Tuesday, July 5, 2022

மத்திய அமைச்சருக்கு பன்னீர்செல்வம் கடிதம்.

 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.


கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 12 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர், 3ம் தேதி படகுடன் சிறை பிடித்துள்ளனர். இரண்டு மாதங்கள் தடை காலம் முடிந்து, மீன் பிடிக்க சென்றவர்களை கைது செய்துள்ளனர். மீனவர்களிடம் பயத்தை ஏற்படுத்துவதற்காக, பாரம்பரிய மீன் பிடிப்பகுதியில் மீன் பிடித்தவர்களை, இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. அவர்களையும், அவர்கள் படகுகளையும் விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேணடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சருக்கு பன்னீர்செல்வம் கடிதம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...