Wednesday, August 1, 2012

22 மாநிலங்களில் மின் தடை பாதிப்பு : இந்தியாவின் அரைப்பகுதி இருளில் மூழ்கியது


வடக்கு கிழக்கு மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் முக்கிய மின் தொகுப்பு வழங்கிகளின் உள் இணைப்புக்களினால் ஏற்பட்ட கோளாறே இன்று இரண்டாவது தடவையாக மின் தடை ஏற்பட்டமைக்கு காரணமென நம்பப்படுகிறது.
உத்தரபிரதேச மின் வழங்கிகளிலிருந்து மிகைப்படுத்தப்பட்ட மின்சக்தி வழங்கப்பட்டது ஏனைய மின் தொகுதிகளையும் பாதிப்புறச்செய்துவிட்டதாகவும் டாமினோ விளைவு ஏற்பட்டுவிட்டதாகவும்  மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (CERC) குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் ஆகஸ்டு 17ம் திகதிக்குள் விளக்கமளிக்கும் படி   உத்தரபிரதேச அரசுக்கு நோட்டிஸும் அனுப்பியுள்ளது.

மத்திய மின்சக்தி துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீட்டிலும், பார்க்க அதிகமாக மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளதாகவும், இதே போன்ரு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களும் பரிந்துரைக்கபப்ட்ட அளவிலும் பார்க்க அதிகமாக மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளன எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.  எனினும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தமது மாநிலமும் இத்தவறை செய்திருப்பதாக கூறப்படும் கருத்துக்களை மறுத்துள்ளார்.

வடக்கு மின் தொகுதிகளில் 45% வீத மீள் நிவர்த்தி பணிகளும், கிழக்கு மின் தொகுதிகளில் 35% வீத மீள் நிவர்த்தி பணிகளும், வடக்கு கிழக்கு மின் தொகுதியில் 100% வீத மீள் நிவர்த்தி பணிகலும் நடந்து முடிந்துள்ளதால், புதுடெல்லியில் மின்சார பாவணை வழமைக்கு திரும்பவுள்ளதாகவும் மின்சக்தி துறை தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக மூன்று பாரிய மின்தொகுதிகளில் ஏற்பட்ட தவற்றினால், 22 மாநிலங்களில் மின்சாரம் முற்றாக தடைப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 67 கோடி இந்தியர்கள் இதனால் இன்று இரண்டாவது நாளாக மின்சாரமின்றி அவதிப்படுகின்றனர்.

இது கிட்டத்தட்ட இந்தியாவின் அரைவாசிமக்கள் தொகையினர் இருளில் மூழ்கியிருப்பதற்கு சமமாகும். மேலும் குறைந்தது 300 ரயில்கள் முற்றாக போக்குவரத்து பயணங்களை இடைநிறுத்தியிருந்தன.

மேற்கு வங்கத்தின் புர்த்வான் மாவட்டத்தில், 150 நிலக்கரி சுரங்கத்தொழிலாளர்கள் மின்சாரம் தடைப்பட்டிருந்த்தால், நிலத்தின் கீழ் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக 10 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் மின்சாரம் தடைபட்ட நிகழ்வு நடைபெற்றது. எனினும் இம்முறை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின் தடை வரலாற்றில் மற்றுமொரு மோசமான மின்பாதிப்பு நிகழ்வாக பதியப்பட்டுள்ளது.
    

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...