Tuesday, July 5, 2022

சிவன் அர்ச்சனையில் புஷ்பங்களின் பலன்கள்:

 செல்வம் வேண்டுபவன் தாமரை,வில்வம்,திருநூற்றிப்பச்சை,சங்குப்பூ கொண்டு சிவபூஜை செய்யவேண்டும்.

முக்தி விரும்புபவன் தருப்பை புல்லினால் ஒரு லட்சம் முறை சிவார்ச்சனை செய்யவேண்டும்.
ஒரு லட்சம் முறை ரோஜாவினால் அர்ச்சிக்க பகைவர்கள் அழிவர்.
நீண்ட ஆயுள் வேண்டியவன் அருகம்புல்லினால் ஒரு லட்சம் முறை ஜபிக்கவேண்டும்.
புத்திரப்பேறு வேண்டுபவன் ஊமத்தம்பூவினால் ஒரு லட்சம் முறை ஜபிக்கவேண்டும்
அகஸ்திய புஷ்பத்தால் லட்சம்முறை ஜபிப்பவன் நிலைத்த புகழைப் பெறுகிறான்
துளசிதளத்தால் சிவனை பூசிப்பவன் போக மோட்சங்களை எளிதில் பெறுகிறான்.
வெள்ளெருக்கு சிவப்பெறுக்கு நாயுருவி வெண்தாமரை ஆகிய புஷ்பங்களால் லட்சம் முறை பூஜிப்பதாலும் இகபர நலன்களைப் பெறலாம்.
அரளிப்பூவினால் லட்சம்முறை அர்ச்சிக்க நோய்களை விரட்டும் திறன் பெறுவர்.
பந்தூகம் எனும் தித்திப்புஷ்பத்தால் பூசிக்க ஆபரணங்கள் சேரும்.
ஜாதிப்பூவினால் பூசிக்க வாகன லாபம் கிட்டும்.
ஆனிப்பூவால் அர்ச்சிக்க ஶ்ரீமன்நாராயணனின் அன்பிற்குப் பாத்திரமாவான்.
வன்னி இலையால் அர்ச்சிக்க முகமதி பெறலாம்.
மல்லிகைப்பூவால் அர்ச்சிக்க பகவான் நற்குணமுள்ள அழகான மனைவியை அருள்வார்.
முல்லைப்பூவால் அர்ச்சிக்க வீட்டில் அன்னத்திற்கு குறைவிருக்காது.
அரளிப்பூவால் பூசிக்க உடைக்கு பஞ்சமிருக்காது.
நொச்சிப்பூவால் பூசிக்க மனத்தூய்மை கிட்டும்.
வில்வதளத்தால் ஒரு லட்சம் முறை பூசிக்க, விரும்பியதெல்லாம் கிடைக்கும்.
பவழமல்லியால் அர்ச்சிக்க இன்பமும் செல்வமும் பெருகும்.
அந்தந்த ருதுபருவ காலத்தில் கிடைக்கும் பூவால் அர்ச்சிக்க,அது முக்தியை பெற்றுத்தரும்.
வெண்கடுகுபூவால் அர்ச்சிக்க அது பகைவனை யமனுலகுக்கு அனுப்பிவிடும்.
இப்பூக்களால் ஒவ்வொரு லட்சம் முறை சிவனை பூசிக்க பகவான் அளவிற்கடங்காத நற்பலன்களை அருள்வார்.
செண்பகப்பூ மற்றும் தாழம்பூ தவிர,அனைத்து பூக்களையும் சிவனுக்கு அர்ப்பிக்கலாம்.
நமசிவாய அல்லது ம்ருத்தியுஞ்சய மந்த்ரம் ஒரு லட்சம் முறை கூறி, இந்த பூக்களை கொண்டு சிவனை அர்ச்சித்தால், அதற்கு தகுந்தாற்போல் பலன் கிட்டும்.
இது ஶ்ரீசிவ மகாபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...