Sunday, June 24, 2012

தேர்தல் முறைகேடு வழக்குகள்; தீர்வு என்ன?



தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்ற சொல் வழக்கு உண்டு. அதை உண்மைப் படுத்துவது போன்றே நமது நீதிமன்றங்களின் பெரும்பாலான நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. ஒரு கொலை வழக்கு கோர்ட்டுக்கு போனால், கொலையாளி செத்தபின்பு அவனுக்கு மரணதண்டனை வழங்குவதும், வாய்க்கால் தகராறுக்காக கோர்ட்டுக்குப் போனால், வயலையே விற்று செலவு செய்தபின்பு தீர்ப்பு வருவதும், இவ்வாறான வேடிக்கைகளை அவ்வப்போது நீதிமன்றம் செய்து வருவதை மக்கள் பார்த்துதான் வருகின்றனர். நீதிமன்றத்தின் இழுத்தடிப்புக்கு மற்றொரு சான்றை பார்க்கலாம்.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் இப்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லாது என்று அறிவிக்ககோரி, சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சிதம்பரம் வழக்கை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது. இதுதான் அரசியல் அரங்கில் இப்போது பரபரப்பாக பேசப்படும் செய்தியாக உள்ளது. 

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நமது நாட்டின் நீதி வழங்கும் தன்மை ஆமை வேகத்தில் சென்று கொண்டிருப்பதை காட்டுகிறது. சிதம்பரம் வெற்றி மீதான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போதுதான் அது விசாரணைக்கு உகந்ததாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது என்றால், இன்னும் விசாரணைக்கு எத்தனை ஆண்டுகள்., தீர்ப்புக்கு எத்தனை ஆண்டுகளோ..! அதற்குள் சிதம்பரமும் ஐந்தாண்டுகள் முழுமையாக ஆண்டு அனுபவித்து விடுவார் என்றே தோன்றுகிறது. இதை நாம் மிகையாக சொல்லவில்லை. 
 
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேல்துரையும், அ.தி.மு.க. சார்பில் மனோஜ் பாண்டியனும் போட்டியிட்டனர். அதில், வேல்துரை 4 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை கடந்த 2009-ம் ஆண்டில் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மனோஜ் பாண்டியன் மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பன்சால், ஞானசுதா மிஸ்ரா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேல்துரை எம்.எல்.ஏ. வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்தனர். 

2006 தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஒருவரது வெற்றி குறித்த வழக்கு, அவர் முழுமையாக ஐந்தாண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்து முடித்து, அடுத்த தேர்தலை சந்திக்கும் நிலையில் அவரது வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது என்றால், இப்போது சிதம்பரம் தனது பதவிக்காலத்தில் மூன்று ஆண்டுகளை முடித்த நிலையில், இப்போதுதான் அவருக்கு எதிரான வழக்கில் முகாந்திரம் இருப்பதாகவே நீதிமன்றம் கருதுகிறது என்றால், முன்னர் சொன்ன வேல்துரை வழக்கு நிலைதான் சிதம்பரம் வழக்கிற்கும் ஏற்படும் என்பது உள்ளங்கை நெல்லைக்கனியாக தெரிகிறது. 

நீதிமன்ற விஷயம் இப்படி இருக்க,மறுபுறம் சிதம்பரம் பதவிவிலக வேண்ண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, பாஜக தலைவர் நிதின் கட்காரி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கோருகிறார்கள்.மறுபுறம் காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் மட்டுமன்றி திமுக தலைவர் கருணாநிதியும் கூட சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை என்று கூறிவருகிறார்கள். சம்மந்தப்பட்ட சிதம்பரமும் ''நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று சொல்லி வருவதோடு, இந்த தீர்ப்பு எனக்கு பின்னடைவு இல்லை என்றும் கூறுகிறார்.

இவ்வாறான நிலையில் இதற்கு என்னதான் தீர்வு? ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு விட்டதால், விசாரணை நடப்பதால் மட்டும் அவர் குற்றவாளி என்று கருதமுடியாது. அதை வைத்து அவரை பதவி விலக கோருவதும் சரியல்ல. அதே நேரத்தில் தார்மீக அடிப்படையில் பொறுப்பேற்று சிதம்பரம் பதவி விலகி தனது வெற்றியின் உண்மையை நிரூபிக்க முன்வருவரானால் அது அவருக்கு நற்பெயரை பெற்றுத்தரும். ஆனால் பதவிவிலகாமல் இருந்துகொண்டே இவ்வழக்கை சந்திப்பாரானால், அவருக்கு நியாயத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைத்தாலும், மக்கள் மத்தியில் 'இந்த தீர்ப்பை பெற தனது அதிகாரத்தை பயன்படுத்தி இருப்பாரோ' என்ற சந்தேகம் எழுவதும் இயல்பானதுதான். இதில் எது சிறந்தது என்பதை சிதம்பரம் தான் தீர்மானிக்க வேண்டும்.

அடுத்து தேர்தல் முறைகேடு வழக்குகளை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கும் நிலையை மாற்றி, ஒருவரது வெற்றி குறித்து வழக்கு தொடுப்பவர்கள் தேர்தல் முடிவு அறிவித்த ஒரு வாரத்திற்குள் வழக்குத் தொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும். ஒரு வர காலத்திற்கு பின் தொடுக்கப்படும் வழக்கு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அந்த ஒரு வார காலம் வரை வெற்றி பெற்ற எவருக்கும் தேர்தல் கமிஷன் சான்றிதழ் வழங்கக் கூடாது. பதவி ஏற்க அனுமதிக்க கூடாது. ஒருவரது வெற்றிக்கு எதிராக தொடரப்படும் வழக்கு மீது போர்க்கால அடிப்படையில் நீதிமன்றங்களில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் தீர்ப்பளித்து இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். பொய்யான வழக்கை தாக்கல் செய்பவருக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். அப்போதுதான் இந்த தேர்தல் பஞ்சாயத்து முடிவுக்கு வரும். சட்டமியற்றுபவர்கள் சற்று சிந்திப்பார்களா?



 

கச்சதீவு நமதே - ஆவணப்படம்.

சீதையின் மைந்தன் - கச்சதீவு மீட்பு இயக்கத்தினறால் எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஓவ்வொரு தமிழனும் காணவேண்டும் என்ன ஒரு கொடுமை எப்படி எல்லாம் நம்மை எமாதுறாகபா.. இவ்வளவு ஆதாரங்கள் நம்மிடம் இருந்தும், நமது திரவிடக் கட்சிகள் என்ன செய்கின்றன என்று தெரியவில்லை
கச்சத்தீவு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974 ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர் (1.15 சதுர கிலோ மீட்டராகும்). இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் ஒன்று இங்கு உள்ளது.
கி.பி. 1605 ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795 இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார். கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40 ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார்.
1972 - ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933 - ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899 - ல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285,20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு உள்ள உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.
1974 மற்றும் 1976 ம் ஆண்டில் இந்திய அரசு தனக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தது. இந்த ஒப்பந்தங்களில் மீனவர்கள் தீவுப்பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், வழிபாடு நடத்த தீவுக்கு சென்று வருவதற்கும் இலங்கை அரசிடம் அனுமதி பெறவேண்டியதில்லை என்பது விதியாகும். இந்த விதியை மீறி இலங்கை அரசு தமிழக மீனவர்களை சுட்டு கொண்று வருகிறது. 1960 ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது என்று கூறி 2008 ம் ஆண்டு அதிமுக தலைவர் செயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். தமிழக சட்டசபையில் சூன் 9, 2011 அன்று நடந்த சட்டபேரவை தீர்மானத்தில் தமிழக வருவாய் துறையையும் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கச்சத்தீவில் மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட புகழ்பெற்ற அந்தோணியார் கத்தோலிக்க தேவாலயம் ஆலயம் ஒன்று உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். இலங்கையில் இனகலவரம் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது. இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வந்தனர். இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சத்தீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்கு சொந்தமானது. ஒப்பந்தத்தின்படி கச்சதீவில் தமிழக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து திரும்பவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதற்கு பின் கச்சத்தீவு விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்தது. ஆயினும் திருப்பலி சடங்குகளை தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தையர்களே செய்து வந்தனர். இந்நிலையில் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2002 இல் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது. 20 வருடங்கள் கழித்து நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு திரும்பினர். தொடர்ந்து கடந்த ஆண்டு வரை கச்சத்தீவு விழாவிற்கு ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்களும், பத்திரிகையாளர்களும் சென்று திரும்பினர். 2011 ஆம் ஆண்டு ஆலயவிழா, மார்ச் 20 அன்று இரு நாட்டு பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனையுடன் சிறப்பாக நடந்தேறியது.
 

Sunday, June 17, 2012

பாராளுமன்றத்தில் தூங்கும் பிரணாப் முகர்ஜி !



 

பாராளுமன்றத்தில் தூங்கும் பிரணாப் முகர்ஜி!
சோனியா காந்தியால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரணாப் முகர்ஜி தூங்குவதை பாருங்கள்.
அய்யா அப்துல் கலாமிற்கு ஆதரவாக ஒவ்வரு தமிழரும் தங்கள் தளங்களில் இதை மறு பிரசுரம் செய்யுங்கள். 

Thursday, June 7, 2012

ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும்




ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை நம் உணவுப்பொருட்கள் காய்கறி, கீரைகளில் அதிமாக உள்ளது. 

ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம்.

கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.

தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரி சலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.

இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன. பசும்பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச்செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த் தன்மை உடையது.

நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் சவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.

பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.

சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

குஷ்புவின் இடுப்பை கிள்ளியது யார்? அவிழும் முடிச்சுக்கள்!


உலகின் மிகப்பெரிய ஜனனாயக நாட்டில் இப்படியொரு கொடூரமாஐயகோ நெஞ்சுபொறுக்கவில்லையேஅதுவும் கலாசாரம் , பண்பாடு என்றால் என்னவென்று உலகுக்குகற்றுத்தந்த தமிழ்நாட்டிலா இது நடந்ததுஅதிலும் "அஹம் பிரம்மாஸ்மிரேஞ்சில் நான்தமிழ் என கூறிக்கொண்டிருக்கும் தமிழின் காவலர்தமிழின் சேவகன்தமிழின் வாரிசு,முப்பதுவருடங்களாக ஆயிரமாயிரம் மாவீரர்களோடு போராடியும் பிரபாகரனால்அடையமுடியாமல் போன ஈழத்தமிழர்களின் விடிவை நான்கே மணத்தியாலங்களில்பெற்றுத்தந்த   என்றும் குமரன் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவிலா இது நடந்தது?வானகமேவையகமே ! என்னை வாழவைக்கும் தமிழகமே ! எங்கே இருந்தீர்கள் இதுநடக்கும்  போது?

தமிழுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற வந்த "கற்புகுஷ்புவின் இடுப்பை யாரோகிள்ளியிருக்கிறார்கள்உலக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் இந்த வரலாறுசம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டிய பொறுப்பு யாருக்குமே இல்லை என்பது தான் என்வெறுப்பு. ( என்ன டி.ஆர் மாதிரி ஆயிட்டேன்தமிழுக்கு வயதென்னவென்று யாராவதுஉங்களைக்கேடால் எண்பத்தியொன்பது என்று தயங்காமல் கூறுங்கள்காரணம் அதுதான் எம் பெருமான் கலைஞரின் வயதுதமிழே அவர்அவரே தமிழ்அந்த தமிழின்விழாவில் தான் இப்படியொரு சோகம்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கருணாநிதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அலையோ அலையென்று அலைந்து ஒருவழியாக கருணாநிதி நகர் பேரூந்து நிலையத்தில் தமிழைக்கண்டு தலையால் வணங்கி அந்த விழாவில் "முதல் வரிசையில்" ( நோட் த பாயிண்ட் யுவர் ஆனார்) அமர்ந்து இருந்தார் கற்புக்கரசி குஷ்பு. விழா முடிவில் மேடையிலிருந்து வெளியேற முயன்றவரின் இடுப்பு எதிர்பாராத சமயத்தில் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின்றது. இதனால் குறித்த பிரதேசத்தில் பரபரப்பு நிலவியது. அட ! குறித்த பிரதேசம்ன்னு நான் சொன்னது விழா மேடையை.

அப்புறம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குசுபு சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அழகிய கிழ மகனின் நற்பெயர் (?????) கெட்டுவிடும் என்பதாலும் , குசுபுவின் கற்பு போய்விடும் என்பதாலும் இப்படியொரு சம்பவமே நடக்கவில்லையென தலையால் அடித்துகொள்கிறது கோபாலபுரம். ஆனாலும் நம்பவம் நடந்திருப்பது உண்மையென்பதால் தலைவர் டாக்டர்.மு.கலைஞர் தலைமையில் பஞ்சாயத்து நடந்து முடிந்திருக்கிறது. நடந்த கட்சி கூட்டத்தில் ( ஏது கட்சி கூட்டமா? # பின்ன என்ன எட்டு எம்.எல்.ஏ க்களை வச்சுகிட்டு என்ன ஆட்சியா நடத்த இயலும்? இந்த மாதிரி இடுப்பு கிள்ளின கேஸ் , உள்பாவாட உருவின கேஸ்னு ஏதாச்சும் பஞ்சாயத்து பண்ணினா தானே பெருசுக்கு பொழுது போகும்)சாதகமான முடிவுகள் எட்ட‌ப்படாததால் , காதும் காதும் வைத்தால் போல் விசயத்தை ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸ் வரை கொண்டுபோயிருக்கிறார்கள்.

இன்று காலை விசேட விமானத்தில் சென்னை வந்த ஸ்கொட்லாண்ட் பொலிசார் கோல்கேற், பெப்சோடண்ட், டாபர் அப்டீன்னு இந்தியாவில இருக்கிற எல்லா டூத்பேஸ்ட்டுகளையும் போட்டு துலக்கு துலக்குன்னு துலக்கி நிறைய துப்பு துலக்கியிருக்கிறார்கள். அவைங்க என்ன ஐபதுரூவா வாங்கிட்டு ஆள விடுற பொலிசா? ஸ்கொட்லாண்ட் பொலிஸ் ஆச்சே , காலையில் வந்து துப்பு துலக்கி துப்பிவிட்டு மாலை விமானத்தில் மங்கோலியா போய்விட்டார்களாம். இப்போது விடயம் என்னவென்றால் இந்த அறிக்கையை பார்த்து அதிர்ந்து போன கோபாலபுரம் & கோவினர் , ஒரு கண்துடைப்புக்காக ஸ்கொட்லாண்ட் பொலிசை கூப்பிட்டால் இப்படி சங்கத்து ரகசியங்க‌ளை சந்தியில் விட்டு போயிருக்கிறர்களேன்னு அதிர்ந்து போனாய் அத்தனை அறிக்கை விபரங்களையும் உதயநிதி ஸ்டாலினின் ஆப்பிள் லாப் டாப்பில் சேமித்து வைத்திருக்கிறார்கள். இங்கு தான் நடந்திருக்கிறது மற்ருமொரு துயரம், ஒபாமாவின் அட்டாச் பாத்றுமுக்குள் புகுந்தே தகவல் திரட்டும் விக்கிலீக்ஸ் , நம்ம கருணாநிதியின் கதவே இல்லா கக்*சுக்குள் நுளையாதா என்ன? விளைவு விக்கிலீக்ஸ் திருடிய அந்த ஆய்வு அறிக்கையின் நகல் ஒன்றை எனக்கு அனுப்பினார் யூலியன் அசேஞ்சின் அஸிஸ்டெண்ட்.  இதோ அந்த அறிக்கையின் அடுத்த நகல் எனது கோடான கோடி வாசகர்களுக்காக....

From,
6/6/2012
ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸ்
வழக்கு எண் 420.
இறுதி அறிக்கை.
To,
கருணாநிதி
வருங்கால இந்திய பிரதமர்,
தமிழின காவலர்,
கோபாலபுரம்.


குஷ்புவின் இடுப்பை கிள்ளிய சூத்திரதாரி தொடர்பான அறிக்கை.
 (தங்களுக்குரியதும் ரகசியமானதும்)

மேற்படி சம்பவம் தொடர்பாக, குறிப்பிட்ட அந்த மர்ம நபர் குறித்தும், இந்த சம்பவத்தின் பின்னணி பற்றியும் எங்களுக்கு கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த அறிக்கையை சமர்ப்பிக்கிறோம்.

முதலில் , தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் நபர் விழா மேடையில் அமர்ந்திருந்த இடம் , முன்வரிசை! அதாவது , தங்களது கட்சியின் வேர்கள், தூண்கள், துடைப்பகட்டைகள் எல்லாரும் அமர்ந்திருந்த இடம். கோடிகளை அடித்த கேடிகளும், அபகரிப்பு அப்பாட்டாக்கர்களுமே அங்கே இருந்திருக்கிறார்களே ஒழிய , வேறு வேலைவெட்டிகளை விட்டு கட்சிக்காக உழைத்த உண்மையான சேவகர்கள் யாரும் அங்கு அமர்ந்திருக்கவில்லை. ஆக‌ வேறு எவரும் உள்நுழைந்திருக்க முடியாத அந்த அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் , குஷ்புவில் இடுப்பை கிள்ளியது நிச்சயம் கட்சியின் அதியுயர் பீடத்தில் அமர்ந்திருக கூடிய ஒருவரே என்பது தெள்ளத்தெளிவாகிறது. இந்த சந்தேகம் உங்களுக்கும் வந்து , கோபால புரத்தில் உள்ள உங்களது கட்சி தலைமை அலுவலகத்தில்  "கள்வனைக்க் கண்டுபிடி"  என்ற ஆய்வு நடத்தி சூத்திரதாரியை கன்டுபிடிக்க நீங்கள் எடுத்திருந்த முயற்சியையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சூத்திரதாரி யார் என்ற எங்களது ஊகத்துக்கோ அல்லது உறுதியான முடிவுக்கோ போவதற்கு முன்னர் இந்த கிள்ளலுக்கு பின்னால் என்னவெல்லாம் சதிவலைகள் அல்லது திட்டமிடல்கள் மறைந்துள்ளன என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

குஷ்பு இலக்கு வைக்கப்பட காரணம் என்ன?

முதலில் தாக்குதலுக்குள்ளான குஷ்புவை பற்றி இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டுவது அவசியமாகின்றது, தற்போதைய கணவர் சுந்தர்.சி தவிர தனது சினிமா வாழ்க்கையில் வேறு எவருடனும் இணைத்து கிசுகிசுக்கப்படாதவர் இந்த குஷ்பு. அது போக வேறு எந்த நடிகருடனும்  சேர்ந்து வாழ்ந்திராதவர் குஷ்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது போல ஒரு முற்போக்கு வதியும் பெண்ணிய விடுதலை நாயகியுமான இவர் வாழ்வில் பல அற்புதமான கொள்கைகளை கடைப்பிடித்தவர் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது. திருமணத்துக்கு முன்னர் செக்ஸ் தப்பில்லை என்ற அதீத உத்தமமான கோட்பாட்டை இந்தியாவுக்கு அறிமுகம் செய்த பெருமைக்கு இரியவர். இந்த கொள்கைகள் இவரது வாழ்வில் இருந்து இவரால் எடுக்கப்பட்டதா என்பது இப்போது நமக்கு அவசியம் இல்லாத ஒரு தலைப்பு, ஆகவே அதை விடுவோம். ஆக சூத்திரதாரி குஷ்புவை இலக்கு வைத்ததற்கு அவரது இம்மாதிரியான முன்மாதிரி வாழ்க்கையும் , அவரது சிறந்த கொள்கைபிடிப்பும் முதல் காரணமாக இருந்திருக்கலாம். கொள்கை பிடிப்பு மட்டுமல்ல தி.மு.க வில் இப்போது இருக்கின்ற உயர் மட்ட அரசியல் புள்ளிகளில் நல்ல "தசைபிடிப்பு" இருப்பதும் இந்த கிள்ளல் சம்பவத்துக்கு தூண்டுகோலாய் இருந்திருக்கும் என்பதும் ஒரு வலிதான வாதமாய் இருக்கிறது.



தாக்குதலுக்கு விழா மேடையை சூத்திரதாரி இலக்கு வைக்க காரணம் என்ன?

ஜெயா டிவியில் "ஜாக்பாட்" பண்ணும் போதும் சரி, இப்போது முதுகில் பச்சை குத்திக்கொண்டு ஜாக்கட்டை திறந்துவிட்டு அலையும் போதும் சரி, குஷ்பு எப்போதும் நாகரீகமான உடையிலேயே வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் இலக்கு வைக்கப்பட முடியாத குஷ்பு இந்த விழா மேடையில் இலக்கு வைக்கப்பட காரணம் தி.மு.க வின் உள்துறை சமாச்சாரங்கள் பெரும்பாலும் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பதன் காரணமேயாகும். வெளிவந்த லஞ்ச , ஊழல், அபகரிப்பு தவிர இன்னும் வெளிவராத எத்தனையோ கோடிகள், மற்றும் கேடிகளது கணக்குகள் இதற்கு காரணம். ஆக தனது விரலுக்கு விருந்து கொடுக்க நினைத்த சூத்திரதாரி விழா மேடையை பயன் படுத்தக் காரணம் மேடை அமுக்கத்துக்குள் கமுக்கமாக காரியம் முடித்துவிடலாம் என்ற எண்னத்தில் தான் இந்த மேடையில் தனது நாடகத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவருகிறது.

இடுப்பு மேட்டர் அடுப்பு புகையாய் வெளிவர காரணம் என்ன?

விழா மேடையில் இடுப்பு கிள்ள‌ப்பட்டதும் ஆரம்பத்தில் அப்படி எதுவுமே நடக்காதது போன்று  அடக்கி வாசித்த குஷ்புவும் மற்றும் கோபாலபுரம் கோஷ்டியினரும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்த இடுப்பு தாக்குதலை மீடியாக்களுக்கு கசிய விட்டதன் காரணம் என்னவென்று பார்த்தோமானால் ஈழத்தமிழர் பிரச்சினையை காரணம் காட்டி சரிந்து போன அரசியல் செல்வாக்கை , இந்த இடுப்பு பிரச்சினையை கிளப்பிவிட்டு தமது அரசியல் இருப்பை தொடர்ந்து காட்டி ஆதாயம் தேடுவதற்கு தமிழ் குமரன் முனைவதாக ஹெவியாக நம்புகிறோம்.

பவர் ஸ்டார் பிரச்சினைக்கு அடுத்தபடியாக பதிவுலகில் இந்த பிரச்சினையும் பதிவுலகில் பட்டையை கிளப்ப தொடங்கியிருப்பதால் இண்லி, தமிழ் மணம், உடான்ஸ் ஆகிய திரட்டிகளில் விழும் ஓட்டுக்கள் தமக்கும் வந்து சேரும் என தமிழ் காவலன் கணக்குபோடுகிறார் என்பது எங்களுக்கு புரிகிறது.

ஆகவே வரும் வாரங்களில் விழுப்புரம், வண்ணாரப்பேட்டை, தென்மதுரை, காசிமேடு, நொச்சிக்குப்பம் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தி விழா முடிவில் இடுப்பு கிள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சரிந்த செல்வாக்கை பிடிக்க தமிழின விடிவெள்ளி காய் நகர்த்திவருகிறார். இதன் அடுத்த கட்டமாக எதிர்வரும் உள்ளூரட்சி தேர்தல்களில் பணம் கொடுத்து வாக்குகளை வாங்காமல் ஒரு ஓட்டுக்கு இரண்டு கிள்ளல் என்ற அடிப்படையில் வீடுவீடாக சென்று இடுப்பு காட்டும் வைபவமும் அரங்கேற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கள்ள ஓட்டுக்கு கொல்லைப்புறத்தில் வைத்து கள்ளக்கிள்ளல் வசதியும் செய்து தரவும் ஏற்பாடாகியுள்ளது. இதற்காக விசேட ஆடைவடிவமைப்புக்களும் மேற்கொள்ள‌ப்படவுள்ளன. இந்த‌திட்டத்தை அழகிரி தலைமையிலான திட்டகமிட்டி தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் கோப்பு , ஒப்பமிடலுக்காக கருணாநிதியின் மேசையில் வைக்கப்பட்டுள்ள‌து. 

அடுத்த பொதுக்கூட்டத்துக்கு அழகிரி & கோ வடிவமைத்த ஆடை


ஆக இந்த இடுப்புக் கிள்ளலானது ஒரு காமவெறியின் வெளிப்பாடாக இருந்த போதிலும் அதை அப்படியே விட்டுவிடாமல் அரசியலாக்கி ஆதாயம் பார்க்கிறார் அரசியல் சாணி நக்கியார், சாரி... சாணக்கியர். இதைத்தான் ஸ்கொட்லாண்டில் " ஒரு இடுப்பில் இரண்டு கிள்ளல் " என்பார்கள்.

இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதா அல்லது சடுதியான முடிவின் விளைவா?

எங்களது ஆய்வின் அடிப்படையில் இந்த தாக்குதல் கிட்டத்தட்ட முப்பது வருட திட்டமிடலின் வெளிப்பாடாகவே கருதுகின்றோம். சின்னத்தம்பி திரைப்படத்தில் இருந்தே சூத்திரதாரிக்கு குஷ்புமேல் ஒரு கண் இருந்திருக்க வேண்டும், தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்த சூத்திரதாரிக்கு ஜெயா டிவியின் "ஜாக்பாட்" நிகழ்ச்சியை விட்டு வெளியேறி குஷ்பு கோபாலபுரத்தில் குடியேறியது ஜாக்பாட் அடித்ததைப்போல ஆகியிருக்கிறது. எந்தவித பதவியும் வழங்கப்படாத ஒரு அடிப்படை உறுப்பினருக்கு ( ஆரம்பத்தில்) மேடைகளில் ஏறி பேசவும், வி.ஐ.பி வரிசைகளில் அமர இடம் கொடுக்கப்பட்டதும் இந்த "ஒப்பிரேஷன் இடுப்பு" தாக்குதலின் ஒரு அம்சமாகவே கருதுகின்றோம். ஒரு முப்பது வருட கச்சிதமான திட்டமிடல் இப்போது நிறைவேறியிருக்கின்றது.

யார் அந்த கிளு கிளு கில்மா மன்னன்?

வாதங்கள் , ஊகங்கள் மற்றும் சம்பவங்களின் கோர்வையை வைத்துப் பார்க்கும் போது எங்களால் இந்த இடுப்பைக் கிள்ளிய விரலுக்குரியவனை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இந்த முடிவுக்கு வருவதற்கு எங்களால் இரண்டு சம்பவங்களை ஆதாரமாக முன்வைக்க முடியும்.

முதலாவது, குறித்த இந்த சம்பவம் இடம் பெற்று முடிந்தவுடன் எங்களது உதவியை நாடுவதற்கு முன்னர், உங்களது தலமை செயலகத்தில் "கள்வனைக்க் கண்டுபிடி" என்ற பெயரில் ஒரு மிஷன் நடத்தி இடுப்பு கிள்ளியவை கண்டுபிடிக்க முயறி செய்து தோற்றிருக்கிறீர்கள், இங்கு தான் எங்களது சந்தேகம் வலுக்கிறது. இந்த மிஷனில் நீங்கள் பயன்படுத்திய நுட்பம் சரிதான் ஆனால் அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது தான் கேள்வியே!

குஷ்புவை கண்ணை மூட சொல்லிவிட்டு , அந்த விழா மேடையில் இருந்த அனைவரையும் வரிசையில் வரச்சொல்லி  கிள்ள விட்டு "இவனா?" "இந்த கிள்ளலா?" என்று கேட்டிருக்கிறீர்கள். சுந்தர் .சி யைத்தவிர வேறு யாரும் கைவைத்திராத ந்த இடுப்பில் இன்னொரு அந்நிய கை படும்போது குஷ்புவால் இலகுவாக அடையாளம் கண்டு சொல்ல முடியும் என்ற உங்களது எண்ணம் சரியாக இருந்த போதிலும் , இங்கும் ஒரு தவறு நடந்திருக்கிறது அல்லது வேண்டுமென்றே தவற‌ விடப்பட்டிருகிறது. அதாவது விழாவுக்கே வராத சமயல் காரன் , வேலைக்காரன் எல்லாம் வந்து கிள்ளிவிட்டுப்போக "அடுத்து நீ வா, நீ வா" என்று கட்டளையிட்டுக்கொண்டிருந்த கோபாலபுரத்தின் காவலன் மட்டும் மிஸ்ஸிங்...... அவர் விழா மேடையில் இருந்தவரும் கூட..... இது தவறாக நடந்ததா? அல்லது தவறவிடப்பட்டதா?

அடுத்து, குஷ்புவின் உடம்பில் அவர் பச்சை குற்றிக்கொண்டு அதை காட்டவேண்டும் என்பதற்காக காற்றாட ஆடையுடுத்தி அங்கங்கே திறந்து விட்டிருக்கையில் இடுப்பு மட்டும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது "கொழுக் மொழுக்" என்று இருப்பது மட்டும் தான் காரணமா அல்லது இடுப்பைத்தவிர மற்ற ஏனைய பிரதேசங்கள் எட்டாக்கனியாக இருப்பதுவா?

ஏன் என்றால் எழுந்து நிற்கக்கூடிய ஒருவருக்கு தாகுதல் இலக்காக இருக்க கூடியது எது என்பது யூ டியூப்பில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட ஜோதிகாவின் "ராஜா" பட சீனில்ஆகட்டும் சரி, சமந்தாவின் கடைதிறப்பு காணொளிலாகட்டும் சரி தெள்லத்தெளிவாக புரிந்திருக்கும். ஆனால் இங்கு வயது போன , அடுப்பு போன்ற ஒரு இடுப்பு இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கான காரணம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும், அதாவது தனது கைக்கு இடுப்பு மட்டுமே எட்டக்கூடிய ஒருவரே இந்த கில்மா செயலை நிகழ்த்தியிருக்கிறார். 

எழுந்து நிற்க முடியாத ஒருவர் அல்லது நாற்காலியில் உட்கார்ந்திருந்திருக்கக்கூடிய ஒருவரே இந்த சம்பவத்தின் சூத்திரதாரியாக இருக்கிறார். குஷ்புவின் இடது பக்கமாக அமர்ந்திருந்த அந்த மர்மமனிதனின் விரல்களே இந்த விபரீத விளையாட்டை விளையாடியிருக்கிறது. காரணம் அந்த கைகளுக்கு இடுப்பு மட்டுமே எட்டக்கூடிய தொலைவில் இருந்திருக்கிறது. வேறு இடங்கள் இலக்குகளாக இருந்திருந்தாலும் இயலாமை காரணமாக "சீ..சீ..இந்த பழம் புழிக்கும் என்று கணக்குப் போட்ட அந்த நரி , இடுப்பில் சொம்பு உருட்டி விளையாடியிருக்கிறது என்பதே நிதர்சனம்" அந்த நரி யாரென்றால்...... சே... பேனாவுக்கு மை இல்லை பின்பு இன்னொரு அறிக்கையில் சொல்கிறோம்.

தங்கள் உண்மையுள்ள‌
பற்றிக் ஷன் மாயத்தேவன்
துணை ஆய்வாளர்
ஸ்கொட்லாண் யார்ட் காவல்த்துறை.


தம்பீ...  தமிழ்க்கவிதை தும்பீ.. இது மாசு படாத கையப்பா....

கருணாநிதியின் நடிப்பு


கருணாநிதி ஒரு நல்ல நடிகர்.

வெறும் நடிப்பு மட்டுமின்றி வேறு திறமைகளும் அவருக்குண்டு.

அவர் ஒரு திறமையான புகைப்படக் கலஞர் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
நேற்று மிஸ்ஸியம்மா படம் பார்த்தேன்.

அதில் தங்கவேலுவின் உதவியாளராக வருவார் ஏ.கருணாநிதி.
தங்கவேலு சொல்வதையெல்லாம்,குறிப்பெடுக்கும் அவரது பாணி சிரிப்பை வரவழைக்கும்.

வீரபாண்டியக்  கட்டபொம்மனில் ஒரு மறக்க முடியாத பாத்திரத்தில் நடித்திருந்தார்.

நகைச்சுவை நடிகரான இவருக்குப் படங்களில் ஜோடியாக நகைச்சுவை நடிகைகளே நடிப்பது வழக்கம்.பெரும்பாலும் டி.பி முத்துலக்ஷ்மி அவர்கள் நடிப்பார்.

ஆனால் ஒரு பத்தில் தேவிகா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்!
அந்தப் படம்”மணமகன் தேவை”

என்னால் மறக்க முடியாத ஒரு படம் இவரும் நாகேஷும் சேர்ந்து கலக்கிய “மெட்ராஸ் டு பாண்டிச்சேரி”

இவர் அறுபதுகளில் ஒரு ஓட்டல் நடத்தினார்.

பெயர் “ஓட்டல் மாமியா”-அசைவ ஒட்டல்

மாமியார் வீடு போல் சுவையான சமையல் என்பதால் அப்பெயர்.

புது விதமான உணவு வகைகள் அங்கு கிடைத்தன.

காடை ,கௌதாரி,உள்ளான் இப்படி.

ஒரு மறக்க முடியாத நடிகர் ஏ.கருணாநிதி!

Sunday, June 3, 2012

சைதை துரைசாமியின், மனிதநேயம் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு


சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லாமல் கல்வியகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 
சைதை துரைசாமியின், மனிதநேயம் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 
சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா பயிற்சி மையம் தமிழகம் முழுவதும் நுழைவுத் தேர்வுகளை நடத்தி, மாணவர்களை தேர்வு செய்து ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சிகளை அளித்து வருகிறது. 

2013-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வுக்கு 10 மாத கால இலவச பயிற்சி வகுப்புகளை மனிதநேய கட்டணமில்லா கல்வியகம் நடத்த உள்ளது. பயிற்சி வகுப்புகள் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தொடங்குகிறது. இதில் பயிற்சி பெற தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்களை தேர்வு செய்வதற்காக தமிழகம் முழுவதும் முக்கியமாக 12 மாவட்ட தலைநகரங்களில் மனிதநேயம் பயிற்சி மையம் நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. 

நுழைவுத் தேர்வு சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மையங்களில் நடத்தப்படும். பிற மாவட்டங்களிலும் தேர்வு எழுதலாம். 

நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும். நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி, பாடத்திட்டம் ஆகியவற்றை மனிதநேய இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் www.saidais.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

இணையதள பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாளாகும். ஜூலை 5-ந் தேதிக்கு பிறகு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் நுழைவுத் தேர்வுக்கான அனுமதி சீட்டை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெற வேண்டும். 

சிதம்பரத்தின் துரோகம்: ஜான் மிர்தால் இந்தியா வரத் தடை



 
ஜான் மிர்தால் (Jane Myrdal)ஒரு புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர்உலகின் பல நாடுகளில் நடைபெற்று வரும் அமைதி இயக்கங்களில் ஆர்வமுடன் பங்கெடுத்து சர்வாதிகாரகொடுங்கோல் அரசுகளைக் கண்டித்தும் இயக்கம் நடத்தி வருபவர்என்பத்தி ஐந்து வயதான இந்த உலகறிந்த அரசியல் அறிஞரை இனிமேல் இந்தியாவுக்குள் நுழையக் கூடாதுஎன அறிவித்துள்ளது இந்திய அரசுமாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை வழங்கினார்’ என்று குற்றத்திற்காக இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிதம்பரம் தலைமை அமைச்சராக இருக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.




யார் இந்த ஜான் மிர்தால்?

ஜான் மிர்தால் புகழ் பெற்ற ஆசிய நாடகம் (Asian Drama) என்ற பொருளாதார நூலை இயற்றிய மறைந்த குன்னர் மிர்தால் (Gunner Myrdal) அவர்களின் புதல்வர்அவரது தாய் ஸ்வீடன் நாட்டின் புகழ் பெற்ற அமைச்சராகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணிகளுக்காகவும் பாராட்டப் பெற்ற காலம் சென்ற ஏவா மிர்தால் (Eva Myrdal). கொள்கை அடிப்படையில் இருவரும் சமுக ஜனநாயக வாதிகள், மக்களின் நல்வாழ்வுக்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை உடையவர்கள்இவர்கள் இருவரது பணிக்காகவும் தனித்தனியாக உலகின் அதி உயர்ந்த பரிசாகக் கருதப்படும் நோபெல் பரிசு தரப்பட்டுள்ளதுஇத்தகைய மிகவும் உயர்ந்த சமுக லட்சியங்களுக்காக வாழ்ந்து மறைந்த இந்தக் குடும்பத்தில் பிறந்தவர் ஜான் மிர்தால்.

தமது பெற்றோரைப் போலவே தாமும் உலக மக்களின் நல்வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜான் மிர்தால்தம் வாழ்வின் பெரும் பகுதியை அதாவது சுமார் அறுபது ஆண்டுகளாக ஜான் மிர்தால் மக்கள் பணி ஆற்றி வருகிறார்உலகின் பலபகுதிகளில் நடைபெறும் அமைதி போராட்டங்களுக்குஇயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்போராடும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை எப்போதும் ஆதரித்து வருபவர்தமது நாட்டு அரசாங்கத்தையும் வெளிப்படையாகக் கண்டித்து இவர் பெரிய அளவில் இயக்கங்கள் நடத்தி உள்ளார்அடிப்படையில் இவர் ஒரு ஆய்வாளர்ஜனநாயகவாதி, எழுத்தாளர்பேச்சாளர்.

இவர் சில காலம் இந்தியாவில் தங்கியும்பல முறை பயணம் செய்தும் பிரபலமான நூல்களை எழுதியிருக்கிறார்1983 ம் ஆண்டு இவர் எழுதிய இந்தியா காத்திருக்கிறது(India Awaits) என்ற நூல் தமிழ் உள்பட பல மொழிகளில்பல பதிப்புகள் வெளிவந்துள்ளதுஇதே போலவே கடந்த ஆண்டில் இந்தியாவின் மீதொரு சிவப்பு நட்சத்திரம் அடிமைப்பட்ட மக்கள் விழித்தெழும்காலையில் நமது பார்வைகள்,பிரதிபலிப்புகள்விவாதங்கள்(Red Star Over India. Impressions, Reflections and Discussions when the Wretched of the Earth are Rising.) என்ற நூலை வெளியிட்டுள்ளார்இந்த நூல் இந்தியாவின் கல்கத்தாடில்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இவர் நேரடியாகக் கலந்து கொண்ட கூட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்மாணவர்கள்முன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
ஆங்கிலத்தில் மட்டும் தற்போது கிடைக்கும் இந்த நூல் இந்திதெலுங்குவங்காளிதமிழ்,பஞ்சாபி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் அச்சில் வெளிவர இருக்கின்றது.முன்னெப்போதும் இல்லாத அளவில் வரவேற்புப் பெற்ற இந்த நூலையும் அதன் மொழி பெயர்ப்புகளையும் கண்டு கிலி கொண்ட மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் அதன் எழுத்தாளரையே தடை செய்துவிட்டனர்இது மட்டும் அல்லாது தம்மைஅறிவாளிகளாககருதிக் கொள்ளும் மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளியுமான சிதம்பரமும் செய்து வரும் படுகொலைகள் பேராசை பிடித்த தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் செய்து வரும் சேவை என்ற விபரத்தை ஜான் மிர்தால் உலகின் பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்பல ஐரோப்பியஆசிய மொழிகளில் வெளியாகும் அவரது எழுத்துகள் சமீப காலமாக இந்திய அரசியல்வாதிகள் குறிப்பாக மன்மோகன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் (அவ)மானப் பிரச்சனையாகியுள்ளதுஎனவே,இவரது எழுத்துகளைத் தடை செய்ய ஒரு வழியாக அவரையே தடை செய்து விட்டனர்.


மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை?

மாவோயிஸ்டுக் கட்சியினரின் கருத்துகளை இந்தியப் பத்திரிகைகள்தொலைக் காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது இயக்கம் பணி செய்யும் பகுதிகளுக்குச் சென்று இயக்கத்தின் தலைவர்களையும் மக்களையும் நேரடியாகக் கண்டு பேட்டியெடுத்து வெளியிட்டவர் ஜான் மிர்தால்அவரது பேட்டிகளும் குறிப்புகளும் மத்திய இந்தியாவில் நடக்கும் அடக்குமுறை பற்றிய விபரங்களை சர்வதேசத்திற்கும் சிறப்பாக அறிமுகம் செய்ததுஇதில் இருந்து தான் உலகம் மாவோயிஸ்டுகளின் உண்மையான நிலைபாடுகளை அவர்களின் வெட்டிச் சிதைக்கப் படாத முழுமையான பேட்டிகள் மூலம் நேரான வழியில் அறிந்து கொள்ள முடிந்ததுஅப்போதிருந்தே அவரைக் குறி வைத்திருந்த இந்திய அரசு காரணம் எதுவும் கண்டுபிடிக்க முடியாததால் மாவோயிஸ்டுகளுக்கு அவர் ஆலோசனை சொன்னதாக குற்றம் சாட்டியுள்ளதுதாம் ஆலோசனை எதுவும் சொல்லவில்லை என்றும் தான் பேசிய அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதுமாணவர்கள்இளைஞர்கள்,அறிவாளிகள் பங்கேற்ற அரங்கக் கூட்டங்கள் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று மறுத்து இருக்கிறார்


பொய்யே தொழிலாகக் கொண்ட சிதம்பரம் இந்த மட்டும் ஒரு வரியில் தம் பொய்யை நிறுத்தியது நமக்கு வியப்பு இல்லை.

இவருடைய சமீபத்திய நூல்மத்திய இந்தியப் பழங்குடிகளுக்குச் சொந்தமான நிலங்களை சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் பிடுங்கி வருவதை விளக்குகிறது.இந்தியாவின் போலீசையும்ராணுவத்தையும் கொண்டு பழங்குடி மக்களை வெளியேற்றி அவர்களது நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதை இந்த நூல் தமது கள ஆய்வு விபரங்களுடன் வெளியிட்டுள்ளதுமாவோயிஸ்டுகளுக்கு எதிராக போர் நடத்துகிறோம் என்று சிதம்பரம் சொல்வது உண்மையில் பழங்குடிகளின் நிலத்திற்கான போர் என்ற விபரங்களை மீண்டும் ஒருமுறை இந்த நூல் நிறுவியுள்ளதுகுறிப்பாக மாணவர்கள்அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மத்தியில் இந்த நூல் பிரபலம் அடைந்து வருவதைக் கண்டு சகிக்காத சிதம்பரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.இதுவரை இந்த நூலை இந்திய அரசு தடை செய்யவில்லைஆயினும்அது குறித்துப் பேசவோ மீண்டும் ஆய்வுக்கான விபரங்கள் சேகரிக்கவோ ஜான் மிர்தால் இந்தியாவுக்குள் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் தடையை விதித்துள்ளது.



ஸ்வீடனும் இந்தியாவும்

ஸ்வீடன் நாட்டு பீரங்கிக் கம்பெனியான போபார்ஸ் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் சிதம்பரத்தின் எஜமான் ராஜிவ் காந்தி லஞ்சம் பெற்றதை அறிந்த அளவுக்கு ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளை அறியவில்லைஇது துரதிர்ஷ்டமே.

ஸ்வீடன் நாட்டின் அறிவாளிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மிகப்பெரும் பங்கு ஆற்றியுள்ளனர்ஐரோப்பிய மக்களுக்கு இந்தியாஇலங்கைமலேசியா போன்ற அடிமைப்பட்ட நாடுகளில் வெள்ளையின அரசாங்கங்கள் நடத்தும் படுகொலைகளையும் கொடுங்கோல் ஆட்சியையும் வெளிக் கொண்டுவந்ததில் இவர்களது பணி மிகவும் முக்கியமானதுஇந்த வகையில் ஜான் மிர்தால் அவர்களின் குடும்பம் அளப்பறிய பணியாற்றியிருக்கிறது.

அடிப்படைப் பொருளாதாரக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள்அரசியல் ஊழியர்கள் தாம் அவசியம் படித்துத் தேற வேண்டிய அடிப்படை நூல்கள்ஆய்வுகள் பலவும் ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளால் வெளியிடப் பட்டுள்ளது என்றால் அது மிகையல்லஅதிலும் குறிப்பாகஇன்றளவும் இந்திய அரசு பொருளாதார ரீதியாக விவசாயிகளைப் பிரித்து ஆராயவும்அதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தும் மூல விபரங்கள் குன்னர் மிர்தால் எழுதிய ஆசிய நாடகம்என்ற ஆய்வு நூலில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளதுஅவர் வழங்கிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தான் இந்திய அரசால் விவசாயிகள் தரம் பிரிக்கப்பட்டு சிறிய (small)நடுத்தர (medium), பெரிய (Big)விவசாயிகள்நிலச்சுவான்தார்கள்(Landlords)என்று வகைப் படுத்தப் பட்டுள்ளனர்.இதனையே அரசின் திட்டங்கள் அடிப்படியாகக் கொண்டுள்ளன.

இவரைப்போலவேவெள்ளையர் ஆட்சியின் பொழுதுஇந்தியாவின் வறுமையின் காரணம் என்ன?, நாடு எப்படி வெள்ளையர்களால் கொள்ளையிடப் படுகிறது என்பதை ஒரு நீண்ட ஆய்வின் அடிப்படையில் மிகப் பெரும் புள்ளி விபரங்களுடன்இன்றைய இந்தியா (India Today)” என்ற ஒரு மிகப் பெரிய நூல் வெளியிட்ட ரஜனி பாமி தத் (Rajani Palme Dutt) என்ற அறிஞரும் ஸ்வீடன் நாட்டு வம்சாவழியில் வந்தவரே.



சிதம்பரமும் ஜான் மிர்தாலும்

இந்தியாவை ஒட்டச் சுரண்டும் ஐரோப்பியக் கம்பெனிகள்அமெரிக்கக் கம்பெனிகளின் அதிகாரிகள்சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் ஆட்டக் காரர்கள்அழகிப் போட்டி நடத்தும் நிறுவனங்கள்மூட நம்பிக்கையைப் பரப்பும் மதவெறிப் பிரச்சாரகர்கள்ஆபாசப் படங்களில் நடிக்கும் நடிகர்கள்நடிகைகள் இந்தியாவில் பயணம் செய்யவும்கூட்டங்கள் நடத்தவும்தொழில் நடத்தவும் சிதம்பரம் தலைமையிலான உள்துறை அமைச்சகம் சிறப்புச் செய்து அவர்களுக்குப் பாதுகாப்புத் தருகிறதுஏன்உலகறிந்த கொலைகாரன் ராஜ பக்சேவும் அவன் சகோதரர்களும் இந்தியாவுக்கு வரவும் அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கவும் இதே சிதம்பரம் தயங்கியதில்லைஇப்படிக் கொள்ளையர்கள்,கொலைகாரகள்சரச சல்லாபத் தொழில் செய்வோரை வரவேற்று அவர்களுக்கு ஜமுக்காளம் விரித்துஉடனிருந்து பாதுகாப்பும் உபச்சாரமும் செய்யும் சிதம்பரத்தின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவாளியை இந்தியாவுக்குள் வரக் கூடாது என்ற அறிவிப்புச் செய்துள்ளது நமக்கு வியப்பைத்தரவில்லை.

இந்தியப் பாரம்பரியம் பற்றி அடிக்கடி பேசும் சிதம்பரத்தின் முன்னோர்கள் கந்து வட்டிக்குக் கடன் கொடுத்து வந்த பரம்பரை என்பது தமிழர்கள் அறிந்த விஷயம்.தமிழரான சிதம்பரத்தின் முன்னோர்கள் (நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்இந்தியா,மலேசியாபர்மா போன்ற உலகின் பல நாடுகளில் வெள்ளையர்களின் துணையோடு வட்டிக் கடைகள் நடத்தச் சென்ற போது ஐரோப்பியரான ஜான் மிர்தாலின் குடும்பம் உலகெங்கும் உள்ள அடிமைப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்ததுபோராடியதுஅது இன்றும் தொடர்கிறதுசிதம்பரம் கொள்ளைக்காரக் கம்பெனிகளுக்கு எடுபிடியாக,துணைவனாக இருந்து நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார்மிர்தால் போராடும் மக்களுக்கு துணையாக இருந்து அவர்களது நியாயத்தை பேசுகிறார்எழுதுகிறார்.

சிதம்பரத்தின் முன்னோர்கள் வெள்ளையர்களுக்கு சேவகம் செய்த காலத்தில் அதற்கு எதிராக சர்வதேச மக்களுக்காகக் குரல் கொடுத்த ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளின் மரபில் வந்தவர் ஜான் மிர்தால்சிதம்பரம் தன் முன்னோர்கள் சென்ற அதே துரோகப் பாதையில் செல்கிறார்மிர்தால் மக்களுக்காக பாடுபடுகிறார்.

எப்படி வேசமிட்டாலும் சிதம்பரம் போன்றவர்கள் இனம் இனத்தோடே சேரும் என்ற விதியை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.


தடையை விலக்குக

கிடைக்கும் இடங்களில் எல்லாம் தம்மை ஒரு படிப்பாளியாக அறிவாளியாகக் காட்டிக் கொள்ளும் சிதம்பரம் தாம் உண்மையில் ஒரு ஒரு பொய்யர் மட்டும் அல்ல அறிவாளிகளின் எதிரி என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியுள்ளார்.அறிவாளிகளைஆய்வாளர்களை இந்தியாவுக்குள் நுழையவும்ஆய்வு செய்யவும்,பேசவும்எழுதவும் அனுமதியில்லை என்று அறிவிப்புச் செய்திருக்கும் மன்மோகன் சிங் சிதம்பரத்தின் கூட்டணி ஒரு நேர்மையில்லாத ஒரு அயோக்கியர்களின் கூட்டணி என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்இதை இந்திய மாணவர்கள் அறிவாளிகள் அனுமதிக்க முடியாதுகூடவும் கூடாதுஇந்திய அறிவாளிகள்,மாணவர்கள்இளைஞர்கள் பலவாறாக ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளுக்கு கடன் பட்டுள்ளார்கள்இந்த அநீதிக்கும் சிதம்பரத்தின் துரோகத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது தமிழ் நாட்டு மாணவர்கள்இளைஞர்கள்அறிவாளிகளது கடமை

இந்திய அரசின் இந்த தடையை கண்டிக்க வேண்டியது அனைத்து சனநாயக சக்திகளின் கடமையும்கூட.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...