருக்கும். போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது சகஜம் என ஜெயலலிதா ஒரு பக்கம் வேல் பாய்ச்ச, இன்னொரு பக்கம், முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தைக் கொச்சைப் படுத்தியும், அதன் தொடர்ச்சியாக எழுந்த மாநிலம் தழுவிய அசாதாரண மாணவ எழுச்சியை பிரிட்டிஷாரை விட மிக மோசமாக கருணாநிதி அரசு கையாண்டதும்… இதோ நேற்றுதான் கண்முன் நடந்ததைப் போலுள்ளது.
இப்போது அவர் கையில் எடுத்துள்ள தனி ஈழ கோரிக்கை எத்தனை நாளைக்கு நிலைத்திருக்கும்? காங்கிரஸை விட்டு உண்மையிலேயே பிரிந்து வந்து, தனி ஈழத்துக்காக கடைசி மூச்சு வரைப்போராடப் போகிறாரா கருணாநிதி?
இந்தக் கேள்விக்கு உறுதியான விடையை அவர் தந்தாலும் அதை ஏற்கவிடாமல் தடுக்கிறது அவரது கடந்த கால அரசியல்.
தனித்த அரசியல் லாபங்களைப் புறக்கணித்து, இந்த இறுதிக் கட்ட ‘போரை’ அவர் இதயசுத்தியோடு முன்னெடுத்தால், டெசோ மீது நம்பிக்கைப் பிறக்கும். மாறாக 2014 மக்களவைத் தேர்தலுக்காகவும், மகன்களின் அரசியல் போரை திசை திருப்பவும்தான் இந்த டெசோ என்றால், கருணாநிதி தன் ஜெ எதிர்ப்பு அறிக்கைப் போரை மட்டும் தொடரலாம்!

Friday, May 4, 2012

நன்றி சொன்னால் பேரழகு!

வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தார். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம்.

`கொ... கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' தயக்கத்துடன் கேட்டான்.

அவர் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தார்.

உம்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தார்.

பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், `நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?'
`கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்...', அவர் சிரித்துக் கொண்டே சொன்னாம்.

`ரொம்ப ரொம்ப நன்றி...' சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊரைப் படித்ததும் அவருக்கும் சின்ன மின்னல். விரைவாக அறைக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். தனது பசியாற்றிய நல்ல உள்ளம் படைத்தவர்.

அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி அவளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவர் குணமானாம். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப் போகிறேனோ எனும் பதற்றத்துடன் அதைப் பிரித்த அவர் திகைத்துப் போனாம்.

அந்த பில்லின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது, `ஒரு கப் பாலில் உங்கள் கடன் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்.' அவளுடைய கண்கள் கசிந்தன.

மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று நன்றி சொல்லுதல்.

அமெரிக்காவில் நீங்கள் காரில் போகிறீர்கள் என வைத்துக் கொம்ளுங்கள். ஒருவர் உங்களை முந்திச் செல்ல நீங்கள் அவருக்கு வழிவிட்டால் அவர் உங்களுக்கு `நன்றி' சொல்லி விட்டுத்தான் போவார். சாலையில் ஒருவர் கடக்க நீங்கள் வண்டியை நிறுத்தினால் அவர் `நன்றி' சொல்வார். கடையில் ஒரு பொரும் வாங்கும் போது கூட கடைக்காரருக்கு `நன்றி' சொல்வார்கள்.

நன்றி சொல்லும் வழக்கள் அவர்களிடம் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. நல்லவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம், தப்பில்லை.

நன்றி என்பது ஒரு சின்ன வார்த்தைதான். ஆனால் அது மனதளவில் தரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அளவிட முடியாதது. அது ஒரு வார்த்தையாய் நின்று விடாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும் என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.

சின்னச் சின்ன விஷயங்களில் நன்றி சொல்லத் தெரியாதவர்களால் பெரிய விஷயங்களிலும் நன்றி சொல்ல முடியாது என்கிறது எஸ்தோனிய பழமொழி ஒன்று.

நன்றியைச் சொல்ல இந்த நவீன யுகத்தில் ஏகப்பட்ட வழிகள் உண்டு. ஓர் எஸ்.எம்.எஸ், ஒரு சின்ன மின்னஞ்சல் வரி கூட உங்கள் நன்றியை எடுத்துச் செல்லலாம்.

எதிர்பாராத நேரத்தில் ஒருவரை ஒரு `நன்றி' மூலம் மகிழச் செய்வது அற்புதமான விஷயம். அந்த நபர் செய்த நல்ல பத்து விஷயங்களைப் பட்டியலிட்டு, அதற்காக உங்களுடைய மனமார்ந்த நன்றியையோ, பரிசையோ அளித்துப் பாருங்கள். அது அந்த நபருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நாம் செய்யும் மிகப்பெரிய தப்பு என்ன தெரியுமா? கூட இருப்பவர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவதுதான். கூடவே இருப்பதால் அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லக் கூடாது என நினைத்து விடுகிறோம். நன்றி என்பது அலுவல் சமாச்சாரங்களுக்கு மட்டுமானது என தப்புக் கணக்கு போட்டு விடுகிறோம். கணவன், மனைவி, அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, தம்பி என எல்லோருக்கும் நன்றி சொல்வதே நல்ல பழக்கங்கள்.

`தினமும் எனக்கு நீங்க தானே காபி போட்டு தர்றீங்க, இன்னிக்கு அதுக்கு ஒரு சின்ன நன்றியா, நானே காபி போட்டு உங்களை எழுப்பறேம்மா' என அம்மாவை ஒரு நாம் நெகிழச் செய்யுங்கள்.

அப்பாவுடைய ஆடைகளை எல்லாம் இஸ்திரி போட்டு வைத்து அப்பாவுக்கு ஒரு நாம் நன்றி சொல்லுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டைப் பெருக்கி மனைவிக்கு ஒரு நாம் நன்றி சொல்லுங்கள். இப்படி சின்னச் சின்ன அன்பின் செயல்களால் நன்றி சொல்வது வார்த்தைகளால் நன்றி சொல்வதை விட ரொம்ப வலிமையானது.

இன்னும் ஒரு படி மேலே போய் சிந்தியுங்கள். உங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணுக்கோ, தோட்டக்காரருக்கோ, காவல்காரருக்கோ என்றைக்காவது மனசார நன்றி சொல்லியிருக்கிறீர்களா?

ஒரு பாராட்டு, ஒரு பரிசு, ஒரு மனமார்ந்த நன்றி என அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சிப் பக்கத்தை எழுதியிருக்கிறீர்களா? எல்லா மனிதரும் கடவுளின் பிம்பங்கள் என்கிறோம், அதில் பலவீனர்களை எப்போதுமே ஒதுக் கியே வைக்கிறோமே, தப்பில்லையா ?

சொல்லப்படாத நன்றி எப்படிப்பட்டது தெரியுமா?

`ஒருவருக்கு அழகான ஒரு பரிசுப் பொருளை வாங்கி, அதை அருமையாக கிப்ட் கவரில் போட்டு அப்படியே வீட்டில் வைத்திருப்பது போன்றது' என்கிறார் வில்லியம் ஆர்தர் வேர்ட்.

யாராவது நமக்கு ஒரு கெடுதல் செய்தால் நாம் கிழமை குறித்து மனசுக்கும் கல்வெட்டாய் வைப்பதும், அவர் நமக்குச் செய்த நன்மைகளை காற்றில் எழுதி காணாமல் செய்வதும் நமது பழக்கள். அதை அப்படியே உல்டாவாகப் பண்ணிப் பழக வேண்டும். தீயது செய்தால் காற்றில் எழுது, நல்லதெனில் மனதில் எழுது.

வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் `நன்றி' சொல்லும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் நமது செயல்களைப் பார்த்து வளரும். எனவே நாம் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டியது அடிப்படைத் தேவையாகி விடுகிறது.

நன்றி சொல்ல வேண்டும் எனும் மனம் இருந்தால் உங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். நல்லவற்றுக்கு மட்டுமல்லாமல் சோதனைகள், பலவீனங்கள், தோல்விகள் இவற்றுக்குக் கூட நீங்கள் நன்றி செலுத்தலாம்.

ஓர் அழகான ஆங்கிலப் பாடல் உண்டு. அந்தப் பாடலின் சில வரிகளை இப்படித் தமிழில் மொழிபெயர்க்கலாம்.

என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி, அவைதான் அவற்றை நோக்கி என்னை பயணிக்க ஊக்குவிக்கின்றன.

என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி, அதுதான் என்னை கற்றுக்கொள்ள வைக்கிறது.

எனது கடினமான நேரங்களுக்காய் நன்றி, அவைதான் என்னை வலிமையானவனாய் மாற்றுகின்றன.

எனது குறைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.

எனது பிழைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு அனுபவப் பாடத்தை அம்ளித் தருகின்றன.

எனது சோர்வுக்காய் நன்றி, அதுதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகிறது.

எனது சோதனைகளுக்காய் நன்றி, அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு ஹம்பேக் திமிங்கலம் வலையில் சிக்கிக் கொண்டது. உடல் முழுதும் கயிறுகள் சிக்கிக் கொள்ள திமிங்கலத்தால் நீந்த முடியவில்லை. அந்த 50 அடி நீள திமிங்கலத்தின் கட்டுகளை அறுக்க பாதுகாப்பாளர்கள் திட்டமிட்டார் கள்.

திமிங்கலம் மெல்ல வாலை அசைத்தாலே ஆம் காலியாகிவிடலாம். கட்டறுத்தபின் கோபத்தில் அது குதித்தாலும் காலி எனும் திகில் நிமிடங்களுடன் ஆட்கள் போராடினார்கள். கயிறுகளை அறுத்தார்கள். திமிங்கலம் கண்களை உருட்டி எல்லோரையும் உற்று உற்றுப் பார்த்தது. கட்டுகள் அவிழ்த்து முடித்ததும் ஆனந்தத்தில் கடலுக்கும் நீச்சலடித்தது.

பின் எல்லோரும் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் நடந்தது. அந்த பிரம்மண்டமான திமிங்கலம் திரும்ப வந்தது. வந்து, கட்டுகளை அவிழ்த்த ஒவ்வொரு நபர் முன்னாலும் சென்று தன் முகத்தினால் அவர்களை மெல்ல முட்டித் தம்ளி தன் நன்றியைச் சொன்னது. எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது எனும் வர்ளுவர் வரிகள் திமிங்கலத்தின் செயலில் வெளிப்பட்டன. நன்றி அறிவித்தல் திமிங்கலத்திடம் கூட இருக்கிறது என்பதை அமெரிக்கப் பத்திரிகைகள் அப்போது வியப்புடன் வெளியிட்டன.

பிடிவாதப் பார்ட்டிகளுக்காக, நன்றி சொல்வதில் உள்ள மருத்துவத் தகவல்களையும் கையோடு சொல்லி விடுகிறேன்.

2007-ல் நடத்தப்பட்ட டாக்டர் எம்மோஸ் ஆய்வு ஒன்று, `நன்றியுடையவர்களாய் இருப்பவர்கள் மன அழுத்தமற்றவர்களாகவும், நிம்மதியான தூக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள்' என்றது. இதனால் அவர்களுடைய உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது.

`நன்றி தெரிவிக்கும் தம்பதியரின் குடும்ப வாழ்க்கை நிலையாகவும், வலிமையாகவும் இருக்கும்' என 2010-ல் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு தெரிவித்தது.

அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று, `நன்றி தெரிவித்து வாழ்பவர்கள் ரொம்பவே ஆனந்தமாய் இருப்பார்கள்' என தனது கண்டுபிடிப்பை வெளியிட்டது.

வாழ்க்கை ரொம்பவே அழகானது. நமது ஐம்புலன்களும் நம்மை வினாடி தோறும் வியக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன. எவ்வளவோ அழகான விஷயங்களை, மனிதர்களைக் காண்கிறோம். பேச்சுகளை, இசையைக் கேட்கிறோம். பலவற்றை உணர்கிறோம். சுவைகளை ரசிக்கிறோம். நமது புலன்களின் பரிசளிப்புக்கு நன்றி சொன்னதுண்டா? இல்லாத விஷயம் கிடைக்கும்போதுதான் நன்றி சொல்ல வேண்டுமென்பதில்லை. இருக்கின்ற விஷயத்துக்காகவே நன்றி சொல்லலாம்.

விடைபெறுதல் என்பது முடிவுரையல்ல. இன்னோர் இடத்தில் சந்திப்போம் என்பதன் உத்தரவாதம்.

நன்றி சொன்னால் பேரழகு!
நன்றி செய்தால் பாரழகு !
எங்கோ படித்தது,
மனதில் பதிந்தது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...