Monday, July 18, 2022

நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் பொறுப்பற்ற (பேச்சு )செயல்பாடு ?

 நாள்/16/07/2022/ சனிக்கிழமை

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சும் நடவடிக்கையும் தவிர்க்கப்பட வேண்டியவை
அவருடைய தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டி பகுதியில் இன்று
பொது பணித்துறை நீராதார அமைப்பின் சார்பில் மக்கள் பயன்பாட்டுக்கான வேலைத்திட்டம் ஒன்றுக்கு பூமி பூஜை நிகழ்ச்சியினை அதிகாரிகள் நடத்தினர்
இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற மக்களவை திமுக உறுப்பினர் அவர்கள்
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை
வீடியோ காணொளி ஊடகங்கள் வாயிலாக காண முடிகிறது
அப்படி அவர் என்ன வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
அரசு சார்பில் நிகழ்த்தப்படும் பூமி பூஜையில் ஒரு மதம் அதாவது இந்து மதத்தின் சார்பில் பூமி பூஜை நடத்துவதை ஏற்க முடியாது சர்வமதத்தினரையும் அழைத்து அவர்கள் மத சம்பிரதாயங்களையும் செய்யச் சொல்லுங்கள் அதுதான் சரி நீங்கள் இதனை உடனே நிறுத்துங்கள்
பூமி பூஜைக்கு வந்த புரோகிதரை உங்களுடைய சடங்கு சம்பந்தமான பூஜை பொருட்களை எடுத்து கொண்டு உடனே இடத்தை காலி செய்யுங்கள் என்று அதிகாரத் தோரணையில் பேசியிருப்பது என்பது
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே தேவையற்ற குழப்பத்தையும் பதட்டத்தையும்
ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார் என்பது வேதனையாக உள்ளது
1858 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட நீராதார அமைப்பான பொதுப்பணித்துறை துவங்கப்பட்ட அன்றே
இந்து மத சம்பிரதாயப்படிதான்
பூமி பூஜை போடப்பட்டுதான் தொடங்கப்பட்டது என்பது
நாடாளுமன்ற உறுப்பினருக்கு
தெரியுமா தெரியாதா ?
தமிழக அரசு அலுவலகங்களில்
ஆயுதபூஜை திருநாளன்று அனைத்து அலுவலகங்களிலும் பூஜை நடத்துவது நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு
தெரியுமா தெரியாதா?
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழக அரசு அலுவலகங்கள் அனைத்திலும் புாெங்கள் வைத்து கொண்டாடுவது நடைமுறையில் உள்ளது என்பது நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியுமா தெரியாதா?
ஏன் தமிழக அரசு அனைத்து துறைகளிலும் வேலைத் திட்டங்கள் துவங்கப்படும் போது பூமி பூஜை நடத்துவது இந்து முறைப்படிதான் வழக்கத்தில் உள்ளது என்பது நாடாளுமன்ற உறுப்பினர்க்கு
தெரியுமா தெரியாதா?
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசு சின்னமாக பயன்படுத்திவரும் கோபுர சின்னமாவது என்னவென்று நாடாளுமன்ற உறுப்பினருக்கு
தெரியுமா தெரியாதா ?
தமிழக அரசின் சின்னமாக உள்ள கோபுர சின்னமானது
ஸ்ரீவல்லிபுத்தூர் திருக்கோயில் கோபுரமாகும் இவை அனைத்தையும்
நாடாளுமன்ற உறுப்பினர் அகற்ற சொல்வாரா?
அதனை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்பாரா?
அதே போன்று இந்திய சுதந்திரம் பெற்ற போது அதனை எப்படி பெற்றுக்கொள்வது என்று வினா எழுந்த போது
மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனம் அவர்களுடைய
"செங்கோல் தான் பயன்பட்டது "
அதாவது ஆதீனத்தின் செங்கோலை இந்து மத ஐ தீக முறைப்படி மந்திரங்கள் ஓதப்பட்டு திருவாடுதுறை ஆதீன வித்துவான் ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நாயனம் வாசிக்கப்பட்டு செங்கோலை மவுண்ட்பேட்டன் அவர்கள் கையில் கொடுத்து அவரிடம் இருந்து ஜவர்கலால் நேரு அவர்கள் பெற்றுக் கொண்டார் என்பது வரலாறு
மேலும் உங்களுடைய வாதத்தை எந்த ஒரு மதத்தினரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா.?
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பவர்
தரவரிசை அடிப்படையில்
ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரை விட
உயர்ந்தவர் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல்
செயல்பட வேண்டும் என்பதே எங்களின் கருத்தாகும் ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...