தமிழ் மற்றும் முக்கிய தென்னிந்திய மொழிகள்
இயக்குனர் /நடிகர்
திரு பிரதாப் போத்தன்
உறக்கத்தில் உயிர்
நீத்த விஷயம் இப்போது தான் எனக்குத் தெரிய வந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழிகளில்
சுமார் 100 படங்களில் நடித்துள்ளார் என தெரியும்.
நான் அழியாத கோலங்களில் முதல் முதலாக இவரை பார்த்து கொஞ்சம் பிடித்து போனது நிஜம்.
மூடுபனி,
பன்னீர் புஷ்பங்கள்,
நெஞ்சத்தை கிள்ளாதே,
அழியாத கோலங்கள்,
கரையெல்லாம் செண்பக பூ,
வாழ்வே மாயம்,
வறுமையின் நிறம் சிகப்பு என கொஞ்சமே கொஞ்சம் எண்ணிக்கையிலேயே இவரது திரைப்படங்களை நான் பார்த்து உள்ளேன்.
எல்லாம் மிக மிக பிடித்த திரைப்படங்களே.
இவரது மென்மை நிறைந்த புன்னகை அந்த முட்டை கண்கள் இவருக்கு கொஞ்சம் ஸ்பெஷல் என எண்ணுகிறேன்.
தமிழில் நடிகர் அமரர் திரு.ரகுவரன் இவர் எல்லாம் மிக மிக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை / மனதை கவர்ந்து கொண்டவர்கள்.
உடல் மொழி மற்றும் மேனரிஸம் பிளஸ் முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேறு யாரும் இவர்களைப் போல இல்லை என்று சொல்லும் அளவிற்கு தகுதி வாய்ந்த நடிகர். இவர் வழி தனிவழி தான்
நெஞ்சம் நிறைந்த பிரிவு அஞ்சலி
No comments:
Post a Comment