Monday, October 16, 2023

இவரல்லவோ முதல்வர்.

 ஒடிஸாவின் நவீன் பட்நாயக் தொடர்ந்து 23 ஆண்டுகளாக முதல்வராக இருந்து சாதனை படைத்துள்ளார். சாதனை தொடர்கிறது. அடுத்த வருடம் தேர்தல் வருகிறது.

தொடர்ந்து 2000 ஆண்டு முதல் இவர்தான் முதல்வர்.
அங்கே மாநில தேர்தல் வெறும் சம்பிரதாயம் தான்.
ஒரிஸ்ஸா மாநில பெயர்கூட ஒடிசா என்று மாறிவிட்டது. ஆனால் மக்கள் மனதில் இவர்தான் நிரந்தர முதல்வர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
எந்த கருத்து கணிப்பும் தேவையில்லை. அந்த மாநில மக்கள் ஏற்கனவே தீர்மானம் செய்து விட்டார்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்வார்கள். அந்த மாற்றத்தையே ஏமாற செய்துள்ளார் இந்த முதல்வர்.
இவரும் முன்னால் முதல்வர் பிஜு பட்நாயக் வாரிசு தான். இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் இவர்மீது கிடையாது.
பெங்களூர் ஊழல் கூட்டணி இவரைப்பற்றி எதுவும் பேசவில்லை. இவரின் ஆதரவை கேட்டதாக தெரியவில்லை.
எதிர்கட்சி கூட்டணிக்கு இவர் தகுதியானவர் கிடையாது. காரணம் இவர் நேர்மையானவர்.
நமக்கு இவரைப்பற்றிய செய்திகள் நம்ப முடியாத அதிசயமாக இருக்கிறது.
நல்லாட்சிக்கு பாராட்டுக்கள்.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...