குமுதத்தில் ஒவ்வொரு முறையும் எதைப்பற்றி எழுதினாலும் அதில் பாஜக வை அசிங்கப்படுத்தி எழுதுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறாரே?
பிஜேபி நாட்டுக்கு செய்த நல்லவைகளெல்லாம் இவர் கண்ணுக்கு தெரியவில்லையா.
இவரை பொறுத்தவரை காங்கிரஸ் அகில இந்தியாவில் உத்தமமான கட்சி போலவும்
மாநிலங்களை பொறுத்தவரை தீ ம்கா ஊழலற்ற நீதி தவறாத கட்சி என்றும் நினைத்து கொண்டிருக்கிறாரா??
அப்படி என்றால் பொதுக்கூட்ட மேடைகளில் பேசலாமே?
இவரை போன்றவர்களால் பாரம்பரிய , நடுநிலை தவறாத பத்திரிக்கை குமுதம் நிலை மாறிக்கொண்டிருக்கிறதோ
இவரை போன்ற ஆட்களால் அது இப்பொழுது மாறி RSB மீடியா வளையத்துக்குள் வந்து விடும் என்று நினைக்கிறேன்.
குமுதம் குழுமத் தலைவர் மற்றும் பதிப்பாளர் திரு பா.வரதராசன் அவர்கள் கவனத்திற்கு சென்று நடவடிக்கை எடுத்தால் குமுதத்தின் என் போன்ற 50 வருட வாசகர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.
குமுதம் RSB மீடியாவாக மாறி விடுமோ என்ற பயத்தில் இருக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் ஒருவன்.
No comments:
Post a Comment