Tuesday, August 14, 2012

சுதந்திர தின வாழ்த்துகள்





நண்பர்களுக்கு எனது இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்



                இந்தியதேசம் சுதந்திரம் அடைந்த நாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் ஒரு உள்ளார்ந்த மகிழ்ச்சி உண்டு. அடைந்த விடுதலைக்குப் பின்னால் உறைந்த ரத்தத்தையும், இழந்த உறவுகளையும் கொண்டுதான் ஒரு நாட்டின் விடுதலைக்கான போரின் தீவிரம் மதிப்பிடப் படுகிறது. 

                 இன்னும் இங்கே அடுத்தவேளை உணவுக்கு நிச்சயமற்ற ஏழைகள் உண்டு.ஒவ்வொரு ஊரிலும் ஒரு தாழ்த்தப் பட்ட சேரி உண்டு.பாதைகளெங்கும் பிச்சைக்காரர்கள் உண்டு. பெண்களின் மீதான வன்முறை உண்டு.தமிழனுக்கும் மலையாளிக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நீதி வழங்கிடும் மைய அரசுகள் உண்டு. சிறுபான்மையினர் பாதுகாப்பின்றி வாழும் நிலைமையும் உண்டு. ஊழல் உண்டு. திருட்டும் கொலையும் கொள்ளையும் உண்டு. 

               ஆனால் இதுவெல்லாம் ஒன்று கூட இல்லாத வேறு தேசம், எங்கும் உண்டா? உங்கள் லட்சிய தேசத்தில் இவை இராது என்பதற்கு உங்களுக்கு துணிவு உண்டா? .  இந்திய தேசத்தை எதிர்க்கும் ஒவ்வொருவரும் பயன்படுத்தும் நெடுஞ்சாலைக்கும், கேஸ் சிலிண்டருக்கும் இன்னொரு இந்தியன் வரிக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறான். நீங்கள் சூளைமேட்டில் சரக்கடித்துக் கொண்டு மட்டையாகித் தூங்கும்போது உங்களைக் காப்பாற்ற இன்னொரு இந்தியன் இரவில் ரோந்து வந்து கொண்டிருக்கிறான். 

              அரசியல்வாதிகளைத் தோலுரித்து, உங்களுக்கான உரிமைகளை வாங்குவதற்கு பதில், தேசத்தை பழிகூறிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் சேர்த்து சுதந்திர தின வாழ்த்துக்கள். 

               எப்படி விடுதலைப் புலிகளை அவர்களின் குற்றம் குறைகளோடு ஒரு "விடுதலை தாகம் கொண்ட மக்கள் இயக்கம்" என்று ஏற்றுக் கொள்கிறோமோ , அதே கோட்டில், இந்திய தேசத்தை அதன் குற்றம் குறைகளோடு என்னுடைய தேசம் என்று பெருமிதம் கொள்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...