Friday, July 1, 2022

அதீத அன்பிற்கு பின்னால், ஓர் ஆதிக்கமோ இல்லை அதீத வெறுப்போ ஒளிந்தே இருக்கும்.

 அந்த அதீதத்தை நாம் நிராகரிக்கும்போது இவற்றில் ஒன்றாவது சட்டென வெளிப்பட்டு வரும்....

இதை நான் பலமுறை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன் முன்பெல்லாம். இப்பொழுதெல்லாம் அதீத அன்பை யாராவது சுமந்து வந்தாலே உள்ளே அலாரம் அடித்துவிடுகிறது.....
நாம் கேட்காமலே இவர்கள் நமக்கு விழுந்து விழுந்து அன்பை காட்டுகிறேன் என்ற பெயரில் ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள். அதை நாம் அனுமதித்துவிட்டால் அடுத்தது நம் ஒவ்வொரு காரியத்திலும் தலையிடுவார்கள் அக்கறை என்ற பெயரில். நாம் என்ன செய்ய வேண்டும், யாரிடம் பழக வேண்டும், ஏன் நாம் யாருக்கு உதவ வேண்டும் என்பது வரை தலையிடுவார்கள். ஏதோ அன்பில் சொல்கிறார்கள் என்று அசட்டையாக இருந்துவிட்டால், போச்சு நம் கண்களுக்கு புலப்படாத நூல் சுற்றி நம்மை பொம்மலாட்ட பொம்மையாக்கிவிடுவார்கள்.
இதெல்லாம் அவர்கள் அறிந்துதான் செய்கிறார்களா என்றால் பொதுவாக இல்லை......இது தான் அன்பென்ற எண்ணத்தில் செய்கிறார்கள்.....இருப்பினும் நமக்கு அது கெடுதலில் தான் முடியும். அதனால் நாசூக்காக ஆரம்பத்திகிருந்தே இந்த அதீதம் நமக்காகாது என்று உணர்த்திவிடுவது மேல்!
இல்லையெனில் ஒரு சந்தர்பத்தில் இதே அன்பு அதீத வெறுப்பாக வெளிப்படும் சாத்தியக்கூறுகள் உண்டு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...