முதலில் படுவேகமாக பணக்காரர் ஆக வேண்டுமென்றால் படுவேகமாக உழைக்க வேண்டும். அதன் பின்பு சில பரிகாரங்களை உடன் செய்யும் போது உங்களுடைய முயற்சியில் தோல்வி இருக்காது. அயராமல் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும் போது உடல் சோர்வு ஏற்பட்டு சோம்பேறித்தனம் உங்களுக்குள் புகுந்தாலும், அதை விரட்டி அடிக்கக்கூடிய சக்தி நாம் செய்யும் பரிகாரத்திற்கு உண்டு. பச்சை கற்பூரத்தை வைத்து இந்த ஒரு சுலபமான பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி வருமானம் உயர்வதை ஒரு சில நாட்களிலேயே உணரமுடியும். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பணம் சம்பாதிக்க தேவையான முயற்சிகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும். அதில் வரும் தடைகளை தகர்த்து பரிகாரம் கைகொடுக்கும். செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஆனால் செவ்வாய்க்கிழமை முந்தைய தினம் திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமை முந்தைய தினம் வியாழக்கிழமையும் இந்த தண்ணீரை நீங்கள் தயார் செய்து வைக்க வேண்டும். திங்கட்கிழமை இரவு 1 டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை ஊற்றி அதில் 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த தண்ணீரை மறுநாள் காலை அதாவது செவ்வாய்க்கிழமை காலை எழுந்து வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்துக் கொண்டு, இந்த தண்ணீரை நீங்கள் வாசல் தெளிக்கும் தண்ணீரோடு ஊற்றி கலந்து வாசல் தெளிக்க வேண்டும். நல்ல மனம் நிறைந்த இந்த தண்ணீரை வாசலில் தெளித்து கோலம் போடும் போது உங்கள் வீட்டிற்கு ஒரு லட்சுமி கடாட்சம் கிடைக்கும். இந்த வாசத்தை வீட்டில் இருப்பவர்கள் சுவாசிக்கும் போது, அதாவது வெளியே செல்லும் போது நீங்கள் நிலை வாசலில் தெளித்து இருக்கும் தண்ணீரின் வாசம் உங்களுடைய மூக்கில் நிச்சயம் செல்லும். அந்த வாசம் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். வெளியே சென்று செய்யக்கூடிய வேலையை இன்னும் சுறுசுறுப்பாக செய்யத் தொடங்குவீர்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்யும்போது வருமானமும் அதிகரிக்கும் தானே. இந்த தண்ணீரை கொஞ்சமாக எடுத்து அதாவது மஞ்சள் தூள் பச்சைகற்பூரம் சீரகம் சேர்த்த தண்ணீரை, சாதாரண தண்ணீரோடு கலக்காமல் அப்படியே எடுத்து தீர்த்தம் போல வீட்டிற்குள் மூலை முடுக்குகளில் தெளித்து விட்டாலும் அந்த வாசம் வீடு முழுக்க நிரம்பி இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு மன நிம்மதியை கொடுக்கும்.இதே போல வியாழக்கிழமை இரவு தண்ணீரை தயார் செய்து வைத்து விட்டு வெள்ளிக்கிழமை அந்த தண்ணீரை நிலை வாசலில் தெளிக்கவும், வீட்டிற்குள் தெளிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஒரு சிறு பரிகாரம் உங்களுக்கு பல வகையில் பெரிய நன்மைகளை கொடுக்கும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள். இதோடு மட்டுமல்லாமல் பச்சை கற்பூரத்தை ஆங்காங்கே உங்களுடைய வீட்டில் வைக்கலாம். உதாரணத்திற்கு பணப்பெட்டியில், பணம் வைக்கும் பர்சில் குழந்தைகள் படிக்கின்ற புத்தகப்பையில் இப்படி எந்த இடத்தில் பச்சை கற்பூரத்தை வைத்தாலும் அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து நன்மைகள் நிறைய நடக்கும் என்பது நம்பிக்கை. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
கேட்டவர் இளையராஜா- கேட்டது பாலு மகேந்திராவிடம்..! அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா. “சொல்லுங்கள். ஒரு...
No comments:
Post a Comment