Sunday, July 17, 2022

தவறாகப் பேசுவதற்காகவே வாயைத் திறப்பவர்களிடம் விலகி இருங்கள்.

 பிடித்தவர் என்பதற்காக பிழைகளைச் சுட்டிக் காட்டத் தவறாதீர்கள்.

பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றைத் தவறாகப் பரப்பாதீர்கள்.
இனி நீங்கள் தேவை இல்லை எனச் சொல்பவர்கள்
விலகுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.
உங்களிடத்திலான அவர்களின் தேவைகள் முடிந்து விட்டது.
பேசுபவற்றைத் தவறாகப் புரிந்து கொள்பவரிடம் மௌனமாய் இருங்கள்.
தவறாகப் பேசுவதற்காகவே வாயைத் திறப்பவர்களிடம் விலகி இருங்கள்.
கோபப்படுவது உண்மையான அன்பு அதற்காகப் பிரிவது என்றால் அது விலகுவதற்கான முன் எற்பாடு..!
யாராவது உங்களை வெறுக்கிறார்கள் எனத் தெரிந்தால் நீங்களாகவே விலகி விடுங்கள்.
அவர்கள் அதை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் போது உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
பிடிக்கவில்லை என்றால் பொய்யாக நேசிக்காதீர்கள்.
அன்புக்கு ஏங்கிக் கொண்டிருப்பவர்களால்
ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது.
விலகியிருக்க விரும்புபவரிடம் அன்பைத் திணிக்காதீர்கள். தற்சமயம் அதை அவர் வேறொருவரிடம் எதிர்பார்க்கிறார்.
யார் வெறுத்தாலோ விலகிப் போனாலோ - நீங்கள் நொந்து போகாதீர்கள்.
கிளை உடைந்தாலோ மரம் சாய்ந்தாலோ
சிறு குருவியே சிறகை நம்பிப் பறக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...