பிறருக்கு அன்பு செலுத்தும் நிமிடத்தை விட அன்புக்காக ஏங்கும் நிமிடமே வாழ்கையில் அதிகமாக இருக்கிறது.
சமுதாயம் என்பது நாம் தான் தோழர்களே, அடுத்தவர் மாற்றம் ஏற்படுத்துவார் என்று காத்துநிற்பதை விட நாமே மாற்றத்தை தொடக்குவோம். சமுதாயம் மாற்றம் நம்மோட தான் தொடங்க வேண்டும்.
ஜாதியின் காரணமாக ஒதுக்குதல், மதம் காரணமாக ஒதுக்குதல் என மேடை போட்டு பேசும் தலைவர்கள், பேச்சாளர்கள் கூட திருநங்கை என்கிற இனத்தை ஆதரித்து பேசியதாக தெரியவில்லை.. உங்களின் சாதியும் மதமும் எங்களுக்கு வேண்டாம், நாங்கள் எந்த ஜாதியும் இல்லை மதமும் இல்லை, எங்களை வாழவிடுங்கள் என்று தான் காலம் காலமாக கதுறுகிறோம். திருநங்கைகளை கேலி செய்யும் ஆண்களும் பெண்களும் தயவுசெய்து நாங்களும் மனிதர்கள் தான் என்பதை உணருங்கள்.. பின்பு நீங்கள் மனிதநேயம் பற்றி மேடை போட்டு பேசலாம்.. மிருகங்களுக்கு பாதுக்காக கூட ரெட் கிராஸ் என்கிற அமைப்பு இருக்கிறது, எங்களின் பாதுகாப்புக்கு எதுவும் அரசு சட்டங்கள் இயற்றவில்லை. என்னும் எத்தனை ஆண்டுகள் இருளில் வாழ்வது....?
தங்கம் விலை எவ்வளவு ஏறினாலும் நம் மக்களுக்கு தங்கத்தின் மீது உள்ள மோகம் மட்டும் குறையவில்லை.. தங்கம் விலை போல ஏழை மக்களின் வருமானம் ஏறினால் எவ்வளவு நன்றாக இருக்கும். மனமாக போகும் ஆண்கள் இனி திருமணத்தின் போது பெண்களின் குணத்தை மட்டும் பாருங்கள், அவர்கள் எத்தனை பவுன் நகை அணிந்து வருகிறார்கள் என்று பார்க்காதீர்கள்.. புன்னியமாகி போகும் உங்களுக்கு நண்பர்களே...
ஓரிரு தவிர்த்து பெரும்பாலும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் மக்களுக்கு சமூகத்தில் நடக்கும் நல்ல செய்திகளை விட கெட்ட செய்திகளையே முன்னிறுத்தி பருசுரிக்கிறது, இது ஒருவேளை அவர்களின் வயாபார யுக்திகாக இருக்கலாம்.. இப்படிப்பட்ட செய்திகள் சமூகத்தில் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என்று ஏன் சில பத்திரிக்கை நண்பர்கள் புரிந்துகொள்வது இல்லை? சிறிய விஷயங்களை மிகைபடுத்துவதும், மக்களுக்கு பீதி ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடுவதும் நல்ல பத்திரிகைக்கு அழகல்ல..
பல உயிர்கொல்லி நோய்களான டெங்கு காய்ச்சல், மலேரியா, சிக்கென்குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுவை அடியோடு ஒழிப்பது கடினம். இது போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களில் இருந்து மக்கள் பாதுகாத்துக்கொள்ள தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகள் முழுவதும் கொசுவலைகள் கொண்ட ஜன்னல் கதவுகளை கட்டாயமாக்க வேண்டும். ஏழை மக்களுக்கு தரமான கொசுவலைகளை இலவசமாக வழங்கலாம். மக்களுக்கும் கொசு ஒழிப்பில் போதிய விழிப்புணர்வும் வேண்டும் :- வீட்டில் கழிவுதண்ணீரை தேங்க வைக்க கூடாது, தேவையல்லாத பழைய சாமான்களை அப்புறபடுத்தவேண்டும், குப்பைகளை குப்பைதொட்டியில் கொட்டி தினமும் அப்புறபடுத்த வேண்டும். சுகாதாரம் நம் ஓவ்வொருமிடமிருந்தே தொடங்குகிறது தோழர்களே...
அறிவாக பேசுபவர்கள் பெரும்பாலும் வாழ்கையில் பின்தங்கியே இருப்பார்கள், இவர்கள் பேச்சை கேட்டவர்கள் இவர்களை விட முன்னேறி இருப்பர்..
வாழ்வின் ஓவ்வறு துளியும் பொன்னானது ஆனால் நாம் நம் அவசர தேவையின் போது மட்டுமே நேரத்தின் முக்கியத்தை உணர்கிறோம். நேரம் என்றுமே பொன்னானது தான்! நம் நேரத்தை ஆக்கபூர்வமாக செயல்படுத்துவோம் நண்பர்களே!!!
பரிசுத்தமான பால், தூய்மையான தண்ணீர் போன்று அவள் மனம்.. களங்கமில்லா அன்பு, அளவிடமுடியா பாசம், உண்மையான அரவணைப்பு கொண்டவள் அன்னை.. நம் வாழ்வில் தேவதை அவள்.
தற்கொலை என்ற முடிவையும், தற்கொலை செய்யும் நபர்களையும் நான் என்றும் ஆதரிக்க மாட்டேன், தற்கொலை செய்வதினால் யார்க்கும் எந்த ஒரு பரயோஜோனமும் கிடையாது. தற்கொலை செய்தவருக்கும், அவரை நம்பி இருக்கும் குடம்பதிற்குமே அது மிக பெரிய இழப்பு, துயரம் எல்லாமே. தலைவர்களுக்காக பல தொண்டர்கள் தீக்குளித்து இறந்தார்கள், நாட்டுக்காகவும் தொண்டர்களுகாகவும் எந்த தலைவர் இதுவரை தீக்குளித்து இறந்து இருக்கிறார்? இன்னும் சிலர் நடிகர்களுகாக தீக்குளிகிறார்கள்... தமிழ்நாட்டில் இது போன்ற செயல் நடப்பது வேதனை மிகுந்த நிகழ்வாக இருக்கிறது. தமிழின தந்தை, தமிழின தலைவர்கள் என்று தங்களை கூறும் பல தலைவர்கள் நாட்டுக்காகவும் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் உயிர்தயாகம் செய்வார்களா? இல்லை ஒரு சின்ன சூடாவது கையில் இடுவார்களா? தமிழனே விழித்திரு, மடமையை விலக்கி உனக்காக வாழ பழகு... நடிகர்காகவும் அரசியில் தலைவருகாகவும் வாழாதே!
ஒவ்வொரு நிமிடமும் உலகில் எட்டு பேர் அடுக்குமுறை பயங்கரவாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க அகதியாக நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ஒருவர் தன்னுடைய நாட்டை விட்டு வீட்டை விட்டு இனம், மதம், தேசியம், ஒரு குறிப்பிட்ட சமூக குழு, அல்லது அரசியல் கருத்து பயம் காரணமாக அகதிகளாக அல்லது இயற்கை அல்லது மனித-உருவாக்கப்பட்ட பேரழிவுகள் விளைவுகளிருந்து தப்பிக்க தங்களுடைய நாட்டை விட்டு வெளியேறும் நபர்கள் அகதிகள் என ஐக்கிய நாட்டின் படி குறிப்பு தருகிறது. 2011 ஆண்டின் புள்ளிவிவரங்கள் படி 15.2 மில்லியன் அகதிகள் உள்ளனர், அதில் 46 சதவிதம் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 48 சதவிதம் பெண்கள் அகதிகளாக உள்ளனர்.895000 பேர் தஞ்சம்-தேடுவோர் பட்டியலில் உள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள 42 மில்லியன் மக்கள் பலவந்தமாக தமது வீடுகள் மற்றும் சமூகங்களிருந்து இருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர்.
உலக வங்கியின் கணக்குப்படி இந்தியாவில் 433 மில்லியன் மக்கள் US $1 குறைவான வருமானத்தை தினம் பெறுகின்றனர். உலகில் உள்ள ஏழைகளின் 36 சதவிதம் இந்தியாவில் வசிகின்றனர் - அதாவது மூன்றில் ஒரு பங்கு, இவர்களின் குழந்தைகள் 46 சதவிதம் உட்டச்சத்து குறைபாடுடன் பிறக்கிறது. உலக பசி பட்டினி அட்டவணை படி இந்தியா 67 வது இடத்தை வகிக்கிறது. உலகில் உள்ள முதல் 7 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பை விட 41 கடனுள்ள ஏழை நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவே..
சீனாவில் வடக்கு யாங்கோன் மாகாணத்தில் உள்ள ஹ்லவ்க கிராமத்தில் உள்ள ஒரு சிறுமி கட்டிடவேலையில் செங்கல் சுமக்கும் காட்சி. UNICEFன் அறிவிப்புப்படி 5 முதல் 14 வயதுக்கொண்ட 250 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் உலகம் முழுவதும் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். 70 முதல் 80 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இந்தியாவில் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளில் இத்தகைய சூழல் நிலவுவது மிகவும் வருந்தத்தக்க விஷயம்மாகும். குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை எதிர்போம்!
சர்வதேச தொழிலாளர் தினம் (மே தினம் என்று அழைக்கப்படுகிறது) சர்வதேச தொழிலாளர் இயக்கம் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் இதை கொண்டாடுகின்றன. பொதுவாக உழைப்பாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை ஒன்றிணைந்து மே தினத்தை 80 க்கும் அதிகமான நாடுகளில் கொண்டாடுகின்றனர். இது ஒரு தேசிய விடுமுறை தினம் ஆகும். இந்தியாவில் முதல் மே தின கொண்டாட்டம் மே 1, 1923 அன்று இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சியால் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவப்புப் கொடியை இந்தியாவில் முதல் முறையாக அந்த கட்சி பயன்படுத்தியது. லேபர் கிசான் கட்சி தலைவர் சிங்காரவேலு செட்டியார் இரண்டு இடங்களில் மே தின கொண்டாட ஏற்பாடுகள் செய்தார். ஒரு கூட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடற்கரை எதிரில் நடைபெற்றது; மற்றொரு கூட்டம் திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்றது. தொழிலாளர் கிசான் கட்சி சென்னையில் மே தின கொண்டாட்டங்கள் அறிமுகப்படுத்தியது. தோழர் சிங்காரவேலர் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். அரசாங்கம் விடுமுறை தினமாக மே தினம் அறிவிக்க வேண்டும் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிச அரசியல் கட்சிகள் தொழிலாளர் இயக்கங்கள் இணைந்து மே தினத்தை கொண்டாடுகின்றன.
No comments:
Post a Comment