Friday, July 15, 2022

மோடி சாட்டைசுழன்றால் ஸ்டாலின் கதறுவார்!

 வேலுார் சிப்பாய் புரட்சி நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, 'அ.தி.மு.க., மூன்றாக உடைய, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பே காரணம். மோடியை எதிர்க்கும் முதல்வரில், ஸ்டாலினே முதலிடம் பிடித்துள்ளார்' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

அழகிரி அவர்களே... அ.தி.மு.க., மூன்றாக அல்லது ஐந்தாக கூட உடையட்டும்; ஆர்.எஸ்.எஸ்., ஏன் அந்த வேலையைச் செய்ய வேண்டும். இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா... அ.தி.மு.க.,வில் தற்போது நடப்பதோ அதிகார யுத்தம்; யாருக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறதோ அவர்களே வெற்றி
பெறுவர். இந்த விவகாரத்தில் தலையிடுவதால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு என்ன லாபம்? பொதுக் கூட்டத்தில் 'மைக்'கை பிடித்தால், ஏதாவது உளறிக் கொட்டுவதே உங்களுக்கு வேலையாகப் போய் விட்டது. அ.தி.மு.க., மூன்றாக உடைவது இருக்கட்டும்; தமிழக காங்கிரஸ் எத்தனை அணியாக பிளவுபட்டுக் கிடக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா... முடியாது! ஏனெனில், நீங்கள் எண்ண முடியாத அளவுக்கு, தமிழக காங்கிரசில் கோஷ்டிகள் உள்ளன.
மற்ற கட்சியை குறை சொல்லும் முன், முதலில் உங்கள் கட்சி சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். உங்கள் முதுகிலேயே ஆயிரத்தெட்டு அழுக்கு உள்ளது என்பதை உணருங்கள். மோடியை எதிர்க்கும் ஒரே முதல்வர் ஸ்டாலினா... ஏன் இப்படி சிரிப்பூட்டுகிறீர்கள்? பா.ஜ., என்றாலே, முதல்வர் ஸ்டாலின் பயப்படுவது ஊரறிந்த விஷயம். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் சரவெடிகளுக்கே, தி.மு.க.,வினர் ஆட்டம் கண்டுள்ளனர்.
மோடி அமைதியாக இருப்பதால், நீங்கள் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள். அவர் சாட்டையை சுழற்ற ஆரம்பித்தால், அமலாக்கத் துறை விசாரணை கண்டு, உங்கள் கட்சித் தலைவர் ராகுல் கதறுவது போல, ஸ்டாலினும் கதற நேரிடும் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்களும், உங்கள் கட்சியினரும் இப்படியே பேசிக் கொண்டு போனால், காங்கிரஸ் தொண்டர்கள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் நிலைமைக்கு சென்று விடும் ஜாக்கிரதை!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...