Saturday, November 3, 2012

‘நாய்’ பேச்சு விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்திய சென்னை பத்திரிகையாளர்கள்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ‘நாய்' என்றும் ‘உனக்கு பதில் சொல்ல உன் கம்பெனியா சம்பளம் கொடுக்கிறது' என்றும் கேள்வி எழுப்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு "சம்பளம்" கொடுக்கும் போராட்டத்தை சென்னை பத்திரிகையாளர்கள் இன்று நடத்தினர்.
 Chennai Journos Protest Against Dmdk
சென்னையில் பத்திரிகையாளர்கள்
 வாகனங்களில் தேமுதிகவின் தலைமை
அலுவலகத்துக்கு சென்றனர்.
பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும் 100
ரூபாயை கையில் வைத்துக் கொண்டு
 விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்க
 முயற்சித்தனர். ஆனால் அவர்கள்
 அனைவரையும் அலுவலக வாசலிலேயே
 போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து தேமுதிக அலுவகலம் முன்பாக
 கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய
பத்திரிகையாளர்கள், விஜயகாந்த் மன்னிப்பு
 கேட்டால்தான் இனி செய்தியாளர்கள்
 சந்திப்பே நடக்கும் என்று அறிவித்தனர்.

Tuesday, October 30, 2012

விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

தமிழகத்தில் காஸ்ட்லியான கனவு எது? கோட்டையில் கொடியேற்றும் கனவுதான் அது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க எதிர்ப்பு அலையில், பாசிச ஜெயாவின் கடைக்கண் பார்வையோடு கரையேறியவர் விஜயகாந்த். 29 சட்ட மன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றதோடு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தும் அடுத்த தேர்தலில் மேற்படி கனவு நனவாகும் என்று கணிசமாக போதையேற்றிருக்கும்.
விஜயகாந்த்
விஜயகாந்த் ஒரு ஆளாவதை அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளுமே விரும்பவில்லை. சென்ற தேர்தலில் நடிகர் வடிவேலு தி.மு.க மேடைகளில் “கேப்டனை” வறுத்தெடுத்ததை ‘அம்மாவும்’ ரசித்திருப்பார் என்பதே உண்மை. போயஸ் தோட்டத்திற்கு பிழைப்பைத் தேடி போன தலைவர்கள் எவரும் சுயமரியாதை என்ற ஒன்றை தலைமுழுகி விட்டுத்தான் பாயாசம் குடிக்க முடியும் என்பதற்கு அத்வானி முதல் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வரை பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. இதில் டாக்டரேட் முடித்தவர் தா.பாண்டியன். அதனால்தான் அவருக்கு மட்டும் அங்கே தனி கவனிப்பு.
ஆனால் ‘புரட்சித் தலைவி’யின் ஈகோவுக்கு சற்றும் குறைவில்லாமல் இயங்கும் ‘கேப்டனது’ ஈகோவும் ஒரு உறைக்குள் இரண்டு ஈகோ ஃபாக்டரி இயங்க முடியாது என்பது பட்டவர்த்தனமான உண்மை. இவ்வளவிற்கும் ஆரம்பத்தில் கேப்டன் அம்மாவுக்கு அனுசரணையாக தி.மு.கவை மட்டும் விளாசியவாறு அரசியல் செய்து வந்தார். என்னதான் ஈகோ மலை இருந்தாலும் கட்சியை தொடர்ந்து நடத்துவதற்கு சில பல எம் எல் ஏக்கள் வேண்டும் என்பதால் கூட்டணிக்கு சம்மதித்தார். ஒரு வேளை அவர் சம்மதிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்திருந்தால் இந்தக் கோமாளிக்கு அப்போதே மங்களம் பாடியிருக்கலாம். ஆனால் தி.மு.க, அ.தி.மு.கவில் ஆளாக முடியாத கொட்டை போட்ட பெருச்சாளிகள் கைக்காசை போட்டு செலவு செய்து தே.மு.க.தி.கவிற்கு வெளிச்சம் போட்டு நுழைந்தவர்கள் வியாபாரத்தில் ரிடர்ன்சை எதிர்பார்த்தனர்.
அந்த நிர்ப்பந்தம் கேப்டனை வழிக்கு கொண்டு வந்தது. இப்படித்தான் ஆரம்பத்தில் அவர் மனம் கோணாமல் அம்மாவிடம் தஞ்சம் அடைந்தார். எனினும் உள்ளே அவருக்கு எப்போதும் இருக்கும் ஈகோ ஃபயர் கொஞ்சம் தணிந்திருந்தது. ஆனால் அதை அம்மா எப்போதும் கண்டு கொள்ளவில்லை என்பதோடு அவ்வப்போது குட்டவும் செய்தார். தான் போட்ட பிச்சைதான் அந்த 29 எம்.எல்.ஏக்கள் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்த மனநிலைதான் உள்ளூராட்சித் தேர்தலில் கேப்டனை எச்சில் பருக்கை இல்லாமல் கூட விரட்டியடிக்க காரணமாக இருந்தது. அதில் தனியாக நின்ற கேப்டன் மண்ணைக் கவ்வினார் என்பதிலிருந்து தே.மு.தி.கவின் இத்துப் போன பலத்தை புரிந்து கொள்ளலாம்.
அதன் பிறகு தே.மு.தி.க சட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் அ.தி.மு.கவிற்கு தாவலாம் என்பதை ஊடகங்கள் எப்போதும் சொல்லி வந்தன. கேப்டனுக்கே இந்த பயம் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போது நாளொன்றுக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் வீதம் கோட்டையில் அம்மாவை சந்திந்து அருளாசி பெறுகிறார்கள். இந்தக் கணக்கில் போனால் இன்னும் இரண்டு வாரத்தில் கேப்டனது கட்சி எம்.எல்.ஏக்கள் கோட்டை கிரிவலத்தை முடித்திருப்பார்கள். அதிலும் மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன் போன்ற பெரும்புள்ளிகளே அம்மா சரணத்தில் புகலிடம் அடைந்திருப்பதில் கேப்டனுக்கு ராச்சோறு கூட இறங்கியிருக்காது. அதுதான் பத்திரிகையாளர்களிடம் அவர் சீறியதன் பின்னணி.
கோட்டையில் கொடியேற்றும் கனவு இருக்கட்டும், கொல்லைப்புறத்தில் கூட நிம்மதியாக கால் கழுவ முடியாத நிலைதான் கண்ணீரை வரவழைக்கிறது. இனி அடுத்த சுற்றுக்கு தி.மு.கதான் கதி என்றான பிறகு கேப்டன் தனது சரணம், பல்லவிகளை மாற்றிப் போட வேண்டும். கேட்டால் லியாகத் அலிகான் அய்யா சரணத்தை தீப்பிடிக்கும் தமிழில் எழுதித் தந்து விடுவார். திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிப்பார் கேப்டன்.
தே.மு.தி.கவின் டங்குவார் இப்படி நொந்து நூடில்சாகும் அடிப்படை என்ன? தி.மு.க, அ.தி.மு.க எனும் இரண்டு பெருச்சாளிகளுக்கு மாற்று என்று பேசிவிட்டு அந்த பெருச்சாளிகள் கொண்டிருக்கும் அதே அடிப்படையில் பிறந்த மற்றொரு பெருச்சாளி இல்லையில்லை சுண்டெலிதான் தே.மு.தி.க. தனிநபர் துதி, குடும்ப ஆதிக்கம், ஊழல் பெருச்சாளிகளே தளபதிகளாய் கட்சியை ஆக்கிரமித்திருப்பது, மருந்துக்கு கூட ஜனநாயகமின்மை, சென்டிமெண்ட் அரசியல், பிழைப்பிற்க்காக நாய் நரியுடன் கூட கூட்டணி வைப்பது, மக்கள் பிரச்சினைகளுக்காக சூடாக பேசியே காலம் கடத்துவது…. இத்தகையதின் நீட்சிதான் கேப்டனது இந்த காமடி போர் தோல்விக்கு காரணங்கள்.
ஓட்டுப் பொறுக்கி கட்சிகளது நடைமுறை இதுதானென்பது நிதர்சனமாயிருப்பதால் புதிதாத் தோன்றும் ஒட்டுண்ணிகளால் மாற்றம் எதுவுமில்லை. சிவப்பு படங்களில் ஊழல் எதிர்ப்பு வசனங்களை நா புடைக்க பேசியவர் என்பதை வைத்து மட்டும் தமிழகத்தை ஆண்டு விடலாமென மனப்பால் குடிக்கிறார் என்றால் குடிப்பவரை விடுங்கள், அப்படி குடிக்கலாம் என்று ஒரு நிலைமையை தமிழக மக்கள் வைத்திருப்பதுதான் கேவலம்.

Monday, October 29, 2012

கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்

நண்பர்களே,
 
 உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவும். நம் இந்திய தலைவர்கள் என்ற பெயரில் இருக்கும் திருடர்கள் ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணத்தின் பட்டியல் இது. 

நமக்காக ஓடாய் உழைத்து ஓய்வெடுக்க விருப்பம் இல்லாமல் இன்னமும் உழைத்துக் கொண்டு இருப்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.  இந்த பட்டியலின் படி கலைஞர் கருணாநிதி பெயரில் ஸ்விஸ் வங்கியில் இருப்பது 35,000 கோடி. ப.சிதம்பரம் பெயரில் 32,000 கோடி. மத்திய அமைச்சராக இருந்தும் இந்த செட்டி நாட்டு தங்கத்துக்கு கலைஞர் அளவுக்கு திறமை போதவில்லை போலும்.  

மற்ற தங்கங்களின் பெயர் பட்டியலை இந்த படத்தை சொடுக்கி சற்று பெரிதாக்கி பார்த்து திருப்தி பட்டுக் கொள்ளவும். உங்கள் வசதிக்காக இதில் உள்ள சில பெயர்களையும் தந்து விடுகின்றேன்.  ஆர்வக்கோளாறு காரணமாக நீங்கள் விட்டுவிடக்கூடாது. 

பழனிமாணிக்கம், சரத்பவார், பிராணப்முகர்ஜி, திஹார் ராஜா, சுரேஷ்கல்மாடி, இன்னும் நிறைய தறுதலைகள் இருக்கிறார்கள். முறைப்படி இந்த விசயத்தை பட்டியலில் உள்ள தலைகளைப் பார்த்து தொடர்ச்சியாக எனக்கு பேதியாக போய்க் கொண்டு இருக்கிறது. 

சும்மா சொல்லக்கூடாது?  

 அசாத்தியமான மனிதர் தானே?  எங்கோயோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சரவணபவன் விலைப்பட்டியல் மாதிரி என்னவொரு அழகாக தொகுத்து கொடுத்துள்ளார்.  ஒரு வேளை இது பாகம் ஒன்றாக இருக்கும் போல.

விரைவில் அடுத்த பட்டியல் வெளிவர எல்லாம் வல்ல சக்தியை பிரார்த்தனை செய்வோம். இந்த பட்டியலை கவனமாக படித்து முடித்ததும் யாரும் எவர்மேலும் பொறாமைப்படக்கூடாது.  ஒரு வேளை  நம்மவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகின்றது. அவருக்கு மின் அஞ்சல் அனுப்ப உடன்பிறப்புகள் துடியாய் இருந்து தொலைக்கப் போகிறார்கள்.

வாழ்க் இந்தியா.  வளர்க இந்திய ஜனநாயகம்.




இந்தியாவிற்குள் உள்ளதா தமிழ்நாடு?

மானியங்கள் இல்லாவிட்டால் நம் நாடு சிறப்பாக வந்து விடும்.

இது இயல்பாகவே இந்தியாவில் படித்தவர்கள் எப்போதும் உச்சரிக்கும் வார்த்தைகள். ஆனால் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தன் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு மானியங்கள் மூலம் அவர்களை காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிவதில்லை.  

உலகளாவிய பொருளாதாரம் என்ற வார்த்தை இந்தியாவிற்குள் வந்த பிறகு உலகில் உள்ள பன்னாடு நிறுவனங்களுக்கு இந்தியா என்பது ஒரு அற்புதமான சந்தையாக மாறியுள்ளது. 

தவறில்லை.

தரமான பெருட்கள் கிடைக்கும். போட்டிகள் அதிகமாகும். உள்ளே பழமைவாத சிந்தனைகளில் ஊறிக் கொண்டுருப்பவர்கள் மாறியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையும் உருவாகும்.  படித்தவர்கள் வெளிநாடு செல்ல தேவையில்லை. ஆனால் வருகின்ற ஒவ்வொரு நிறுவனங்களும் புறவாசல் வழியாகவே வருகின்றது. எந்த ஒப்பந்தங்களும் வெளிப்படையாக இருப்பதில்லை. 

அது குறித்து எவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேட்டால் கூட ஆயுட்காலம் முடிவதற்குள் முழுமையான விபரங்கள் கிடைத்தால் ஆச்சரியமே.

அந்நிய முதலீடு என்பது இந்தியாவிற்கு தேவை என்பது எத்தனை முக்கியமோ அதே போல் உள்ளே இருக்கும் அடிப்படை கட்டுமானம் சிதையாமல் இருப்பதும் முக்கியம் தானே.?

ஓராயிரம் உள்நாட்டு தொழிலை அழித்து ஒரு பன்னாட்டு நிறுவனம் வளர்க்க நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இந்த அளவுக்கு ஆர்வம் இருக்க காரணம் என்னவாக இருக்க முடியும்?

தேசப்பற்று என்று நீங்கள் சொன்னால் உலகத்தோடு ஒட்டி வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். வேறுவிதமான கற்பிதம் செய்து கொண்டால் அது உங்கள் சிந்தனையின் தவறாகவே இருக்கும்.

உங்கள் சிந்தனையை மாற்றிக் கொள்ளுங்க.

இந்தியாவில் உள்ள பகாசுர நிறுவனங்களின் முழுமையான செயல்பாடுகளும் நமக்குத் தெரிய சில காலம் பிடிக்கும்.  தெரிய வரும் போது எதிர்க்க முடியாது.  எதிர்ப்பை அடக்க அத்தனை அரசு எந்திரங்களும் ஒன்றாக சேர்ந்து செயல்படும்.  இது நாம் பார்த்துக் கொண்டுருக்கும் உண்மை. 

தற்போது இந்தியாவின் நிதித்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் அற்புதமான அறிவாளித்தனமான மற்றொரு திட்டத்தையும் அறிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்று இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தப் போவதாக சொல்லியுள்ளார்.  அந்த பொதுத்துறை நிறுவனம் லாபகரமாக இருந்தாலும் கூட அது குறித்து கவலைப்படப் போவதில்லை.  

மொத்தத்தில் தாங்கள் நினைத்தபடி, தாங்கள் விரும்பிய ஆட்களுக்க தற்போது லாபம் ஈட்டிக் கொண்டுருக்கும் நிறுவன பங்குகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தை தாரை வார்த்து விடுவது.  

பிறகென்ன?

மெதுமெதுவாக அந்த நிறுவனமே தனியார்களின் கைக்கு வந்துவிடும். ஆனால் தொடங்கும் போது மெதுவாகத் தான் தொடங்குவார்கள்.  

இதைப் போன்ற ஒரு திட்டம் தான் தற்போது ஒன்று உருவாகிக் கொண்டுருக்கிறது.  

இங்கு பேசவிருக்கும் மொத்த திட்டத்தையும் பார்க்கும் போது தமிழ்நாடு என்பது இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமா? இல்லை அருகில் உள்ள நாடா? என்று யோசிக்க வைத்துவிடும் போல.  அந்த அளவுக்கு ஏகப்பட்ட குளறுபடிகளுடன் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போது ஆண்டு கொண்டுருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் கட்சி அடிப்படையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு வேறு விதமாகவும் தங்கள் நல்ல செயல்களை திட்டமிட்டு செய்து கொண்டு வருகிறார்கள். 

முதல் முறையாக ஒரு மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் கொள்கையின் மேல் களங்கம் கற்பித்து நீதிமன்றத்தை நாடுவது இது தான் முதல் முறையாக இருக்கக்கூடும்.

டெல்லிக்கு தேவையில்லாத மின்சாரத்தைக் கூட தமிழ்நாட்டுக்கு தர மனமில்லாத அளவுக்க காங்கிரஸ் அரசாங்கம் புத்திசாலிகளால் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

முடிந்தவரைக்கும் மின்சாரம் முதல் ரயில்வே திட்டங்கள் முதல் அத்தனை விசயங்களிலும் தற்போதைய மத்திய அரசாங்கம் புகுந்து விளையாடிக் கொண்டுருக்கிறது.


படத்தை நன்றாக பார்த்துவிட்டு மேலே படிக்கத் தொடங்கலாம்.

இந்திய அரசின் நிறுவனமான கெயில் Gas Authority of India Limited's (GAIL) ஒரு திட்டத்தை வடிவமைத்து உள்ளது. அதாவது கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து கர்நாடகாவில் உள்ள மங்களூர் வரைக்கும் பைப்லைன் மூலமாக எரிவாயு (கேஸ்) எடுத்துச் செல்லும் திட்டம்.  liquefied natural gas (LNG) இந்த திட்டத்தின் மூலம் பதிக்கப்பட்ட குழாய் மூலம் நாள்தோறும் 16 MMSCMD (million metric standard cubic metre கொண்டு செல்ல முடியும். 

871 கிலோ மீட்டருக்கு கோவை, திருப்பூர்,நாமக்கல்,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக விவசாய நிலங்கள், தேசிய நெடுஞ்சாலை வழியாக கியாஸ் பைப்லைன் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக கெயில் நிறுவனம்  விவசாயிகளிடமிருந்து  நில அனுபவ உரிமையை எடுத்துக் கொள்ளுவதுடன் நிலத்தில் மதிப்பீட்டில் பத்து சதவீதத்தை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக வழங்கும். பைப் லைன் பதிக்க எடுக்கப்படும் நிலத்தின் இரண்டு பக்கங்களிலும் தலா 10 மீட்டருக்கு இடம் தேவை.பைப்புகள் 5 அடி ஆழத்திற்கு பதிக்கப்படுகின்றன. பைப்பில் விட்டம் 2 அடி ஆகும். பைப் லைன் அமைக்கப்படும் பகுதியின் மீது பயிரிடுவது, வீடுகள் கட்டுவது, மரம் நடுவது, ஆழ்குழாய் கிணறு தோண்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. 

ஆழமாக வேரோடும் பயிர்களை கியாஸ் பைப் லைன் செல்லும் பகுதிகளில் பயிரிடக் கூடாது என்பது முக்கிய நிபந்தனையாகும்.மேலும் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் கியாஸ் பைப் லைன் சேதமடைந்தால் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு மரண தண்டனை விதிக்கப்படுமாம்.கியாஸ் பைப் லைன் அமைக்க உருவாக்கப்பட்டுள்ள  புதிய சட்ட மசோதா படி பைப் லைன் அமைக்க நிலத்தை ஒப்படைக்கும் விவசாயிகளே கியாஸ் பைப் லைன் களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமாம்.

பொறுப்பற்ற தன்மையா? இல்லை எவ்வளவு அடித்தாலும் தாங்குபவர்கள் தமிழர்கள் என்று நினைத்துக் கொண்டார்களோ என்பது தெரியவில்லை.  மூக்கைத் தொட தலையைச் சுற்றி கையை கொண்டு வருவது போல இதன் திட்ட வரைபடங்கள் அப்படித்தான் தெரிவிக்கின்றது.  பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விவசாயிகளும் அந்த அளவுக்கு நொந்து போய் உள்ளார்கள். 

இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? 

இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்! 

இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470 கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். 

அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

இந்த திட்டத்தில் மூன்று மாநிலங்கள் சம்மந்தப்பட்டுள்ளது. விற்பனையின் மூலம் வருவாய் கேரளாவுக்கு, எரிவாயு சென்றடையும் மாநிலம்  கர்நாடகா. ஆனால் இந்த குழாய்கள் பதிக்கப்படுவது பெரும்பாலும் தமிழ்நாட்டு பகுதிகளில்.

குறிப்பாக திருப்பூர் சார்ந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குத் தான் அதிக அளவு பாதிப்பு உருவாக்கும். 

310 கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்லப்படும் இந்த பைப் லைன்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 126 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வழியாக அமைக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் 15 கிராமங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 22 கிராமங்களும், ஈரோடு மாவட்டத்தில் 16 கிராமங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 9 கிராமங்களும், சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களும், தர்மபுரி மாவட்டத்தில் 27 கிராமங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கிராமங்களிலும் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

இந்த கிராமங்களில் விவசாயிகள் தென்னை, பனை, மரங்களை வளர்க்க முடியாது, பணப்பயிர்களை சாகுபடி செய்ய முடியாது, வீடு,கட்டிடம் கட்ட முடியாது, கனரக வாகனங்களை இயக்க முடியாது.

இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதார உரிமை பறிபோகும் ஆபத்து எழுந்துள்ளது. விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படுவதற்கு பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருப்பூரிலும் கடந்த 5 மாதங்களாக விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

காங்கயம  தாலுகாவில் கத்தாங்கன்ணி, அவிநாசி தாலுகா சர்க்கார் கத்தாங்கன்னி, ஊத்துக்குளி, பொங்கலூர் அருகே  உள்ள பெருந்தொழுவு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படும  நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக இப்பகுதியில் பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிலங்களை துண்டாடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. தற்போது எரிவாயு குழாய் அமைக்கும் பணி காரணமாக ஒரு ஏக்கர், 2 ஏக்கர் நிலங்கள் துண்டாடப்படும் சூழல் உருவாகி, விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குழாய் பதிக்கப்பட்ட நிலத்தில் 60 அடிக்கு எந்த பணிகளையும் செய்ய கூடாது என நிபந்தனை உள்ளது.

இத்திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே நெடுஞ்சாலை ஓரம், ரயில  பாதை ஓரம் அல்லது ஆற்றங்கரை ஓரத்தில் இந்த குழாய்களை கொண்டு செல்ல வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் நெடுஞ்சாலை வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் இந்த திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும்.

வீடு, கிணறு, ஆழ்குழாய் கிணறு ஆகியவையும் பாதிப்படைகிறது, இதற்கான இழப்பீடு மிகவும் குறைவாக இருக்கிறது. விவசாயிகள  நலன் குறித்து எண்ணிப்பார்க்காமல், குழாய் அமைக்கும் பணியை தொடர்ந்தால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  கூடங்குளம் போல இது விஸ்பரூபம் எடுக்குமா? இல்லை பிணந்தின்னி கழுகுகள் போல கொடுப்பதை வாங்கிக் கொண்டு நம்முடைய அரசியல் சேகவர்கள் அமைதி காப்பார்களா? என்று தெரியவில்லை. .

இதைப் போலவே மற்றொரு திட்டமும் உருவாகிக் கொண்டுருக்கிறது. 

சென்னை தூத்துக்குடி இடையே நிலத்திற்கு அடியில் ‌பைப் மூலம் கேஸ் கொண்டு செல்லும் பணி நடைபெற உள்ளது. மதுரை, திருவண்ணாமலை, சென்‌னை, திருச்சி, விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த திட்டம் சுமார் 640 கி.மீ., தூரம் அமைக்கப்படுகிறது. இதற்காக நிலங்‌கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக செயற்கைக்கோள் மூலம் பைப்லைன் செல்லும் திட்டம் வகுக்கப்பட்டது.இந்த திட்டம் செயல்படுத்தும் போது, பைப்லைன் செல்லும் பகுதியில் 100 அ‌டி தூரத்திற்கு கட்டுமானப்பணிகள், போர்வெல் பணிகள் போன்றவை நடைபெற தடை விதிக்கப்படும்/

இந்த திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரியாஜிஸ்டிக் இன்பர்ஸ்டிரக்சர் லிமிடட் நிறுவனம் செய்து வருகிறது. 

தற்போது மத்திய அரசாங்கம் வெற்றி கரமாக நிறைவேற்றியுள்ள ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் என்பது பல்லாயிரக்கணக்கான நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் வாழ்க்கையில் இடியாக விழுந்துள்ளது. 

ஆடம்பரம் இல்லாமல் இயல்பாக வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு வருடத்திற்கு 8 கேஸ் சிலிண்டர் தேவைப்படும்.  வருடந்தோறும் ஒரு குடும்பத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் மானிய விலையிலும் அதற்கு மேல் தேவைப்படுவ்தை மானியம் இல்லாத விலையிலும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

தற்போது ஒரு கேஸ் சிலிண்டர் (மானிய விலையில்) ரூபாய் 400.  மானியம் இல்லாமல் வாங்கும் போது இரண்டு மடங்கு அதிகமாகும்.  இதில் மற்றொரு கொடுமையும் உண்டு.  நாம் எப்போது இந்த கேஸ் சிலிண்டர் வாங்குகின்றோமோ அப்போது சந்தை நிலவரப்படி விலை ஏற்ற இறக்கம் இருக்கும்.

தற்போது மத்திய அரசாங்கத்தில் மாற்றப்பட்ட பெட்ரோலிய அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூட ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியுடன் மோதல் போக்கை கடைபிடித்த காரணத்தினால் தான் என்று பத்திரிக்கை செய்திகள் சொல்கின்றன.  

ஒரு பக்கம் அரசாங்க பொதுத்துறை நிறுவனம் மூலமும் அம்பானி நிறுவனங்கள் மூலம் இந்த எரிவாயு குழாய் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்து விட்டால் வீடுகளுக்கு தனியார் மூலமாக தேவைப்படும் எரிவாயு எளிதாக வழங்கப்பட்டு விடலாம்.

பன்னாட்டு நிறுவனங்களின் வளத்திற்காக விவசாயத்தை அழிக்க நினைக்கும் அரசின் கொள்கைகளை வகுப்பவர்கள் அத்தனை பேர்களும் அதி புத்திசாலிகளாக இருப்பதால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை என்பது கேலிக்குறியாகவே இருக்கின்றது. 

இதனால் தான் இந்தியாவின் திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுலாலியா தண்ணீரை விற்பனை செய்யும் போது தான் அதனை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு கவனம் உருவாகும் என்று போகிற போக்கில் தத்துவங்களை உதிர்த்துவிட்டு செல்கின்றார். 

Saturday, October 27, 2012

ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?

1922 ம் வருடம், நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாக நடந்து வந்தது. அப்போது உத்தரப்பிரதேசத்தில் ஸௌரி ஸௌரா என்ற இடத்தில் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து ஒரு காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதையடுத்து நாடே அதிர்ச்சியில் உறையும் விதமாக, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார் மகாத்மா காந்தி. அஹிம்சை முறையில் போராட்டம் இருக்க வேண்டும் என்பதை மீறி சிலர் வன்முறையில் இறங்கியதால், தார்மிக ரீதியாக, தனது தலைமையிலான போராட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார் மகாத்மா. அதுவே அவரது அஹிம்சை கொள்கை ஆங்கிலேயரிடமும் மரியாதை பெறக் காரணமானது.

இந்நிகழ்வு நடந்து இப்போது 90 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மகாத்மா காந்தி தலைமை வகித்த அந்த காங்கிரஸ் கட்சியில் இப்போது என்ன நடக்கிறது? வெற்றிகரமாக நடந்துவந்த ஒத்துழையாமை இயக்கத்தையே, சிலரது தவறான நடத்தைக்காக நிறுத்திய மகாத்மா காந்தியின் தார்மிக நெறியுணர்வு கொண்ட அந்த காங்கிரஸ் கட்சியுடன் – சோனியா தலைமையிலான ஊழல் காங்கிரஸ் கட்சியை ஒப்பிடுவதே பாவம். ஆனாலும், பழைய நினைவுகளை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
தற்போதைய மத்திய அரசு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. இந்த அரசில் உள்ள 15 அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார்கள், ஊழல் எதிர்ப்பு இயக்க போராளிகளான ஹசாரே குழுவினர். பிரதமர் மீதே இக்குழு குற்றம் சாட்டி இருக்கிறது. ஆனால், நமது பிரதமர் எந்த கவலையும் இல்லாமல் ஆள்கிறார். கூட்டணிக் கட்சியான திமுகவை (முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை) ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்க வைத்துவிட்டு தப்பிய புண்ணியவானான மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது தான் ஹசாரே குழுவினர் அதிகமான குற்றச்சாட்டுகளைக் கூறி இருக்கின்றனர். அவரோ, ஹசாரே தான் ஊழல் பேர்வழி என்று கூறி டபாய்க்கிறார்.

இந்நிலையில் தான் அண்மையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளை முக்கியமான ஒரு வழக்கில் மிக முக்கியமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. நாட்டின் மிக முக்கியமான அரசியல்வாதியான ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது மதுரை நீதிமன்றம். இதன்மூலமாக, ப.சிதம்பரத்தின் தார்மிக அடிப்படை குலைந்துள்ளது. ஆனாலும், அவர் தனது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை ஒரு எறும்புக்கடி போல புறம் தள்ளி இருக்கிறார். வார்டு கவுன்சிலராகக் கூட வெல்லாத தனது மகனைக் கொண்டு தனது ‘பின்களப்’ பணிகளை நிறைவேற்றிவரும் ப.சிதம்பரத்திடம் தார்மிக நெறிமுறைகளை எதிர்பார்த்தால் அது தான் நமது அறிவீனம்.
2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் ப.சிதம்பரம். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதலே ராஜ கண்ணப்பன் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இடையே நிறுத்தப்பட்டது. பிறகு எண்ணப் பட்டபோதும் ராஜ கண்ணப்பனே முன்னிலை வகித்தார். ஆனால், வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் முடிவு அறிவிக்கப்படாமல் தாமதிக்கப்பட்டது. அப்போதே, ப.சிதம்பரத்தை வெல்லச் செய்ய சதி நடப்பதாக பேச்சு எழுந்தது. அதற்கேற்ப, அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அதிமுகவினர் அப்போதே போராடினர். ஆனால், மாநிலத்தில் இருந்த திமுக ஆட்சியின் ஆசீர்வாதத்துடன், ப.சிதம்பரம் வென்றதாகவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து, தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். ‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதால், ப.சிதம்பரத்தின் வெற்றியை செல்லாது’ என்று அறிவிக்கக் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வரவே மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்நிலையில், கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனது மனுவில், ‘ராஜ கண்ணப்பன் அளித்துள்ள புகார்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. என்னை நீதிமன்ற கூண்டில் ஏற்றி விசாரிக்கக் கூடாது. இந்த தேர்தல் தொடர்பான வழக்கில் நான் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும்’ என்று ப.சிதமபரம் கோரி இருந்தார்.
ஆனால், மொத்தமுள்ள 29 குற்றச்சாட்டுகளில் இரண்டை மட்டுமே நீக்கிய நீதிபதி, ”ராஜ கண்ணப்பன் மனுவில் 4 மற்றும் 5-வது பாராவில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் மட்டும் நீக்கப்படுகின்றன. (ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்ததால், வங்கி அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளாக இருந்ததால், விசுவாசமாக இருந்ததாக குற்றச்சாட்டு, மகன் கார்த்தி சிதம்பரம் மீதான நிதி உதவி குற்றச்சாட்டு) மற்ற புகார்களை பொருத்தவரை இந்த முறைகேடுகள்,சட்ட மீறல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் இப்போதுள்ள சூழ்நிலையில் நீக்க வேண்டிய அவசியமில்லை. அது சம்பந்தமான மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மற்ற குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படும்” என்று தீர்ப்பளித்தார்.

கேள்விக்குறியாகும் இந்திய எதிர்காலம்!:

 இன்றைய இந்தியாவின் ஆட்சியாளர்களும் சரி, அடுத்த கட்டமாக ஆட்சியைப் பிடிக்க ஆயத்தமாகும் இதர, பல்வேறு அரசியல்வாதிகளானாலும் சரி, எவருக்குமே இந்திய எதிர்காலத்தின் வளர்ச்சி பற்றியும், தங்களுக்கு வாய்ப்பளிக்கும் மக்களின் வாழ்வாதரங்களின் முன்னேற்றம் பற்றியும், துளியும் அக்கறை இல்லை. அவர்களின் நோக்கமெல்லாம், தேர்தலில் ஜெயிக்க வேண்டும்; பதவியைப் பிடிக்க வேண்டும்; கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்பதோடு, இந்நாடு எக்கேடு கெட்டுப் போனால், எங்களுக்கென்ன என்ற நிலைப்பாடு தான்.

மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்கள் நலன், தங்கள் மாநிலங்களின் வளர்ச்சி குறித்த விவாதங்கள் நடத்தி, சில பயனுள்ள திட்டங்களை உருவாக்கவே, பார்லிமென்ட் உருவாக்கப்பட்டது. ஆனால், இன்றைய பார்லிமென்டில் நடப்பதெல்லாம், ஒருவருக்கொருவர் தங்களின் ஊழலுக்குள் உள்ள ஒற்றுமை, வேற்றுமை, ஏற்றத் தாழ்வுகள் குறித்து, பகுப்பாய்வு செய்யும் யுத்தத்தில் இறங்கி, கூட்டத் தொடர்கள் முழுவதையுமே வீணடிக்கின்றனர்.இன்றைய ஆளும் வர்க்கத்தினரின், இந்த நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்ட, எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்ச்சி, சுயநலம், நம்பிக்கை மோசடி போன்ற தங்களின் தவறான அணுகுமுறைகளால், மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கின்றனர்.அதோடு, துடிப்புமிக்க இளைஞர்கள் கையில், கட்சி மற்றும் ஆட்சி அதிகாரங்களை கொடுக்க, தற்போதைய முதிர்ந்த தலைவர்கள் எவருமே முன்வருவதில்லை. பல சர்ச்சைகளில் சிக்கிய, 86 வயது என்.டி.திவாரி கூட, "இன்னும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவேன்; மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்' என்று, இந்த தள்ளாத வயதிலும் பதவிக்கு வரத் துடிக்கிறார்.அதே நேரத்தில், இன்றைய இளைஞர்களுமே, அவ்வளவு நம்பகத்தன்மை உடையவர்களாகத் தெரியவில்லை.
இந்தியாவின் எதிர்காலம், இளைஞர்கள் கையில்; எதிர்கால இந்தியாவின் தூண்கள் அவர்கள் என்றெல்லாம் முழக்கமிட்ட காலம், மலையேறி விட்டது. இந்த நாட்டில் நடக்கும் முக்கால்வாசி கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்போர் எல்லாருமே, "இந்த நாட்டின் எதிர்காலத் தூண்கள்' என, வர்ணிக்கப்பட்டவர் தான்.மாணவப் பருவத்தில் ஆசிரியரை கொலை செய்கின்றனர்; வளர் பருவத்திலே, வெட்ட வெளியில் வைத்து, காதலியை கொலை செய்கின்றனர். இவர்கள் அத்தனை பேருமே, படிக்காத, கிராமத்து அறிவிலிகள் அல்ல. நன்கு படித்து, பட்டம் பெற்ற, கல்லூரி பேராசிரியர் வரை, தரம் உயர்ந்தவர்கள் தான். இப்படிப்பட்ட இளைஞர்கள், எதிர்கால இந்தியாவிற்கு எப்படி தூணாக இருப்பர் என்பது தான், இன்றைய கேள்விக்குறி.

அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில், இன்றைய இளைஞர்களை முன்னிலைப்படுத்தி, அவர்களின் எதிர்கால சிந்தனைகளில் ஒரு புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தக் கூடிய வல்லுனர்கள், இந்த நாட்டில் குறைந்துவிட்டனர். உண்மையான, தேசப்பற்று மிக்கவர்கள் காணாமல் போய்விட்டனர். ஊழலை எதிர்த்துப் போராடுபவர்கள், ஓரங்கட்டப்படுகின்றனர்.
இன்னொரு முறை காந்தி, நேரு, லால்பகதூர் சாஸ்திரி, ராஜேந்திர பிரசாத் போன்றோர், இந்நாட்டில் பிறக்கும் வாய்ப்பு இருக்குமேயானால், அன்று தான், இந்திய எதிர்காலம் பிரகாசிக்கும் வாய்ப்பு உருவாகும்.இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவை, உயர்வான சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், இடம் பெறச் செய்து, பெருமைப்பட நினைத்த அப்துல் கலாமையே, இன்றைய சுயநல அரசியல்வாதிகள் ஓரங்கட்டிவிட்டனர்.இந்தியாவை, நேருவின் குடும்பத்திற்கு பட்டயம் போட்டுக் கொடுத்து விட்டதைப் போல, இந்திரா, ராஜிவை தொடர்ந்து, இன்று சோனியாவின் பிடியில், இந்தியா சிக்கி, சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.
ஆயுத பேர ஊழல், மாட்டுத் தீவனம், பாமாயில் போன்றவைகள், பாகுபாடின்றி அனைத்துக் கட்சியின் ஆட்சியாளர்களுமே, ஊழலுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று, ஒருவருக்கொருவர் மார் தட்டிக் கொண்டு, கிட்டத்தட்ட இந்த நாட்டின் சொத்துக்கள், வளங்கள் அனைத்தையுமே சுரண்டிவிட்டனர்.அதிகபட்சமாக, "2ஜி' ல், 1.76 லட்சம் கோடியை மிஞ்சி, நிலக்கரியில், 1.86 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஊழல் செய்து, இன்று மீண்டும் காங்கிரசே முதலிடத்தை பிடித்துள்ளது.இவர்களை, பொதுநலன் விரும்பிகள் எவரும் கேள்வி கேட்கக் கூடாதாம்; தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நாட்டின் பொருளாதார சீர்த்திருத்தங்கள் என்று எதைக் கொண்டு வந்தாலும், கண்ணை மூடி ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.
இனியும் இந்த நாட்டில் கொள்ளையடிக்க ஒன்றுமில்லை என்று தான், இந்த நாட்டையே அடகு வைக்கத் துணிந்துவிட்டனர். நாட்டில் நிதி பற்றாக்குறை, பொருளாதார சீர்குலைவு என்று, சில்லரை வர்த்தகம் மற்றும் காப்பீட்டுத் துறை போன்றவற்றில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்ததன் மூலம், மீண்டுமொரு கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவில் ஊடுருவ வழிவகுத்து கொடுத்துவிட்டனர். மன்மோகன் சிங்கை, "செயல்படாத பிரதமர்' என்று அன்னிய பத்திரிகைகள் அசிங்கப்படுத்துவதை கூட, அவர் சோனியாவின் கடிவாளத்தில் சிக்குண்ட குதிரையாக இருப்பதால் தான்.இன்றைய சராசரி மக்களின், ஒரு நாள் உணவு செலவு, 35 ரூபாய் என்று நிர்ணயிக்கும் திட்டக்குழு, அதன் அலுவலக கழிப்பறையை நவீனப்படுத்த, 35 லட்ச ரூபாயை, ஏன் செலவழிக்க வேண்டும்? சாதாரணமாக ஒரு சடங்காக நடக்கும் நிகழ்வான, ராணுவ அணிவகுப்பு மரியாதையை, ஜனாதிபதி ஏற்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, 12 லட்ச ரூபாய்க்கு, மினரல் வாட்டர் வாங்கி இருக்கின்றனர்.
இவர்களின் ஆட்சி லட்சணத்தின், மூன்று ஆண்டு நிறைவு விழா, ஒரு கேடு என்று, அதற்கும் அரசுப் பணம், 29 லட்ச ரூபாயை வீணடித்திருக்கின்றனர். இப்படியாக, இவர்களின் தான்தோன்றித் தனமான நிர்வாகத்தால், அரசுக்கு ஏற்பட்டுள்ள, நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி, மறுபடியும் டீசல் விலை உயர்வு, காஸ் கட்டுப்பாடு என, பொதுமக்களைப் பாதிக்கக் கூடிய வகையில், ஒரு மோசமான பொருளாதார சீர்த்திருத்த கொள்கையின் மூலம், இந்த நாட்டின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்கிக் கொண்டிருக்கின்றனர்.ஆக, மீண்டும் ஒரு அடிமை இந்தியாவை, நினைத்துக் கூட எங்களால் பார்க்க முடியாது; இனியொரு விதி செய்வோம்; வளமான இந்தியாவை உருவாக்கும் வரை ஓய மாட்டோம் என்று, ஒவ்வொரு இந்தியக் குடிமக்களின் மனதிலும், ஒரு புரட்சிகரமான மாறுதல் உருவாகி, அடுத்து வரும் தேர்தலிலாவது, ஊழலற்ற, சுயநலமற்ற, தேசப்பற்றுடன் கூடிய, சிறிதளவேனும் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் முன்னேற்றங்களில், அக்கறை உள்ளவர்களையே தேர்ந்தெடுத்து, நாட்டை சூறையாட நினைக்கும் நயவஞ்சகர்களை விரட்டி அடிப்போம்.

ஊழல் ஒழிப்பு....என்னசெய்யவேண்டும்?


மத்திய புலனாய்வுத்துறை மற்றும் மாநில ஊழல் தடுப்பு பிரிவுகளின் 19வது மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் ஊழல் தடுப்பு குறித்து பேசியுள்ளார்.
அதன் முக்கியமான அம்சங்கள்;
  • ஊழல் தடுப்பு சட்டத்தின் ஓட்டைகள் அடைக்கப்படும் வகையில் திருத்தப்படும்.
  • ஊழல் கார்பரேட் நிறுவனங்களின் மீதும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் பாயும்.
  • ஊழலில் பணம் பெற்றவர் மட்டுமின்றி தருபவரும் தண்டனைக்குட்படுத்தப்படுவார்.
  • ஊழல் தடுப்பில் சி.பி.ஐயும், மாநில ஊழல் தடுப்பு பிரிவும் இணைந்து செயல்படலாம்.
  • நேர்மையான அரசு அலுவலர்கள் பாதுகாக்கப்படுபவர், நிர்வாகத்திறன் நிலைநாட்டப்படும்.
  • ஊழலை ஒழிக்கும் நடிவடிக்கைகளில் எதிர்மறைச் சிந்தனை, தோல்விமனப்பான்மை பலனளிக்காது. அவை நாட்டின் நன் மதிப்பை குலைக்கும்.
நமது பிரதமர் கூறியுள்ள அனைத்து கருத்துகளும் அனைவருக்கும் ஏற்புடையது தான். ஆயினும், பிரதமரின் பேச்சு பெரும் விவாதிமாகியுள்ளது காரணம் பிரதமரின் பேச்சில் சாதுர்யம் வெளிப்பட்டுள்ளதேயன்றி சத்தியத்தை நாம் அதில் தரிசிக்க முடியவில்லை... என்பதே!
  • ஆட்சியாளர்களின் அடுத்தடுத்த ஊழல்கள் நாட்டையே உலுக்கிக் கொண்டுள்ளன. ஆதர்ஸ் ஊழல், 2ஜிஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்... போன்ற ஊழல்களை தடுக்கவும், தண்டிக்கவும் கூடிய அதிகாரத்திலிருக்கும் பிரதமர் எல்லாவற்றையும் ஒரு பார்வையாளர் கோணத்திலிருந்து அணுகுகிறார்.

"1990களுக்குப் பிறகு ஏற்பட்ட பிரம்மாண்டமான பொருளாதார வளர்ச்சிக்கேற்ப ஊழலும் வளர்ந்துள்ளது. அதற்கேற்ப ஊழல் தடுப்பு அமைப்புகளும் சவால்களை சந்திக்கின்றன" என்பதை தன் பேச்சில் ஒத்துக்கொண்டுள்ள பிரதமர் ஏன் ஊழல் தடுப்பு அமைப்புகளை பலப்படுத்தவில்லை...? அவற்றிக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை? என்பதற்கும் வினையாற்றவேண்டும், நமது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வெறும் 200உறுப்பினர்களைக் கொண்டு எப்படி 120கோடி மக்கள் வாழும் நாட்டில் ஊழல்களை தடுக்கமுடியும்?
மேலும் சி.பி.ஐயையும், விஜிலென்சையும் அரசியல் நிர்பந்தல்களிலிருந்து விடுவிக்க பொறுப்பு இன்றைய ஆட்சித்தலைமைக்குரியது தானே! இதை எப்போது செய்யப்போகிறார்கள்? என்பது தான் மக்கள் கேள்வி!
காந்திய சகாப்தத்தை கண்ட நமது பாரத தேசம் - இன்று 'கரப்சன்' சகாப்தத்தை சந்திக்கும் அவலத்திற்கு ஆட்சியாளர்கள் தங்களை சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ளவேண்டும்.
இங்கங்கெனாதபடிக்கு இன்று நீதித்துறை வரைக்கும் ஊழல் தன் கோர நகங்களை நீட்டத்துணிந்துள்ளதானது, சாதாரண பாமர மனிதனையும் நிலைகுலைய வைத்துள்ளது. இன்று எந்த அமைப்பை நம்பி ஊழல் புகார்களை தருவது என்பதே மக்கள் தவிப்பு!
அப்படியே ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகி விசாரணைக்கு ஏற்கப்பட்டாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள், மிகவும் செல்வாக்கானவர்கள் தண்டிக்கப்படுவதில்லை விசாரணைக்கான அதீத காலதாமதத்தால் அவை வீரியமிழந்துவிடுகின்றன.
ஊழல்வாதிகளின் சொத்து முற்றிலும் பறிமுதல் செய்யப்படும் என்பதற்கு உத்திரவாதமிருந்தால் தானே ஊழல் வாதிகளுக்கு உதறல் எடுக்கும்!
அது ஊழலைத் தடுக்கும். எனவே, வலுவான 'லோக்பால் சட்டம்' அவசியமாகிறது.
நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியது போல, 'இன்றைக்கு ஊழலை ஒழிக்க - ஊழல் என்ற புற்றுநோயை அழிக்க - அதிரடி கதிரியக்க சிகிச்சை மிகவும் அவசியமாகிறது!
ஆனால் இன்றைய தேர்தல் அரசியலும், தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு நடைமுறைபடுத்தப்படும் 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்' போன்றவையும் மக்களையும் ஊழல்மயமாக்கி வருகிறது.
இது தான் மிக மிக அபாயகரமானதாகும்! ஏனெனில் மக்கள் எவ்வாறு இருக்கிறார்களோ, அதற்கேற்பவே அவர்களின் தலைவர்களும் அமைவார்கள்!
எனவே பரவிவரும் ஊழல் சிந்தனை மற்றும் செயல்பாடுகளிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி? என்று தெளிவாகவும், திடமாகவும் முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது! இது தான் ஊழல் ஒழிப்பில் எதிர்மறைச் சிந்தனை, தோல்வி மனப்பான்மையிலிருந்து நம்மைவிடுவித்து, நாம் முன்நகர்ந்து வழிவகுக்கும்! ஊழல் ஒழிப்பு என்பது வெறும் ேப்சல்ல. அனைவரும் சேர்ந்து நடத்தவேண்டிய வேள்வி!

ஜூனியர் சூப்பர் சிங்கர் பைனலில் நடந்த மெகா மோசடி

 
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்டப்  பெற்றது விஜய் தொலைகாட்சியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் என்றால் மிகையாகாது.வயது வித்யாசம்,கிராமம் நகரம் என்ற எந்த பாராபட்சமும் இன்றி அனைவராலும் ரசிக்கப்பட்டு வெற்றியின் உச்சத்தை தொட்ட நிகழ்ச்சி அது. ஜூனியராக இருக்கட்டும்,சீனியராக இருக்கட்டும் அதில் பாட்டு பாடும் பிள்ளைகளை தம் வீட்டு பிள்ளைகளாகவே எண்ணி மகிழ்ந்து தமிழ்நாடே கொண்டாடிய நிகழ்ச்சி அது..அந்த நிகழ்ச்சி ஆக்கமும்,தரமும் அதற்கு காரணம்.

அப்பப்போ சில சர்ச்சைகள் எழுந்தாலும் அது பெரிதாக எண்ணுகிற அளவுக்கு ஆளாகாமல் அந்த நிகழ்ச்சியின் தரம் அதனை நீர்த்துப் போக செய்யும்.அந்த அளவுக்கு மக்களின் மனதை தொட்டு சிகரத்தில் வைத்து பார்க்கப்படும் நிகழ்ச்சி அது.

நான் பொதுவாக தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இல்லாதவன்.அவ்வபோது  நிகழ்ச்சி பார்க்க எண்ணினால் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்பதுண்டு.அதிலும் ஜூனியர் சூப்பர் சிங்கர் என்னோட சாய்ஸ்.சின்னக் குழந்தைகளின் மழலைக் குரலில் நான் மயங்கிப்போவதுண்டு.சின்னக் குரல்களின் சிலிர்ப்பில் இந்த உலகத்தை மறந்து வேறோர் உலகத்தில் லயிப்பதுண்டு.குழந்தைகள் குறைபாடாக பாடினால் கூட அந்த மழலைக் குரலின் மயக்கம் நம்மை விட்டு மங்குவதில்லை.

நேற்று ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பைனல் நடந்தேறுவதாக அறிவிக்கப் பட்ட பொழுதில் ஒரு செய்தி முகநூலுக்கு  வந்து சேர்ந்தது.கீழ்காணும் புகைப்படத்தையும் அது சொல்லும் செய்தியைப் பாருங்கள்.


நானும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது சற்று சந்தேகம் கொண்டேன்.ஜூனியர் என்கிறார்கள் பெரிய பிள்ளைகள் சிலவும் பாடுகின்றனவே என்று.ஒருவேளை வயதுக்கு மீறிய வளர்ச்சியாய் இருக்கலாம் என்றெண்ணி விட்டுவிட்டேன்.ஆனால் மேற்கண்ட அந்த செய்தி என்னை அதிர்ச்சியடைய செய்தது.
மேற்கண்ட பெண்ணுக்கு உண்மையில் 15 வயதா என்பதும் தெரியவில்லை,விஜய் தொலைக்காட்சி அறிவிப்பை வெளியிடும் போது 13 வயதிற்குள் உள்ள குழந்தைகள்தான் பங்குகொள்ள முடியும் என்று அறிவித்திருந்தார்களா தெரியவில்லை.
ஒருவேளை அப்படியோர் அறிவிப்பை வெளியிட்டு விட்டு எதிர்மறையாக நடந்திருப்பின் அது பெரிய தவறு.ஏமாற்று வேலை.மக்களின் நம்பகத்தன்மைக்கு விஜய்  வைக்கிற வேட்டு.

பெற்றோர்களும் குற்றத்தை சேர்ந்து செய்கிறார்கள் ,எல்லோருக்கும் தாம் வெல்ல வேண்டும் தம் பிள்ளைகள் வெல்ல வேண்டும் என்கிற ஆசை இருக்கும்தான்.அதற்காக பத்தாவது படிக்கிற பிள்ளையை கொண்டு போய் முதல் மதிப்பெண் வேண்டுமென்பதற்காக முதல் வகுப்பில் தேர்வெழுத வைக்கலாமா? அந்த நிலைதான் மேற்கண்ட செய்தியும்.பெரிய குழந்தையை கொண்டு வந்து ஜூனியர் நிகழ்ச்சியில் சேர்த்து நேற்று  நடந்த பைனலில் இரண்டாம் இடம் என்கிற வெற்றிக்கனியையும் பறிக்க வைத்து விட்டார்கள்..நல்லவேளை முதலிடம் இல்லை. இதனால் தோற்றுப்பான உண்மையான ஜூனியர் குழந்தைகளின் மனநிலை என்னாகும்.உண்மையில் வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டியவர்கள் அந்த வயதுக்கு உட்பட்டவர்கள் எவ்வளவு ஏமாற்றமாக உணர்ந்திருப்பார்கள்.எண்ணிப்பாருங்கள் வெகுஜன ஊடக வியாபாரிகளே..ஏமாற்று வேலை செய்யும் பெற்றோர்களே..

முதலிடம் பெற்று வெற்றியை சுவைத்த உண்மை ஜூனியர் ஆஜீத்............

மேலும் இரண்டு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஜெ பக்கம் ஓட்டம்.. டென்ஷனில் விஜயகாந்த்!


மேலும் இரண்டு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஜெ பக்கம் ஓட்டம்.. டென்ஷனில் விஜயகாந்த்! 
 நேற்று இரு தேமுதிக எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு ஓட்டம் பிடித்தனர்.
நடிகரும் பேராவூரணி தொகுதி எம்எல்ஏவுமான அருண்பாண்டியன், தயாரிப்பாளரும் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவுமான மைக்கேல் ராயப்பன் ஆகியோர் இன்று முதல்வரைச் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அம்மா ஆட்சி சிறப்பாக நடப்பதாக ‘சான்றிதழும்’ தந்துள்ளனர்!
இது தேமுதிக தலைவர் விஜயகாந்தை மேலும் டென்ஷனாக்கியுள்ளது.
இதுவரை ஜெயலலிதாவைச் சந்தித்த 4 எம்எல்ஏக்களுமே விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று அறியப்பட்டவர்கள். இவர்களிடம் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் விஜயகாந்த்.
அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் இருவருமே சினிமா துறையைச் சேர்ந்தவர்கள். கட்சியில் கிளம்பிய எதிர்ப்பபைக் கூட பொருட்படுத்தாமல் இவர்களுக்கு எம்எல்ஏ சீட் கொடுத்தார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் 8 எம்எல்ஏக்களுக்கும், பின்னர் 14 எம்எல்ஏக்களுக்கு அதிமுக குறிவைத்ததாகக் கூறப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் ஓடுகிற வேகத்தைப் பார்த்தால் 29 எம்எல்ஏக்களையுமே இழுத்துவிடுவார்கள் போலிருக்கிறது என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்!

Friday, October 26, 2012

விஜய் ரீவி சுப்பர் சிங்கர் யூனியர் 3 வெற்றியாளர் ஆஜித்

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் யூனியர் 3 பைனல் இன்று நிறைவுக்கு வந்துள்ளது.   ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான யூனியர் பங்குகொண்டு  ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கடந்த வாரமாக மிகவும் சூப்பராக பாடிய 5 யூனியர்களோடு இன்று கடைசி சுற்று முடிந்துள்ளது.

எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு 5 இளஞ்சிட்டுக்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தம் திறமைகளை வெளிப்படுத்தி நன்றாகவே பாடினார்கள்.
இந்நிலையில் 10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற பையன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டு இச்சூப்பர் சிங்கர் யூனியர் 3 இல் வெற்றி பெற்றுள்ளார்.
10 வயதே நிரம்பிய ஆஜித் என்ற இளஞ்சிட்டு வசீகரத் தோற்றத்தோடு மெருகூட்டும்வகையில் அழகாக ஆடை அணிகலங்களோடு, தன் வயதுக்கு மீறி கடினமான பாடல்களையும் பாடி நடுவர்களையும் பார்வையாளர்களையும் தன்பக்கம் ஈர்த்து இன்று வெற்றிவாகை சூட்டிய அப்பையனுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு,
இரண்டாம் இடத்தைப் பெற்ற அமெரிக்காவில் இருந்து சென்று பங்குபற்றி இத்தனை மாதகாலமாகவும் தன் திறமையை வெளிப்படுத்திய பிரகதிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சூப்பர் சிங்கர்  யூனியர்1இலும் 2இலும் பங்குபற்றி  திறமை போதாமையால் விலக்கப்பட்ட யாழினி சூப்பர் சிங்கர் யூனியர் 3இலும் பங்குகொண்டு இம்முறை 3ம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

கேப்டன் புயலில் சிக்கய படகு ஆனார்!

 மதுரை மத்திய தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜன், திட்டக்குடி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் க.தமிழழகன் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று முதல்வரைச் சந்தித்தனர்.
முதல்வருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர்கள், தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறி பாராட்டினர். மேலும், தங்கள் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு தமிழக அரசின் உதவியையும் ஆதரவையும் கோரினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து அரசையும் ஆட்சியையும் விமர்சித்து பல இடங்களில் பேசி வருகிறார். இந்நிலையில், அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் இருவர் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருப்பது அவர்கள் இருவரும் அதிமுகவில் இணைவார்கள் என்று நம்பப்படுகிறது.

சிந்திக்கவும்: ஆட்சியில் இருப்பவர்கள் சூழ்ச்சி செய்து பெரும் கட்சிகளையே உடைத்து விடுகிறார்கள். இந்நிலையில் அரசியல் அரிசுவடி நடிகர் விஜயகாந்த் நிலைமை புயலில் சிக்கிய படகு போலத்தான்.

இவர் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க போகிறேன் என்று ஒரு மாயை கதைகளை சொல்லி, புள்ளிவிபரங்கள் பேசி மக்களை ஏமாற்றி கட்சி தொடங்கினார். கடைசியில் வெத்து வேட்டு விஜயகாந்து என்று கிடைத்த எதிர்கட்சி தலைவர் பதவியை பயன்படுத்த தெரியாமல் இப்பொழுது தவிக்கிறார்.

சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலே கண்டுபிடித்தல்.


இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.
ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து,
செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்
காரணங்கள்:
•சிறுநீரகங்களை பாதிக்கும் நோய்கள்
•வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல்
•சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பினால உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அளவில் அதிகரிப்பதினால் அசோடிமியா மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.
அறிகுறிகள்:
ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகள்:
•உடல எடை இழப்பு
•குமுட்டல் வாந்தி
•பொதுவான உடல்நலக்குறைவு
•சோர்வு
•தலைவலி
•அடிக்கடி ஏற்படும் விக்கல்
•உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)
பின் நிலைகளில் ஏற்படும் அறிகுறிகள்:
•வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
•இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
•சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
•வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
•மந்தமான துாங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை , நினைவற்ற நிலை
•தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
•தோலில் வெள்ளைநிற படிகங்கள்
•கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல் நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன
•அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
•அதிக தாகம் ஏற்படுதல்
•தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
•நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
•சுவாசம் நாற்றம் எடுத்தல்
•உயர் இரத்த அழுத்தம்
•பசியின்மை
மருத்துவரை அணுக:
தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் குமட்டல் அல்லது வாந்தி இருப்பின் மருத்துவரை அணுகலாம். அன்றாடம் வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு குறைந்தாலோ அல்லது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிகள் தோன்றினாலே லாம்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவினை மற்றும் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதின் மூலமும் புகை பிடிக்கும் வழக்கத்திலிருந்து விலகியிருப்பதன் மூலமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதினை தடுக்கலாம்.

சிறுநீரகம் என்றால் பிறப்புறுப்பு என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. சிறுநீரகம் என்பது முதுகுத் தண்டின் இருபுறமும் விலா எலும்புகளின் கீழ்ப்புறத்தில் பாதி மூடப்பட்டுள்ள அவரை விதை வடிவுள்ள இரு உறுப்புகள் ஆகும். நாம் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் ஒன்று சிறுநீரகம். மிகச்சிறிய உறுப்பாயிருப்பினும் சிறுநீரகங்களின் பணி வியக்கத்தக்கது. இரத்தத்திலிருந்து தேவையற்ற பொருள்களைப் பிரித்தெடுத்து சிறுநீராக வெளியேற்றும் இந்த இரண்டு சிறுநீரகங்களும் நமது உடலின் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் அங்கமாக மட்டுமே செயல்படுவதில்லை.

இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்யிறமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம். சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் மூலமாக சிறுநீர்ப் பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது விரிந்து கொடுக்கக்கூடிய தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகின்றன.

சிறுநீர் இறக்கு குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது. நரம்பு மண்டலம் சிறுநீர்ப் பையில் சில சிறப்பான பணிகளை செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் மூலம் துளித்துளியாக சிறுநீர்ப் பைக்குக் கொண்டு வந்து சேர்க்க உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்து சிறுநீரைத் தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் மூளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது. திடீரென்று இரவில் மட்டும் அதிகச் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறியாகும்.

இதுதவிர சிறுநீர் பாதையில் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதனாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினாலும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு சுக்கிலன் பெருத்துப் போவதாலும் இந்நிலை ஏற்படலாம். சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலையாகும். சிறுநீரகம் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி.கி. வரை இருக்கலாம். சிறுநீர்ப் பாதையில் கற்கள் தானாகவே தோன்றும். இவை தோன்றுவது எதனால் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும். கற்கள் சிறுநீர்க் குழாயில் இருந்தால் வலிமேலிருந்து கிழாக விட்டுவிட்டுத் தொடரும். பொதுவாக இதுபோன்ற சிறுநீரகக் கல்லடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்க மிக அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர்ப் பாதையில் கற்களுக்கான கரு தோன்றும்போதே அதை அடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது நல்லது. பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம். கற்களின் இராசயன குணத்திற்கு தக்கவாறு உணவு உட்கொள்வதை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணமாக கந்தகச் சத்து அதிகம் உள்ள கற்களினால் இறைச்சி, மின், முட்டை ஆகியவை அதிகம் உண்ணக்கூடாது. மனித உடலின் ஆதார சுருதியான சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக இருக்கிறது. இதனை உணர்ந்தே சித்தர்கள் சிறுநீரகச் செயல்திறனை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் யோக மார்க்கங்களையும் சித்த மூலிகை ரகசியங்களையும் கண்டறிந்து உலகிற்குப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.

 தற்போது அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப் படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது.
கிட்னி கல் என்றால் என்ன?
சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.
கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்!
கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்களை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidis m), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections) , , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.

யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.

நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது
அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.

சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.
கிட்னி கற்கள் யாருக்கு வரும்:
பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு
ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கிட்னி கல் - அறிகுறிகள்:
சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.

சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.

நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.

அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.
உணவு முறைகள்:
1. அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது.

2. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.

3. அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது.

4. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது.

5. முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல்

6. குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல்.

7. குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல்.

8. குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.

இப்படிப்பட்ட உணவு முறைகளை கடைபிடித்தவர்களிடையே அதிக ரத்த அழுத்தம் (Hypertension) , நீரிழிவு (Diabetes) , சிறுநீரக கற்கள் (Kidney stone) உருவாவது போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு குறைவான அளவே உள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

நாம் இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள வேண்டியது :--

மேற்கொண்ட உணவுப் பழக்கங்களை பின்பற்றினால், சிறுநீரக கல் உருவாகும் நிலை தடுக்கப்படும் என்பதே.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க வந்த பின் திரும்ப வராமல் தடுக்க அறுவை சிகிச்சைக்குப் பின் திரும்பவும் கல் உருவாகாமல் தடுக்க மேற்கண்ட உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதாவது, *நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும்.

*முக்கியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.

*பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

*மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட் கொள்வதைத்
தவிர்க்க வேண்டும்.

*பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

*திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.

* புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

* சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும்.

சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் த‌‌ற்போது இளைஞ‌ர், இளை‌ஞிகளு‌க்கு‌ம் கூட தோ‌ன்று‌கிறது. இத‌ற்கு பல காரண‌ம் இரு‌ந்தாலு‌ம், இதனை ச‌ரிபடு‌த்த வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம்.

கடுமையான வ‌லி, ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌ப்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் போ‌ன்றவ‌ற்றை இது ஏ‌ற்படு‌த்த‌க் கூடு‌ம்.

இத‌ற்கு, ‌சில எ‌ளிய வை‌த்‌திய முறைக‌ள் உ‌ள்ளன. ஆயு‌‌ர்வேத‌த்‌தி‌ல் இவை கூற‌ப்ப‌ட்டு‌ள்ளன. அதாவது, வார‌த்‌தி‌ல் 3 நா‌ட்க‌ள் இடைவெ‌ளி‌யி‌ல் 2 முறை அதாவது செ‌வ்வா‌ய், வெ‌ள்‌ளி என வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். இ‌ந்த ‌கிழமைக‌ளி‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய், ‌சி‌றிது கடுகெ‌ண்ணெ‌ய் ஆ‌கியவ‌ற்றை கல‌ந்து லேசாக(வெதுவெது‌ப்பாக) சூடா‌க்‌கி,
அதனை வ‌யிறு, முதுகு, தலை ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் தே‌ய்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பிறகு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் தலை‌க்கு கு‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

அ‌ன்றைய ‌தின‌ம் சா‌ப்‌பிடு‌‌ம் உண‌வி‌ல், சூடான ‌மிளகு ரச‌ம், கருவே‌ப்‌பிலை‌த் துவைய‌ல், தே‌ங்கா‌ய், ‌சீரக‌ம் சே‌ர்‌த்து அரை‌த்த பூச‌ணி‌க்கா‌ய் கூ‌ட்டு, மோ‌ர், கேர‌ட் போ‌ன்றவ‌ற்றை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். எ‌ப்போது‌ம் வெதுவெது‌ப்பான ‌நீரை‌ப் பருகுத‌‌ல் ந‌ல்லது.

மேலு‌ம், ‌காலை வேளை‌யி‌ல் வெறு‌‌ம் வ‌யி‌ற்றுட‌ன் உ‌ள்ள போது ‌சி‌றிது நேர‌ம் ‌ஸ்‌கி‌ப்‌பி‌ங் என‌ப்படு‌ம் க‌யிறுதா‌ண்டு‌ம் உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்த‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது.

‌வீ‌ட்டு வேலைகளையு‌ம் சு‌றுசுறு‌ப்புட‌ன் செ‌ய்து வருவது உடலு‌க்கு ந‌ல்ல உட‌ற்ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.

இவ‌ற்றை செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌சிறு‌‌நீரக‌க் க‌ற்க‌ள் கரை‌ந்து போகு‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ள் கரைய ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ண்டாலு‌ம், அதனுட‌ன் மே‌ற்கூ‌றிய பழ‌க்க வழ‌க்க‌ங்களையு‌ம் கடை‌பிடி‌ப்பது ந‌ல்லது.


வெயில் காலம் ஆரம்பித்து விட்டடால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க தினந்தோறும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுங்கள். உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்.

Thursday, October 25, 2012

தியாக திருநாள் வாழ்த்துக்கள்


அணைத்து சகோதர சகோதரிகளுக்கும்  புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.


நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை என்ன வென்று சொல்வது ,அவர்களின் தியாகம் என்றும் நம் உள்ளத்தை விட்டு மறையாது ! மறக்கவும் முடியாது ! இந்நாளில், நாம் அனைவரும் சந்தோசமாக ,ஒருவர்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டு ,ஒற்றுமையாக இருக்க அல்லாஹ் நமக்கு நற்கிருபை செய்வானாக !ஆமீன்…


இந்த நன்நாளில் அல்லாஹ் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் அவனது கிருபையையும், அருளையும் வழங்க எங்கள் இணையம் சார்பில் துவா செய்கிறோம்.


ஹஜ் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் உலகெங்கும் வாழும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்…


ஈத்  முபாரக்!.  தியாக திருநாள் வாழ்த்துக்கள்!!.


 

Wednesday, October 24, 2012

இளையராஜாவும் புதிய சட்டாம்பிள்ளைகளும்

இசைஞானி இளையராஜாவைத் தமிழினத் துரோகியாகக் காட்டும் முயற்சியில் இன்று சிலர் ஈடுபட்டுள்ளனர். வரும் நவம்பர் 3ஆம் நாள், கனடாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நவம்பர் 27, மாவீரர் நாள் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. மாவீரர் நாள் நினைவுகூரப்படும் கார்த்திகை மாதத்திலும், தமிழீழ மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட வைகாசி (மே) மாதத்திலும் உலகெங்கும் உள்ள தமிழர் எவரும் எவ்விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்று புதிதாய் ஒரு விதியை தமிழ்நாட்டில் இன்று சிலர் அறிவித்துள்ளனர். அதனையொட்டிக் கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் ஒரு சாரார், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
1982 நவம்பர் 27 அன்று, வீரச்சாவடைந்த போராளி சங்கரின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அந்நாளை மாவீரர் நாளாக நினைவுகூரும்படி, விடுதலைப்புலிகள் அமைப்பு 1989ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டது. அப்போதிருந்து ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் அந்நாளில் மாவீரர் நாள் நினைவு எழுச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அந்நிகழ்ச்சி நடைபெறும் மாதம் முழுவதும் எவ்விதமான கொண்டாட்டங்களிலும் யாரும் ஈடுபடக் கூடாது என்று, விடுதலைப் புலிகள் அமைப்போ, அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களோ ஒரு நாளும் எந்த அறிவிப்பையும் வெளியிட்டதில்லை. சென்ற ஆண்டு வரையில் அப்படி எந்த ஒரு ‘கொண்டாட்டத் தடையும்’ நடைமுறையில் இல்லை. அப்படியானால், இப்போது இப்படி ஒரு புதிய சட்டத்தை உருவாக்கும் சட்டாம்பிள்ளைகள் யார், எப்போதிருந்து இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்பன போன்ற வினாக்கள் நம்முள் எழுகின்றன. தலைவர் பிரபாகரனே கூறாத விதிகளைப் புதிதாய்க் கூறி, அவரையும் மிஞ்சிய தலைவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயல்கின்றவர்கள் யார் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
மாவீரர் நாள் என்பது அழுவதற்காக அன்று, மீண்டும் மீண்டும் எழுவதற்காக என்பதைப் புலிகளும், ஈழ மக்களும் நன்கறிவார்கள். ‘மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ என்று மொழியின் பெயரிலும், அடுத்ததாக, வழிகாட்டும் தலைவரின் பெயரிலும், அதற்கடுத்து, விழிமூடித் துயில்கின்ற மாவீரர்கள் பெயரிலும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, மீண்டும் தங்களின் இன விடுதலைக்காகத் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் நாள்தான் மாவீரர் நாள். ஆண்டு முழுவதும் போராளிகளையும், பொதுமக்களையும் அந்த ஈழ மண் இழந்திருந்தாலும், இயக்கத்தின் முதல் பலி நடைபெற்ற நாளை ஓர் அடையாளமாக மட்டுமே புலிகள் இயக்கம் அறிவித்தது. மாவீரர்கள் இறந்த நாளில் எல்லாம் கொண்டாட்டங்கள் கூடாது என்றால், ஆண்டின் எந்த ஒரு நாளிலும் நாம் எந்த மகிழ்வையும் வெளிக்காட்ட இயலாது. அங்கே மாவீரர்கள் சாகாத நாளுமில்லை, மாவீரர்கள் இல்லாத வீடுமில்லை. ஆதலால், அடையாளமாகத்தான் சிலவற்றை நாம் செய்ய முடியும். அதுதான் நடைமுறை இயல்பு. அதனைப் புலிகள் அமைப்பும், தலைமையும் தெளிவாக அறிந்திருந்தனர்.
ஆனால், இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமலோ, புறந்தள்ளியோ இரண்டு மாதங்களுக்கு எந்தக் கொண்டாட்டமும் கூடாது என்று சிலர் இன்று கூறுகின்றனர். மாவீரர் நாளுக்கு முந்தைய நாள், தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள். ஒவ்வோர் ஆண்டும், அந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடி விட்டுத்தான், மறுநாளை மாவீரர் நாளாக நாம் கொள்கிறோம். ‘ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்தபின்னர், வாராது போல் வந்த’ அந்த மாமணியின் பிறந்தநாளையும் இனிமேல் கொண்டாடக்கூடாது என்று கூறிவிடுவார்களோ என்னவோ தெரியவில்லை. இரண்டு மாதங்கள் எந்தத் தமிழர் வீட்டிலும், திருமண நிகழ்வுகளோ, மகிழ்வான விழாக்களோ நடைபெறக் கூடாது என்று சட்டம் கொண்டு வருவார்களா என்றும் தெரியவில்லை.
illaiyaraja_300இவ்வளவு வேண்டாம்… இளையராஜாவின் இசை நிகழ்ச்சி முடிந்து, பத்து நாள்களுக்குப் பிறகு வரவிருக்கும் தீபாவளியைத் தமிழ்நாட்டுத் தமிழர்களோ, தமிழ் ஈழத் தமிழர்களோ கொண்டாடக்கூடாது என்று இவர்களால் அறிவிக்க முடியுமா? பகுத்தறிவின் அடிப்படையில் இல்லாவிட்டாலும், இன உணர்வின் அடிப்படையிலாவது தீபாவளியை இந்தப் புதிய நண்பர்கள் தடுத்து நிறுத்தி விடுவார்களா? இவையெல்லாம் நடைமுறையில் நடைபெறக் கூடியதுதானா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இதில் இன்னொரு வேடிக்கையான சிக்கலும் உள்ளது. நவம்பர் மாதத்தைக் கார்த்திகை மாதம் என்றும், டிசம்பர் மாதத்தை மார்கழி மாதம் என்றும் கணக்கிடுவது புலிகள் இயக்கத்தின் மரபு. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தளவு, நவம்பர் 15ஆம் தேதி அளவில்தான் கார்த்திகை தொடங்கும். டிசம்பர் 15வரை கார்த்திகைதான். எனவே தமிழ்நாட்டுக்காரரான இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவது, மாவீரர் நாள் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் அன்று, ஐப்பசி மாதத்தில்.
இப்படி எல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, நடைமுறைக்கு ஏற்ற, லட்சியங்களை உயர்த்திப் பிடிக்கின்ற வழிமுறைகளை மேற்கொள்வதே சரியானது என்பதை நாம் உணரவேண்டும்.
1988ஆம் ஆண்டு, ‘ஈழ மக்களைக் கொல்லாதே, இந்திய ராணுவமே திரும்பி வா’ என்ற கோரிக்கையை முன்வைத்து, ‘ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு’ கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தியது. பல்வேறு துறைகளைச் சார்ந்த புகழ்பெற்ற 300 பேர் அவ்வறிக்கையில் கையொப்பமிட்டனர். நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், முரசொலி மாறன், சுரதா, வைரமுத்து, மு.மேத்தா, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஞாநி, பாலுமகேந்திரா, கலைப்புலி தாணு உள்ளிட்ட பலர் அன்று கையொப்பமிட்டனர். அந்த வரிசையில் ஒருவராய், இளையராஜாவும் கையெழுத்திட்டிருந்தார் என்பதைப் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் ஈழ ஆதரவாளர்கள் அறிவார்களா என்று தெரியவில்லை.
எப்போதும் ஈழவிடுதலை போன்ற நியாயமான கோரிக்கைகளை நோக்கி, வெவ்வேறு துறைகளிலும் உள்ள பலரையும் நாம் ஈர்க்க வேண்டும். அதுதான் அக்கோரிக்கைக்கு நாம் உண்மையாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். எல்லோரையும் அடித்துத் துரத்துவதும், துரோகிகளாகக் காட்ட முயல்வதும், நாம் முன்னெடுக்கும் கோரிக்கையின் வலிமையைக் குறைக்கும்.
தாங்கள் மட்டுமே ஈழ ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள முயலும் சிலரின் மலிவான உத்திதான் இது. ஈழ ஆதரவு என்பது எவர் ஒருவருக்கும் ‘மொத்தக் குத்தகைக்கு’ விடப்படவில்லை என்பதைப் புதிய சட்டாம்பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

Monday, October 22, 2012

என் தூக்கம் போச்சு':

தி.மு.க.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும், டி.ஆர்.பாலு எம்.பி.,க்கும் இடையிலான மோதலை, முடிவுக்குக் கொண்டு வர, பஞ்சாயத்திற்கு வருமாறு, கருணாநிதி விடுத்த அழைப்பை, டி.ஆர்.பாலு ஏற்க மறுத்து விட்டார்.கருணாநிதியின் அனுமதியின்றி, டி.ஆர்.பாலுவை விமர்சித்து, பழனி மாணிக்கம் பேட்டியளித்தாரா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரத்தில் எழுந்துள்ளது. கட்சியில் நடக்கும், மோதலின் பின்னணி புரியாமல், அப்பாவி தி.மு.க., தொண்டர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

அதிருப்தி

தஞ்சாவூர் லோக்சபா தொகுதியை குறி வைத்து, டி.ஆர்.பாலு மேற்கொண்டு வரும் பணிகளால், அத்தொகுதியின் தற்போதைய எம்.பி.,யும், அமைச்சருமான பழனி மாணிக்கம், அதிருப்தி அடைந்தார். இவ்விருவருக்கும் இடையேயான மோதல், உச்சகட்டத்தை எட்டியது. பிரச்னை களை கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லாத பழனி மாணிக்கம், பத்திரிகைகளுக்கு கொண்டு சென்றதால், தி.மு.க., தலைமை சங்கடத்துக்கு உள்ளானது.இருவருக்கும் இடையே யான, மோதலை முடிவுக்குக் கொண்டு வர, சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள, கனிமொழியின் வீட்டில், நேற்று முன்தினம், பஞ்சாயத்தை கூட்டினார் கருணாநிதி. பழனி மாணிக்கம், டி.ஆர்.பாலு ஆகிய இரு வருக்கும், கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

பஞ்சாயத்து

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, முன்னணி தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:டி.ஆர்.பாலு மீது தவறு இருந்தால், அதை கட்சித் தலைமையிடம் தான் பழனி மாணிக்கம் தெரிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து, பத்திரிகைகளில் பேட்டியளித்தது எப்படி என்ற கேள்வி, கட்சி நிர்வாகிகளால் எழுப்பப்பட்டுள்ளது.பழனி மாணிக்கம் - பாலுவுக்கு இடையேயான மோதலில், டி.ஆர். பாலுவுக்கு ஆதரவாக ஸ்டாலின் களமிறங்கி உள்ளார்.

ஸ்டாலினுக்கு "செக்'

"சி.ஐ.டி., காலனியில் நடக்கும் பஞ்சாயத்துக்கு போக வேண்டாம்' என, ஸ்டாலின் தரப்பில் விடுக்கப்பட்ட உத்தரவால் தான், பாலு செல்லவில்லை.இளைஞரணி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், ஸ்டாலின் கை ஓங்கியிருப்பதை, தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விரும்பவில்லை. குறிப்பாக, தங்களது வாரிசுகளுக்கு இளைஞரணியில் பதவி கிடைக்காததால், அதிருப்தியடைந்த இவர்கள், கருணாநிதியிடம் புகார் கூறியுள்ளனர்.அதோடு, அழகிரி, கனிமொழி தரப்பும், இவ்விவகாரத்தில் தங்களின் வருத்தத்தை கொட்டிஉள்ளனர். இதனால், ஸ்டாலினுக்கு, "செக்' வைக்கும் வகையில், கட்சித் தலைவரே, பழனி மாணிக்கம் மூலமாக, இந்த நாடகத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.பழனி மாணிக்கத்தை, டி.ஆர். பாலுவுக்கு எதிராக பேட்டி கொடுக்க வைத்து, அதன் மூலம் பஞ்சாயத்துக்கு இருவரையும் அழைத்து, கட்சியில் தன் செல்வாக்கை நிலை நிறுத்த திட்டமிட்டு, இந்த விவகாரத்தை தலைவர் கிளப்பியுள்ளார் என்ற கருத்து, கட்சி வட்டாரத் தில் உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தி.மு.க.,வில் பல முறை கோஷ்டி தகராறுகள் நடந்தாலும், வெளிப்படையாக பேட்டி கொடுப்பதை, பெரும்பாலும் தி.மு.க., பிரமுகர்கள் தவிர்த்து வந்துள்ளனர்.

பின்னணி:

கட்சி தலைமையிடம் முறையிடாமல், வெளிப்படையாக கருத்து தெரிவித்தால், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.எம்.ஜி.ஆர்., வைகோ போன்ற பலமான தலைவர்களை கூட, இந்த காரணங்களுக்காக, கட்சித் தலைமை வெளியேற்றிஉள்ளது. அப்படியிருக்க, தற்போது, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் களிடையே எழுந்து உள்ள மோதலின் பின்னணி புரியாமல், தி.மு.க., தொண்டர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.


என் தூக்கம் போச்சு':


தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., முன்னோடிகள், ஒருவருக்கொருவர் குழு சேர்த்துக் கொண்டு, தஞ்சை மாவட்டத்திலே மோதிக் கொள்கின்றனர் என்ற செய்தி, என்னை சாப்பிட விடாமலும், இரவு முழுவதும் தூங்க விடாமலும் செய்து விடுகிறது.பழனி மாணிக்கம் அளித்த பேட்டி பற்றி, டி.கே.எஸ்.இளங்கோவனும், செல்வமும் என்னிடம் வந்து கூறியவுடன், "இன்றிரவு என் தூக்கம் போச்சு' என்று கூறினேன். அது போலவே, இரவு முழுவதும் நான் உறங்கவில்லை.சில கட்சிகளின் தலைமையைப் போல, எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், கட்சிக்காக உழைத்தவர்களாக இருந்தாலும், மூத்தவர்களாக இருந்தாலும், கண நேரத்தில், "கட்டம்' கட்டி விடுகின்றனர்.என்னால், அப்படி கடினமாக இருக்க முடிவதில்லை. அதையே காரணமாகக் கொண்டு, தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் எனக் கருதினால், பின்னர், நான் என்ன தான் செய்ய முடியும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Sunday, October 21, 2012

21 ஆண்டுகளில் 40 முறை டிரான்ஸ்பர்: அரியானா ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் சோகம்


சண்டிகர்: நில மோசடிகளை அம்பலப்படுத்தியதற்காக கடந்த 21 ஆண்டுகளில் 40 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டதாகவும், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வேண்டியும், அரியானா தலைமைச் செயலாளருக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநில மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி டாக்டர் அசோக் கெம்கா. இவர் சமீபத்தில் மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இக்கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அரியானா மாநிலத்தில் பல நூறு கோடி மதிப்பிலான கிராமப்புற நிலங்கள், ரியல் எஸ்டேட் ஜாம்பவான்களிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட நிலங்களுக்கு ரியல் எஸ்டேட் அதிபர்கள் கொடுத்த தொகை என்னவோ மிகவும் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார். மிக முக்கியமான நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் மிகக்குறைவான தொகைக்கு இந்த நிலங்கள் கைமாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதுகுறித்து தலைமைச் செயலாளர் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார். மேலும், இது போன்ற ஊழல்களை வெளிக்கொண்டு வரும் அரசு ஊழியர்கள் அடிக்கடி இட மாற்றம் செய்யப்படுவது தொடர்வதாக குறிப்பிட்டுள்ள அவர், இது போன்ற பல நிலமோசடிகளை வெளிக்கொண்டு வந்த தான், கடந்த 21 ஆண்டுகளில் 40 முறை இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். தன்னைப்போன்ற அதிகாரிகளை இனியும் மாநில அரசு இழிவுபடுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ள கெம்கா, தற்போதைய ஊழலை வெளிக்கொண்டு வந்ததற்காக தானும், தனது குடும்பத்தினரும் தாக்கப்படலாம் என்பதால், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப்., மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகன் வதேரா இடையேயான பரிவர்த்தனையை அரவிந்த் கெஜ்ரிவால் வெளிக்கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது இது போன்ற ஏகப்பட்ட நிலமோசடிகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...