Tuesday, October 17, 2023

கடனை அடைக்கும் இரண்டு அதிசய பரிகாரங்கள்...

 கடனை தீர்க்கும் மிளகு பரிகாரம்:

ஒருகைப்பிடி வால்மிளகு, ஒரு கைப்பிடி சில்லறை காசு மற்றும் புற்றுமண் அதாவது புற்றினை சுற்றியிருக்கும் அடிப்புறத்திலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை மூன்றையும் ஒரு சிவப்புத் துணியில் மூட்டையாக கட்டி, அதனை ஒரு மண் பானையில் வைத்து, பிறகு பூஜை அறையில் வைத்து விட்டு, எனது கடன்கள் அனைத்தும் தீர்ந்து, கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து, சுகமான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் கடன் பிரச்சினைகள் கண்ணுக்குத் தெரியாமல் கரைய ஆரம்பித்து விடும்.
தாங்கள் பிறருக்குக் கொடுத்த பணம் தங்களுக்கு திரும்ப வந்து சேர வேண்டும் என நினைப்பவர்கள் சிறிதளவு கல் உப்பு,சிறிதளவு வெந்தயம் மற்றும் சிறிதளவு கருப்பு எள் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒரு மிக்ஸியில் இந்த மூன்றையும் போட்டு நன்றாக பொடி பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய தூய்மையான வெள்ளைத்துணியில் அந்த பொடியை கொட்டி, துணியை முடிந்து உங்கள் வீட்டில் கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். வாராக் கடனை நம்மிடம் மீண்டும் வரச் செய்யும் ஆற்றல் கொண்ட தெய்வமாக பைரவ மூர்த்தி இருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலில் இருக்கும் பைரவர் சந்நிதிக்குச் சென்று, சிறிதளவு தூய்மையான வெள்ளைத் துணியில் 27 கருப்பு மிளகுகளை போட்டு முடிந்து, ஒரு மண் அகல் விளக்கில் அந்த முடிச்சை திரியாக வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். தீபம் ஏற்றிய பிறகு அந்த தீபத்தை சுற்றி குங்குமத்தை போட வேண்டும். இந்த வழிபாட்டை மூன்று வாரங்களுக்கு செய்து வர நீங்கள் பிறருக்கு கொடுத்த பணம், பிறர் உங்களை ஏமாற்றி கடனாக வாங்கிய பணம் ஆகிய அனைத்தும் மீண்டும் உங்களிடம் வந்து சேரும்...
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...