Tuesday, August 14, 2012

Happy Independence Day!

சுதந்திர தின வாழ்த்துகள்





நண்பர்களுக்கு எனது இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்



                இந்தியதேசம் சுதந்திரம் அடைந்த நாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் ஒரு உள்ளார்ந்த மகிழ்ச்சி உண்டு. அடைந்த விடுதலைக்குப் பின்னால் உறைந்த ரத்தத்தையும், இழந்த உறவுகளையும் கொண்டுதான் ஒரு நாட்டின் விடுதலைக்கான போரின் தீவிரம் மதிப்பிடப் படுகிறது. 

                 இன்னும் இங்கே அடுத்தவேளை உணவுக்கு நிச்சயமற்ற ஏழைகள் உண்டு.ஒவ்வொரு ஊரிலும் ஒரு தாழ்த்தப் பட்ட சேரி உண்டு.பாதைகளெங்கும் பிச்சைக்காரர்கள் உண்டு. பெண்களின் மீதான வன்முறை உண்டு.தமிழனுக்கும் மலையாளிக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நீதி வழங்கிடும் மைய அரசுகள் உண்டு. சிறுபான்மையினர் பாதுகாப்பின்றி வாழும் நிலைமையும் உண்டு. ஊழல் உண்டு. திருட்டும் கொலையும் கொள்ளையும் உண்டு. 

               ஆனால் இதுவெல்லாம் ஒன்று கூட இல்லாத வேறு தேசம், எங்கும் உண்டா? உங்கள் லட்சிய தேசத்தில் இவை இராது என்பதற்கு உங்களுக்கு துணிவு உண்டா? .  இந்திய தேசத்தை எதிர்க்கும் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் நெடுஞ்சாலைக்கும், கேஸ் சிலிண்டருக்கும் இன்னொரு இந்தியன் வரிக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறான். நீங்கள் சூளைமேட்டில் சரக்கடித்துக் கொண்டு மட்டையாகித் தூங்கும்போது உங்களைக் காப்பாற்ற இன்னொரு இந்தியன் இரவில் ரோந்து வந்து கொண்டிருக்கிறான். 

              அரசியல்வாதிகளைத் தோலுரித்து, உங்களுக்கான உரிமைகளை வாங்குவதற்கு பதில், தேசத்தை பழிகூறிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் சேர்த்து சுதந்திர தின வாழ்த்துக்கள். 

               எப்படி விடுதலைப் புலிகளை அவர்களின் குற்றம் குறைகளோடு ஒரு "விடுதலை தாகம் கொண்ட மக்கள் இயக்கம்" என்று ஏற்றுக் கொள்கிறோமோ , அதே கோட்டில், இந்திய தேசத்தை அதன் குற்றம் குறைகளோடு என்னுடைய தேசம் என்று பெருமிதம் கொள்வோம்.

Friday, August 10, 2012

விபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO



என்ன தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியாக உள்ளதா ? ஆனால் இது உண்மைதான். விபசாரம் என்பதில் ஆண் , பெண் தவிர இடைத்தரகர்களாக சிலர் வருவார்கள் அவர்கள் போல செயல்படுகின்றது இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் (பெயரிளியே தொடர்பு என இருப்பதாலோ என்னவோ ).இதில் எனக்கு தெரிந்து Airtel , Vodafone, Docomo மூன்றிலும் வரும் செய்திகளை கிழே குடுத்துள்ளேன் ...

சில தினகளுக்கு முன் வந்த ஒரு SMS in தமிழாக்கம் :

தமிழ் ஹாட் கேர்ள் சங்கீதா உங்களுக்காக காத்திருகின்றார். அவருடன் பேச உடனே தொடர்பு கொள்ளுங்கள் என கூறி ஒரு எண் குடுத்து உள்ளனர் . கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.


மற்றொரு SMS :

தனது இரவு நேர அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சுதா காத்திருக்கிறார். உடனே அழையுங்கள் . இதுக்கும் கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.


இது போல SMS மட்டுமல்லாது உங்கள் கணக்கில் உள்ள தொகையினை சோதிக்கும் போதும் வருகின்றது . இதில் என்ன கொடுமை என்றால் சண்டே அன்று 50% தள்ளுபடியாம்

நேற்று வந்தது :

Make new friends and Love chat with beautiful Girl 24  Hours call Now 006745599251 Neha..    ISD rates apply only 18 Yrs +.
(கடல்கடந்து கடலைபோட வழி செய்றாங்களாம் ) 

ரோட்டு ஓரத்தில் நின்று கொண்டு, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு ஆட்கள் பிடிக்கும் மாமாக்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

TRAI க்கு சில கேள்விகள் :

  • இது போன்ற SMS அனுப்புவது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ?
  • வியாபார சம்பந்தமாக SMS அனுப்புவதை தடுக்க தினமும் 200 SMS மட்டுமே அனுப்பலாம் என தடை போட்ட நீங்கள் இதுக்கு ஏன் தடை போடவில்லை ?
  • போட்டிக்கு அனுப்பும் SMS முலம் மீடியாக்கள் கோடி கணக்கில் வருமானம் பார்கின்றது. மீடியாக்களும் தினமும் இவ்வளவு SMS தான் பெற முடியும் என கொண்டு வந்தால் என்ன ?
  • குழந்தைகள் கூட பதில் சொல்லும் கேள்விகளை கேட்டுவிட்டு Call Waiting இருந்தாகூட நிமிடத்திற்கு 10 ரூபாய் பிடுங்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதி வழங்கவேண்டும் ?
  • Vodafone இல் ஓகே பட்டனை அழுத்தினாலே சில கட்டண வசதிகள் தானாகவே Activate ஆகின்றது . கேட்டால் உங்கள் மொபைல்ல FLASH MESSAGE என்ற வசதியை OFF பண்ணி வையுங்கள் என்கின்றனர் . இது தெரியாத கிராமத்து ஆட்கள் என்ன செய்வார்கள் ?
  • ரீ-சார்ஜ் செய்தால் குறைந்த பைசாவும் , சில SMS உம் தருகின்றன நிறுவனங்கள் . SMS அனுப்ப தெரியாத , அனுப்பாத நபர்களுக்கு இது வேஸ்ட் தானே ?

இது போல பல தேவை இல்லாத செயல்களில் பல தொலை தொடர்பு நிறுவங்கள் ஈடுபடுகின்றது இதை தடுக்க என்ன வழி ?

 இதுபோல நீங்கள் பட்ட அவஸ்தைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் ..

விபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO



என்ன தலைப்பை பார்த்ததும் அதிர்ச்சியாக உள்ளதா ? ஆனால் இது உண்மைதான். விபசாரம் என்பதில் ஆண் , பெண் தவிர இடைத்தரகர்களாக சிலர் வருவார்கள் அவர்கள் போல செயல்படுகின்றது இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் (பெயரிளியே தொடர்பு என இருப்பதாலோ என்னவோ ).இதில் எனக்கு தெரிந்து Airtel , Vodafone, Docomo மூன்றிலும் வரும் செய்திகளை கிழே குடுத்துள்ளேன் ...

சில தினகளுக்கு முன் வந்த ஒரு SMS in தமிழாக்கம் :

தமிழ் ஹாட் கேர்ள் சங்கீதா உங்களுக்காக காத்திருகின்றார். அவருடன் பேச உடனே தொடர்பு கொள்ளுங்கள் என கூறி ஒரு எண் குடுத்து உள்ளனர் . கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.


மற்றொரு SMS :

தனது இரவு நேர அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சுதா காத்திருக்கிறார். உடனே அழையுங்கள் . இதுக்கும் கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.


இது போல SMS மட்டுமல்லாது உங்கள் கணக்கில் உள்ள தொகையினை சோதிக்கும் போதும் வருகின்றது . இதில் என்ன கொடுமை என்றால் சண்டே அன்று 50% தள்ளுபடியாம்

நேற்று வந்தது :

Make new friends and Love chat with beautiful Girl 24  Hours call Now 006745599251 Neha..    ISD rates apply only 18 Yrs +.
(கடல்கடந்து கடலைபோட வழி செய்றாங்களாம் ) 

ரோட்டு ஓரத்தில் நின்று கொண்டு, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு ஆட்கள் பிடிக்கும் மாமாக்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

TRAI க்கு சில கேள்விகள் :

  • இது போன்ற SMS அனுப்புவது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ?
  • வியாபார சம்பந்தமாக SMS அனுப்புவதை தடுக்க தினமும் 200 SMS மட்டுமே அனுப்பலாம் என தடை போட்ட நீங்கள் இதுக்கு ஏன் தடை போடவில்லை ?
  • போட்டிக்கு அனுப்பும் SMS முலம் மீடியாக்கள் கோடி கணக்கில் வருமானம் பார்கின்றது. மீடியாக்களும் தினமும் இவ்வளவு SMS தான் பெற முடியும் என கொண்டு வந்தால் என்ன ?
  • குழந்தைகள் கூட பதில் சொல்லும் கேள்விகளை கேட்டுவிட்டு Call Waiting இருந்தாகூட நிமிடத்திற்கு 10 ரூபாய் பிடுங்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதி வழங்கவேண்டும் ?
  • Vodafone இல் ஓகே பட்டனை அழுத்தினாலே சில கட்டண வசதிகள் தானாகவே Activate ஆகின்றது . கேட்டால் உங்கள் மொபைல்ல FLASH MESSAGE என்ற வசதியை OFF பண்ணி வையுங்கள் என்கின்றனர் . இது தெரியாத கிராமத்து ஆட்கள் என்ன செய்வார்கள் ?
  • ரீ-சார்ஜ் செய்தால் குறைந்த பைசாவும் , சில SMS உம் தருகின்றன நிறுவனங்கள் . SMS அனுப்ப தெரியாத , அனுப்பாத நபர்களுக்கு இது வேஸ்ட் தானே ?

இது போல பல தேவை இல்லாத செயல்களில் பல தொலை தொடர்பு நிறுவங்கள் ஈடுபடுகின்றது இதை தடுக்க என்ன வழி ?

 இதுபோல நீங்கள் பட்ட அவஸ்தைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் ..

டெங்கு காய்ச்சல் : தெரிந்து கொள்ளுங்கள்




டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இந்நோய் 200 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது.


நோய் பரவும் முறை

Aedes எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த பல இனங்கள் இந்த நோயின் நோய்க்காவியாகும். தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு (Aedes) வகைக் கொசுக்களால் (இலங்கை வழக்கு: நுளம்பு), குறிப்பாக ஏடிசு எகிப்தியால், இந்நோய் பரவுகிறது, ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பரவுவதில்லை. நோய் பாதித்தவரைக் கடித்த (குத்திய) கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது, சில சந்தர்ப்பங்களில் குருதி மாற்றீடு மூலமும் பரவலாம். இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது. இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோயாகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும். இந்த நோய் பெரும்பாலும் வறண்ட, உலர் வெப்ப வலயங்களில் பெருகும். உதாரணமாக:வடக்கு ஆர்ஜென்டினா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஷ்ட ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கோடேமலா, குயான, ஹைடி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை. போன்ற நாடுகளில் பரவி வருகின்றன

நோயின் அறிகுறிகள்

  • நல்ல காய்ச்சல்
  • தீவிர கண்வலி (கண்ணிற்குப் பின்)
  • கடும் தலைவலி
  • கடுமையான மூட்டு மற்றும் தசை வலி
  • வாந்தி
  • தோல் சிவத்தல் (rash)
  • வெள்ளை அணுக்கள், இரத்தவட்டுகள் குறைதல்
  • மிதமான இரத்தப்போக்கு வெளிப்பாடு (மூக்கில் இரத்தப்போக்கு, இரத்தப்புள்ளிகள் -- petechiae)[1]
  • அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்

தடுப்பு முறைகள்


  • கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ளல், 
  • கொசு உருவாகாமல் தடுக்க சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல் போன்றவை இந்நோயைத் தடுக்க உதவும்.

டெங்கு காய்ச்சல் அறிந்ததும் அறியாததும்..

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே. எடக்கு மடக்கு தளத்தில் இன்றைய பதிவாய் கடந்த வாரத்தில் தமிழகத்தினை உலுக்கி எடுத்த டெங்கு காய்ச்சல் பற்றியும் அதற்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் பார்க்கலாம்.

 
டெங்கு காய்ச்சல், ஆர்த்ரோபோட் என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. உடல் வலி அல்லது மூட்டு வலி, தோலில் சிவப்பு நிறத் தடிப்புகள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைதல் மற்றும் நெறி கட்டுதல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

டெங்கு ஹீமோராஜிக் காய்ச்சல், மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. மிகத் தீவிரமான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளியின் ரத்தத்தில் உள்ள புரோட்டீனை வெளியேற்றி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ”ஈடிஸ் ஈஜிப்டி” என்ற கொசுவால் இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. நகரப் பகுதிகளில்தான் இந்தக் கொசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூடாமல் வைக்கப்பட்டிருக்கும் அசுத்தமான தண்ணீரிலும், தேங்கி இருக்கும் அசுத்தமான மழை நீரிலும் இந்த கொசு இனப்பெருக்கம் செய்கிறது.

இரண்டாவது முறையாக ஏற்படக்கூடிய டெங்கு காய்ச்சல், காம்ளிமெண்ட் என்ற சிஸ்டத்தை தூண்டுகிறது. இது ரத்த நாளத்தில் உள்ள எண்டோதீலியம் செல்களைத் தாக்கி ரத்தத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்களை வெளியேற்றி விடுகிறது. இதனால் ரத்தக்கசிவும் அதிகமாக ஏற்படுகின்றது. இந்தக் காய்ச்சலால் சிறிய ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதால், ரத்தத்தில் உள்ள நீர். உப்புகள், புரோட்டீன், சிவப்பு அணுக்கள் போன்றவை வெளியேறி விடுகின்றன. இதனால் ரத்தம் கெட்டியாகி விடுகிறது. மேலும் உடலில் உள்ள நீர்ச்சத்தும் குறைகிறது. இதயம் அதிகமாக வேலை செய்கிறது. திசுக்களுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. உடலில் சோடியம் அளவு குறைந்து போகிறது. மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதாலும், உணவுக் குழாயில் ரத்தம் கசிவதாலும் சில சமயங்களில் இறப்பு எற்படலாம். இதயத்தில் உள்ள தடுப்புச் சுவர்களில் ரத்தம் கசிதல், இதயச் சவ்வுகளில் ரத்தம் கசிதல் போன்றபாதிப்புகளும் இருக்கும்.சில நேரங்களில் நுரையீரல், அட்ரீனல், ஈரல், மூளை ஆகியவற்றில் ரத்தக் கசிவு ஏற்படும். ஈரல் வீக்கம் உண்டாகும்.

உடலுக்குள் டெங்கு வைரஸ் கிருமிகள் நுழைந்த 1 – 7 நாட்களுக்குள் நோயின் அறிகுறிகள் ஏற்படும். அந்த அறிகுறிகள், பாதிக்கப்பட்ட நபரின் வயதிற்கு ஏற்ப மாறுபடும். தொண்டை வலி, மூக்கிலிருந்து நீர் கொட்டுதல், லேசான இருமல் உண்டாகும். காய்ச்சல், தலை வலி, முதுகு வலி போன்றவை காய்ச்சலுக்கு முன் ஏற்படும். காய்ச்சல் ஏற்பட்ட 24 – 48 மணி நேரத்தில் உடல் முழுவதும் சிவப்பு நிறத் தடிப்புகள் உருவாகும். உடல் வலி, மூட்டு வலி ஏற்பட்டு அதன் தீவிரம் அதிகரிக்கும். குமட்டல், வாந்தி, நெறி கட்டுதல் மற்றும் பசியின்மை போன்றவை இருக்கும்.

டெங்கு ஹீமோராஜிக் காய்ச்சல்

இரண்டாவது முறையாக டெங்கு வைரஸ் தாக்கும் போது இந்தப் பாதிப்பு ஏற்படலாம். முதல் தடவை இந்த வைரஸ் தாக்கும்போது நோயாளியின் எதிர்ப்புச் சக்தியை தூண்டுகிறது. இரண்டாவது தடவை தாக்கும்போது உடலில் எதிர்ப்புச் சக்தியைப் பாதிக்கிறது.

வைரஸ் தாக்கிய 4 முதல் 6 நாட்களுக்குப் பிறகு , முதல் நிலையாக காய்ச்சல், உடல் வலி, வாந்தி, தலைவலி, பசியின்மை, இருமல் போன்றவை ஏற்படும். இரண்டாவது நிலையில் நோயாளி, கை, கால்கள் சில்லிட்டுப் போகும். உடல் சூடாக இருக்கும். முகம் சிவந்து போகும். வியர்வை அதிகரிக்கும். பாதிக்கப் பட்ட குழந்தைகள் மிகவும் பரபரப்பாகவும், எரிச்சலுடனும் இருப்பார்கள். நெஞ்சுக்கு அடியில் வலி உண்டாகும்.

முன் நெற்றி மற்றும் கை, கால்களில் கொசுக்கடி போன்ற சிறிய சிறிய ரத்தக் கசிவுகள் ஏற்படும். பெரிய அளவில் ரத்தக் கசிவும் ஏற்படலாம். உடல் முழுவதும் சிவந்த மற்றும் சிவந்து தடித்த புள்ளிகள் உண்டாகலாம். வாயைச் சுற்றியும், கை கால்களும் ஊதா நிறத்தில் மாறலாம். குழந்தைகள் சிரமப்பட்டு மிக வேகமாக மூச்சு விடுவார்கள். நாடித்துடிப்பு வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருக்கும். ஈரல் வீங்கிப் போகும்.

டெங்கு ஷாக் சின்ட்ரோம் என்ற நிலையில் உணவுக் குழாயில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்த வாந்தியும், மலம் கறுப்பாகவும் வெளியாகும்.டார்னிகுட் பரிசோதனையில் 2.5 செ.மீ சதுரப் பரப்பில் 20-க்கும் மேற்பட்ட ரத்தப் புள்ளிகள் இருந்தால், இந்த நோய் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் 
  • சிறிய அளவில் ரத்தப் புள்ளிகள்
  • பெரிய அளவில் ரத்தப் புள்ளிகள்
  • மிகப்பெரிய ரத்தக் கசிவு
  • மூக்கில் இருந்து ரத்தம் வடிதல்
  • ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல்
  • ரத்த வாந்தி அல்லது மலம் கறுப்பாகவோ, ரத்தமாகவோ வருதல்.
  • வெள்ளை அணுக்கள் தொடர்ந்து குறைவாக இருப்பது
  • ரத்தம் உறைதலுக்குக் காரணமான தட்டை அணுக்கள் குறைதல்
  • டார்னிகுட் பரிசோதனையில் ரத்தக் கசிவு தென்படுவது
  • அசிடோஸிஸ்
  • ரத்தம் கெட்டியாதல்
  • ரத்தத்தில் ஈரல் என்ஸைம் அளவு அதிகரித்தல்.
  • ரத்தத்தில் உள்ள புரோட்டீன் அளவு குறைவது
  • ரத்தக் கசிவு நேரம் நீண்டு கொண்டே இருப்பது.
  • நெஞ்சு எக்ஸ்ரேயில் நுரையீரல் ஜவ்வுகளுக்கு இடையில் நீர் காணப்படுவது.
டெங்கு காய்ச்சல் நோய்க்கான  சிகிச்சைகள்
  • நோயாளிகளை ஒய்வில் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
  • காய்ச்சல் குறைய மாத்திரை மற்றும் வெதுவெதுப்பான நீரில் நனைத்து துணியைப் பயன்படுத்தலாம்.
  • எக்காரணம் கொண்டும் ஆஸ்பிரின் மருந்தைக் கொடுக்கக் கூடாது.
  • வாந்தி, சாப்பிட முடியாமை, மிக அதிகமான வியர்வை, பேதி போன்றவை இருந்தால். வாய் வழியாக உப்பு – சர்க்கரைக் கரைசலைக் கொடுக்க வேண்டும்.
  • நாடித் துடிப்பு, மூச்சு விடுதல், ரத்த அழுத்தம் மற்றும் நீர், உப்பு வெளியேற்றம் ஆகியவற்றை அடிக்கடி சரிபார்க்க வேண்டும்.
  • ரத்தம் கெட்டியாகும் தன்மையை பரிசோதித்து அடிக்கடி அறிந்து கொள்ள வேண்டும்.
  • உடல் ஊதா நிறமாக மாறினாலே, மூச்சு விட கஷ்டப்பட்டாலோ, ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும்.
  • சிரை வழியாக சலைன் கொடுக்க வேண்டும்.
  • ரத்தக் கசிவு ஏற்படும்போது புதிய ரத்தம் அல்லது தட்டை அணுக்கள் உள்ள பிளாஸ்மாவைக் கொடுக்கலாம்.
  • மருந்து கொடுத்த பிறகும் சரியாகாவிட்டால் புதிய ரத்தம் செலுத்த வேண்டும்.

TESO மானமுள்ள தமிழன் கவனத்திற்கு

 
ஈழ மக்கள் சிங்கள அரசால் பல கொடுமைக்கு ஆளான நேரம் பதுங்கு குழியே வாழ்கை என இருந்த நேரம் ....




தமிழின தலைவன் என சொல்லிகொள்ளும் இவர் அவர்களை காப்பதை விட தன குடும்பத்தை காப்பதிலும் , அமைச்சர் பதவி பெறுவதிலும் ஆர்வமாக இருந்தார்


போரில் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த போது தனது குடும்பத்தை சேர்த்து விழா எடுத்து கொண்டாடினார்


தமிழன் குடும்பன் அழியும் போது இவர் குடும்பம் சந்தோஷத்தில் மிதந்தது

மக்கள் மனதை மாற்ற இல்லை இல்லை ஏமாற்ற 15  நிமிடம் உண்ணா விருதம் என்ற நாடகத்தை நடத்தினார்


இவரின் சுயருபம் புரிந்த மக்கள் இவரை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர் ..
இழந்த செல்வாக்கையும் , வாக்கு வங்கியையும் திரும்ப பெற என்ன செய்வது என யோசித்தார் 



பிரபாகரனின் தாயாரை கூட நாம அனுமதிக்க வில்லையே , மான முல்லா எந்த தமிழன்னும் நம்மை மதிக்க மாட்டானே என நினைத்தார்


அந்த கணத்தில் அவர் சிந்தையில் உதித்ததுதான் டெசோ ... இதைவைத்து மக்களை எளிதில் ஏமாற்றலாம் என முடிவு செய்தார்
போகிற போக்கை பார்த்தால் டெசோ சிறப்பு விருந்தினராக ராஜ பக்ஷே கூட வரலாம் ...


இந்த தமிழ் இன தலைவனை நம்புங்கள் கண்டிப்பா ஈழம் கிடைக்கும் ....( போங்கயா போய் புள்ளை குட்டிகளை படிக்க வையுங்கள் )

ராஜபக்ஷேவைக்கூட நம்புவோம்... கருணாநிதியை நம்ப மாட்டோம்!

நம்புவோம்... கருணாநிதியை நம்ப மாட்டோம்!
Posted Imageகாலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் 'டெசோ’ அமைப்பை.  அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

சேசுராஜ், முன்னாள் போராளி.
(பெயர் மாற்றப்பட்டு உள்ளது)
''ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக்கிடந்தேன். அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளும் 500 வரையான காயப்பட்ட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் எங்கும் வியாபித்து இருந்தது. ஷெல் அடி காதைப் பிளந்தது. மருத்துவமனையில் சரியான மருந்துகள், மருத்துவ ஆளணி இல்லாமல் மருத்துவர்கள் திணறிக்கொண்டு இருந்தனர். அன்றைய பொழுதில் கடைசி நம்பிக்கையாக கருணாநிதியை நம்பிக்கொண்டு இருந்தனர் எங்களில் பலர். அந்த அவல நிலையிலும் வானொலிப் பெட்டியின் முன் குந்தி இருந்தனர். கருணாநிதி அறிவித்ததாக 'போர் நிறுத்தப்பட்ட அறிவிப்பு’ வானொலியில் வந்த கணத்தில் மக்கள் அதனை முழுவதும் நம்பினார்கள். எங்கும் சந்தோஷ மயம். அனைத்தையும் இழந்துவிட்ட அந்த நிலையில் அவர்கட்கு கருணாநிதி மீட்பராகத் தெரிந்தார். தேவதூதராகத் தென்பட்டார். ஆனால், நடந்தது எல்லாம் நாடகம் என்பதை ஜந்து நிமிடங்களுக்குள் நான் உணர்ந்துகொண்டேன். அன்றுதான் வழமையைவிட ஷெல் அடி அதிகமாக இருந்தது. நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.

Posted Image
நான் தலைவர் பிரபாகரனிடம் பற்றுக்கொண்டு போராட்டத்தில் இணைந்துகொண்டவன். தமிழீழம் என்பதுதான் எமது ஒற்றை நம்பிக்கையாக இருந்தது. அந்த நம்பிக்கை பொய்த்துப்போனதுகூட எனக்கு வலிக்கவில்லை. உடம்பில் தெம்பு இருந்தவரை நான் போராடினேன் என்கிற ஆத்ம திருப்தி இருக்கிறது எனக்கு. ஆனால், நாங்கள் நம்பிய ஒருவரால் ஏமாற்றப்பட் டோம் என்பதை இன்று வரை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை!''

ஸ்ரீதரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
Posted Image''நாங்கள் 60 வருட காலம் போராடிப் பார்த்துவிட்டோம். இன்றைக்கு எங்கள் எதிர்காலம் சம்பந்தமாக எந்தவிதமான நம்பிக்கையும் அற்று இருக்கிறோம். இத்த கைய சூழலில் எமக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை இந்தியத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் உண்டு. இப்போது உள்ள நிலையில் அவர் களால் மாத்திரம்தான் ஈழத் தமிழர்களின் மேலான அடக்குமுறையைச் சர்வதேசத்துக் குக் கொண்டுசெல்ல முடியும்.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தும் மாநாட்டு அழைப்பை நாங்கள் எதிர்கொள்கிறோம். சொந்த விருப்புவெறுப்புகளை விடுத்துப் பார்த்தால் அவர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க தலைவர். அவர் பின்னால் பெரும் தொண்டர் படையணி உள்ளது. அவரை நாங்கள் புறக்கணிக்க முடியாது. ஆனால், அவரிடம் உளச் சுத்தியான ஈழ ஆதரவு இருக்கும் என நம்பும் அளவு நான் முட்டாள் அல்ல. ஈழத் தமிழர்கள் அனைவருமே கருணாநிதியின் மேல் மிகப் பெரிய கோபத் திலும் வெறுப்பிலும் உள்ளார்கள். ஈழத்தில் மக்கள் கொத்துக் கொத் தாகக் கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்தவர் அவர். ஈழப் போரை நிறுத்த வேண்டிய தார் மீகக் கடமை அவருக்கு இருந்தது. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை; சோனியா காந்திக்கு விசுவாசமாக இருந்தார். புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் கடும் வெறுப்பில் அவர் இருந்தார். அந்த வெறுப்பைபுலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது அவர்கள் மேல் காட்டினார். ஆனால், புலிகளின் தோல்வி, ஈழத் தமிழர்களின் தோல்வி என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. அவர் எதுவும் செய்யாமல் இருந்திருந்தாலே ஈழத் தமிழன் அவரை மன்னித்து இருப் பான். ஆனால், உண்ணாவிரதம் எனும் நாடகத்தை நடத்திவிட்டு, 'ஈழத்தில் போர் முடிந்துவிட்டது’ என அவர் ஒரு பொய்யான தகவலை உலகத்துக்கும் தமிழ்நாட்டு மக்க ளுக்கும் சொல்லி தமிழ்நாட்டிலே ஏற்பட்ட மக்களின் எழுச்சியை நயவஞ்சகமாக அடக்கினார். அதை நாம் எப்படி மறப்பது?''
Posted Image


யோ.கர்ணன், இறுதிப் போரில் பங்கெடுத்த போராளி
Posted Image'' 'தமிழகத் தேர்தல் அரசியல் இழுபறிக்குள் எமது ரத்தத்தை விற்பனைப் பொருளாக்கிவிடாதீர் கள்’ என்பதே எமது வேண்டுகோள். 'தயவுசெய்து எங்களை விட்டிடுங் கடா’ என ஈழத் தமிழர்கள் கை கூப்பிக் கதறி அழுதாலும், இந்த விற்பனையாளர்கள் விட மாட்டார் கள்போல் உள்ளதே.
கருணாநிதியையும் ஒரு மீட்பராக ஈழத் தமிழர்கள் துதித்த காலம் ஒன்று இருந்ததுதான். நாங்கள் வேர் கள் அறுபட்டு அகதியாக ஓடிக் கொண்டிருந்த காலத்தில், பற்றுவதற்கு ஒரு சிறு துரும்பாவது கிட்டாதா என இந்தப் பூமிப் பந்தின் திசைகள் எல்லாம் கைகளை அளைந்து அந்தரித்துக்கொண்டு இருந்த நாட்களில் அவர் எங்கள் கண்களில் தென் பட்டார்தான். மனிதச் சங்கிலிப் போராட் டம் உள்ளிட்ட அவரது செயற்பாடுகள்தான் அந்த நாட்களில் பெரும்பாலானவர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. யுத்த வளையத்தில் அதிகமும் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றாகவும் அவரது பெயர் இருந்தது. ஆனால், நாங்கள் வருந்தியழைத்த அந்தப் பொழுதுகளில் எல்லாம் அவர் வரவே இல்லை. இப்போது மீண்டும் வந்திருக்கிறார், எல்லாம் முடிந்த பின், நாங்கள் அழைக்காமலேயே. இதைப் பார்த்து நாம் அழுவதா, இல்லை சிரிப்பதா, இல்லை சிரித்துக்கொண்டே அழுவதா?
கருணாநிதிக்குச் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று உண்டு. ஈழத்தில் மகிந்தராஜ பக்ஷேவை நம்புவதற்குத் தயாராக உள்ள தமிழர்கள்கூட கருணாநிதியை நம்புவதற் குத் தயாராக இல்லை!''


சயந்தன், ஈழ எழுத்தாளர்: ''ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் - குறிப்பாக தி.மு.க-வின் தற்போதைய நடவடிக்கைகளை - ஒருவிதமான விரக்தி, ஏமாற்றம், ஏளனம், கோபம் எனக் கலவையான உணர்வுகளின் ஊடாகத்தான் பார்க்கிறார்கள். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை விடுத்துப் பார்த் தாலும்கூட, இறுதி யுத்தத்தில் சிக்குண்ட வர்கள், உறவுகளை இழந்து தவித்தவர்கள், இன்னமும் சொந்த வாழிடங்களுக்குத் திரும்ப முடியாது அவலப்படுவோர் அனைவரிடத்திலும் கலைஞர் மீதான ஆற்றாமையும் கோபமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவுக்கு உள்ளது. நம்பிக் கெட்ட சனங்களின் உணர்வுகள் அவை.

ஈழ விவகாரமும் தமிழகத் தேர்தல் அரசியலில் ஒரு முக்கியக் கூறாகப் பார்க் கப்படுவதால், அவரவர் வசதிப்படிநடனம் ஆடுகிறார்கள். அந்த ஆட்டத்தில் 'டெசோ’வும் ஒன்று. சற்றே புத்தி தெளிவுள்ள ஒருவனால்கூட இதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும். காலங்காலமாகத் தமது சொந்த மீனவர்கள் சுடப்படுவதைக்கூட நிறுத்த முடியாதவர்கள், இப்படி எல்லாம் கூத்தடிக் கும்போது, யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது  
'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.’ ''

Tuesday, August 7, 2012

நன்றி மறக்கலாமா?


     ஒரு மரத்தில் பல பறவைகள் பாதுகாப்பாகத் தங்கின. அது ஒரு பழமரம் என்பதால், வேண்டிய அளவு பழங்களைச் சாப்பிட்டு சந்தோஷமாக காலம் கழித்தன.

     எந்த ஒரு பொருளுக்கும் உலகில் ஆயுள் நிர்ணயம் உண்டல்லவா! சில நூறு வருடங்கள் பல தலைமுறை பறவைகள் அதில் வசித்தன. ஒரு சமயம் மரம் பட்டுப்போனது. எல்லாப் பறவைகளும் அதில் இருந்து வேறு மரங்களைத் தேடிச் சென்று விட்டன. ஒரு கிளி மட்டும் அந்த மரத்தை விட்டு அகலவில்லை. 

     உணவின்றியும், நிழலின்றியும், பாதுகாப்பின்றியும் சிரமப்பட்டாலும் கூட அவற்றைப் பொறுத்துக் கொண்டு அங்கேயே வசித்தது. ஒரு சமயம், தேவர்களின் தலைவன் இந்திரன் அங்கு வந்தான். கிளியிடம், பச்சை மரங்கள் பல இருக்க பட்ட மரத்தில் தங்கியிருக்க காரணம் கேட்டான். 

     "இந்திரரே! எனது மூதாதையர் இங்கு தான் வசித்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த மரமே உணவும் அடைக்கலமும் தந்தது. அந்த நன்றியை எப்படி என்னால் மறக்க இயலும்! எங்களை வளர்த்த இந்த மரத்திற்கு இப்போது கஷ்டம் வந்ததும், அதை கைவிட்டுப் போனால் நன்றி மறந்தவன் ஆகமாட்டேனா?'' என்றது. இந்திரன் மகிழ்ந்தான். 

     அந்த கிளியிடம், "உன் நல்ல மனதுக்கு வரம் தருகிறேன். கேள்,'' என்றான். "இந்த மரம் மீண்டும் பசுமையுடன் திகழ வேண்டும். முன்பை விட செழித்து நிறைந்த கனிகளுடன் விளங்க வேண்டும்,'' என்றது கிளி. இந்திரனும் அவ்வாறே செய்தான். 

     பிறர் செய்த உதவியை ஏற்றவர்கள் அவர்களுக்கு கஷ்டம் வரும் போது, கைகொடுத்து காக்க வேண்டும் என்பது இந்தக் கதை சொல்லும் நீதி.

உழைப்பால் உயர்ந்த ஒரு மாமனிதர்!



     ஃமைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டு சரியாக இந்த வருடத்தோடு 35 வருடம் முடிகிறது. விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது. இப்பொழுது விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு சக்கை போடு போடுகிறது. அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம் இ மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.

பில்கேட்சின் வரலாறு :


     இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது ஒரு தேவதை என்று வைத்துக் கொள்வோம் ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த தேவதை உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தருகிறது. அதுவும் ஒரு நாளுக்கு அல்ல ஒரு ஆண்டுக்கு அல்ல 21 ஆண்டுகளுக்கு அப்போது உங்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும்.

     கொடுக்கும் தேவதைக்கே தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை. எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் 21 ஆண்டுகள் எவ்வளவு நிதி சேருமோ அவ்வளவு நிதிக்கும் இப்போதே சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கத்தான். ஆம் உலகின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 11 ஆண்டுகளாக பெற்று வந்த அவர்தான் கணினி உலகம் என்ற வானத்தை வசப்படுத்திய ஃபில்கேட்ஸ்.

     1955-ஆம் ஆண்டு அக்டோபர் 28ந்தேதி அமெரிக்காவின் சியாட்டோ நகரில் பிறந்தார் வில்லியம் ஹென்றி கேட்ஸ். அவருக்கு 2 சகோதரிகள், தந்தை வழக்கறிஞர், தாயார் பள்ளி ஆசிரியை. ஆரம்பித்தில் மிகவும் கூச்ச சுபாவம் உடைய பில்கேட்ஸ் தனிமையை அதிகம் விரும்புவார். எப்போதுமே ஏதாவது ஒரு சிந்தனையில் ஈடுபட்டிருப்பார்.





     சக வயது மாணவர்கள் விரைவுக்கார்களையும் திரைப்படங்களையும் பற்றி எண்ணிக் கொண்டிருக்க, பில்கேட்ஸ் மட்டும் எண்களைப் பற்றியும் அவற்றின் மந்திரம் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பார். வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சிறு வயதிலேயே துளிர்விடத் துவங்கியது.

     இரவு உணவுக்குப் பின் குடும்பமாக சேர்ந்து ஃபிரிட்ஜ் என்ற விளையாட்டை ஆடுவார்கள். எனவே ஒவ்வொரு இரவும் வெற்றிப் பெருவதைப் பற்றிய நினைப்பார் பில்கேட்ஸ். அவருக்கு 13 வயதானபோது அவரது நண்பரான ஃபால் எலனுடன் சேர்ந்து கணினிக்கான மென்பொருள் எழுதக் கற்றுக் கொண்டார். ரிஸ்க் என்ற கணினி விளையாட்டையும் உருவாக்கினார். தன் நண்பருடன் சேர்ந்து கணினியில் பல மணி நேரம் செலவிட்டு மென்பொருளில் உள்ள குறைகளைக் கண்டறிவார் ஃபில்கேட்ஸ்.

     1973-ல் ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார் அங்கு இருந்த காலத்தில்தான் கணினிகளுக்கு மென்பொருள் எழுதப் பயன்படும் Basic என்ற மொழியை உருவாக்கினார். 2 ஆண்டுகள் கழித்து 1975-ல் தன் நண்பன் ஃபால் எலனுடன் இணைந்து ஃமைக்ரோசாப்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.


     1977-ல் பட்டப்படிப்பை முடிக்காமலேயே ஹார்வேர்டை விட்டு வெளியேறி நிறவனத்தில் முழுக் கவணம் செலுத்தத் தொடங்கினார். இல்லக் கணினிகளுக்குத் தேவையான மென்பொருளை உருவாக்குவதில் இருவரும் கவணம் செலுத்தினர். 1981-ல் IBM கணினிகளுக்கான MS-DOS என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம், அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தார். அதன் சிறப்பை எடுத்துக்கூறி மற்ற கணினி தயாரிப்பாளர்களையும் MS-DOS இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார் ஃபில்கேட்ஸ்.

     அது ஏற்றுக்கொள்ளப்பட்டு 80-களில் கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் தொடங்கின. விற்பனையாகும் ஒவ்வோரு கணினிக்கும் அதன் இயங்கு தளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் கிடைப்பதால் ஃமைக்ரோசாப்ட்டின் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.


     மாறிவரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்று மட்டுமே, என்ற சொற்றொடர் கணினி உலகத்திற்குதான் மிகவும் பொருந்தும். அதை உணர்ந்துதான் போட்டியை எதிர்பார்த்துதான் ஃமைக்ரோசாப்ட் நிறுவனமும் புதிய புதிய மென்பொருள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

     IBM கணினிகளுக்கு போட்டியாக மவுஸ் கொண்டு இயக்கும் ஆப்பிள் கணினிகள் அறிமுகமானபோது அது மிகவும் பிரபலமடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். உலகின் மொத்த கவணமும் ஆப்பிள் பக்கம் திரும்பியபோதும் அசரவில்லை பில்கேட்ஸ். அசுர வேகத்தில் ஃமைக்ரோசாப்ட் விண்டோஸ் என்ற இயங்குதளத்தை அறிமுகம் செய்தார். அது இமாலய வெற்றிப் பெற்றது.

     அதுமட்டுமல்லாமல் 90-களின் தொடக்கத்தில் பிரபலமாகத் தொடங்கியிருந்தது இணையம். அந்த இணையத்தில் உலா வர உதவும் நெட்கேப்ஸ் என்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்தார் மாக் ஆண்டர்சன் என்பவர். இணையத்தின் எதிர்காலத்தை நன்கு புரிந்து கொண்ட பில்கேட்ஸ் அந்த மென்பொருளை விலைக்கு வாங்க விரும்பினார். ஆனால் அதை விற்கவோ ஃமைக்ரோசாப்ட்டுடன் இணையவோ மாக் ஆண்டர்சன் மறுக்கவே மீண்டும் தன் மந்திரத்தை நிகழ்த்திக் காட்டினார் ஃபில்கேட்ஸ்.


     நெட்கேப்ஸ்க்கு இணையான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற இணையச் செயலியை உருவாக்கி அதனை புதியக் கணினிகளுடன் இலவசமாக விநியோகம் செய்தார். அதனால் விலைக்கு விற்கபட்டு வந்த நெட்கேப்ஸின் இணைய ஆதிக்கம் மங்கத் தொடங்கியது. அதுமாதிரியான விற்பனை தந்திரம் முறையற்றது என்று ஃமைக்ரோசாப்ட்டின் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் ஃபில்கேட்ஸை அசைக்க முடியவில்லை.

     என்ன வந்தாலும் பில்கேட்ஸுக்கே வெற்றி கிடைக்கும். ஏனென்றால் பில்கேட்ஸின் போட்டியாளர்கள் குறி வைப்பது பெரிய பெரிய நிறுவனங்களை. ஆனால் பில்கேட்ஸ் குறி வைப்பதோ சாமானியர்களை என்று கூறுகிறது ஒரு குறிப்பு.

     1999-ல் Business at the speed of thought என்ற நூலை எழுதினார் ஃபில்கேட்ஸ். 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 நாடுகளில் விற்பனையாகிறது அந்த நூல். அதற்குமுன் அவர் எழுதிய The road a head என்ற நூலும் அதிகமாக விற்பனையாகிறது. 2 நூல்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு தொகையையும் அற நிதிக்கு வழங்கியிருக்கிறார் பில்கேட்ஸ்.



     மெலிண்டா ஃபிரெஞ்சு கேட்ஸ் என்பவரை 1994-ஆம் ஆண்டு மணந்து கொண்டார் பில்கேட்ஸ். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பில்கேட்ஸும் மனைவியும் இணைந்து பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிக்காக வழங்கியிருக்கின்றனர்.


     குறிப்பாக உலக சுகாதாரம், கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு அந்த நன்கொடைப் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சுமார் பத்து ஆண்டுகள் ஃமைக்ரோசாப்ட்டின் தலைமை பொருப்பில் இருந்துவிட்டு அதன்பிறகு தனது 95 சதவிகித சொத்தை அறப்பணிகளுக்கு கொடுக்கப் போவதாக கூறியிருக்கிறார், உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஃபில்கேட்ஸ்.

     நாமும் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் போராடினால் கண்டிப்பாக “பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே” அதற்கு உதாரணம் ஃபில்கேட்ஸ்.

ஏனிந்தபோலித்தனம்

லாட்டரிச் சீட்டு வாங்காமலேயே தனக்குக் கோடி ரூபாய் பரிசு விழ வேண்டும் என்று நினைப்பவரை எள்ளிநகையாடும் நாம், விளையாட்டில் எந்தவித ஆர்வமும் காட்டாமல், ஒலிம்பிக் போட்டியில் மட்டும் பதக்கங்களை இந்தியா அள்ளி வர வேண்டும் என்று பேராசைப்பட்டால் எப்படி?
ஒலிம்பிக் தடகளப் போட்டிக்குத் தகுதிபெற்றுப் பங்கேற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 14-ஐத் தாண்டாதபோது, நிறையப் பதக்கங்களைக் கனவுதான் காண முடியுமே தவிர, நடைமுறையில் அது எப்படிச் சாத்தியம்?

இன்றைய தேதிவரை நாம் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ககன் நரங், விஜயகுமார் இருவரது வெற்றியால் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி பெற்றோம். சாய்னா மூலம் ஒரு வெண்கலம் கிடைத்தது. மேரி கோம் அரையிறுதியில் நுழைந்துள்ளதால் வெண்கலம் உறுதி, தங்கம், வெள்ளி கிடைப்பது போட்டியைப் பொறுத்தது. ஆக, 13 விளையாட்டுகளில் பங்கேற்கச் சென்ற 83 பேர் கொண்ட இந்திய அணி இதுவரை பெற்றிருப்பது நான்கே நான்கு பதக்கங்கள்!
பாட்மிண்டன் போட்டியில் சாய்னா தங்கம் வெல்வார் என்று அவரது தரவரிசையைக் கருத்தில்கொண்டு நம்பிக்கை வைத்தோம். அவர் வெண்கலம்தான் பெற முடிந்தது. அடுத்த நம்பிக்கை கிருஷ்ணா பூனியா வட்டெறிந்து சாதனை நிகழ்த்துவார் என்று நம்பினோம். அவரால் ஏழாவது இடத்துக்குத்தான் வர முடிந்தது. இது இவர்களின் தவறு அல்ல. இவர்களது திறமையை மேலும் பட்டைதீட்டத் தவறிய இந்திய அரசின் தவறு. ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் இவர்களைத் திரும்பிப் பார்ப்பதும் மற்ற நேரங்களில் மறந்துவிடுவதும் இந்திய விளையாட்டுத் துறையின் தவறு.
ஒலிம்பிக்கில் மற்றவர்களோடு போட்டியிட்டு விளையாடி, தகுதித்தேர்வு நிலையிலேயே, அல்லது காலிறுதி, அரையிறுதியில் வெளியேறும் நம் இந்திய வீரர்களை, ஏதோ அவர்கள் தேசத் துரோகம் செய்துவிட்டதைப்போன்று கூனிக் குறுகிப் போகச் செய்கிறது நமது எதிர்பார்ப்புகள்.
அவர்கள் விளையாடத் தேவையான எதையும் செய்து கொடுக்காத இந்திய அரசை நாம் குற்றஉணர்ச்சிக்கு உள்ளாக்காமல், உலகத் தரத்துக்கு இணையாக ஆட இயலாமல் பின்தங்கிப் போன இந்திய வீரர்களின் குற்றஉணர்ச்சியைத் தூண்டி, கண்ணீர் சிந்த வைப்பதால் என்ன பயன்?


ஒலிம்பிக் சென்ற இந்திய வீரர்கள் விருதுகள் பெறாமல் திரும்பினால் அது அவர்கள் குற்றமல்ல. உலகத் தரத்துக்கு இணையான வீரர்களை உருவாக்கத் தவறிய இந்திய அரசின் குற்றம். விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் செலுத்தாமல், ஆனால், விளையாட்டுக்கான நிதிஒதுக்கீட்டில் முறைகேடு செய்வதில் மட்டும் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகளின் குற்றம்.தற்போது நான்கு விருதுகள் பெற்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு ரொக்கப் பரிசை அள்ளி வழங்கும். இதே ஆர்வத்தை விளையாட்டு மேம்பாட்டுக்காக, பயிற்சிக்காக அரசுகள் செலவிடுவதில்லை. இந்த நான்குபேரில் துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் சொந்தத் திறமையால் அதைச் சாதித்தனர். அந்த ஏகலைவர்களுக்கு அர்ஜுனா விருது நிச்சயம்.
ஒலிம்பிக் தடகளத்தில் இதுவரை இறுதிச்சுற்றில் பங்கேற்றவர்கள் மில்கா சிங், பி.டி.உஷா, எஸ்.ஸ்ரீராம், குர்பஜன் சிங், அஞ்சு பாபி ஜார்ஜ். இப்போது ஆறாவது நபராக பூனியா. ஆறே ஆறு பேர் மட்டுமே!
இந்த நிலைமைக்காக வருத்தப்படவும், வேதனைப்படவும் செய்யாத இந்தியர்கள், பதக்கங்களை நாம் வென்றெடுக்கவில்லை என்று வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை.
ஒவ்வொரு விளையாட்டுக்கும் நல்ல பயிற்சிக்களம், பயிற்சியாளர், விளையாட்டுக் கருவிகள் ஊக்கத்தொகை போன்ற எதையுமே வழங்காமல், அதிலும்கூட ஊழல் செய்தால், நாம் விருதுகளை எப்படிப் பெறமுடியும்? பொறியியல் கல்லூரியிலும் மருத்துவக் கல்லூரியிலும் இடம் பெறுவதற்காக மட்டுமே விளையாட்டைப் பயன்படுத்தும் ஊழல்களால் எப்படி சர்வதேச விருது கிடைக்கும்?
பொருளாதார ரீதியில் 9-வது இடத்திலும் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்திலும் உள்ள இந்தியாவினால் 4 பதக்கங்கள் மட்டுமே வெல்ல முடிந்ததை எண்ணி வருந்தும் இந்தியர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்; இத்தகைய நிலைமைக்கு அரசுக்கு எந்த அளவுக்குப் பொறுப்போ அதே அளவு மக்களுக்கும் உள்ளது.
இந்தியாவில் எந்த நாளிலும் தொலைக்காட்சியில் காண நேர்ந்த விளையாட்டு, இந்தியர்களுக்கு எல்லா வீரர்களின் பெயரும் அத்துப்படியான விளையாட்டு கிரிக்கெட். நம் துரதிருஷ்டம், அந்த விளையாட்டு ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட் ஒன்றைத் தவிர, எந்த விளையாட்டைப் பற்றியும் என்றைக்கும் கவலைப்படாமல், ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் நமது வீரர்கள் தங்கப் பதக்கமும், வெள்ளிப் பதக்கமும் பெறவில்லையே என்று நாம் ஆதங்கப்படுவது போலித்தனம் அல்லாமல் வேறென்ன?
ஒவ்வொரு விளையாட்டிலும் பயிற்சிபெறத் தேவையான விளையாட்டுக் களம், சூழல், சிறந்த பயிற்சியாளர்கள் போன்ற அனைத்தையும் உறுதி செய்து, அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே வீரர்களைத் தயார்படுத்திட அரசாங்கத்தை வலியுறுத்துவது எப்படி நமது கடமையோ, அதேபோன்று தங்கள் குழந்தைகளை விளையாட அனுப்பி வைப்பதும் மக்களின் கடமை. குழந்தைகளுக்கு பல விளையாட்டுகளைக் காட்டி, அவர்களுக்கான விளையாட்டைத் தேர்வு செய்ய சுதந்திரம் தர வேண்டும். கிரிக்கெட்டும், செஸ்ஸýம் மட்டுமே விளையாட்டு என்கிற மனோபாவம் ஏற்பட்டிருப்பதில் பெற்றோருக்கும் பங்கு இருக்கிறது.
தங்கள் வீட்டுக் குழந்தைகளைப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யாத எந்த ஒரு இந்தியனுக்கும், லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் விருதுகளை அள்ளி வரவில்லையே எனக் குற்றம் சொல்லும் தார்மிக உரிமை இல்லை!

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...