Monday, October 16, 2023

இந்துக்கள் கற்க வேண்டியவை...

 நான்கு வகை உயிரினங்கள் :

1. சுவேதஜம் - புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன - புழு, பூச்சி, கொசு போன்றவை.
2. உத்பிஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன - மரம், செடி, கொடி போன்றவை.
3. அண்டஜம் - முட்டையிலிருந்து வெளிவருவன - பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.
4. ஜராயுதம் - கருப்பையிலிருந்து வெளிவருவன - மனிதன், சில விலங்குகள் போன்றவை.
ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள் :
1. கர்ணன் , 2. காளந்தி , 3. சுக்ரீவன் ,
4. தத்திய மகன் , 5. சனி , 6. நாதன் ,
7. மனு.
பெண்களுக்குரிய ஏழு பருவங்கள் :
1. பேதை - 1 முதல் 8 வயது வரை
2. பெதும்பை - 9 முதல் 10 வயது வரை
3. மங்கை - 11 முதல் 14 வயது வரை
4. மடந்தை - 15 முதல் 18 வயது வரை
5. அரிவை - 19 முதல் 24 வயது வரை
6. தெரிவை - 25 முதல் 29 வயது வரை
7. பேரிளம் பெண் - 30 வயது முதல்.....
ஆண்களுக்குரிய ஏழு பருவங்கள் :
[ பெண்களின் வயது எல்லையும் ஆண்களின் வயது எல்லையும் ஒன்று தான் என்பதைக் கவனத்திற் கொள்க ]
1. பலன் , 2. மீளி , 3. மறவோன் , 4. திறவோன் , 5. காளை , 6. விடலை ,
7. முதுமகன் .
நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர் :
1. சனகர் , 2. சனாதனர் , 3. சனந்தகர் ,
4. சனத்குமாரர் , 5. வியாக்கிரபாதர் ,
6. பதஞ்சலி , 7. சிவயோக முனிவர் ,
8. திருமூலர் .
அஷ்ட பர்வதங்கள் :
1. கயிலை , 2. இமயம் , 3. ஏமகூடம் ,
4. கந்தமாதனம் , 5. நீலகிரி , 6. நிமிடதம் ,
7. மந்தரம் , 8. விந்தியமலை.
ஆத்ம குணங்கள் :
1. கருணை , 2. பொறுமை ,
3. பேராசையின்மை , 4.பொறாமையின்மை ,
5. நல்லனவற்றில் பற்று [உறுதி] ,
6. உலோபத்தன்மையின்மை ,
7. மனமகிழ்வு , 8. தூய்மை.
எண்வகை மங்கலங்கள் :
1. கண்ணாடி , 2. கொடி , 3. சாமரம் ,
4. நிறைகுடம் , 5. விளக்கு , 6. முரசு ,
7. ராஜசின்னம் , 8. இணைக்கயல்.
எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்:
1.சந்தனம் , 2. கோட்டம் , 3. கஸ்தூரி ,
4. கற்பூரம் , 5. குங்குமம் , 6. பச்சிலை ,
7. அகில் , 8. விளாமிச்சை வேர்.
ஏழுவகைப் பிறப்புக்கள் :
1.தேவர் , 2. மனிதர் , 3. விலங்குகள் ,
4. பறப்பவை , 5. ஊர்பவை ,
6. நீர்வாழ்பவை , 7. தாவரம்.
ஈரேழு உலகங்கள் :
முதலில் மேல் உலகங்கள்:
1. பூமி , 2.புவர்லோகம் , 3. தபோலோகம் ,
4 . சத்யலோகம் , 5. ஜனோலோகம் ,
6. மஹர்லோகம் , 7. சுவர்க்கலோகம்.
அடுத்து கீழ் உலகங்கள் :
1.அதலம் , 2.கிதலம் , 3.சுதலம் ,
4. இரசாதலம் , 5. தவாதலம் , 6. மகாதலம் , 7.பாதாலம்.
குபேரனிடம் இருக்கும் நவநிதிகள் :
1.சங்கநிதி, 2.பதுமநிதி , 3.கற்பநிதி ,
4.கச்சபநிதி , 5. நந்தநிதி , 6. நீலநிதி ,
7. மஹாநிதி , 8. மஹாபதுமநிதி ,
9. முகுந்த நிதி .
அஷ்ட ஐஸ்வர்யங்கள் :
1. தனம் , 2. தான்யம் , 3. பசு , 4. அரசு ,
5. புத்திரர் , 6. தைரியம் , 7. வாகனம் ,
8. சுற்றம் .
எண்வகை போகங்கள் :
1. அணிகலன் , 2. தாம்பூலம் , 3. ஆடை
4. பெண் , 5. பரிமளம் , 6. சங்கீதம் ,
7. பூப்படுக்கை , 8. போஜனம் (உணவு)
நவ நாகங்கள் :
1. ஆதிசேஷன் , 2. கார்க்கோடகன், 3.அனந்தன் ,4. குளிகன் , 5. தஷன் ,
6. சங்கபாலன் , 7. பதுமன் , 8. மகாபதுமன் , 9. வாசுகி
நன்மை தரக்கூடிய தச தானங்கள் :
1. நெல் , 2. எள் ,3. உப்பு , 4. தீபம் , 5. மணி, 6. வெள்ளி , 7. வஸ்திரம், 8.சந்தனக்கட்டை , 9. தங்கம் , 10. நீர்ப்பாத்திரம்.
நமது சமய கருத்துக்கள் ஒவ்வொரு இந்துக்களும் கற்க வேண்டும். நாம் கற்றதின் படி (தர்மத்தை) கடைபிடிக்க வேண்டும் .
கற்றதை நமது குழந்தைகளுக்கு கற்ப்பிப்பேம். இதன் மூலம் நமது தேசம் தெய்வம் தர்மம் காக்கப் படும்..
May be an image of temple and text that says "MY2ര M அருள்மிகு மகா மாரியம்மன் என்கிற பாடைகட்டி மாரியம்மன், வலங்கைமான்"
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...